Author: admin

பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட விடுவிக்கப்படமாட்டாது என மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்நிலையில், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். பின்னர் சி.ஆர்.பாட்டீல் கூறியதாவது: நாட்டின் நலன் கருதி பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது என்ற வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளது. எனவே, ஒரு சொட்டு தண்ணீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய உள் துறை அமைச்சருடனான சந்திப்பின்போது, இந்திய நதிநீர் பாகிஸ்தானுக்குள் பாய்வதைத் தடுப்பது தொடர்பான விரிவான…

Read More

“ஏஐ-க்கு மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியாது. அவர்களின் உணர்வுகளின் தன்மையை புரிந்துகொள்ள முடியாது. ஏஐ பயன்பாடு என்பது மனித வாழ்க்கைக்கே ஒரு அவமரியாதை.” – Hayao Miyazaki வாட்ஸ் அப்பில் சாதாரணமாக நாம் அனுப்பும் மெசேஜ்களைக் கூட ஏஐ டூல்களைப் பயன்படுத்தி மெருகேற்றும் காலத்தில் இருக்கிறோம். எங்கும் ஏஐ, எதிலும் ஏஐ என ஆரம்பித்து எல்லாமே ஏஐ என்று விந்தையான, சவாலான ஒரு எதிர்காலத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்றும், வேலைவாய்ப்புகள் எல்லாம் பறிபோகாது நாம் தொழில்நுட்பத்தைக் கையாளக் கற்றுக் கொண்டால், அது நமக்கு உறுதுணை அம்சமாகத்தான் இருக்கும் என்றும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில்தான் ‘வேலையை விடுங்கள்… கலைக்கும் ஆபத்து’ என்று உணர்த்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. டிஸ்னி ஸ்டூடியோ, பிக்சார் ஸ்டூடியோ என்றெல்லாம் மேற்கத்திய ஸ்டூடியோக்களையும் அவர்களின் அனிமேக்களையும் நமக்குத் தெரியும். அதேபோல் ஆசிய அளவில் பிரபலமான ஸ்டூடியோதான்…

Read More

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு உதவும் வகையில் ஓஎம்ஆர் விடைத்தாளில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான மாதிரி விடைத்தாள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஓஎம்ஆர் விடைத்தாளில் புதிய மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி கொண்டுவந்துள்ளது. புதிய ஓஎம்ஆர் விடைத்தாளின் மாதிரி படிவம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ‘OMR Answer Sheet-Sample’ என்ற தலைப்பின் கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. தேர்வர்கள் 4 இலக்க வினாத்தொகுப்பு எண்ணை அதற்குரிய வட்டங்களில் கறுமை நிற பால்பாயின்ட் பேனாவை பயன்படுத்தி கருமையாக்க வேண்டும். மேலும், விடைத்தாளின் முதல் பக்கத்தில் பகுதி-2-ல் உறுதிமொழி அளித்து கையொப்பமிட வேண்டும். தேர்வாணையத்தால் இனிமேல் நடத்தப்பட இருக்கும் அனைத்து ஓஎம்ஆர் முறை தேர்வுகளிலும் பங்கேற்கும் தேர்வர்கள் புதிய மாதிரி ஓஎம்ஆர் விடைத்தாளினை நன்கு பார்த்து, அறிந்துகொண்டு தேர்வெழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read More

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் 9 ஆட்டங்களில் விளையாடி அதில் ஏழு ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த நிலையில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உடனான ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. அதன் பிறகு சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியது: “இந்த சீசனை முன்னிட்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் நாங்கள் ஏதேனும் ட்ரிக்கை மிஸ் செய்தோமா என்ற கேள்வி எழுகிறது. அதை சொல்வது மிகவும் கடினமானது. எங்கள் அணியின் செயல்திறன் மற்றும் எங்களின் ஆட்ட பாணி, டி20 கிரிக்கெட்டின் மாற்றத்தை கருத்தில் கொண்டிருந்தோம். இதை வைத்து அணியை கட்டமைப்பது எளிதான காரியம் அல்ல. மற்ற அணிகளும் இதையே தான் செய்தன. ஆனால், அதே நேரத்தில் அதில் தான் எங்களது சக்சஸ் அடங்கியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக எங்களது ஆட்டத்தில் நிலை தன்மை இருந்துள்ளது. அதை எண்ணி பெருமை கொள்கிறோம். ஏலம் ஒன்றும் அறிவியல் அல்ல. இந்த முறை…

Read More

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பயங்கரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் எவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளது என்று பார்ப்போம். இந்தியாவின் ஐந்து நடவடிக்கைகளில் சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்தும் உத்தரவு, பாகிஸ்தானுக்கு பேரிடியாக இறங்கியுள்ளது எனலாம். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக, உலக வங்கி உதவியுடன் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 1960-ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் பல்வேறு போர், வெறுப்புகளைக் கடந்தும் இரு நாடுகளும் தொடர்ந்து அதை மீறாமல் உள்ளன. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக…

Read More

சென்னை: புனித வெள்ளியை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப் பாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. அன்று முதல் 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடித்தனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். இதன்படி கடந்த ஏப்.13-ம் தேதி குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் புனித வியாழன் அனுசரிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்படுவதற்கு முன் தன் சீடர்களின் பாதங்களை கழுவினார். இதை உணர்த்தும் வகையில், சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், தேவாலய குருக்கள், பொதுமக்களை சீடர்களாக அமர வைத்து, அவர்களின் பாதங்களை கழுவும் நிகழ்வு நடந்தது. சென்னை சாந்தோமில்…

Read More

“பி.சி.ஸ்ரீராமை கொண்டாட விழா எடுக்க வேண்டும்” என்று இயக்குநர் வசந்த பாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய ‘மீரா’ படத்தின் கதாசிரியரும் ‘அழியாத கோலங்கள் 2’ படத்தின் இயக்குநருமான எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ட்ரீம் கேர்ள்’. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் கதிர், இயக்குநர் வசந்தபாலன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் இயக்குநர் வசந்தபாலன் பேசும் போது “மீரா படத்தில் உதவி எடிட்டராக பணியாற்றினேன். அப்போது எடிட்டர் லெனின் – விஜயனைப் பார்க்க அடிக்கடி பி.சி ஸ்ரீராம் சார் அங்கே வருவார். அவர் ஒளிப்பதிவில் எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகளைப் பார்த்து வியப்பாக இருக்கும். இளையராஜாவுக்கு சற்றும் குறைவில்லாத பெருமைக்குரியவர் ஒளிப்பதிவு மேதை பி. சி.ஸ்ரீராம். இவர் படத்தில் இவரது…

Read More

குன்னூர்: இந்திய ராணுவ முன்னாள் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எஸ். பட்டாபிராமன்(78) குன்னூரில் காலமானார். இவருக்கு 42 குண்டுகள் முழங்க, ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன், ராணுவத்தில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். பாம்பே சாப்பர்ஸின் கர்னல் கமாண்டராகப் பணியாற்றியுள்ள இவர், இந்திய ராணுவத்தின் தகவல் அமைப்புகளின் முதல் இயக்குநராகவும், மேற்கு கட்டளையின் ராணுவ தளபதியாகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். 40 ஆண்டு சேவைக்குப் பிறகு 2006-ம் ஆண்டு ராணுவ துணைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், நீலகிரி மாவட்டம் குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இருந்து வெலிங்டன் எரிவாயு மயானத்துக்கு இவரது உடல், தேசியக் கொடி போர்த்தப்பட்டு ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு,…

Read More

பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை எம்பியுமான கபில் சிபல் கூறியதாவது: பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய அரசோடு இணைந்து செயல்படுகின்றன. இந்த சூழலில் தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதித்து, கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் அணுகுமுறையை நாமும் பின்பற்ற வேண்டும். தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானோடு வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு இந்தியாவில் இடமில்லை என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு கபில்…

Read More

சென்னை: இந்தியாவில் விவோ Y39 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஸ்க்ரீன் ட்ரான்ஸ்லஷன், ஏஐ ஆடியோ அல்கோரிதம் மாதிரியான ஏஐ டூல் அம்சங்களும் இதில் உள்ளன. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்தியாவில் விவோ Y39 ஸ்மார்ட்போன் தற்போது வெளியாகி உள்ளது. விவோ ‘Y’ சீரிஸில் முதல் முறையாக ஏஐ அம்சங்கள் இடம்பெற்றுள்ள போனாக இது உள்ளது. மிட் செக்மென்ட் விலையில் வெளிவந்துள்ள ஸ்மார்ட்போன் இது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. சிறப்பு அம்சங்கள்: 6.68 இன்ச் எல்சிடி டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15…

Read More