கொல்கத்தா: பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங்குக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்று அந்த அணியின் சுழற்பந்து பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்தார். நேற்று முன்தினம் கொல்கத்தாவில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டம் மழையின் காரணமாக ரத்தானது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. பிரியன்ஷ் ஆர்யா 69 ரன்களும் (35 பந்துகள், 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்), பிரப்சிம்ரன் சிங் 83 ரன்களும் (6 சிக்ஸர், 6 பவுண்டரி), கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 25 ரன்களும், ஜோஷ் இங்லிஷ் 11 ரன்களும் சேர்த்தனர். பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி…
Author: admin
வாடிகன் சிட்டி: மறைந்த போப் பிரான்சிஸ் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும் வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் தனது 88-வது வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலமின்றி இருந்த அவர், அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் தேவாலயப் பணிகளை அவர் தொடர்ந்து செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அவர் ஆசி வழங்கினார். இந்நிலையில் மறுநாளான திங்கட்கிழமை காலையில் உள்ளூர் நேரப்படி காலை 7.35 மணிக்கு காலமானார். பெருமூளை பக்கவாதம், கோமா, இதயம் செயலிழப்பு என அடுத்தடுத்த பாதிப்புகளால் அவரது உயிர் பிரிந்ததாக வாடிகன் தெரிவித்தது. இறப்புக்கான காரணம் குறித்த மருத்துவ அறிக்கையில் இரண்டாம் வகை நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சுவாசக்…
தேனி: மலையாள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் கனிதரிசன வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு புத்தம் புது நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழாவுக்காக கடந்த 2-ம் தேதி கொடியேற்றப்பட்டது. ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு வழிபாடுகளுடன் பூஜைகள் நடைபெற்றது. உச்சநிகழ்வாக கடந்த 10-ம் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளிவேட்டையும், 11-ம் தேதி காலை ஐயப்பனுக்கு புனித நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழா நிறைவடைந்து கொடிஇறக்கப்பட்டது. பின்பு மலையாள புத்தாண்டான விஷூ பண்டிகைக்கான வழிபாடு தொடர்ந்தது. இந்நாளில் பழங்கள், தானியங்களை சந்நிதானத்தில் வைத்து புத்தாண்டின் முதல்நாளில் இதனை தரிசனம் செய்வது வழக்கம். இதற்காக நேற்று(ஏப்.13) பெரியபாத்திரத்தில் மா, வெள்ளரிக்காய், தேங்காய், உலர்ந்த அரிசி, நெல், பலா உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள், கண்ணாடி, காய்கறிகள்…
இளம் திரைப்பட இயக்குநர் நாகேந்திரன் இன்று (ஏப்.26) காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவரது திடீர் மரணம் சக திரை உலகத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. விமல், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்த ‘காவல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக நாகேந்திரன் அறிமுகமானார். கடந்த 2015-ல் இந்தப் படம் வெளியாகி இருந்தது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் திரைக்கதை எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது. சில படங்களில் நடிகராகவும் நாகேந்திரன் நடித்துள்ளார். கடந்த மாதம் நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா காலமானார். இந்நிலையில், மீண்டும் ஓர் இயக்குநரின் மரணம் தமிழ் சினிமா துறையினருக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. நாகேந்திரன் மறைவுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “அன்பு நண்பர் நாகேந்திரன் மறைவுச் செய்தி கேட்டது மிகத் துயரமான நாளைத் துவக்கி வைத்திருக்கிறது. நாட்களும், நொடிகளும் மிகக் கொடுமையானவை. பூவை உதிர்த்துப் போடுவது போல…
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு, மகப்பேறு விடுப்பு காலமும் பதவி உயர்வுக்கான தகுதிகாண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவை இன்று (ஏப்.28) காலை கூடியதும் முதல்வர் ஸ்டாவில் விதி எண் 110-ன் கீழ் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு வரும் செப்டம்பருக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறினார். பேரவையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு: >> கரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட விடுப்பு நாட்களை 15 நாட்கள் வரை சரண்டர் செய்துவிட்டு 1-4-2025 முதல் பணப்பயன் பெற்றுக்கொள்ளலாம். >> 2.1-1-2025 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது. தமிழக அரசு ஊழியர்களுக்கும் 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படும். இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள்,…
புதுடெல்லி: இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி கூறியிருந்தற்கு பதிலடி கொடுத்துள்ள மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி, பஹல்காம் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்படுவதற்கு முன்பாக அவர்களின் மதம் என்ன என கேட்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கொடுஞ்செயலை செய்த நீங்கள் கவாரிஜ்களை விட மோசமானவகள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மற்றொரு பிரிவாகவே அறியப்படுவீர்கள். அப்பாவி மக்களின் மத ரீதியான நம்பிக்கை என்ன என கேட்டு அவர்களை கொல்வது இஸ்லாமியத்தில் இல்லவே இல்லை. இந்தியா உடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் அரை நூற்றாண்டு காலம் பின்தங்கி உள்ளது. உங்களது தேசிய பட்ஜெட்டை காட்டிலும் எங்கள் நாட்டின் ராணுவ பட்ஜெட் அதிகம். அணு ஆயுதம் கொண்டு தாக்குவோம் என்றெல்லாம் பாகிஸ்தானை சேர்ந்த ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கு மிரட்டல்…
சென்னை: அனிமேஷன் உள்ளிட்ட துறைகளில் பெருமளவில் வரும் புதிய தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, உயர்நுட்ப வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்திட வகை செய்யும் பொருட்டு, சென்னையில் ஒரு திறன்மிகு மையம் வியன் (Viyan) AVGC-XR Hub எனும் பெயரில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை தாக்கல் செய்தார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசுகையில், “இயங்குபடம் , காட்சிப்படுத்தல், விளையாட்டு, சித்திரக் கதைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் (AVGC-XR) கொள்கை ஒன்று, துறைசார்ந்த வல்லுநர்களோடு இணைந்து உருவாக்கப்பட்டு வருகிறது. இத்துறையில் பெருமளவில் வரும் புதிய தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, உயர்நுட்ப வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்திட வகை செய்யும் பொருட்டு,…
சென்னை: கலைத் திருவிழா போட்டிகளில் மாநில அளவிலான போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் மே 19 முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் 2022-23-ம் ஆண்டு முதல் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களின் கலைத் திறமைகளை மேலும் மேம்படுத்தும் விதமாகவும், அவர்களின் கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி ஓவியம், சிற்பம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம், வீதி நாடகம் மற்றும் பொம்மலாட்டம் ஆகியவற்றில் சிறந்த வல்லுநர்களை கொண்டு மாணவர்களுக்கு…
மும்பை: ஐபிஎல் போட்டிகளில் 150-வது வெற்றியைப் பதிவு செய்த முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தோற்கடித்தது. ஐபிஎல் தொடர்களில் மும்பை அணி பெற்ற 150-வது வெற்றி இதுவாகும். மேலும் ஐபிஎல் தொடர்களில் 150 வெற்றிகளை சுவைத்த முதல் அணி என்ற பெருமையையும் மும்பை அணி பெற்றுள்ளது. அந்த அணி இதுவரை 271 போட்டிகளில் விளையாடி 150 வெற்றி, 121 தோல்விகளைப் பெற்றுள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 140 வெற்றிகளையும், கொல்கத்தா அணி 134 வெற்றிகளையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 129 வெற்றிகளையும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 121 வெற்றிகளையும், பஞ்சாப் கிங்ஸ் அணி 117 வெற்றிகளையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 114 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
வாஷிங்டன்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உரிய தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்தது. இதற்கு பதில் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசும் மேற்கொண்டது. இந்தியாவுடன் வர்த்தக ரீதியான உறவை பாகிஸ்தான் முறித்துக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இரு நாடுகளை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆட்சியாளர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் நாட்டு அமைச்சர் ஹனிப் அப்பாஸி வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசா காலாவதியான காரணத்தால்…