சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) கலந்து கொள்ள பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, “தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) தேர்ச்சி பெற பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 65 சதவீதமும் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 75…
Author: admin
நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் தனது 6-வது தோல்வியைச் சந்தித்தது. இந்தப் போட்டிக்கு முன்பாக ‘பழிவாங்கும் நேரம்’ என்றெல்லாம் இன்னதுதான் என்று இல்லாமல் இப்போட்டிக்கு போலி விளம்பரங்களையும் ஹைப்களையும் கொடுத்தனர். கடைசியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், தோனியின் பலவீனமான படையை சிதறடித்து விட்டனர். சிஎஸ்கேவை ஒட்டுமொத்தமாகக் கலைத்து புதிய அணியைக் கட்டமைப்பதைத் தவிர வேறு வழியில்லை. வடிவேலு ஜோக்ஸ் மற்றும் மீம்களின் படையெடுப்பு போல் சிஎஸ்கே தனது வயதான வீரர்களுடன் பழைய டெக்னிக்குகளுடன் ‘பில்டிங்கு ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு’ என்பது போல் உள்ளது. நம் கேள்வியெல்லாம் வயது என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். பவுண்டரி அடிக்கும் முயற்சியோ எண்ணமோ கூட இல்லாமல் எப்படி டி20 லீகில் ஆட முடியும் என்று புரியவில்லை. தோனியின் கேப்டன்சி ஒருபுறம் எந்த விதப் புரிதலும் இல்லாமல் கேப்டன்சி என்றால் என்னவென்றே தெரியாமல் செய்வது போல் உள்ளது. இவரா 3 ஐசிசி…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பால் உலகின் பல நாடுகள் கடுமையான பொருளாதார பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் நாணயமான ‘யுவான்’ மதிப்பு 17 ஆண்டுகளுக்கு முந்தைய மதிப்பு அளவுக்கு சரிந்துள்ளது. சீன இறக்குமதிகள் மீது 104% வரி உட்பட அமெரிக்காவின் புதிய வரிகள் புதன்கிழமை (ஏப்.9) முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனால், சீன நாணயத்தின் மதிப்பு கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. சீனா நாணயமான யுவான் 2007-ன் மதிப்புக்கு சரிந்தது. ஒரே இரவில் நடந்துள்ள இந்த சரிவு வரலாறு காணாதது. அமெரிக்க டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பு 7.3498 ஆக சரிந்துள்ளது. இந்நிலையில், சீனா தனது உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க உறுதியான மற்றும் வலிமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக உறுதி அளித்துள்ளது. சீனா மீது ட்ரம்ப் விதித்த கூடுதலான 50% வரிகளுக்குப் பிறகு, சீனா அமெரிக்கா மீது எந்த புதிய வரிகளையும் அறிவிக்கவில்லை.…
சென்னை: கோயில் திருவிழாக்களில் சாதிக்கு முக்கியத்துவம் தராமல், ஊர் பொதுமக்கள், உபயதாரர்கள் என்ற பெயரில் சாதி அடையாளம் எதுவுமின்றி விழாக்களை நடத்த வேண்டும் என அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா புதுப்பட்டி கிராமத்தில் உள்ள துலுக்க சூடாமணியம்மன் கோயில் தேர் திருவிழாவில், பட்டியல் சமுதாய மக்களுக்கும் ஏதாவது ஒருநாள் ஒதுக்கி இத்திருவிழாவை நடத்த அனுமதி வழங்கக்கோரி பெரியசாமி என்ற நீலவண்ணத்து நிலவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.ராகுல் ஆஜராகி, “இந்த கோயில் தேர் திருவிழா வரும் ஏப்.6-ம் தேதி தொடங்கி ஏப்.10-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், பிற சமுதாய மக்களுக்கு விழாவை நடத்த அனுமதி வழங்கியிருப்பது போல இந்த ஊரைச் சேர்ந்த பட்டியலின மக்களுக்கும் ஏதாவது ஒருநாள் ஒதுக்கி விழாவை…
‘Ghaati’ படம் எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருக்கிறது. இது குறித்து தயாரிப்பு நிறுவனமும் அமைதி காத்து வருகிறது. கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘Ghaati’. ஏப்ரல் 18-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது வரை படத்தின் டீசர், விக்ரம் பிரபு அறிமுக டீஸர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், ஏப்ரல் 18-ம் தேதி திட்டமிடப்பட்டி ‘Ghaati’ வெளியாகவில்லை. இதன் புதிய வெளியீட்டு தேதி குறித்தும் படக்குழு அமைதி காத்து வருகிறது. இப்படத்தினை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பான் இந்தியா முறையில், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். பட வெளியீட்டில் என்ன சிக்கல் உள்ளிட்ட எந்தவொரு தகவலையுமே படக்குழு வெளியிடவில்லை. அனுஷ்கா நீண்ட வருடங்கள் கழித்து நடித்துள்ள படம் ‘Ghaati’ என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. தற்போது தயாரிப்பு நிறுவனத்தின் இந்த…
மதுரை: நெல்லை வழக்கறிஞர் சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் செந்தில் குமார், சிதம்பரம் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நெல்லை மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்து வருகிறோம். நெல்லை வழக்கறிஞர் சங்கத்துக்கு 2025- 2026 ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நாளை (ஏப்.30) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வழக்கறிஞர்கள் வாக்குகளை சரிபார்க்க குழு அமைக்க வேண்டும். அவ்வாறு எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. மேலும், பொதுக்குழு கூட்டுவதற்கு 21 நாட்களுக்கு முன்பே அனைத்து உறுப்பினர்களுக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும். இந்த விதிமுறை பின்பற்றப்படவில்லை. இவ்வாறு விதிமுறைகளை மீறி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. எனவே, வழக்கறிஞர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். விதிப்படி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குழு அமைத்து, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முன்னிலையில் தேர்தல் நடத்தவும் உத்தரவிட வேண்டும்,” என்று…
சென்னை: தங்கம் விலை மற்றொரு புதிய உச்சமாக இன்று (ஏப்.21) ஒரு கிராம் ரூ.9000-ஐ கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. இந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில் இன்று (ஏப்.21) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,015-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,120-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,11,000-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது தொடர்பாக தங்க நகை வியாபாரிகள் கூறியதாவது: அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக போரில் அனைத்து நாடுகளும் சிக்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக,…
இந்து நாட்காட்டியில் மிகவும் நல்ல நாட்களில் ஒன்றான அக்ஷயா திரிதியா, மற்றொரு தேதி அல்ல- இது ஒரு சக்திவாய்ந்த ஆன்மீக போர்டல். வைஷகாவின் சந்திர மாதத்தின் பிரகாசமான பாதியின் மூன்றாவது நாளில் கொண்டாடப்படுகிறது, இந்த நாள் அனைத்து நல்ல தொடக்கங்களையும் பெரிதாக்கும் என்று நம்பப்படுகிறது. அக்ஷயா என்ற வார்த்தையின் அர்த்தம் “ஒருபோதும் குறையாது”, கடைசியாக ஆசீர்வாதங்கள், செல்வம், செழிப்பு மற்றும் அன்பு ஆகியவற்றைக் குறிக்கும் விஷயங்களில் முதலீடு செய்வதற்கான சரியான சந்தர்ப்பமாக இது அமைகிறது. பாரம்பரியமாக, இது தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற நகைகளை வாங்குவதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இந்த நாளில் குறிப்பாக புனிதமாகக் கருதப்படும் செயல்கள்.”அக்ஷய திரிதியாவின் ஆவியை நாங்கள் மதிக்கும்போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் நகைகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியின் மூலமாகவும் நீடித்த ஆசீர்வாதங்களாகவும் இருக்கட்டும்” என்று நகை வடிவமைப்பாளர் அர்ச்சனா அகர்வால் கூறுகிறார், அதன் காலமற்ற துண்டுகள் பாரம்பரியத்திற்கும் நவீன நேர்த்தியுக்கும் இடையிலான தொடர்பை நீண்ட காலமாக கொண்டாடியுள்ளன. நகைகள்…
(புகைப்படம்: FB/ ஒட்டாவா இந்தோ-கனடியன் சங்கம்) பஞ்சாபின் தேரா பாஸ்ஸியைச் சேர்ந்த 21 வயது இந்திய மாணவர் ஒருவர் இறந்து கிடந்தார் மர்மமான சூழ்நிலைகள் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு கடற்கரையில்.இறந்தவர், அடையாளம் காணப்பட்டார் வான்ஷிகா சைனிஆம் ஆத்மி குல்ஜித் சிங் ரந்தாவாவின் உதவியாளரான டேவிண்டர் சைனியின் மகள், கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒட்டாவாவில் படித்து வந்தார்.அவரது உடல் ஒரு ஒட்டாவா கடற்கரையில் காணப்பட்டது, விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதால் மரணத்தின் துல்லியமான காரணத்தை இன்னும் அதிகாரிகள் தீர்மானிக்கவில்லை. ஒட்டாவா இந்தோ-கனடியன் சங்கம் (OICA) ஞாயிற்றுக்கிழமை ஒரு பேஸ்புக் பதிவில் வான்ஷிகாவுக்காக காணாமல் போன நபர் எச்சரிக்கையை வெளியிட்டது.வான்ஷிகா சைனி யார்?வான்ஷிகா இரண்டு ஆண்டு டிப்ளோமா படிப்பைத் தொடர XII ஆம் வகுப்பு முடித்த பின்னர் கனடாவுக்குச் சென்றார், கடந்த இரண்டரை ஆண்டுகளாக அங்கு படித்து வந்தார்.அவர் ஏப்ரல் 18 அன்று தனது இறுதித் தேர்வுகளை முடித்து, பகுதிநேர வேலை செய்யத் தொடங்கினார்.…
புதுடெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், அலோகாவில் நடைபெற்ற பாரத் ஜோடோ நடைப்பயணத்தின்போது செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசினார். அப்போது வீர சாவர்க்கர் குறித்து ராகுல் அவதூறு கருத்து தெரிவித்ததாக லக்னோ மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் படேல் போன்றோர் சிறையில் வாடியிருந்தபோது, சாவர்க்கர் மட்டும் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியதாகவும், முஸ்லிம் நபர் ஒருவரை சாவர்க்கர் தாக்கியதாக சாவர்க்கரின் புத்தகத்திலேயே குறிப்பிட்டதாக ராகுல் காந்தி அப்போது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பாஜக உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து, தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யுமாறு அலகாபாத் நீதிமன்றத்தில் ராகுல் மனு அளித்தார். இருப்பினும், அவரது மனுவை அலகாபாத் நீதிமன்றம்…