Author: admin

டோக்கியோ: உலக தடகள சாம்​பியன்​ஷிப்​பின் ஈட்டி எறிதலில் டிரினி​டாட் மற்​றும் டோபாகோ வீரர் கெஷோர்ன் வால்​காட் தங்​கப் பதக்​கம் வென்​றார். நடப்பு சாம்​பியன் அந்​தஸ்​துடன் களமிறங்​கிய இந்​தி​யா​வின் நீரஜ் சோப்ரா 8-வது இடம் பிடித்து ஏமாற்​றம் அளித்​தார். அதேவேளை​யில் மற்​றொரு இந்​திய வீர​ரான சச்​சின் யாதவ் 4-வது இடம் பிடித்து கவனம் ஈர்த்​தார். உலக தடகள சாம்​பியன்​ஷிப் போட்டி ஜப்​பானின் டோக்​கியோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று ஆடவருக்​கான ஈட்டி எறிதலில் இறு​திப் போட்டி நடை​பெற்​றது. நடப்பு சாம்​பியனும், ஒலிம்​பிக்​கில் இரு முறை தங்​கம் வென்ற இந்​தி​யா​வின் நீரஜ் சோப்​ரா, ஒலிம்​பிக் சாம்​பிய​னான பாகிஸ்​தானின் அர்​ஷத் நதீம் உள்​ளிட்ட 12 வீரர்​கள் இதில் பங்​கேற்​றனர். டிரினி​டாட் மற்​றும் டோபாகோவை சேர்ந்த கெஷோர்ன் வால்​காட் 88.16 மீட்​டர் தூரம் ஈட்​டியை எறிந்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார். கிரன​டா​வின் ஆண்​டர்​சன் பீட்​டர்ஸ் 87.38 மீட்​டர் தூரம் எறிந்து வெள்​ளிப் பதக்​க​மும்,…

Read More

கம்பம்: கேரள மாநிலத்​திலிருந்து கொண்​டு​வரப்​பட்ட எலெக்ட்​ரானிக்ஸ் கழி​வு​கள் கம்​பம் மலைச் சாலை​யில் கொட்​டப்​படு​வது குறித்து அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர். தேனி மாவட்​டத்​தில் கேரளாவை இணைக்​கும் முக்​கிய வழித்​தட​மாக கம்​பம்​மெட்டு மலைப்​பாதை உள்​ளது. தமிழகத்​துடன் நேரடித் தொடர்​பில் உள்​ள​தால், அங்​கிருந்து குப்​பை, கழி​வு​கள் இரவில் கொண்​டு​வரப்​பட்​டு, தமிழக வனப்​பகு​தி​யில் அடிக்​கடி கொட்​டப்​படு​கின்றன. கடந்த 4 நாட்​களுக்கு முன்பு கம்​பம்​மெட்டு மலை​யடி​வாரம் புதுக்​குளம் பகு​தி​யில், சக்​திவேல் என்​பவருக்​குச் சொந்​த​மான இடத்​தில் மூட்டை மூட்​டை​யாக கேரள குப்பை கொட்​டப்​பட்​டிருந்​தது. தகவலறிந்த மதுரை மாசுக்​கட்​டுப்​பாட்டு வாரிய சுற்​றுச்​சூழல் பறக்​கும்​படை பொறி​யாளர் பத்மா தலை​மையி​லான அதி​காரி​கள் ஆய்வு நடத்​தினர். எலெக்ட்​ரிக் மற்​றும் எலெக்ட்​ரானிக்ஸ் கழி​வு​கள் அங்கு கொட்​டப்​பட்​டது தெரிய​வந்​தது. அவற்றை புதுப்​பட்டி பேரூ​ராட்சி ஊழியர்​கள் அகற்​றினர். தொடர்ந்​து, மதுரை மாசுக்​கட்​டுப்​பாட்டு வாரிய சுற்​றுச்​சூழல் உதவிப் பொறி​யாளர் காருண்​யா​ராஜா, தேனி மாசுக்​கட்​டுப்​பாட்டு வாரிய உதவிப் பொறி​யாளர் கவிதா தலை​மையி​லான குழு​வினர், கம்​பம்​மெட்டு சோதனைச் சாவடி​யில் வாக​னச் சோதனை​யில் ஈடு​பட்​டனர். கேரளத்​தில்…

Read More

புதுடெல்லி: மூன்று நாள் பயண​மாக இந்​தியா வந்த பெப்​சிகோ குளோபல் நிறு​வனத்​தின் தலை​வரும், தலைமை செயல் அதி​காரி​யு​மான ரமோன் லகு​வார்ட்டா பிரதமர் நரேந்​திர மோடியை கடந்த செவ்​வாய்க்​கிழமை சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது, இந்​திய சந்​தைக்​கான தனது நிறு​வனத்​தின் நீண்​ட​கால உறு​திப்​பாட்​டைப் பற்றி அவர் விவா​தித்​தார். இந்​தி​யா​வில் முதலீட்டை அதி​கரிக்க உள்​ள​தாக​வும் உறுதி அளித்​தார். பெப்​சிகோ நிறு​வனம் லிங்​டுஇன் தளத்​தில் நேற்​று​முன்​தினம் தெரி​வித்​துள்​ள​தாவது: பெப்​சிகோ தலை​வர் லகு​வார்ட்​டாவுடன் நிறு​வனத்​தின் உலகளா​விய நிர்​வாக குழு உறுப்​பினர்​கள் சென்று பிரதமர் மோடியை சந்​தித்​தனர். அப்​போது, பெப்​சிகோ​வின் இந்​தி​யா​வுக்​கான நீண்​ட​கால உறு​திப்​பாட்டை வலுப்​படுத்​து​வது, உற்​பத்​தி, நிலைத்​தன்​மை, புதுமை மற்​றும் சமூக மேம்​பாடு போன்ற துறை​களில் ஒத்​துழைப்​புக்​கான வாய்ப்​பு​களை ஆராய்​வது தொடர்​பாக விவா​திக்​கப்​பட்​டது. பெப்​சிகோ​வின் வாரி​யத்​திற்கு கிட்​டத்​தட்ட ஏழு ஆண்​டு​களாக லகு​வார்ட்டா தலைமை தாங்கி வந்​தா​லும், பிரதமருட​னான அவரின் சந்​திப்பு இது முதல் முறை​யாகும். பெப்​சிகோ இந்​தி​யா​வின் தலைமை நிர்​வாக அதி​காரி ஜக்​ருத் கோடேச்​சா​வும் இந்​தக் கூட்​டத்​தில் கலந்து…

Read More

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு, சேவா பக்வதா என்ற பெயரில் 75 வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை (15 நாள்) நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் 17 திட்டங்களை தொடங்கி வைத்தார். அடுத்தபடியாக, டெல்லியின் சென்ட்ரல் ரிட்ஜ் பகுதியில் 75 நாடுகளின் தூதரக அதிகாரிகள் நேற்று மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read More

திருமலை:​ திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்​சவத்​தில் சுமார் 2 லட்​சம் பக்​தர்​கள் மாட வீதி​களில் அமர்ந்து வாகன சேவை​களை காணும் வகை​யில் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ள​தாக அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர்​.​நா​யுடு தெரி​வித்​தார். திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்​சவம் வரும் 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கி, அக்​டோபர் 2-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்​கள் நடை​பெற உள்​ளது. புரட்​டாசி மாதம் என்​ப​தால் இவ்​விழாவுக்கு அதிக பக்​தர்​கள் வரு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதனால் 9 நாட்​களும் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்​தானம் ரத்து செய்​துள்​ளது. பிரம்​மோற்​சவத்​திற்கு திருப்​ப​தி​யில் இருந்து திரு​மலைக்கு அரசு கூடு​தல் பேருந்​துகளை இயக்க உள்​ளது. அலிபிரி சோதனைச் சாவடி​யில் வாகன தணிக்கை தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. கண்​காணிப்பு கேம​ராக்​கள் கூடு​தலாக பொருத்​தப்​பட்​டு, பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. ஆக்​டோபஸ் கமாண்​டோக்​கள், ஆயுதப்​படை​யினர் என சுமார் 10 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​களில் ஈடுபட உள்​ளனர். பிரம்​மோற்சவ ஏற்​பாடு​கள் திரு​மலை மற்​றும் திருப்​ப​தி​யில் போர்க்​கால அடிப்​படை​யில் நடை​பெற்று…

Read More

குன்னூர்: வெலிங்​டனில் உள்ள முப்​படை அதி​காரி​கள் பயிற்​சிக் கல்​லூரி முதல்​வ​ராக லெப்​டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி பொறுப்​பேற்​றார். நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் அருகே வெலிங்​டனில் உள்ள முப்​படை அதி​காரி​கள் பயிற்​சிக் கல்​லூரி 1905-ல் குவெட்​டா​வில் நிறு​வப்​பட்​டது. பின்​னர் 1947-ல் அது வெலிங்​ட​னுக்கு மாற்​றப்​பட்​டது. இந்​தக் கல்​லூரி இந்​தி​யா​வின் முப்​படை அதி​காரி​களுக்​கான முன்​னணி பயிற்சி நிறு​வன​மாகும். இங்​கு, ராணுவம், கடற்​படை, விமானப்​படை அதி​காரி​களுக்​கும், நட்பு நாடு​களின் அதி​காரி​களுக்​கும் தலை​மைத்​து​வம், கூட்​டாக செயல்​படும் திறன், வியூ​கங்​கள் வகுத்​தல், பணி​யாளர் நிர்​வாகம் ஆகிய​வற்​றின் உயர் நுணுக்​கங்​களில் பயிற்சி அளிக்​கப்​படு​கிறது. இக்​கல்​லூரி​யின் முதல்​வ​ராக லெப்​டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி நேற்று பொறுப்​பேற்​றார். இப்​பொறுப்​பில் இருந்த லெப்​டினன்ட் ஜெனரல் வீரேந்​திர வாட்​ஸ், லெப்​டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி​யிடம் பொறுப்​பு​களை ஒப்​படைத்​தார். லெப்​டினன்ட் ஜெனரல் மணீஷ் எரி கடக்​வாஸ்​லா​வில் உள்ள தேசிய பாது​காப்பு அகாடமி மற்​றும் டேராடூனில் உள்ள இந்​திய ராணுவ அகாட​மி​யின் முன்​னாள் மாணவர் ஆவார். டிசம்​பர் 1988-ல்…

Read More

உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் பகல்நேர பிரச்சினையாகக் கருதப்படுகிறது, ஆனால் பலர் அதை உணராமல் இரவில் கூர்முனை அனுபவிக்கிறார்கள். இரவு நேர உயர் இரத்த அழுத்தம் என அழைக்கப்படும் இந்த நிலை, பகல்நேர உயர் இரத்த அழுத்தத்தை விட மிகவும் தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இது அடிக்கடி கண்டறியப்படாது. பொதுவாக, இரத்த அழுத்தம் ஒரு இயற்கையான தாளத்தைப் பின்பற்றுகிறது மற்றும் தூக்கத்தின் போது நீராடுகிறது, இதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கு ஓய்வெடுக்க நேரம் கொடுக்கிறது. இருப்பினும், சில நபர்களில், இது அதிகமாக இருக்கும் அல்லது உயர்கிறது, இருதய அமைப்பு, சிறுநீரகங்கள் மற்றும் மூளை ஆகியவற்றில் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துகிறது. காரணங்களை உணர்ந்து கொள்வது, இரவு நேர கூர்முனைகளை எவ்வாறு கண்டறிவது என்பதைக் கற்றுக்கொள்வது மற்றும் நீண்டகால ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு சரியான சிகிச்சையைத் தேடுவது அவசியம்.என்ன காரணம் இரவு நேர இரத்த அழுத்த கூர்முனைகள்: இரவு நேர உயர் இரத்த அழுத்தத்தைப் புரிந்துகொள்வதுஇரவு…

Read More

அமராவதி: ஆந்​திர மது​பான ஊழல் வழக்கு தொடர்​பாக நேற்று அமலாக்​கத் துறை விசா​ரணையை தொடங்கியது. முதல் நாளே சென்னை உள்​ளிட்ட 5 நகரங்​களில் அதி​காரி​கள் திடீர் சோதனை நடத்தி முக்​கிய ஆவணங்​களை பறி​முதல் செய்​துள்​ளனர். ஆந்​தி​ரா​வில் கடந்த ஜெகன் மோகன் ரெட்​டி​யின் ஆட்சி காலத்​தில் ரூ.3,500 கோடிக்கு மதுபான ஊழல் நடந்​த​தாக சிறப்பு ஆய்​வுக் குழு​வின் விசா​ரணை​யில் தெரிய வந்​தது. இது தொடர்​பாக இது​வரை 29 பேரை குற்​ற​வாளி​யாக​வும், 19 நிறு​வனங்​களுக்கு இதில் தொடர்​புடைய​தாக​வும் சிறப்​புக் குழு குற்​றப்​பத்​திரி​கையை சமர்ப்​பித்​துள்​ளது. இதில், ராஜம்​பேட்டை ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸ் எம்​.பி. மிதுன் ரெட்​டி, முன்​னாள் சந்​திரகிரி தொகுதி எம்​எல்ஏ செவி ரெட்டி பாஸ்​கர் ரெட்டி உட்பட 12 பேரை கைது செய்து விசா​ரித்தது. இதில் 4 பேருக்கு நீதி​மன்​றம் நிபந்​தனை​யின் கீழ் முன்​ஜாமீன் வழங்கி உள்​ளது. மீத​முள்​ளவர்​களிடம் தொடர்ந்து விசா​ரணை நடத்தி வந்​தது. இவ்​வழக்கு தொடர்​பாக நேற்று டெல்​லி, சென்​னை, ஹைத​ரா​பாத், விசாகப்​பட்​டினம், திருப்​ப​தி,…

Read More

கோவை: மனிதர்​களை விண்​வெளிக்கு அனுப்​பும் ‘ககன்​யான்’ திட்​டத்​தின் சோதனை பணி​கள் 85 சதவீதம் நிறைவடைந்​துள்​ள​தாக இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்​ரோ) தலை​வர் வி.​நா​ராயணன் கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: மனிதர்​களை விண்​வெளிக்கு அனுப்​பும் ‘ககன்​யான்’ திட்​டத்​தில் கவனம் செலுத்தி வரு​கிறோம். இந்த திட்​டம் 2018-ல் பிரதமர் நரேந்​திர மோடி அறி​வித்த திட்​டம். இவ்​வாண்டு ஆளில்லா விண்​கலத்​தில் ‘வயோமித்​ரா’ என்ற இயந்​திர மனிதனை அனுப்ப உள்​ளோம். டிசம்​பர் மாத இறு​தி​யில் இந்​நிகழ்வு நடை​பெறும். தொடர்ந்​து, இரண்டு ஆளில்லா ராக்​கெட்​களை அனுப்​ப​வும், 2027 மார்ச் மாதம் மனிதர்​களை அனுப்​ப​வும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. ‘ககன்​யான்’ திட்​டத்​தில் 85 சதவீத சோதனைப் பணி​கள் நிறைவு பெற்​றுள்​ளன. மனிதர்​களை அனுப்​புவதற்கு பல்​வேறு கட்ட சோதனை​கள் மேற்​கொள்ள வேண்​டும். ராக்​கெட்​டில் விபத்து ஏற்​பட்​டால் மனிதர்​களை பாது​காப்​பாக அழைத்து வரு​வது குறித்​தும் ஆய்வு செய்து வரு​கிறோம். இஸ்ரோ மட்​டுமின்றி கடற்​படை, வானியல் துறை உள்​ளிட்ட பல்​வேறு…

Read More

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரபல யோகா குரு நிரஞ்சனா மூர்த்தி (55). கர்நாடக யோகா வளர்ச்சி ஆணைய செயலாளராக உள்ளார். பெங்களூருவில் பல்வேறு இடங்களில் சன் ஷைன் யோகா என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார். இந்நிலையில், 19 வயது இளம்பெண் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி ராஜராஜேஸ்வரி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “யோகா குரு நிரஞ்சனா மூர்த்தியிடம் பயிற்சி பெற்ற போது கடந்த 2023ல் தாய்லாந்து சென்றோம். அப்போது 17 வயது சிறுமியாக இருந்த என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், நிரஞ்சனா மூர்த்தியை கைது செய்தனர்.

Read More