லக்னோ: ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 403 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெல் சதம் விளாசினார். லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்ஸில் 98 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 532 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. நாராயண் ஜெகதீசன் 50, சாய் சுதர்சன் 20 ரன்களுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார்கள். ஜெகதீசன் 64 ரன்களும், சாய் சுதர்சன் 73 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 8 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து தேவ்தத் படிக்கலுடன் இணைந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெல் அதிரடியாக…
Author: admin
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பொது மக்களிடம் உள்ள செல்வாக்கு, 2026 சட்டப்பேரவை தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம்? என்பன குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், கட்சி நிர்வாகிகளை செப்.18 முதல் 21-ம் தேதி வரை மண்டல வாரியாகச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதற்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டிஎன் ராஜரத்தினம் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்நாள் ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது. கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காலையில் சென்னை மண்டல நிர்வாகிகளும், மாலையில் காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகளும் பங்கேற்றனர். அவர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். சென்னை மண்டல கலந்தா லோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும்போது, “எத்தனை மொழிகளை…
Last Updated : 19 Sep, 2025 07:57 AM Published : 19 Sep 2025 07:57 AM Last Updated : 19 Sep 2025 07:57 AM புதுடெல்லி: இந்தியா மீதான 25% அபராத வரியை வரும் நவம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு அமெரிக்கா விலக்கிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் வர்த்தக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கான வாய்ப்பை தலைமை பொருளாதார ஆலோசகரின் கருத்துகள் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கொல்கத்தாவில் வணிகர்களின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை சபை ஏற்பாடு செய்த நிகழ்சியொன்றில் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் பேசியதாவது: இந்திய பொருட்களின் இறக்கு மதிக்கு அமெரிக்கா 25 சதவீத பரஸ்பர வரி விதித்தது. அதே போன்று மீண்டும் 25 சதவீத அபராத வரியை இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ளது.…
கேரள மாநிலம் நெய்க்லெரியா ஃபோலரெரியால் ஏற்பட்ட தொற்றுநோய்களில் பெரும் எழுச்சியைக் காண்கிறது, இது பொதுவாக “மூளை உண்ணும் அமீபா” என்று குறிப்பிடப்படுகிறது. இதுவரை, மாநில சுகாதார அமைச்சர் புதன்கிழமை மாநில சட்டமன்றத்திடம் தெரிவித்துள்ளார், இந்த வழக்குகள் மொத்தம் 69 வழக்குகள் மற்றும் 19 இறப்புகள் மாநிலம் முழுவதும் உள்ளன என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் காணப்பட்ட எதையும் போலல்லாமல், இந்த கொடிய வைரஸ் வெடிப்பு ஒரு நீர் மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, சமீபத்திய வழக்குகள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பை மிகவும் கடினமாக்குவது எவ்வளவு கடினமாகிவிட்டது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.அமீபா, நெய்க்லெரியா ஃபோலரி சாப்பிடும் மூளை சரியாக என்ன?நெய்க்லெரியா ஃபோலரெரி என்பது குளங்கள், ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்ற சூடான, புதிய நீர்நிலைகளில் காணப்படும் ஒரு நுண்ணிய அமீபா ஆகும். இது பாக்டீரியாவிற்கு உணவளிக்கிறது மற்றும் வண்டல்களில் செழித்து வளர்கிறது, உயிரினத்தைக் கொண்ட நீர் குறிப்பாக மூக்கு வழியாக மனித உடலில்…
புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்புக்காகவும், பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைத்தன்மைக்காகவும் பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உள்ள விஷயங்களையும், அதன் தாக்கங்களையும் இந்தியா ஆய்வு செய்யும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதில் பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது இரு நாடுகளுக்கு எதிரான தாக்குதலாக கருதப்படும்’’ என சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் அப்துலாசிஸ் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்தனர். பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்திய 4 மாதங்களுக்குப்பின் இந்த ஒப்பந்தம் பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே கையெழுத்தாகியுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: சவுதி அரேபியா – பாகிஸ்தான் இடையேபரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள செய்தியை பார்த்தோம்.…
டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப்பின் ஈட்டி எறிதலில் டிரினிடாட் மற்றும் டோபாகோ வீரர் கெஷோர்ன் வால்காட் தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய இந்தியாவின் நீரஜ் சோப்ரா 8-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான சச்சின் யாதவ் 4-வது இடம் பிடித்து கவனம் ஈர்த்தார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டி நடைபெற்றது. நடப்பு சாம்பியனும், ஒலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் உள்ளிட்ட 12 வீரர்கள் இதில் பங்கேற்றனர். டிரினிடாட் மற்றும் டோபாகோவை சேர்ந்த கெஷோர்ன் வால்காட் 88.16 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 87.38 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும்,…
கம்பம்: கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள் கம்பம் மலைச் சாலையில் கொட்டப்படுவது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக கம்பம்மெட்டு மலைப்பாதை உள்ளது. தமிழகத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளதால், அங்கிருந்து குப்பை, கழிவுகள் இரவில் கொண்டுவரப்பட்டு, தமிழக வனப்பகுதியில் அடிக்கடி கொட்டப்படுகின்றன. கடந்த 4 நாட்களுக்கு முன்பு கம்பம்மெட்டு மலையடிவாரம் புதுக்குளம் பகுதியில், சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் மூட்டை மூட்டையாக கேரள குப்பை கொட்டப்பட்டிருந்தது. தகவலறிந்த மதுரை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பறக்கும்படை பொறியாளர் பத்மா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள் அங்கு கொட்டப்பட்டது தெரியவந்தது. அவற்றை புதுப்பட்டி பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர். தொடர்ந்து, மதுரை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் உதவிப் பொறியாளர் காருண்யாராஜா, தேனி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் கவிதா தலைமையிலான குழுவினர், கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். கேரளத்தில்…
புதுடெல்லி: மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த பெப்சிகோ குளோபல் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ரமோன் லகுவார்ட்டா பிரதமர் நரேந்திர மோடியை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்திய சந்தைக்கான தனது நிறுவனத்தின் நீண்டகால உறுதிப்பாட்டைப் பற்றி அவர் விவாதித்தார். இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க உள்ளதாகவும் உறுதி அளித்தார். பெப்சிகோ நிறுவனம் லிங்டுஇன் தளத்தில் நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளதாவது: பெப்சிகோ தலைவர் லகுவார்ட்டாவுடன் நிறுவனத்தின் உலகளாவிய நிர்வாக குழு உறுப்பினர்கள் சென்று பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது, பெப்சிகோவின் இந்தியாவுக்கான நீண்டகால உறுதிப்பாட்டை வலுப்படுத்துவது, உற்பத்தி, நிலைத்தன்மை, புதுமை மற்றும் சமூக மேம்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பெப்சிகோவின் வாரியத்திற்கு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக லகுவார்ட்டா தலைமை தாங்கி வந்தாலும், பிரதமருடனான அவரின் சந்திப்பு இது முதல் முறையாகும். பெப்சிகோ இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜக்ருத் கோடேச்சாவும் இந்தக் கூட்டத்தில் கலந்து…
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு, சேவா பக்வதா என்ற பெயரில் 75 வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை (15 நாள்) நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் 17 திட்டங்களை தொடங்கி வைத்தார். அடுத்தபடியாக, டெல்லியின் சென்ட்ரல் ரிட்ஜ் பகுதியில் 75 நாடுகளின் தூதரக அதிகாரிகள் நேற்று மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் மாட வீதிகளில் அமர்ந்து வாகன சேவைகளை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 2-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் இவ்விழாவுக்கு அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 9 நாட்களும் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. பிரம்மோற்சவத்திற்கு திருப்பதியில் இருந்து திருமலைக்கு அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளது. அலிபிரி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆக்டோபஸ் கமாண்டோக்கள், ஆயுதப்படையினர் என சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். பிரம்மோற்சவ ஏற்பாடுகள் திருமலை மற்றும் திருப்பதியில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று…