அபுதாபி: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு அபுதாபியில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – ஓமன் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை தோற்கடித்திருந்தது. தொடர்ந்து பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 4 புள்ளிகளுடன் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஓமன் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறிவிட்டதால் இன்றைய ஆட்டத்தை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறந்த முறையில்…
Author: admin
மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 13,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 8,641 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8,342 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 15,000 கனஅடியிலிருந்து 13,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 800 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வரத்தைவிட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. அணை நீர்மட்டம் 119.18 அடியிலிருந்து 118.75 அடியாகவும், நீர் இருப்பு 92.16 டிஎம்சியிலிருந்து 91.49 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது.
கால்சியம் என்பது குழந்தை பருவத்தில் வலுவான எலும்புகள் அல்லது பால் குடிக்கும் நாட்களைப் பற்றியது அல்ல. இது அமைதியாக நிகழ்ச்சியை இயக்குகிறது – உங்கள் தசைகள் நகர்த்த உதவுகிறது, உங்கள் நரம்புகள் மற்றும் உங்கள் இதய துடிப்பு சரியான நேரத்தில். சிக்கல் என்னவென்றால், நம்மில் பலர் அதை உணராமல் குறைகிறோம். அறிகுறிகள் வியத்தகு அல்ல, உங்கள் உடல் அனுப்பும் சிறியதாக இருக்கிறது. நல்ல செய்தி? உங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றாமல் எளிய உணவு இடமாற்றங்கள் அவற்றை சரிசெய்ய முடியும். இங்கே என்ன பார்க்க வேண்டும், நன்றாக உணர என்ன சாப்பிட வேண்டும்.
புதுடெல்லி: நான் அனைத்து மதங்களையும் நம்புகிறேன். அனைத்து மதங்களையும் மதிக்கிறேன் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் கஜுராஹோ கோயில்கள் அமைந்துள்ளன. கடந்த 10, 11-ம் நூற்றாண்டில் சந்தேல மன்னர்களால் இந்த கோயில்கள் கட்டப்பட்டன. கடந்த 12-ம் நூற்றாண்டின்போது சுமார் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 85-க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்ததாக வரலாற்று பதிவுகள் குறிப்பிடுகின்றன. முகலாயர் ஆட்சிக் காலத்தில் கஹுராஹோ கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன்காரணமாக தற்போது 6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 25 கோயில்கள் மட்டுமே எஞ்சி உள்ளன. இந்த சூழலில் கஜுராஹோ கோயில் வளாகத்தின் ஒரு பகுதியான ஜவாரி கோயிலில் சேதமடைந்த நிலையில் உள்ள 7 அடி உயர விஷ்ணு சிலையை சீரமைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகேஷ் தலால் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின்…
ஷென்சென்: சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் சீனாவில் உள்ள ஷென்சென் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் சோச்சுவாங்கை எதிர்த்து விளையாடினார். 41 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது சீன தைபேவின் ஹ்சியாங் சியே சியு, வாங் சி-லின் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக்-ஷிராக் ஜோடி 21-13, 21-12 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால்பதித்தது.
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவு, தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது திரைப் பயணம் குறித்து பார்ப்போம். மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர் காமராசர் பல்கலைக்கழத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். பள்ளி, கல்லூரி நாட்களிலேயே மிமிக்ரி உள்ளிட்ட திறமைகளை வளர்த்துக் கொண்ட சங்கர், சுற்றுவட்டார கிராமங்களில் திருவிழாக்களில் நடக்கும் மேடை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். கட்டுமஸ்தான உடலில் வெள்ளை நிற சாயம் பூசிக் கொண்டு ரோபோ போல நடனமாடியதால் இவருக்கு ரோபோ சங்கர் என்ற பெயர் கிடைத்தது. இதுபோன்ற மேடை கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது விஜய் டிவியில் தொடங்கப்பட்ட ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரோபோ சங்கர் மட்டுமின்றி தற்போது மதுரை முத்து, சிவகார்த்திகேயன் போன்றோரும் பிரபலமடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் சுட்டி அரவிந்துடன் சேர்ந்து ஜோடியாகத்தான் ரோபோ சங்கர் தோன்றுவார். ‘ஒரு கிளி உருகுது’ பாடலுக்கு இருவரும் சேர்ந்து 80-களின் நடனத்தை ரீ-கிரியேட்…
சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகாரில் வைர வியாபாரி, ரியல் எஸ்டேட் அதிபர் வீடு உட்பட சென்னையில் 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் ரெட்டி. ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். சென்னை மற்றும் புறநகரில் பிரம்மாண்ட கட்டிடங்களை கட்டிவரும் இவரது நிறுவனம், அரசு சார்பில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இவரது வீட்டில் நேற்று காலைமுதல் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் ராமகிருஷ்ணன் ரெட்டியின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. இவரது நிறுவனம் பல்வேறு இடங்களில் முதலீடு செய்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும், குறிப்பாக, பண மதிப்பிழப்பு காலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சென்னை ஈசிஆரில் நிலங்களை வாங்கியிருப்பதாகவும் எழுந்த புகாரின் பேரில், இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், பண மதிப்பிழப்பு…
மைக்ரோபிளாஸ்டிக்ஸ், நமது சூழலில் பரவலாக, எலும்பு ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இந்த துகள்கள் எலும்பு திசுக்களில் ஊடுருவி, எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் செயல்பாட்டை சீர்குலைத்து, எலும்பு மறுஉருவாக்கத்தை ஊக்குவிப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இது பலவீனமான எலும்புகள், குறைபாடுகள் மற்றும் அதிகரித்த எலும்பு முறிவு ஆபத்து ஆகியவற்றிற்கு வழிவகுக்கும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற வளர்சிதை மாற்ற எலும்பு நோய்களை அதிகரிக்கும், அவை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோபிளாஸ்டிக்ஸ் எல்லா இடங்களிலும் உள்ளது. நீங்கள் சுவாசிக்கும் காற்றிலிருந்து நீங்கள் குடிக்கும் தண்ணீருக்கு தொடங்கி, இந்த சிறிய பிளாஸ்டிக் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நமது சூழலில் அதன் தாக்கத்தை குறிப்பிடவில்லை. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் டன் பிளாஸ்டிக் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அவை கடற்கரைகள், ஆறுகள் மற்றும் கடலின் ஆழமான பகுதிகளை கூட மாசுபடுத்துகின்றன, 11,000 மீட்டர் வரை ஆழத்தை அடைகின்றன. இந்த புலப்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு…
புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) தலைநகர் அபுதாபியில் நேற்று இந்திய, யுஏஇ உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவும் அமெரிக்காவும் மிக நெருங்கிய நட்பு நாடுகள். இரு நாடுகள் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்கிறது. இந்தியாவின் நம்பகமான நட்பு நாடாக அமெரிக்கா விளங்குகிறது. இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும் வகையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும். இவ்வாறு அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். இந்தியா, அமெரிக்கா இடையே இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உள்ளன. ஆகஸ்ட் 25-ம் தேதி 6-ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்ததால் பேச்சுவார்த்தை தடைபட்டது. இந்த சூழலில் அமெரிக்க வர்த்தக குழுவினர் சில நாட்களுக்கு டெல்லி வந்தனர். அப்போது…
லக்னோ: ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 403 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெல் சதம் விளாசினார். லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்ஸில் 98 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 532 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. நாராயண் ஜெகதீசன் 50, சாய் சுதர்சன் 20 ரன்களுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார்கள். ஜெகதீசன் 64 ரன்களும், சாய் சுதர்சன் 73 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 8 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து தேவ்தத் படிக்கலுடன் இணைந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெல் அதிரடியாக…