தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட காலமாக புகைந்து கொண்டிருந்த எல்லைப் பிரச்சினை, தற்போது ராணுவ மோதலாக வெடித்துள்ளது. கம்போடிய ராணுவ நிலைகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது தாய்லாந்து. கம்போடியா ராக்கெட், பீரங்கிக் குண்டுகளைப் பயன்படுத்தியதாலேயே இந்த பதில் நடவடிக்கை என்று தாய்லாந்து விளக்கமும் அளித்துள்ளது. தாய்லாந்து தரப்பில் ஒரு சிறுவன் உள்பட 11 பொதுமக்களும், ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கம்போடியா இழப்பு குறித்து அதிகாரபூர்வமாக ஏதும் தகவல் இல்லை. இரண்டும் சிறிய நாடுகள், இரண்டுமே சுற்றுலாவுக்கு பெயர் பெற்றவை. ஆனால், சமீப காலமாக இரண்டும் போரை நோக்கி போகுமளவுக்கு என்ன நடந்தது என்று அலசுவோம். மோதலின் பின்னணி என்ன?: தாய்லாந்து – கம்போடியா இடையேயான பிரச்சினை நூற்றாண்டு பழமையானது. 1953 வரை கம்போடியா நாடு பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்தது. பிரான்ஸ் தான் முதன்முதலில் கம்போடியா – தாய்லாந்து இடையேயான எல்லையை வரையறுத்தது. எல்லையை வரையறுத்ததில் 817…
Author: admin
புதுடெல்லி: கார்கில் வெற்றி தினத்தின் 26-வது ஆண்டு நினைவு நாளில், போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும், உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இன்று 26-வது ஆண்டாக கார்கில் வெற்றி தினம் ‘கார்கில் விஜய் திவாஸ்’ என்ற பெயரில் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கார்கில் வெற்றி நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “கார்கில் வெற்றி நாளில், நமது தாய்மண்ணை ஈடு இணையற்ற மனவுறுதியுடன் காத்து, உயிர்நீத்த துணிச்சல்மிகு ராணுவ வீரர்களுக்கு என் வீரவணக்கங்கள். அவர்களது தீரமும், தியாகமும் என்றும் நம் நினைவை விட்டு…
சென்னை: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி உணர்ந்த வரலாற்றுத் தவறை மு.க.ஸ்டாலின் பதவிக்காலத்தில் உணர்வாரா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை பாதுகாப்பதற்கான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தத் தவறியதன் மூலம் தாம் பெரும் தவறை செய்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி கூறியிருக்கிறார். தாமதம் ஆனாலும் தமது தவறை அவர் உணர்ந்திருப்பது மிகச்சரியான நிலைப்பாடு. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று அன்றைய அரசின் அங்கமாக இருந்த பாமக வலியுறுத்தியது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் மனுவில் 140க்கும் மேற்பட்ட ஓபிசி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகளைப் பெற்று 24.10.2008-ஆம் நாள் அன்றைய…
சிறுநீரகங்கள்: போதுமான கடன் பெறாத சிறிய, பீன் வடிவ பவர்ஹவுஸ்கள். இந்த உறுப்புகள் உங்கள் இரத்தத்தை ஒரு நாளைக்கு பல முறை அமைதியாக வடிகட்டுகின்றன, கழிவுகள், திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை நிர்வகித்தல் மற்றும் இரத்த அழுத்தம் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தி போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆனால் சிறுநீரகங்கள் சேதமடையும் போது, உங்கள் உடலில் அனைத்து வகையான குழப்பங்களும் தளர்வாக இருக்கும்.எனவே, உண்மையில் சிறுநீரக சேதத்தை ஏற்படுத்துவது எது? நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்) இங்கே பெரிய ஹிட்டர்கள், ஆனால் ஏராளமான குற்றவாளிகளும் உள்ளனர்.’ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு விழிப்புணர்வு முக்கியமானது’: உலக சிறுநீரக தினத்தில் நிபுணரின் முக்கிய செய்திநீரிழிவு நோய்நீரிழிவு நோய் இரத்த சர்க்கரை மற்றும் ஊசிகளைப் பற்றியது என்று நீங்கள் நினைத்திருந்தால், மீண்டும் சிந்தியுங்கள்: இது உலகளவில் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு (சி.கே.டி) முக்கிய காரணம். இங்கே என்ன நடக்கிறது: உங்கள் இரத்த சர்க்கரை…
ஜலவாட்: ராஜஸ்தானின் ஜலவாட் மாவட்டம், பிப்லோட் என்ற கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நேற்று காலை 8.30 மணியளவில் வகுப்பறைகளுக்கு வந்த மாணவர்கள், இறைவணக்க நிகழ்ச்சிக்கு தயாராக இருந்தனர். அப்போது பள்ளிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுமார் 40 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். பதறிப்போன ஆசிரியர்களும் கிராம மக்களும் மீட்புப் பணியில் இறங்கினர். பின்னர் அதிகாரிகளும், பேரிடர் மீட்புக் குழுவினரும் அங்கு விரைந்தனர். இந்நிலையில் இந்த விபத்தில் 8 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 30 மாணவர்கள் காயம் அடைந்தனர். இவர்கள் மனோகர்தானா, ஜலவாட் நகர மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். ‘எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “இந்த கடினமான தருணத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அவர்களின் குடும்பத்தினர் குறித்து கவலைப்படுகிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
சென்னை: தமிழக மக்கள் உரிமை மீட்பு எனும் தலைப்பில் பாமக தலைவர் அன்புமணி மேற்கொள்ளும் நடைபயணம் திருப்போரூரில் நேற்று தொடங்கியது. பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து வலுத்து வரும் நிலையில் இரு தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25-ம் தேதி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்கப்போவதாக அன்புமணி அறிவித்தார். இந்த நடைபயணத்தால் வடதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்பதால் தடை விதிக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் மனு அளித்தார். எனினும் திட்டமிட்டபடி நடைபயணத்துக்கான ‘உரிமை மீட்க… தலைமுறை காக்க’ என்ற இலச்சினையையும், ‘ உரிமைப் பயணம் ’ என்ற தலைப்பில் பிரச்சார பாடலையும் அன்புமணி வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக நேற்று திருப்போரூரில் நடைபயணத்தை தொடங்கினார். அப்போது முருகன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதையொட்டி நடைபெற்ற…
அனைத்து தவறான காரணங்களுக்காகவும் வைரலாகிய AI/Data OPS தொடக்கமான வானியலாளர், ஒரு தைரியமான PR நகர்வைக் கைவிட்டுவிட்டார்: கோல்ட் பிளே முன்னணி வீரர் கிறிஸ் மார்ட்டின் முன்னாள் மனைவி க்வினெத் பேல்ட்ரோ அவர்களின் தற்காலிக செய்தித் தொடர்பாளரின் பாத்திரத்தை வகிக்கிறார். இது சிந்திக்கப்படுகிறது – தூண்டுதல், கன்னம் – ஆம், இது முற்றிலும் சலசலப்பை ஆதரிக்கிறது.என்ன நடந்தது (நீங்கள் தவறவிட்டால்)இது அனைத்தும் ஜூலை 15 அன்று ஒரு கோல்ட் பிளே கச்சேரியில் தொடங்கியது. ஒரு கிஸ் கேம் வானியலாளர் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி பைரன் மற்றும் மனிதவளத் தலைவர் கிறிஸ்டின் கபோட் ஆகியோரை ஒரு வசதியான தருணத்தில் கைப்பற்றியது. அவர்கள் விரைவாக விலகிச் சென்றனர். கிறிஸ் மார்ட்டின் மேடையில், “அவர்கள் ஒரு விவகாரம் அல்லது உண்மையில் வெட்கப்படுகிறார்கள்.” அதைத் தொடர்ந்து வந்த இணைய வெடிப்பு ராஜினாமா மற்றும் முழு பி.ஆர் நெருக்கடிக்கு வழிவகுத்தது.கிஸ் கேம் குழப்பத்திற்குப் பிறகு கிறிஸ் மார்ட்டினின்…
புதுடெல்லி: கார்கில் வெற்றி தினமான ‘கார்கில் விஜய் திவாஸின்’ 26-வது நினைவு நாளில், போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும், உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இன்று 26-வது ஆண்டாக கார்கில் வெற்றி தினம், ‘கார்கில் விஜய் திவாஸ்’ என்ற பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு, தாய்நாட்டுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். இந்த நாள் நமது…
கழுத்து வலி போய் திருகு வலி வந்த கதையாகிவிட்டது புதுக்கோட்டை மாநகர திமுக-வின் நிலை. புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளராக இருந்த செந்தில் திடீரென காலமானதை அடுத்து மாநகர் செயலாளர் பதவியை பிடிக்க பலரும் முட்டி மோதினார்கள். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், ராஜேஷ் என்பவர் அமைச்சர் அன்பில் மகேஷ், எம்.எம்.அப்துல்லா (எக்ஸ் எம்பி) ஆகியோரின் ரூட்டைப் பிடித்து மாநகர் செயலாளராக வந்து உட்கார்ந்தார். ஆனால், அமைச்சர் நேரு மற்றும் புதுகை வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியனின் விசுவாசிகள் ராஜேஷை நிம்மதியாக உட்கார விடவில்லை. அவரை மாற்றியே தீரவேண்டும் என அறிவாலயம் வரைக்கும் போய் சத்தியாகிரகம் செய்தார்கள். தலைமையும் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தது. ஆனால், அதையெல்லாம் அவர்கள் கேட்பதாக இல்லை. இதனால், புதுக்கோட்டை மாநகர திமுக-வை மூன்றாக பிரித்துவிடலாம் என யோசனை சொன்னார் அமைச்சர் நேரு. ஆனால், அதை ஏற்காத ஸ்டாலின், புதுக்கோட்டை மாநகர திமுக-வை வடக்கு, தெற்கு என…
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் (ஜூலை 26) குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. தொடர்ந்து, தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த 23-ம் தேதி ஆபரணத் தங்கம் ரூ.75 ஆயிரத்தை தாண்டி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. இந்நிலையில் 24-ம் தேதி முதல் தங்கம் விலை குறைந்து வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. அதன்படி, இன்று (சனிக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ஆபரணத் தங்கம்…