Author: admin

கோவை: ஈரான் – இஸ்ரேல் இடையே நடக்கும் போர் காரணமாக இன்று (ஜூன் 24) அபுதாபியில் இருந்து கோவை வரும் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. கோவையில் இருந்து ஷார்ஜா மற்றும் அபுதாபிக்கு நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. ஷார்ஜாவிற்கு வாரத்தில் ஐந்து நாட்களும், அபுதாபிக்கு வாரத்தில் நான்கு நாட்களும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ஈரான் – இஸ்ரேல் இடையே நடைபெறும் போர் காரணமாக இன்று அபுதாபியில் இருந்து கோவை வரும் விமானம் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து கோவை விமான நிறுவனங்களின் அதிகாரிகள் கூறியது: கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விமான சேவை வழங்கப்படுகிறது. போர் பதற்றம் காரணமாக இன்று அபுதாபியில் இருந்து கோவைக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ஆனால், கோவையில் இருந்து அபுதாபிக்கு இன்று மதியம் 2.50 மணிக்கு வழக்கம் போல விமானம் இயக்கப்பட்டது. மிக குறைந்த எண்ணிக்கையில் பயணிகள்…

Read More

காய்ச்சல் நோயின் அடையாளம் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள், இருப்பினும், காய்ச்சல் ஒரு நோயைக் காட்டிலும் ஒரு அறிகுறியாகும். காய்ச்சல் என்பது உங்கள் உடல் ஒரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது என்பதற்கான பொதுவான அறிகுறியாகும், மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதை எதிர்த்துப் போராடுகிறது என்பதற்கு சான்றாகும், இதனால் உங்கள் உடல் வெப்பநிலையை உயர்த்துகிறது. ஒரு காய்ச்சல் வசதியாக இருக்கும்போது, ​​நீங்கள் கவலைப்படச் செய்யும் போது, ​​அது (பொதுவாக) குணப்படுத்தும் பொதுவான கட்டமாகும், மேலும் தொற்று சிறப்பாக வந்தவுடன் குறைகிறது. இருப்பினும், அதிக காய்ச்சல் உண்மையில் காய்ச்சல் வலிப்புத்தாக்கங்கள் மற்றும் உறுப்பு சேதம் (தீவிர சந்தர்ப்பங்களில் மட்டுமே) உள்ளிட்ட பிற சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும், இதனால் நீங்கள் காய்ச்சலை வெளியேற்றி, அதற்கு பதிலாக தொற்றுநோயை எதிர்த்துப் போராட வேண்டுமா, அல்லது காய்ச்சலைக் குறைக்க ஒரு மாத்திரையை பாப் செய்ய வேண்டுமா? சங்கடத்தை அழிப்போம் …என்ன காய்ச்சல்உங்கள் உடல் வெப்பநிலை இயல்பான 98.6…

Read More

லீட்ஸ்: இந்திய அணி உடனான லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையை எட்டியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பென் டக்கெட் மற்றும் ஸாக் கிராவ்லி இணைந்து 188 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இந்த ஆட்டத்தில் 371 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டி வருகிறது. 5-ம் நாள் ஆட்டத்தை 6 ஓவர்களுக்கு 21 ரன்கள் என்ற நிலையில் தொடங்கியது. ஒவ்வொரு செஷனாக ஆட்டத்தை அணுகுவது இங்கிலாந்து அணியின் திட்டமாக இருந்திருக்கும். அந்த வகையில் முதல் செஷனில் 96 ரன்கள் எடுத்தது. மதிய உணவு நேர இடைவேளைக்கு பிறகு ரன் ரேட்டில் சற்றே வேகம் கூட்டியது இங்கிலாந்து அணி. 40 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 177 ரன்கள் எடுத்திருந்தது. டக்கெட் 103 ரன்கள், கிராவ்லி 57 ரன்கள் எடுத்தனர். அதற்கடுத்த ஓவரை சிராஜ் வீசினார். அப்போது மழை காரணமாக சில நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அது இந்திய…

Read More

வாஷிங்டன்: “ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம். அது மிகப்பெரிய அத்துமீறல். உங்கள் போர் விமானிகளை இப்போதே நாடு திரும்பச் சொல்லுங்கள்.” என இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம். அது மிகப்பெரிய அத்துமீறல். உங்கள் போர் விமானிகளை இப்போதே நாடு திரும்பச் சொல்லுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், “இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை மீறியதாக நான் கருதுகிறேன்.போர்நிறுத்த ஒப்பந்தத்தை நாங்கள் செய்த பின்னரும், இஸ்ரேல் வெளியே வந்து ஏராளமான குண்டுகளை வீசியுள்ளது. இது நான் இதற்கு முன்பு பார்த்திராத மிகப்பெரிய அளவிலான குண்டு வீச்சு. நம்மிடம் இரண்டு நாடுகள் உள்ளன. அவை நீண்ட காலமாக மிகக் கடினமாக சண்டையிட்டு வருகின்றன. ஆனால் அவை தாம் என்ன செய்கின்றன எனத் தெரியாமலேயே…

Read More

சென்னை: “2021-ல் திமுக ஆட்சி அமைந்தது முதல், அரசு மருத்துவமனைகள் என்ற பெயரால் கட்டிடங்களை மட்டும் திறக்க ஆர்வம் காட்டும் ஆட்சியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமிக்காமலும், போதிய மருந்துகளை வழங்காமலும் உள்ள நிலையில், இந்த அரசு, மருத்துவமனைகளையே நம்பியுள்ள ஏழை, எளிய நோயாளிகளின் உயிரோடு விளையாடும் போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருவது கண்டனத்துக்கு உரியதாகும்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பலநூறு கோடி செலவுகளில் கமிஷன் ஒன்றை மட்டுமே குறியாகக்கொண்டு பிரம்மாண்ட கட்டிடங்களைக் கட்டுவது மட்டுமே சுகாதாரத் துறையின் முன்னேற்றம் என்று இந்த திமுக அரசு நினைத்துக்கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வேலூரில் 125 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட பென்லாண்ட் மருத்துவமனைக் கட்டிட வளாகத்தில் புதிதாக 7 மாடிக் கட்டடத்தைக் கட்டி, அதற்கு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை (Multi Speciality Hospital) என்று…

Read More

உள்ளடக்க படைப்பாளர்களான ரோசல்பா பெரெஸ் மற்றும் ஜாக்குலின் மோரல்ஸ் ஆகியோர் இந்தியாவில் ஆடம்பரத்தை நகைச்சுவையாக மறுவரையறை செய்தனர், இது பிரகாசமான மஞ்சள் விமல் பைகள், பொதுவாக பான் கடைகளில் காணப்படுகிறது. அவர்களின் வீடியோக்கள், அன்றாட இந்திய அமைப்புகளில் பைகளைக் காண்பிக்கும், வைரலாகி, தேசி நகைச்சுவையைத் தூண்டியது மற்றும் உள்ளூர் கலாச்சாரத்தை கொண்டாடுகின்றன. இந்த போக்கு சாதாரண பொருள்கள் எவ்வாறு எதிர்பாராத பேஷன் சின்னங்களாக மாறும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. உங்களுக்குத் தெரியும், யாராவது “சொகுசு கைப்பை” என்று கூறும்போது, ​​நீங்கள் குஸ்ஸி, பிராடா, லூயிஸ் உய்ட்டன், டியோர் அல்லது சேனல் என்று நினைத்துக்கொண்டிருக்கலாம், இல்லையா? ஆனால் இணையம் அந்த யோசனையை எடுத்து அதை முழுவதுமாக புரட்டியுள்ளது, மிகவும் மகிழ்ச்சியுடன் நகைச்சுவையான வழியில்.ஓடுபாதை முதல் பான் கடை வரைரோசல்பா பெரெஸ் மற்றும் ஜாக்குலின் மோரலெஸ், இரண்டு வெளிநாட்டு உள்ளடக்க படைப்பாளர்களான முழு-தேசிக்குச் சென்று இந்தியாவில் தலைகளைத் திருப்பி-உயர்-ஃபேஷன் லேபிள்களுடன் அல்ல, ஆனால் பிரகாசமான மஞ்சள்…

Read More

புதுடெல்லி: அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைக்க எந்த நாடும் துணிந்ததில்லை. ஆனால், நாங்கள் அதைச் செய்தோம் என இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் எலாஹி தெரிவித்தார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் எலாஹி, “வரலாற்றில் எந்த நாடும் அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்ததில்லை. ஈரான் அதைச் செய்துள்ளது. இதை ஒரு குறியீட்டு பதிலடியாக நீங்கள் எண்ணிக்கொள்ளுங்கள். ஆனால், அமெரிக்கா இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கையை மீண்டும் செய்தால், அதற்கும் இதேபோன்ற பதில்தான் கிடைக்கும்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நம்பகமானவர் அல்ல. அவர் ஈரானுக்கு எதிராக ராணுவத் தாக்குதலைத் தொடங்கினார். அவர் ஈரானில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்கினார். அவர் சர்வதேச சட்டங்களையோ, மனிதாபிமான சட்டங்களையோ மதிக்கவில்லை. எனவே, இஸ்ரேலின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஈரான் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில்…

Read More

சென்னை: “மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள ‘மா’ விவசாயிகளுக்கு 50:50 பகிர்வு முறையில் மாநில அரசும் மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட ஏதுவாகத் தமிழ்நாட்டில் PM-AASHA சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்,” என்று பிரதமர் மோடி மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும். மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு உள்ளிட்ட FSSAI தரக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்திட வழிகாட்டுதல்கள் வழங்கிட வேண்டும்.மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வுமுறையில் மாநில அரசும் மத்திய…

Read More

உங்கள் பார்வை மிகப்பெரிய சவாலுக்கு தயாரா? ஆப்டிகல் மாயைகள் நம் கண்களை சோதனைக்கு உட்படுத்துகின்றன, மேலும் நமது மூளைகள் செயலில் உள்ளன. மின்னல் வேகத்தில் விவரங்களைக் கவனிக்க “எச்டி கண்கள்” உங்களிடம் இருப்பதாக நீங்கள் நம்பினால், இந்த புதிர் உங்களுக்காகக் காத்திருக்கிறது.பணி: இந்த ராபின்களுக்குள் இரண்டு இதயங்களைக் கண்டுபிடி, ஆனால் திருப்பத்தை பிடித்துக் கொள்ளுங்கள்! உங்களுக்கு 5 வினாடிகள் உள்ளன.ஆப்டிகல் மாயைகள் ஒரு வேடிக்கையான பொழுது போக்கு அல்ல; காட்சித் தகவல்களை நமது மூளை எவ்வாறு விளக்குகிறது என்பதை ஆராய அவை ஒரு கண்கவர் வழியாகும். இந்த புதிர்கள் எங்கள் கருத்தை நீட்டித்து, நாம் அதிக கவனம் செலுத்தவில்லை என்றால் சிறிய விவரங்களை எவ்வாறு தவறவிட முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஆப்டிகல் மாயைகளுடன் ஈடுபடுவது நினைவகத்தை அதிகரிக்கும், படைப்பாற்றல் மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களைக் கூர்மைப்படுத்துவதாகும், இவை அனைத்தும் நம் மனதை சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றன.இப்போது, ​​உங்களுக்காக எங்களுக்கு ஒரு புதிய சவால்…

Read More

புதுடெல்லி: பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான திறனை மேம்படுத்த ரூ.2,000 கோடி மதிப்பிலான கொள்முதல் ஒப்பந்தங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அவசரகாலக் கொள்முதல் தொடர்பான நெறிமுறைகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சகம் 13 ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ. 1,981.90 கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அவசரகால கொள்முதல் ஆணையின் கீழ் கொள்முதல் நடைமுறைகள் விரைவுப்படுத்தப்படும். பயங்கரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் பாதுகாப்பு படையினரின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதை இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. கொள்முதல் செய்யப்படும் ஆயுத தளவாடங்கள் விவரம்: ஒருங்கிணைந்த ட்ரோன் கண்டறிதல் மற்றும் இடைமறிப்பு அமைப்புகள், குறைந்த அளவிலான இலகுரக ரேடார்கள், மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள், தொலைதூரத்தில் இயக்கப்படும் வான்வழி வாகனங்கள் (RPAVகள்), செங்குத்தாக மேலெழுந்து சென்று அதே போன்று தரையிறங்கக் கூடிய போர் விமானங்கள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், விரைந்து எதிர்வினையாற்றும் கனரக மற்றும்…

Read More