சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்களை கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீதிபதிகள் அறைகள் மற்றும் நீதிமன்ற அறைகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோல் கடந்த வாரம் சென்னை மாவட்ட நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தற்போது மீண்டும் ஐகோர்ட்டுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மும்பை உயர் நீதிமன்றத்துக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கும், சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது இங்கே நினைவுகூரத்தக்கது. நாடு முழுவதுமே பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதாக அவ்வப்போது நடைபெறும் சூழலில் தற்போது நீதிமன்றங்களுக்கு…
Author: admin
பாரிஸ் வடிப்பான்களை மறந்து விடுங்கள், ஏனென்றால் இந்தியா அதிகாரப்பூர்வமாக நானோ வாழைப்பழத்தை இறுதி இன்ஸ்டாகிராம் நெகிழ்வு என்று முடிசூட்டியுள்ளது. விண்டேஜ் சேலை மாற்றங்கள் முதல் உங்கள் சோபாவின் வசதியிலிருந்து உருவாக்கப்பட்ட கடற்கரை விடுமுறை படங்கள் வரை, ஜெமினியின் நானோ வாழை இயந்திரம் எல்லா இடங்களிலும் ஊட்டங்களை ஊதிவிட்டது. இந்தியா, உண்மையில், உலகளாவிய பயன்பாட்டு தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது, இது இந்த AI புயலின் மையப்பகுதியாக அமைகிறது. இன்ஸ்டாகிராமின் விண்டேஜ் சேலை புகைப்பட போக்கு | கடன்: இன்ஸ்டாகிராம்/சலோனிஜாசேலை படங்கள் மற்றும் நானோ வாழை பித்துஎல்லோரும் பண்டிகை ரீல்கள் மற்றும் #outfitgoals திருத்தங்களை வெளியேற்றுவதில் மும்முரமாக இருக்கும்போது, ஒரு இருண்ட கேள்வி பதுங்குகிறது: அந்த சரியான விடுமுறை ஸ்னாப் அல்லது விண்டேஜ் சேலை படம் கூட உண்மையானதாக இருந்தால் உங்களுக்கு எப்படித் தெரியும்? இன்ஸ்டாகிராமின் விண்டேஜ் சேலை புகைப்பட போக்கு | கடன்: இன்ஸ்டாகிராம்/சலோனிஜாகூகிளின் வாட்டர்மார்க் மற்றும் மறைக்கப்பட்ட சின்திட் தந்திரம்ஜெமினியின் மல்டிமோடல்…
புதுடெல்லி: மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாலத்தீவு அரசின் வேண்டுகோளின் பேரில் 50 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கருவூல பத்திரங்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு மீண்டும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. மார்ச் 2019 முதல் இந்திய அரசு இதுபோன்ற பல கருவூல பத்திரங்களை வாங்குவதன் மூலம் ஆண்டுதோறும் மாலத்தீவுக்கு வட்டி இல்லா நிதி உதவியை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இந்த நிலையில், மாலத்தீவு அரசு கருவூலப் பத்திரங்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான தனித்துவமான ஏற்பாட்டின் கீழ் மாலத்தீவுகளுக்கான அவசர நிதி உதவியாக பத்திரங்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் ஓராண்டு நீட்டிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘நக்சல்கள்’ பிரச்சினையை எதிர்கொண்டுவரும் இந்திய மாநிலங்களில் ஒன்று ஜார்கண்ட். ‘நக்சல்’ இளைஞர்கள் சரணடைந்தால், அரசு அவர்களை மன்னித்து, முறையான ஆயுதப் பயிற்சியளித்து, அரசின் அதிரடிப்படையில் கமாண்டோ வேலைவாய்ப்பு வழங்கும் என்கிற அறிவிப்பை நம்பிச் சென்று, போலி ரெக்ரூட்மெண்ட் கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் ஓர் அப்பாவி மலைவாழ் பழங்குடி இளைஞனின் கதையாக ‘தண்டகாரண்யம்’ படத்தை உருவாக்கியிருக்கிறார் அதியன் ஆதிரை. இவரது முதல் படமான ‘‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’ ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பாராட்டு பெற்ற ஒன்று. ‘லேர்ன் & டீச் புரொடக்ஷன் சார்பில் சாய் வெங்கடேஸ்வரனுடன் இணைந்து ‘தண்டகாரண்யம்’ படத்தைத் தயாரித்திருப்பவர் இயக்குநர் பா.இரஞ்சித். சமீபத்தில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பா.ரஞ்சித்: “நாங்கள் இங்குப் பணம் சம்பாதிக்கும் தொழில் நோக்கத்துடன் வரவில்லை. சமூகத்தைச் சரிசெய்ய வேண்டும் என்கிற முனைப்போடு வந்திருக்கிறோம். நான் இயக்குநராக வரும்போது வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே இருப்பேன் என நினைத்தேன். ஆனால், மக்கள்…
சென்னை: தவெக தலைவர் விஜய் தனது தமிழக சுற்றுப்பயணத்தை கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.13) அன்று திருச்சியில் தொடங்கினார். அந்த சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து நாளை (செப்.20) நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக தவெக தலைமை நிலையக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் நடைபெற உள்ளது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு ஐகோட்டில்…
நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது அதிர்ஷ்டம் அல்லது மரபியல் அல்ல. இது சீரான மற்றும் வேண்டுமென்றே பழக்கவழக்கங்களின் விளைவாகும், வாழ்நாளில் நடைமுறையில் மற்றும் மெருகூட்டப்பட்டது. பெரும்பாலான ஆரோக்கிய வல்லுநர்கள் இது வாய்ப்பு அல்ல, மூலோபாயம் என்று கூறுகிறார்கள், நமக்கு எவ்வளவு வயதாகிறது என்பதை உண்மையிலேயே வடிவமைக்கிறது. அத்தகைய புகழ்பெற்ற நீண்ட ஆயுள் மருத்துவர் 90 களில் நன்றாக வளர்ந்து வரும் மக்களின் வாழ்க்கையை வலியுறுத்துகிறார், அவர்கள் அதிர்ஷ்டத்தை அல்லது வாய்ப்பை எவ்வாறு நம்பவில்லை என்பதை விளக்குகிறார்கள், அவர்கள் மூலோபாயத்தை நம்பியிருக்கிறார்கள்.இந்த நபர்கள் தங்கள் மனம், உடல்கள் மற்றும் ஆவிகள் பாதுகாக்கும் பொதுவான வாழ்க்கை முறை வடிவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். எம்.டி. மற்றும் நீண்ட ஆயுள் நிபுணரான டாக்டர் வாஸிலி எலியோப ou லோஸ் இவை அனைத்திலும் என்ன சொல்ல வேண்டும் என்று பார்ப்போம்.நோக்கத்துடன் வாழும் வாழ்க்கைஓய்வு பெற்ற பிறகும் சிலர் ஒவ்வொரு நாளும் நோக்கத்துடன் தழுவுகிறார்கள், அவர்கள் தன்னார்வத் தொண்டு…
புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங், நாட்டின் தேர்தல்களை ஹேக்கர்களிடம் ஒப்படைக்கலாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுவது தொடர்பான ஒரு செய்தியை பகிர்ந்து திக்விஜய சிங் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘இன்றைய மேம்பட்ட தொழில்நுட்ப யுகத்தில் நாட்டின் தேர்தல்களை ஹேக்கர்களிடம் ஒப்படைக்க முடியுமா? சற்று யோசித்துப் பாருங்கள். வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி இந்தியாவின் தேர்தல்களை நடத்த வேண்டாமா?. அல்லது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் விவிபாட் (VVPAT) சீட்டை நம் கைகளில் கொடுக்க வேண்டாமா?. தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் எழுப்பும் இந்தக் கோரிக்கை நியாயமானதல்லவா? சற்று யோசித்துப் பாருங்கள்’ எனத் தெரிவித்துள்ளார். நேற்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “ ‘வாக்கு திருட்டு 2.0’ தகவலை தற்போது ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில்…
சென்னை: பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த இந்திய அரசு முன்வர வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டு ஆண்டுகளாக காசா மீது இன அழிப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கும் யூத இனவெறி இஸ்ரேல், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களை கொன்றுள்ளது. மறுபுறம், காசாவிற்குள் உணவுப் பொருட்களை அனுமதிக்காமல் பட்டினிப் போரை தொடுத்து வருவதாலும் ஊட்டச் சத்துக் குறைபாட்டாலும், பசியாலும் ஆயிரக்கணக்கான குழந்தைகளும் செத்து மடிந்துள்ளனர். ஆகஸ்ட் 8-ஆம் தேதியன்று காசா நகரத்தை முழுவதுமாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால், அவற்றையெல்லாம் மீறி காசா மீது தீவிர தாக்குதலை நடத்திய இஸ்ரேலுக்கு அந்நாட்டு மக்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகஸ்ட் 20-ஆம் தேதியன்று காசா நகரம் முழுவதையும் இஸ்ரேலின் கட்டுப்பட்டின் கீழ் கொண்டுவரும் திட்டத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.…
சமீபத்திய புதைபடிவ கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய பாம்பைப் பற்றிய விவாதத்தைத் தூண்டிவிட்டன. கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டைட்டனோபோவா, 50 அடி வரை நீண்டு, மகத்தான நசுக்கிய சக்தியைக் கொண்டிருந்தது. இருப்பினும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் ஒரு இந்து பாம்பு தெய்வத்தின் பெயரிடப்பட்ட வாசுகி இண்டிகஸ் இன்னும் நீளமாக இருந்திருக்கலாம், இது 49 அடியை எட்டியிருக்கலாம். பாம்புகள் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக உள்ளன, உலகின் காடுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் பாலைவனங்கள் வழியாக அமைதியாக சறுக்குகின்றன. இன்றைய பாம்புகள் நிச்சயமாக மிரட்டக்கூடியதாக இருக்கும்போது, பிரமாண்டமான அனகோண்டா அல்லது ரெட்டிகுலேட்டட் பைதான் போன்றவை, வரலாற்றுக்கு முந்தைய பாம்புகள் முற்றிலும் வேறுபட்ட மட்டத்தில் இருந்தன. மனிதர்கள் வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, மாபெரும் பாம்புகள் பூமியை ஆட்சி செய்தன, மனதைக் கவரும் நீளத்திற்கு வளர்ந்தன.சமீபத்திய வரலாற்றில் மிகவும் விதிவிலக்கான மற்றும் சிறந்த புதைபடிவ கண்டுபிடிப்புகள் இரண்டு விவாதத்திற்கு வழிவகுத்தன, இது இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய பாம்பாக இருந்தது,…
புதுடெல்லி: நேபாளத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது. பின்னர் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். இதையடுத்து, இடைக்கால அரசின் பிரதமராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்றார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “நேபாள இடைக்கால அரசின் பிரதமர் சுசீலா கார்கியுடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது, சமீபத்தில் நடந்த வன்முறையில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டேன். மேலும் அந்நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அவர் எடுத்து வரும் முயற்சிக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்துள்ளேன். மேலும் நாளை (வெள்ளிக்கிழமை) தேசிய தினம் கொண்டாட உள்ள நேபாள மக்களுக்கும் பிரதமருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தேன்” என பதிவிட்டுள்ளார்.