புதுடெல்லி: நாடு முழுவதும் 2.45 லட்சம் பழைய வாகனங்கள் ஸ்க்ராப் (Scrap) செய்து அழிக்கப்பட்டுள்ளன. பழைய வாகனங்கள் தொடர்பான மத்திய அரசின் சட்டத்தால் பல்வேறு பலன்கள் கிடைத்துள்ளன. அதிகமான மாசு மற்றும் சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்ட பழைய வாகனங்கள் குறித்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மத்திய அரசு பழைய வாகனங்கள் தொடர்பான கொள்கையை கடந்த 2021 ஆக.13-ல் வெளியிட்டது. இதன்படி, 10 வருடங்கள் பயன்பாட்டில் இருந்த டீசல் மற்றும் 15 வருட பெட்ரோல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த தடை டெல்லி உள்ளிட்ட சில நகரங்களில் மட்டுமே கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரை 2.45 லட்சம் பழைய வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் வாகனங்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது. பழைய வாகனங்கள் அகற்றுதல் கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் வகையில், டெல்லியில் ஜூலை 1 முதல் பழைய வாகனங்களுக்கு டீசல் அல்லது பெட்ரோல்…
Author: admin
ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தின் தெலுங்கு உரிமையும் பெரும் விலைக்கு விற்பனையாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால் உரிமைகளை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில் இதன் வெளிநாட்டு உரிமை ரூ.75 கோடிக்கு விற்பனையானது. இது பெரும் சாதனையாக கருதப்பட்டது. தற்போது அதேபோல் தெலுங்கு உரிமையும் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. ‘கூலி’ படத்தின் தெலுங்கு உரிமையினை ஏசியன் சினிமாஸ் சுனில் நரங், சுரேஷ் பாபு மற்றும் தில் ராஜு ஆகியோர் இணைந்து கைப்பற்றி இருக்கிறார்கள். இதற்காக சுமார் ரூ.45 கோடி கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் ரூ.100 கோடி வசூல் செய்தால் மட்டுமே, இந்தத் தொகையை எடுக்க முடியும். இந்த விற்பனையும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், செளபின் சாகீர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில்…
சென்னை: “50 ஆண்டுகளுக்கு முன்பு அரசமைப்புச் சட்டத்தின் மூலமாக அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட, சட்டத்தின் அனுமதி இல்லாமலேயே அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூட்டணி சேர்ந்து சட்டவிரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “1971-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 518 இடங்களில் 352 இடங்களில் வெற்றியும், 43.68 சதவிகித வாக்குகளை பெற்றும் மக்கள் பேராதரவோடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமராக இந்திரா காந்தி தேர்வு செய்யப்பட்டார். எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனசங்கம் 22 இடங்களில் வெற்றி பெற்றதோடு, 7.3 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சியாகக் கூட வர முடியவில்லை. இந்திரா காந்தியின் முற்போக்கு நடவடிக்கைகளான 14 வங்கிகளை தேசியமயமாக்கியது, மன்னர் மானியத்தை ஒழித்தது, வறுமை ஒழிப்பு போன்ற மக்கள் நலன்சார்ந்த இருபது…
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே 2020 ஆம் ஆண்டின் ராயல் குண்டுவெடிப்பை நாம் அனைவரும் நினைவில் வைத்திருக்கிறோம் – இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே அதிகாரப்பூர்வமாக அரச கடமைகளில் இருந்து விலகினர். அந்த நேரத்தில், இது ஊடக ஊடுருவல் மற்றும் குடும்ப பதற்றத்திலிருந்து வியத்தகு தப்பிக்கும் வகையில் வரையப்பட்டது. ஆனால் ராயல் வாழ்க்கை வரலாற்றாசிரியர் வாலண்டைன் லோவின் கூற்றுப்படி, கண்ணை சந்திப்பதை விட கதைக்கு இன்னும் நிறைய இருக்கிறது – இது தனியுரிமை அல்லது அரண்மனை அரசியல் பற்றி மட்டுமல்ல, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் பிரிட்டனில் தங்கள் அரச வாழ்க்கையை விட்டு வெளியேறச் செய்தனர்.தனது ‘கோர்ட்டியர்ஸ்’ புத்தகத்தில், சசெக்ஸின் பெரிய ராயல் வெளியேறும் டியூக் மற்றும் டச்சஸ்: சுதந்திரம், பணம் மற்றும் பிராண்ட்-பில்டிங் ஆகியவற்றின் பின்னணியில் உள்ள உண்மையான உந்துதல் என்று அவர் கூறுவதை குறைந்த வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.தி நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, ஹாரி மற்றும்…
வாஷிங்டன்: ஈரானின் அணுசக்தி மையங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்ற செய்திகள் வெளியான நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதனை முழுமையாக மறுத்துள்ளார். மேலும், ஈரான் அணுசக்தி மையங்கள் ‘முற்றிலுமாக அழிக்கப்பட்டன’ என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். ஈரான் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு சில மாதங்கள் மட்டுமே பின்னடைவை ஏற்படுத்தியதாகவும், அவை முற்றிலுமாக அழிக்கப்படவில்லை எனவும் உளவுத்துறை கண்டறிந்ததாக வெளியான ஊடக செய்திகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “சிஎன்என், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டவை போலி செய்திகள். வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ராணுவத் தாக்குதல்களில் ஒன்றை இழிவுப்படுத்துவதற்கான முயற்சியில் இவர்கள் இணைந்துள்ளனர். ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இந்த ஊடகங்கள் இப்போது மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.” என்று தெரிவித்திருக்கிறார் கடந்த சனிக்கிழமையன்று போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய…
சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணி இணைந்து ‘மாநாடு 2’ படத்தில் பணிபுரிய முடிவு செய்திருக்கிறார்கள். நீண்ட வருடங்கள் கழித்து சிம்புவுக்கு பெரும் வெற்றியை அளித்த படம் ‘மாநாடு’. இதன் டைம் லூப் காட்சிகள், காமெடி, திரைக்கதை, எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு என அனைத்துமே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது இதன் 2-ம் பாகம் உருவாக இருக்கிறது. சிம்பு மற்றும் வெங்கட்பிரபு இருவருமே வெவ்வேறு படங்களில் மும்முரமாக இருக்கிறார்கள். தங்களுடைய பணிகளை முடித்துவிட்டு ‘மாநாடு 2’ படத்தில் பணிபுரிய முடிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதனையும் சுரேஷ் காமாட்சி தயாரிக்க முன்வந்திருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
தருமபுரி: போதைப் பொருட்களின் வியாபார சந்தையாக தமிழகம் மாறி வருவதை தமிழக அரசு கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்து வருகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். தருமபுரியில் இன்று (ஜூன் 25-ம் தேதி) அமமுக மாவட்ட செயல் வீரர், வீராங்கனைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருப்பூரில் இன்று இந்து முன்னணி நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை, கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. யார் உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, மக்கள் இந்த ஆட்சியின் மீது கோபமடைந்துள்ளனர். அதேபோல, தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை சந்தையாக மாறி வருகிறது. இந்த பொருட்களின் புழக்கத்தை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் வேண்டிய தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது. தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. மக்கள் தங்கள்…
பெற்றோரைப் பற்றி நாம் பேசும்போது, அதை ஒரு வழி வீதி என்று நாங்கள் கருதுகிறோம், அங்கு பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தையில் சரியான மதிப்புகளையும் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்க முயற்சிக்கிறார்கள். முதன்மை பராமரிப்பாளர்களாக, பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் எப்படி மாறுகிறார்கள் என்பதற்கு பொறுப்பாவார்கள், எனவே அவர்கள் சிறந்த வழியில் கொண்டு வர அவர்கள் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறார்கள். இருப்பினும், நாம் அட்டவணையைத் திருப்பினால், பெற்றோர்களும் கூட தங்கள் குழந்தைகளிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்பதை நாங்கள் உணருவோம். குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு கற்பிக்கக்கூடிய மற்றும் அவர்களை ஒரு சிறந்த நபராக மாற்றக்கூடிய ஐந்து மதிப்புமிக்க விஷயங்கள் இங்கே.ஆர்வமும் ஆச்சரியமும்குழந்தைகள் இயற்கையாகவே உலகத்தைப் பற்றி ஆர்வமாக உள்ளனர். அவர்கள் எல்லாவற்றையும் பற்றி முடிவற்ற கேள்விகளைக் கேட்கிறார்கள் -வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது, தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன. இது குழந்தை பருவத்தின் ஒரு சாதாரண பகுதியாகும், மேலும் இந்த ஆர்வம்…
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (இடது), பிரதிநிதி அல் கிரீன், டி-டெக்சாஸ் (வலது) ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை குற்றஞ்சாட்டுவதற்கான முயற்சியை ரத்து செய்ய அமெரிக்க பிரதிநிதிகள் சபை செவ்வாய்க்கிழமை தீர்க்கமாக வாக்களித்தது, இந்த தீர்மானத்தை நிராகரிக்க 128 ஜனநாயகக் கட்சியினர் கைகோர்த்தனர்.இந்த மசோதாவை ஜனநாயகக் கட்சி பிரதிநிதி அறிமுகப்படுத்தினார். டெக்சாஸின் அல் கிரீன், ஈரானில் டிரம்ப்பின் சமீபத்திய இராணுவ நடவடிக்கைகளை விமர்சித்தார்.344-79 வாக்கெடுப்பில், சபை குற்றச்சாட்டு நடவடிக்கையை அட்டவணைக்கு நகர்த்தியது, இது ஒரு நடைமுறை நடவடிக்கை, இது தீர்மானத்தை மேலும் கருதுவதைத் தடுக்கிறது. இந்த முயற்சிக்கு எதிரான ஒரு குறிப்பிடத்தக்க இரு கட்சி ஒருமித்த கருத்தை வாக்கெடுப்பு பிரதிபலிக்கிறது, சட்டமியற்றுபவர்கள் கட்சி எல்லைகளில் கைகோர்த்துக் கொண்டனர்.வார இறுதியில் ஈரானில் அங்கீகரிக்கப்படாத வான்வழித் தாக்குதல்களுக்கு உத்தரவிடுவதில் ஜனாதிபதி டிரம்ப் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக பசுமை தீர்மானம் குற்றம் சாட்டியது. இராணுவ நடவடிக்கையை “போரின் உண்மையான அறிவிப்பு” என்று முத்திரை குத்துதல்.காங்கிரஸின் ஒப்புதலைத் தவிர்ப்பதன்…
சென்னை: ‘சாதியை வைத்துக்கொண்டு தமிழ் தேசியம் எப்படி சாத்தியமாகும். ஆணவக்கொலை எப்படி நடக்கிறது, ஒரு தமிழன் தான் இன்னொரு தமிழனை வெட்டுகிறான். அப்படியானால் சாதி ஒழியாமல் எப்படி தமிழ் தேசியம் மலரும். எனவே சாதி ஒழிப்பே தமிழ் தேசியம்’ என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, சமூகம், அரசியல் உள்ளிட்ட தளங்களில் சிறப்பாக பணியாற்றிய ஆளுமைகளுக்கு விசிக சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. அதன்படி, ஆந்திராவில் உள்ள திராவிட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.எஸ்.சலமுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது, நடிகர் சத்யராஜுக்கு ‘பெரியார் ஒளி’ விருது வழங்கப்பட்டது. அதேபோல, புதுச்சேரி முன்னாள் முதல்வர் வெ.வைத்திலிங்கத்துக்கு ‘காமராசர் கதிர்’ விருது, பவுத்த ஆய்வறிஞர் பா.ஜம்புலிங்கத்துக்கு ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகுவுக்கு ‘மார்க்ஸ் மாமணி’ விருது, தமிழ்நாடு…