சென்னை: திருநெல்வேலி தொகுதி எம்.பி ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், வழக்கு விவரங்களையும் மறைத்துள்ளார். எனவே, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்,” என கூறியிருந்தார். இந்த வழக்கில், கடந்த 19-ம் தேதி நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சான்று ஆவணங்களாக பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று (ஜூன் 26)…
Author: admin
ஆப்டிகல் மாயைகள் பார்ப்பதற்கு குளிர்ச்சியாக மட்டுமல்ல – அவை மனித மூளை எவ்வளவு கூர்மையானவை என்பதை சவால் செய்யும் முதன்மை கருவிகளும். இத்தகைய மூளை புதிர்கள் உங்கள் கண்களையும் மூளையையும் முட்டாளாக்குகின்றன, உங்கள் கருத்தை சோதிக்கின்றன, விவரங்களுக்கு கண், மற்றும் மாதிரி கண்டுபிடிப்புகளை சோதிக்கின்றன. மறைக்கப்பட்ட எண்கள் முதல் மறைக்கப்பட்ட வடிவங்கள் வரை, அவை உங்கள் மூளையை ஓவர் டிரைவிற்குள் தள்ளுகின்றன. இந்த வைரஸ் சவால்களில் ஒன்று இணையத்தை புயலால் எடுத்துக்கொள்வது: “3” என்ற இலக்கத்தால் நிரப்பப்பட்ட ஒரு புதிர் கணித மேதைகளை கூட ஸ்டம்பிங் செய்கிறது. நீங்கள் அதை தீர்க்க முடியும் என்று நினைக்கிறீர்களா? மற்றொரு தோற்றத்தைப் பாருங்கள், நீங்கள் கவனிக்காததைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படலாம்.புதிர்கணக்கால் எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) இல் பகிரப்பட்ட ஒரு மூளை டீஸர் எம்மிகோல்ட் அதன் எளிதான-ஆனால்-வடிவமைக்கப்பட்ட முன்மாதிரியுடன் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. “31343353533” என்ற தொடரில் ஒவ்வொரு 3 ஐயும் எண்ணுவதே சவால் – ஒரு…
மும்பை: மகாராஷ்டிராவில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். இதன்படி, முதல் ஆண்டில் மின்சாரக் கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்படும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக 26 சதவீதம் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் இது குறித்து தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மின்சாரக் கட்டணங்கள் குறித்த நல்ல செய்தியை அறிவிக்கிறேன். மாநில வரலாற்றில் முதல் முறையாக, மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படுகிறது. முதல் ஆண்டில் 10 சதவீத கட்டணக் குறைப்புடன் தொடங்கி, அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 26 சதவீதம் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும். இந்த கட்டணக் குறைப்பு திட்டத்தை அங்கீகரித்த மகாராஷ்டிரா மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு நன்றி. இது வீட்டு உபயோகம், தொழில் துறை மற்றும் வணிக நுகர்வோருக்கு மிகவும் பயனளிக்கும்” என்று தெரிவித்தார். மாநிலத்தில் கிட்டத்தட்ட 70 சதவீத நுகர்வோர் 100 யூனிட்டுகளுக்குக் குறைவாகவே மின்சாரத்தை பயன்படுத்துவதாகவும், இந்த 10 சதவீதக்…
இந்திய திரையுலகின் உச்சத்தை விஜய் தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால், ‘ஜனநாயகன்’ படத்துக்காக அவருக்கு ரூ.250 கோடியை சம்பளமாக கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடிப்பில் கடைசியாக உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இதன் உரிமைகளைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே, ‘ஜனநாயகன்’ படத்துக்கு விஜய்க்கு 250 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், ஜி.எஸ்.டி தொகையும் இணையும் என்பது கூடுதல் தகவல். இதை வைத்துப் பார்த்தால் இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பது விஜய்தான். ஏனென்றால், முன்னணி நடிகர்கள் பலரும் சம்பளமாக ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு, படத்தின் வியாபாரத்தில் இருந்து பங்கு என்றும் ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். ஆனால், சம்பளமாக இவ்வளவு பெரிய தொகை…
திருப்பூர்: இன்ஸ்டாகிராம் குழுவால் திருப்பூரில் மாணவிகள் மோதல் சம்பவத்தை தொடர்ந்து, மாணவிகளுக்கு கவுன்சிலிங் தர கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் மாநகராட்சிப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 படிக்கும் சில மாணவிகள் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்து சமூக வலைத்தளங்களில் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளனர். அதேபோல், திருப்பூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளும் இதுபோலவே இன்ஸ்டாகிராமில் குழு தொடங்கி தங்கள் பதிவுகளை போட்டு வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இரு குழுக்களும் இடையில் யாருடைய குழு பெரியது என்ற மோதல் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் சண்டை முற்றியதில், கோபமடைந்த திருப்பூர் மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசுப் பள்ளிக்கு பேருந்தில் வந்துள்ளனர். பின்னர், அந்தப் பள்ளி மாணவிகளிடம் திருப்பூரில் இருந்து சென்ற மாணவிகள்,…
புதுடெல்லி: இரு சக்கர வாகனங்களுக்கு அரசு சுங்க வரி விதிக்கப் போவதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையல்ல என தெரிவித்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அத்தகைய திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்க இருப்பதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளைப் பரப்புகின்றன. அத்தகைய முடிவு எதுவும் முன்மொழியப்படவில்லை. இரு சக்கர வாகனங்களுக்கு முழுமையான வரி விலக்கு தொடரும். உண்மை தெரியாமல் தவறான செய்திகளைப் பரப்புவதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்துவது ஆரோக்கியமான ஊடக அறம் அல்ல. இதை நான் கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இதேபோல், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் (NHAI), இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கவரி விதிக்கும் திட்டம் எதும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. FASTag அடிப்படையில் வருடாந்திர பாஸ்:…
பலருக்கு, காஃபினேட்டட் பானம் இல்லாமல் காலை வழக்கமும் முழுமையடையாது. தேநீர் அல்லது காபி உலகளவில் மிகவும் நுகரப்படும் இரண்டு பானங்கள், ஒவ்வொன்றும் தனித்துவமான சுவைகள், கலாச்சார முக்கியத்துவம் மற்றும் பலவிதமான சுகாதார நன்மைகளை வழங்குகின்றன. நீங்கள் ஒரு காபி காதலன் அல்லது தேயிலை ஆர்வலராக இருந்தாலும், மனித உடலில் அவற்றின் விளைவுகளைப் புரிந்துகொள்வது உங்கள் தினசரி கஷாயத்தைப் பற்றி மேலும் தகவலறிந்த தேர்வுகளைச் செய்ய உதவும். காபி மற்றும் தேநீர் இரண்டும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன, மூளை மற்றும் இதய ஆதரவு, வளர்சிதை மாற்றத்தை உயர்த்துவது மற்றும் மேம்பட்ட நோயெதிர்ப்பு செயல்பாடு போன்ற நன்மைகளை வழங்குகின்றன. சிறந்த தேர்வு உங்கள் உடலின் காஃபின் உணர்திறன், சுகாதாரத் தேவைகள் மற்றும் ஆற்றல் மட்டங்களைப் பொறுத்தது. ஒவ்வொரு பானமும் உங்களை எப்படி உணர்த்துகிறது என்பது பற்றியது. நீங்கள் காபியின் தைரியமான ஊக்கத்தை விரும்பினாலும் அல்லது தேநீரின் இனிமையான லிப்டை விரும்பினாலும், இரண்டும் மனதுடன் நுகரும்போது ஆரோக்கியமான…
புதுடெல்லி: 345 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 2019 முதல் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று (ஜூன் 26) தெரிவித்துள்ளது. இந்த 345 அரசியல் கட்சிகளும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், இக்கட்சிகளின் அலுவலகங்களை எங்கும் நேரடியாக வைத்திருக்க முடியாது எனவும், எதிர்காலத்தில் இக்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட 2,800-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில், பல கட்சிகள் தங்களின் அத்தியாவசிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டன…
மோகன்லால் மற்றும் மம்மூட்டி இணையும் படத்துக்கு ‘பாட்ரியாட்’ என தலைப்பிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகேஷ் நாராயணன் இயக்கி வரும் புதிய படத்தில் மோகன்லால், மம்மூட்டி, ஃபஹத் ஃபாசில், குஞ்சக்கோ போபன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதுவே மலையாள திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைந்திருக்கிறது. இதன் படப்பிடிப்பு கேரளா, இலங்கை உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இதனிடையே, தற்போது இலங்கை படப்பிடிப்புக்காக மோகன்லால் சென்றிருந்தார். அப்போது இலங்கை சுற்றுலாத் துறை அவரை வரவேற்றது. அதன் புகைப்படங்களோடு ‘பாட்ரியாட்’ படத்தின் படப்பிடிப்புக்காக மோகன்லால் இலங்கை வந்தபோது என்று குறிப்பிட்டு இருந்தது. அதுமட்டுமன்றி சமீபத்தில் மோகன்லால் அளித்த பேட்டியிலும் இப்பெயரை குறிப்பிட்டு இருக்கிறார். இந்த இரண்டையும் வைத்து பார்த்தால், படத்தின் தலைப்பு ‘பாட்ரியாட்’ என்பது உறுதியாகிறது. இதன் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யும் பொருட்களை கடைகளில் வைத்து எடை போட்டு விற்பனை முனைய கருவியில் பதிவு செய்ய உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், “தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாட்டின் எந்த பகுதிகளில் இருந்தாலும் நியாய விலை கடைகளில் உணவு பொருட்களை வாங்க முடியும். இதற்காக அனைத்து நியாய விலை கடைகளிலும் மின்னணு விற்பனை முனைய கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மேம்படுத்தும் வகையில் உணவு பொருள் விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை களையவும், சரியான எடையில் பொருட்களை வழங்க மின்னணு விற்பனை கருவியுடன், மின்னணு எடை தராசை இணைக்க வேண்டுமென அனைத்து மாநில…