Author: admin

புனே: புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கண்களை சிறுநீரால் கழுவும் வீடியோவை பதிவிட்டிருந்த நிலையில், பலரும் அவரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புனேவைச் சேர்ந்தவர் நூபுர் பிட்டி. இவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த வீடியோ மருத்துவ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெண் தினமும் காலையில் தனது சிறுநீரில் கண்களை கழுவுவதாக தெரிவித்துள்ளார். அதோடு, அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘Urine Eye Wash — Nature’s Own Medicine’ என்ற தலைப்பில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது, தினந்தோறும் காலை நேரத்தில் எனது சிறுநீரில் கண்களை கழுவுவதால் கண்ணில் ஏற்படும் வறட்சி, எரிச்சல் மற்றும் சிவத்தல் உள்ளிட்ட பிரச்சினையில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது என்றும் இது இயற்கை மற்றும் மாற்று சிகிச்சைமுறை மீதான தனது நம்பிக்கை என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வெளியான நிலையில், மருத்துவர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கண் பராமரிப்புக்கு சிறுநீர் பாதுகாப்பானது…

Read More

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 19-ல் தொடங்கி 25-ம் தேதியுடன் முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், பொது மாறுதல் கலந்தாய்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை இன்று (ஜூன் 26) வெளியிட்டது. அதன் விவரம்: மாறுதல் கோரி விண்ணப்பித்த அனைத்து வகை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் ஜூன் 28-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதில்…

Read More

திருச்சி: “மதுரையில் நடைபெற்றது முருக பக்தர்கள் மாநாடு அல்ல, மோடி பக்தர்கள் மாநாடு” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக் தலைவர் திருமாவளவன் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று (ஜூன் 26) கூறியதாவது: “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை பற்றி தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் பேச்சுவார்த்தையில் அதை பார்த்துக் கொள்வோம். பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம். திரையுலகில் போதை கலாச்சாரத்தால் நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியாக உள்ளது. புகழ்பெற்றவர்கள் பலர் போதையின் பிடியில் சிக்கி சீரழிகிறார்கள். எனவே, தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். இதர போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்துவோம் என திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறோம். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை அவமதிக்கும்…

Read More

உங்களுக்காக உங்களுக்கு நேரம் இல்லை என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு தேவையானது ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்கள். யு.சி.எல் இன் நரம்பியல் பேராசிரியரும், அல்சைமர் ரிசர்ச் யுகேவின் தலைமை மருத்துவ அதிகாரியுமான ஜொனாதன் ஷாட் சமீபத்தில் உங்கள் மூளையை அதிகரிக்க 5 எளிதான வழிகளை அடையாளம் கண்டுள்ளார், அவற்றில் எதுவுமே ஒரு நாளைக்கு 20 நிமிடங்களுக்கு மேல் தேவையில்லை! இங்கே அவர்களைப் பாருங்கள்…நீங்கள் அனுபவிக்கும் ஒரு செயல்பாட்டைத் தேர்ந்தெடுக்கவும் (அதன் கர்மத்திற்கு மட்டுமல்ல)உங்கள் மூளை உயர்த்துவதற்கு, அதை உருவகப்படுத்தும் விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும், அதை ஈடுபடுத்தக்கூடாது என்பதை டாக்டர் ஷாட் தெளிவுபடுத்துகிறார். இதற்காக, நீங்கள் உண்மையில் செய்ய விரும்பும் ஒன்றைக் கண்டுபிடிப்பது முக்கியம். இது சமைப்பது, ஒரு புத்தகத்தைப் படிப்பது, சில இசை வாசித்தல் அல்லது தோட்டக்கலை கூட இருக்கலாம். இருப்பினும், டாக்டர் ஷாட் எதையும் செய்வதற்கு எதிராக “அதன் கர்மத்திற்காக” அறிவுறுத்துகிறார். இது உங்கள் மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்தும்…

Read More

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டுப் பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திடாததற்குக் காரணம், பயங்கரவாதம் குறித்த நமது நாட்டின் கவலையை ஒரு குறிப்பிட்ட நாடு ஏற்க மறுத்ததுதான் காரணம் என்று பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “பாதுகாப்பு அமைச்சர் எஸ்சிஓ-ன் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்தக் கூட்டம் இரண்டு நாட்கள் நடந்து முடிவுக்கு வந்துள்ளது. அவர்களால் ஒரு கூட்டு அறிக்கையை ஏற்க முடியவில்லை. சில உறுப்பு நாடுகள் சில விஷயங்களில் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. எனவே, ஆவணத்தை இறுதி செய்ய முடியவில்லை. பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் கவலைகள் ஆவணத்தில் இடம்பெற வேண்டும் என்று இந்தியா விரும்பியது. இதனை ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு ஏற்க முடியாததாக இருந்தது. எனவே அறிக்கை ஏற்கப்படவில்லை. பாதுகாப்பு அமைச்சர் தனது…

Read More

சென்னை: “அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதல்வர், போட்டோஷூட் மேடை போட்டு அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார். அதிமுகவைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள முதல்வர், “அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது” என்கிறார். அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், திமுகவுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா? “அண்ணா – இதய மன்னா” என்று கண்ணீர் வடித்த கையோடு அவர் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து, அண்ணாவின் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்து,…

Read More

புகைப்படம்: சமூக திறன்கள் கும்பல்/ இன்ஸ்டாகிராம் ஆளுமை சோதனைகள் ஆன்லைனில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. இவை வித்தியாசமான படங்கள், ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் என்று அழைக்கப்படுகின்றன, அவை ஒரு நபரை டிகோட் செய்வதாகக் கூறுகின்றன அல்லது போன்ற எளிய சோதனைகள்- ஒருவர் தங்கள் தொலைபேசியையோ அல்லது ஒருவரின் விரல்களின் வடிவையோ எவ்வாறு வைத்திருக்கிறார்- ஒருவரின் உண்மையான பண்புகளைப் பற்றி பேசுகிறது. இந்த சோதனைகள் விஞ்ஞான ரீதியாக உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அவை ஒரு நபரின் சில அறிவாற்றல் வடிவங்கள் அல்லது உணர்ச்சி போக்குகளை பிரதிபலிக்க எளிய உளவியல் கொள்கைகளைப் பயன்படுத்துகின்றன. இந்த சோதனைகள் ஒரு வேடிக்கையான, ஒளி மற்றும் ஒருவரின் குறைவாக அறியப்பட்ட பண்புகளைப் பற்றி கண்டறிய ஈர்க்கக்கூடிய வழி.முக்கியமானது, உங்கள் ஆளுமையை ஆராய்வதற்கான ஒரு லேசான வழி, மருத்துவ நோயறிதல் அல்ல. ஆழமான, சரிபார்க்கப்பட்ட நுண்ணறிவுகளுக்கு, மியர்ஸ்-பிரிக்ஸ் வகை காட்டி அல்லது பெரிய ஐந்து…

Read More

புதுடெல்லி: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ராகுல் காந்தியை சந்திப்பதற்கு முன்பாக, அந்த மாநில வாக்காளர் பட்டியல், தேர்தல் தினத்தன்று பதிவான வீடியோ காட்சிகள் ஆகியவற்றை வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார். முறைகேடுகள் ஏதும் நடக்கவில்லை என்று பதில் அளித்து வந்த தேர்தல் ஆணையம், சில தினங்களுக்கு முன்பு ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியது. அதில், நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாகவும், தேதி மற்றும் நேரத்தை தெரிவிக்குமாறும் கோரி இருந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்தக் கடிதத்துக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள காங்கிரஸ் கட்சி, “இந்தக் கடிதம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்துக்குள் மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியல்கள்,…

Read More

தெஹ்ரான்: “இஸ்ரேலை காப்பாற்றும் முயற்சியாக ஈரான் உடனான போரில் ஈடுபட்ட அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை” என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாக, இந்த போர் தொடர்பாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது கருத்துகளை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “போலியான சியோனிச (இஸ்ரேல்) ஆட்சியை வென்றதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், சியோனிச ஆட்சி இஸ்லாமியக் குடியரசின் தாக்குதல்களால் கிட்டத்தட்ட வீழ்த்தப்பட்டு நசுக்கப்பட்டது. அமெரிக்காவை ஈரான் வென்றதற்கு எனது வாழ்த்துகள். அமெரிக்கா நேரடியாகப் போரில் நுழைந்தது. ஏனெனில் அது அவ்வாறு செய்யவில்லை என்றால், சியோனிச (இஸ்ரேல்) ஆட்சி முற்றிலுமாக அழிக்கப்படும் என்று அந்நாடு உணர்ந்தது. அந்த ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சியில், அமெரிக்கா போரில் நுழைந்தது. எனினும், எதையும் அமெரிக்கா சாதிக்கவில்லை. அமெரிக்காவின் முகத்தில் இஸ்லாமிய…

Read More

சென்னை: திருநெல்வேலி தொகுதி எம்.பி ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், வழக்கு விவரங்களையும் மறைத்துள்ளார். எனவே, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்,” என கூறியிருந்தார். இந்த வழக்கில், கடந்த 19-ம் தேதி நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சான்று ஆவணங்களாக பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று (ஜூன் 26)…

Read More