Author: admin

சென்னை: “நிலத்தடி நீர் வீணடிக்கப்படுவதையும், தவறாக பயன்படுத்துவதையும் தடுக்கவே வரி விதிக்கப்படுவதாக மத்திய நீர்வளத்துறை கூறியிருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல. எனவே, நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும்,” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடு முழுவதும் விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரின் அளவுக்கு ஏற்ப வரி விதிக்கும் முறையை செயல்படுத்த இருப்பதாக வெளியாகியிருக்கும் மத்திய நீர்வளத்துறையின் அறிவிப்புக்கு தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.திமுக அரசின் கூட்டணி தர்மத்தால் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீர் உரிய நேரத்தில் கிடைக்கப்பெறாத நிலையில், மாநிலத்தின் பெரும்பங்கு வேளாண்மைக்கு முதன்மை நீராக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கும் வரி விதிக்கும் மத்திய நீர்வளத்துறையின் முடிவு தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தடி நீரின் அருமையையும், அவசியத்தையும் மாநிலத்தின் ஒவ்வொரு விவசாயியும் நன்றாக அறிந்து…

Read More

குளிர்ந்த நீரைக் குடிப்பதைப் பற்றிய விவாதம் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது, வயிற்றைக் குறைப்பதன் மூலம் செரிமானத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். இருப்பினும், இதை ஆதரிக்க உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. குளிர் மற்றும் அறை-வெப்பநிலை நீர் இரண்டும் உங்களை திறம்பட நீரேற்றமாக வைத்திருக்கின்றன. குளிர்ந்த நீர் குறிப்பாக ஒரு பயிற்சிக்குப் பிறகு புத்துணர்ச்சியூட்டுகிறது, உடலை குளிர்விக்க உதவுகிறது மற்றும் ஒரு சிறிய வளர்சிதை மாற்ற ஊக்கத்தை அளிக்கும். இது உணர்திறன் வாய்ந்த பற்கள் அல்லது செரிமானம் உள்ளவர்களைத் தொந்தரவு செய்யக்கூடும் என்றாலும், பெரும்பாலான மக்கள் அதை சிக்கல்கள் இல்லாமல் அனுபவிக்க முடியும். முடிவில், இது தனிப்பட்ட விருப்பத்திற்கு வருகிறது. மிகவும் முக்கியமானது என்னவென்றால், நீரேற்றமாக இருப்பது – நீர், எந்த வெப்பநிலையிலும், மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம்.குளிர்ந்த நீர் குடிப்பதால் ஏற்படும் அபாயங்கள்குளிர்ந்த நீரைக் குடிப்பது உங்கள் உடலில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும்.ஹெல்த்லைன் படி, 1978 ஆம் ஆண்டு…

Read More

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம், ஆடி மாதத்தில் ஒருநாள் அம்மன் கோயில்கள் சுற்றுலா ஜூலை 18 முதல் ஆக.15 வரை ஒரு மாத காலத்துக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படவுள்ளது, என்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா ஜூலை 18 முதல் ஆக. 15 வரை ஒரு மாதம் காலத்துக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்…

Read More

கவுதம் ராம் கார்த்திக் அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தினை அறிவித்துள்ளது படக்குழு. வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கவுதம் ராம் கார்த்திக். இப்படத்தினை சூரிய பிரதாப் இயக்கவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘நாளைய இயக்குநர் சீசன் 1’ மூலம் அறிமுகமானவர் இயக்குநர் சூரிய பிரதாப் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர் சூரிய பிரதாப். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகவுள்ளது. இதில் கவுதம் ராம் கார்த்திக் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் பெரும்பாலான காட்சிகளை சென்னையை சுற்றி படமாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இதில் கவுதம் ராம் கார்த்திக்குடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றன. மேலும், படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று…

Read More

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 73,452 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 26,000 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் உரிய நாளான ஜூன் 12-ம் தேதி தமிழக முதல்வர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார். தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் தேவையின் காரணமாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு விநாடிக்கு 22,500 கன அடி வரை திறக்கப்பட்டு வந்தது. கேரளா, கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு நேற்று காலை…

Read More

யு.எஸ்.சியின் கெக் ஸ்கூல் ஆஃப் மெடிசினின் சமீபத்திய ஆய்வில், டயட் சோடாக்கள், குறிப்பாக சுக்ரோலோஸ் உள்ளவர்கள், உணவு பசி மற்றும் பசியை அதிகரிக்கக்கூடும், குறிப்பாக பெண்கள் மற்றும் பருமனான நபர்களில். செயற்கை இனிப்பான்கள் பசியுடன் இணைக்கப்பட்ட மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதோடு, முழுமையை குறிக்கும் ஹார்மோன்களைக் குறைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பூஜ்ஜிய சர்க்கரை மற்றும் பூஜ்ஜிய கலோரிகளின் வாக்குறுதியால், இப்போதெல்லாம் மக்கள் டயட் சோடாவால் வெறித்தனமாக உள்ளனர். இது கிட்டத்தட்ட குற்றமற்ற பானம் போல் தெரிகிறது, குறிப்பாக உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு. ஆனால் டயட் பானங்கள் இனிமையான இடமாக இருக்காது. டயட் சோடாவுக்கு மாறுவது ஒரு செயற்கை பிந்தைய சுவை விட அதிகமாக இருக்கலாம். ஒரு புதிய ஆய்வில், டயட் சோடா குடிப்பது உங்கள் எடை இழப்பு பயணத்தை நாசப்படுத்தக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. யு.எஸ்.சி. இந்த ஆய்வு ஜமா நெட்வொர்க் ஓபனில் வெளியிடப்பட்டுள்ளது.டயட் சோடாவில் குற்றவாளிசெயற்கை இனிப்பு சுக்ரோலோஸைக் கொண்ட…

Read More

புதுடெல்லி: அந்தமானில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் நேற்று இரவு 8.28 மணியளவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ அந்தமான் நிக்கோபர் தீவின் போர்ட்பிளேயரில் இருந்து 254 கிமீ தென்கிழக்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் அட்சரேகை 9.75°N மற்றும் தீர்க்கரேகை 94.06°E ஆக இருந்தது. கடலுக்கு அடியில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது’ என்று தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஜூன் 25 அன்று அந்தமான் கடலில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல கடந்த மாதம் மணிப்பூரில் இரண்டு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகின. இருப்பினும், இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை. இன்று தெற்கு பிலிப்பைன்ஸிலும் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின்…

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ K13x 5ஜி ஸ்மார்ட்போன் அண்மையில் அறிமுகமானது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் ‘K’ சீரிஸ் வரிசையில் ‘K13x’ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் ஒப்போ K13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒப்போ K13x சிறப்பு அம்சங்கள் என்னென்ன? 6.67 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட் பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ள பிரதான…

Read More

வாஷிங்டன்: காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மோதலில் ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். காங்கோ-ருவாண்டா ஒப்பந்தத்தைக் கொண்டாடும் ஓவல் அலுவலக நிகழ்வில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நெருங்கிவிட்டதாக தான் நம்புவதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். இது குறித்து வெள்ளை மாளிகையில் அவர் பேசுகையில், “இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் நெருங்கிவிட்டது என்று நினைக்கிறேன். சம்பந்தப்பட்ட சிலரிடம் நான் இப்போதுதான் பேசினேன். அடுத்த வாரத்துக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்றார். ஆனால், போர் நிறுத்தம் குறித்து யாரிடம் பேசி வருகிறோம் என்ற தகவலை ட்ரம்ப் வெளியிடவில்லை. இஸ்ரேல் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் தங்கள் வசமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது. ஆனால், ஹமாஸ் ஆயுதங்களை முழுமையாக கைவிட்டால் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டுவருவோம் என்று…

Read More

தொழில​திபர் ‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நடித்த படம், ‘லெஜெண்ட்’. 2022-ம் ஆண்டு வெளி​யான இந்​தப்படத்தை ஜேடி- ஜெர்ரி இயக்கி இருந்​தனர். இதையடுத்து அவர் நடிக்​கும் படத்தை துரை. செந்​தில்​கு​மார் இயக்​கு​கிறார். இன்​னும் பெயர் வைக்​கப்​ப​டாத இந்​தப் படத்​தின் படப்​பிடிப்பு நடந்​து ​வரு​கிறது. இதில் பாயல் ராஜ்புத் நாயகி​யாக நடிக்​கிறார். ஷாம், ஆண்ட்​ரி​யா, பாகுபலி பிர​பாகர், சந்​தோஷ் பிர​தாப் உள்​ளிட்​டோர் முக்​கிய வேடங்​களில் நடிக்​கின்றனர், ஜிப்​ரான் இசையமைக்​கிறார். எஸ்​.வெங்​கடேஷ் ஒளிப்​ப​திவு செய்கிறார். இந்​தப் படம் பற்றி ‘லெஜெண்ட்’ சரவணன் கூறும்​போது, “படப்​பிடிப்பு இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யிருக்​கிறது. மாஸ், ஆக் ஷன், சஸ்​பென்​ஸ், த்ரில்​லர் கதை​யாக, இன்​றைய டிரெண்ட்​டுக்கு ஏற்ற வகை​யில் இருக்​கும். தீபாவளிக்கு, வெளி​யிடத் திட்​ட​மிட்​டுள்​ளோம்” என்​றார்.

Read More