‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் மூலம் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்துக் கொண்டு கவனம் ஈர்த்த அதியன் ஆதிரையின் இரண்டாவது படம். சமூக அக்கறையுள்ள படங்களை லாப நோக்கம் உள்ளிட்ட சமரசங்களுக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து தயாரித்து வரும் பா.ரஞ்சித்தின் அடுத்தப் படம் போன்ற லேபிள்களுடன் வெளியாகியுள்ள ’தண்டகாரண்யம்’ எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். மலைக் கிராமம் ஒன்றில் தமிழக வனத் துறையில் பணிபுரியும் முருகன் (கலையரசன்). இவரது மூத்த சகோதரர் சடையன் (அட்டகத்தி தினேஷ்) பழங்குடி மக்களுக்காக போராடி வருபவர். சில காரணங்களால் வனத் துறையிலிருந்து வெளியேற்றப்படும் முருகன், ஜார்க்கண்ட் மாநிலத்தில் துணை ராணுவப் படையில் சேர்கிறார். இங்கு பயிற்சி பெறுபவர்கள் நாடு முழுவதும் நக்சல் ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் பிறகு அந்தப் பயிற்சி முகாமில் நடக்கும் சம்பவங்களும், அதை பற்றிய உண்மையும் முருகனையும் அவரை சார்ந்தோரையும் எந்த விதத்தில் பாதிக்கிறது? பிறகு என்ன நடக்கிறது…
Author: admin
சென்னை: தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “நண்பர் ரோபோ சங்கர் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர். நண்பர் ரோபோ சங்கரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். யார் இந்த ரோபோ சங்கர்? மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர் காமராசர் பல்கலைக்கழத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். பள்ளி, கல்லூரி நாட்களிலேயே மிமிக்ரி உள்ளிட்ட திறமைகளை வளர்த்துக் கொண்ட சங்கர், சுற்றுவட்டார கிராமங்களில் திருவிழாக்களில் நடக்கும் மேடை…
ஆண்டிமைக்ரோபையல் பண்புகள் மற்றும் செரிமானத்திற்கான ஆதரவு உள்ளிட்ட சுகாதார நன்மைகள் காரணமாக செப்பு பாட்டில்கள் சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமடைந்துள்ளன. இருப்பினும், அவை அனைவருக்கும் பொருத்தமானவை அல்ல. மக்களின் சில குழுக்கள் செப்பு அதிகப்படியான வெளிப்பாட்டின் அபாயத்தில் இருக்கலாம், இது கடுமையான சுகாதார சிக்கல்களுக்கு வழிவகுக்கும். செப்பு பாட்டில்களைப் பயன்படுத்துவதை யார் தவிர்க்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது பாதுகாப்பிற்கு அவசியம். குறிப்பிட்ட மருத்துவ நிலைமைகள், ஒவ்வாமை அல்லது வளர்ச்சி உணர்திறன் கொண்ட நபர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் அல்லது மாற்றுப் பொருட்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த கட்டுரை ஐந்து வகையான நபர்களை எடுத்துக்காட்டுகிறது, அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க குடிநீருக்காக செப்பு பாட்டில்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு இரண்டு முறை சிந்திக்க வேண்டும்.குடிநீருக்கு செப்பு பாட்டில்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு யார் இரண்டு முறை சிந்திக்க வேண்டும்சிறுநீரக நோய்சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் தாதுக்கள் மற்றும் தாமிரம் உட்பட அவர்களின் உடலில் தடயக் கூறுகளை…
புதுடெல்லி: அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு குற்றம் சாட்டியது. அந்த நிறுவனத்தின் அறிக்கையை மையமாக வைத்து பல்வேறு ஊடகங்களில் செய்திகள், கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இதை எதிர்த்து அதானி எண்டர்பிரைசஸ் சார்பில் டெல்லி வடமேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி அனுஜ் குமார் சிங் கடந்த 6-ம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில் அதானி குழுமத்துக்கு எதிரான அவதூறு செய்திகளை வெளியிட தடை விதிக்கப்பட்டது. டெல்லி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், 138 யூ டியூப் வீடியோக்கள், 83 இன்ஸ்டாகிராம் பதிவுகளை 36 மணி நேரத்தில் நீக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து செய்தியாளர்கள் தரப்பில் டெல்லி வடமேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக…
மதுரை: கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்பியிடம் மீண்டும் மனு அளிக்க அதிமுகவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் திருவிக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கரூர் பேருந்து நிலையம் அருகே கரூர் – கோவை சாலையில் செப். 25-ம் தேதி மாலை 06.30 மணியளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், மனுதாரர் கோரும் இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க இயலாது. இதனால் மாற்று இடத்தை பரிந்துரைக்குமாறு மனுதாரருக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு விட்டது என்றார். மனுதாரர் தரப்பில், அனுமதி கோரும் இடத்தில் 2022 முதல் பல…
அதிக விளைச்சல் மற்றும் விற்பனை வாய்ப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் நிகழாண்டு தமிழகம் முழுவதும் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களில் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த சின்ன வெங்காயம் கடந்த சில ஆண்டுகளான கரூர், நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் பயிரிடப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயம் சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. 3 மாத பயிர், நல்ல சந்தை வாய்ப்பு போன்ற காரணங்களால் பலரும் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், சின்ன வெங்காயம் உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், பயன்பாடு குறைந்துவிட்டதாலும் கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் சந்தையில் தேங்கி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து திருச்சி துறையூரைச் சேர்ந்த சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயி ராஜமாணிக்கம் கூறியது; குறுகிய கால பயிரான சின்ன…
சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் (சோடாக்கள், இனிப்பு பானங்கள், மிட்டாய், இனிப்பு வகைகள் போன்றவை) ஏற்றப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் கலோரிகளில் அதிகமாக இல்லை, ஆனால் அவை உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உடலில் உள்ள வீக்கத்திற்கும் பங்களிக்கக்கூடும். இவை அனைத்தும், ஒரு வகையில், அதிக இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். அதிக சர்க்கரை இரத்த நாளங்களின் சரியான செயல்பாட்டை மோசமாக பாதிக்கலாம் மற்றும் திரவத்தைத் தக்கவைத்துக்கொள்வதை அதிகரிக்கும்- இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. 2024 முறையான மறுஆய்வு மற்றும் 35 ஆய்வுகளின் மெட்டா பகுப்பாய்வு, சர்க்கரை-இனிப்பு பானங்கள், செயற்கையாக இனிப்பு பானங்கள் மற்றும் மொத்த சர்க்கரை உட்கொள்ளல் ஆகியவை அதிக உயர் இரத்த அழுத்த அபாயத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டு இரத்த அழுத்த மட்டங்களை உயர்த்தியுள்ளன.
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சதானந்த கவுடாவின் வங்கிக் கணக்கை ஆன்லைன் மூலம் ஹேக் செய்து ரூ.3 லட்சம் திருடப்பட்டு உள்ளது. இதுகுறித்து பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதன்கிழமை காலையில் எனது செல்போனுக்கு 3 வங்கிகளிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அதில் ஒவ்வொரு வங்கியில் இருந்தும் தலா ரூ.1 லட்சம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து செல்போன் செயலி மூலம் வங்கி கணக்கை ஆராய்ந்தபோது, எனது வங்கி கணக்குகள் மூன்றும் ஹேக் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக பெங்களூரு வடக்கு மண்டல துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். எனக்கு வங்கி கணக்குகள் தொடர்பாக யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. அதேபோல எந்த லிங்கையும் கிளிக் செய்யவில்லை. ஆன்லைன் மோசடி கும்பல், எப்படி எனது வங்கி கணக்கை ஹேக் செய்தார்கள் என…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாய் செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாயை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் வருமான வரித் தொகை 36 கோடி ரூபாயில் இருந்து 13 கோடி ரூபாயாக குறைத்து, திருத்தியமைக்கப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 36 கோடி ரூபாய் செலுத்தக் கூறி வருமான வரித்துறை…
பல தசாப்தங்களாக, ஆளுமை ஆய்வுகள் மக்களை உள்முக சிந்தனையாளர்கள், புறம்போக்கு அல்லது அம்பிவர்ட்ஸ் என வகைப்படுத்தியுள்ளன. ஆயினும்கூட, இந்த லேபிள்கள் தங்கள் சமூக போக்குகளை முழுமையாகப் பிடிக்காது என்று பலர் நினைக்கிறார்கள். ஓட்ரோவெர்ட்டின் வளர்ந்து வரும் கருத்து இந்த இடைவெளியைக் குறிக்கிறது, உள்நோக்கி மற்றும் புறம்போக்கு இடையே சாம்பல் பகுதியை ஆக்கிரமித்துள்ள நபர்களை விவரிக்கிறது. ஓட்ரோவெர்ட்கள் பெரும்பாலும் பெரிய சமூகக் கூட்டங்களை விட அர்த்தமுள்ள ஒருவருக்கொருவர் தொடர்புகளில் செழித்து வளர்கின்றன, உறவுகளில் அளவை விட ஆழத்தை மதிப்பிடுகின்றன. அவர்கள் சுயாதீனமானவர்களாகவும், ஆக்கபூர்வமாகவும், அவர்களின் சமூக ஈடுபாட்டைப் பற்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள், தனிப்பட்ட இடத்துடனான தொடர்பின் தேவையை சமநிலைப்படுத்துகிறார்கள். ஓட்ரோவர்ட் ஆளுமையை அங்கீகரிப்பது சமூக நடத்தை குறித்த ஒரு புதிய முன்னோக்கை வழங்குகிறது, எல்லோரும் பாரம்பரிய வகைகளுக்கு அழகாக பொருந்தாது என்பதையும், நுணுக்கமான ஆளுமைப் பண்புகள் உலகத்துடன் நாம் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.யார் ஓட்ரோவர்ட்: ஆளுமை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்கொலம்பியோனால்…