Author: admin

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.2,440 குறைந்து, நேற்று ஒரு பவுன் ரூ.71,440-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உயரத் தொடங்கியது. குறிப்பாக, அவ்வப்போது தங்கத்தின் விலை சற்று குறைந்தாலும், போர்ப் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் அதிகளவு உயர்ந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, கடந்த 14-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,560 என்றளவில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து விலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், கடந்த 23-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, நேற்று பவுனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.71,440-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.8,930-க்கு…

Read More

ஆப்டிகல் மாயைகள் சமீபத்தில் நிறைய புகழ் பெற்றன, ஏனெனில் அவை நமது மூளையை உடற்பயிற்சி செய்கின்றன, மேலும் இது நமது அவதானிப்பு திறன்களின் மற்றும் தீவிரமான கண்ணின் சரியான சோதனையாக இருக்கலாம். அவை தீர்க்க மிகவும் வேடிக்கையாக இருக்கின்றன, மேலும் சலித்த மாலைக்கான சரியான செய்முறையாக இருக்கலாம்! ஒரு ஆப்டிகல் மாயை உண்மையில் ஒரு காட்சி நிகழ்வு, அங்கு கண்கள் உணர்ந்ததை மூளை தவறாகப் புரிந்துகொள்கிறது. கண்களால் அனுப்பப்பட்ட தகவல்கள் மூளை எவ்வாறு செயலாக்குகிறது மற்றும் அது பார்ப்பதை புரிந்துகொள்கிறது என்பதோடு முரண்படும்போது இது நிகழ்கிறது. இந்த மாயைகள் பெரும்பாலும் இல்லாத விஷயங்களைப் பார்ப்பதற்கு அல்லது யதார்த்தத்திலிருந்து வித்தியாசமாக பொருட்களை உணருவதில் நம்மை ஏமாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு நிலையான படம் நகரும் என்று தோன்றலாம், அல்லது இரண்டு வடிவங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை சமமற்றதாகத் தோன்றலாம்.முதலில் இங்கே என்ன பார்க்கிறீர்கள்?இந்த படம் முதலில் சமூக ஊடகங்களில் மெரினா வின்பெர்க் என்ற…

Read More

புதிய இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்களை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ல் திருத்தம் செய்ய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: புதிய திருத்தங்கள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட 3 மாதங்களில் இந்த விதிகள் நடைமுறைக்கு வரும். வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவரின் பாதுகாப்பை உறுதிசெய்வதே இதன் நோக்கம். இந்த ஹெல்மெட்கள் பிஐஎஸ் (இந்திய தர நிர்ணய அமைப்பு) நிர்ணயித்த தரத்துடன் இருக்க வேண்டும். ஹெல்மெட் விதியுடன் கூடுதலாக, ஜனவரி 1, 2026 முதல் 50சிசி-க்கு மேல் இன்ஜின் திறன் அல்லது மணிக்கு 50 கி.மீ.க்கு மேல் அதிகபட்ச வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள்,…

Read More

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வில் (நேர்காணல் உள்ள பதவிகள்) நூலகர் பதவிக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (நேர்காணல் உடைய பதவிகள்) கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி நடத்தப்பட்டது. அத்தேர்வில் கல்லூரி நூலகர் (சட்டம் மற்றும் உயர்கல்வி) பதவியில் 17 காலியிடங்களுக்கு நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும், கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 5-ஏ-யில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 35 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட…

Read More

கட்சி மாற உள்ளதாகக் கூறி என்னை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார். தைலாபுரத்தில் நிறுவனர் ராமதாஸை நேற்று சந்தித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமதாஸ்-அன்புமணி இடையேயான கருத்து வேறுபாடு விரைவில் சரியாகிவிடும். நான் பாமகவில் இருந்து விலகி, வேறொரு கட்சியில் சேரப்போவதாக கூறுகின்றனர். கட்சிக்கு விசுவாசமாக, உண்மையாக இருக்கும் என்னை கொச்சைப்படுத்துவது வேதனை அளிக்கிறது. பல பொறுப்புகளில் இருந்தபோதும் இதுவரை எந்த விமர்சனத்துக்கும் உள்ளானதில்லை. அதிமுகவில் இணைந்தால் வாரியத் தலைவர் பதவி, எம்எல்ஏ, அமைச்சர் பதவிகள் தருவதாக எம்ஜிஆர் கூறினார். துணை முதல்வர் பதவி தருவதாக கருணாநிதி கூறினார். அதிமுகவுக்கு வருமாறு ஜெயலலிதாவும் அழைத்தார். ஆனால், ராமதாஸ்தான் எனக்கு உயிர்மூச்சு. அப்படிப்பட்ட என்னைக் கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியவில்லை. தனியாக இருக்கும்போது ராமதாஸ் எங்களிடம் கண்கலங்கிப் பேசுகிறார். 87 வயதான அவரை சமூக ஊடங்களில் கொச்சைப்படுத்துகின்றனர். இதற்காகவா சமுதாயத்துக்கும், நாட்டு மக்களுக்கும் உழைக்கிறார். ராமதாஸ், அன்புமணியை…

Read More

அமெரிக்க தொழிலதிபர் வாரன் பபெட், 5 அறக்கட்டளைகளுக்கு ரூ.51,000 கோடியை தானமாக வழங்கி உள்ளார். உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில், அமெரிக்க தொழிலதிபர் வாரன் பபெட் 5-வது இடத்தில் உள்ளார். 94 வயதாகும் அவர் பங்கு சந்தையின் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி ஆகும். கடந்த 2006-ம் ஆண்டு முதல் வாரன் பபெட் தனது சொத்துகளை பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு தானமாக வழங்கி வருகிறார். இந்த வரிசையில் தற்போது அவர், 5 அறக்கட்டளைகளுக்கு ரூ.51,000 கோடியை தானமாக வழங்கியிருக்கிறார். இதன்படி கேட்ஸ் அறக்கட்டளை, சூசன் தாம்சன் பபெட் அறக்கட்டளை, ஷெர்வுட் அறக்கட்டளை, ஹோவர்ட் பபெட் அறக்கட்டளை, நோவோ அறக்கட்டளை ஆகிய 5 அறக்கட்டளைகளுக்கு நாளை ரூ.51,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வழங்கப்பட உள்ளன. இதில் கேட்ஸ் அறக்கட்டளையை தவிர்த்து இதர 4 அறக்கட்டளைகளை வாரன் பபெட்டின் குடும்பத்தினர் நிர்வகிக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில்…

Read More

பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக ஜூலை 2 முதல் 9 வரை 5 நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிகா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 17-வது உச்சி மாநாடு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற உள்ளார். இதற்கான பயணத்தில் ஜூலை 2 முதல் 9 வரை பிரேசில் உள்ளிட்ட 5 நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். பிரேசில் நாட்டில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு செல்லும் வழியில் ஜூலை 2 முதல் 5 வரை கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார். திரும்பும் வழியில் அவர் நமீபியா செல்கிறார். கானா, டிரினிடாட் & டொபாகோ,…

Read More

பொறியியல் டிப்ளமோ படிப்புக்கான சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக்கல்வித் துறை அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொறியியல் டிப்ளமோ இறுதி செமஸ்டர் தேர்வு மற்றும் துணைத்தேர்வு எழுதி அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களுக்கான சிறப்பு துணை தேர்வு ஜூன் 30 முதல் ஜூலை 16 வரையும், செய்முறைத் தேர்வு ஜூலை 17 முதல் 25 வரையும் அடுத்தடுத்து நடைபெற உள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தொழில்நுட்பக்கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். சிறப்பு துணை தேர்வின் முடிவுகள் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

திமுக இனி தமிழகத்துக்கு வேண்டாம் என்பதே எங்கள் கூட்டணியின் நிலைப்பாடு என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். நெல்லை சுத்தமல்லி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு திமுக இனி வேண்டாம் என்பதை எங்கள் கூட்டணியின் நிலைப்பாடு. இதை மக்கள் பிரதிபலிப்பார்கள். நிச்சயம் திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது. டாக்டர் ராமதாஸை, செல்வப்பெருந்தகை சந்தித்தது குறித்து கருத்து கூற முடியாது. அதேநேரத்தில், இந்த சந்திப்பு எதிர்கால அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம். பாஜகவின் தேசியத் தலைவர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், தேசிய, மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் ஆதிராவிட நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 96 ஆயிரம் குழந்தைகள் படித்த நிலையில், தற்போது 67 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே படிக்கிறார்கள். ஆசிரியர் பற்றைக்குறையால் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுதான்…

Read More

சென்னை: பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க அனைத்து ஊர்களிலும் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் குலாம் தஸ்தகீர் மீது போதைக் கும்பல் பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்தியிருக்கிறது. பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மது விற்பனையில் பணம் வந்தால் போதும் என்ற திமுக அரசின் கட்டுப்பாடற்ற மது விற்பனையின் விளைவு, அரசுப் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்கிறது. அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள், முதியோர் என திமுக ஆட்சியின் கையாலாகா தனத்தால் யாருக்குமே பாதுகாப்பில்லை. அரசுப் பள்ளியின் உள்ளே…

Read More