அதன்படி தொடர்ந்து 40-வது நாளாக நேற்று நடைபெற்ற நிகழ்வில் கோவை மாவட்டத்தில் சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது எஸ்ஐஆர் பணிகள் குறித்து முதல்வர் விசாரித்தபோது, “அதிமுக பிஎல்ஏ2-க்கள் யாருமே களத்துக்கே வருவதில்லை. நமது நிர்வாகிகள் மிக தீவிரமாக பணிகளை செய்து வருகிறார்கள்” என நிர்வாகிகள் தெரிவித்தனர்.அதன்பின், “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக-வே வென்றது. ஆனால், இந்த முறை நிச்சயம் அதிமுக-வை வீழ்த்தி திமுக வெற்றி பெற வேண்டும். அரசின் சாதனைகளை தொகுதி முழுக்க விளம்பரப்படுத்த வேண்டும். மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களில் தகுதியானவர்கள் இருப்பின் அவர்கள் உதவித் தொகை பெற கட்சியினர் உதவ வேண்டும்” என்று மண்டலப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
Author: admin
பந்தநல்லூரில் அமைக்கப்பட்ட சாலையால், வணிக நிறுவனங்களுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இதுதொடர்பாக பொதுப்பணித் துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டாலும் அதன் சட்ட விதிகள் மாற்றப்படாமல் உள்ளது. மத்திய அரசு, சமானிய வணிகர்கள் பாதுகாக்கக்கூடிய வகையில் அந்தச் சட்டத்தை எளிமை படுத்த வேண்டும்.தமிழகத்தில் எந்த மூலையில் வணிகர்கள் பாதிக்கப்பட்டாலும், பேரமைப்பும், தமிழக முதல்வரும் உறுதுணையாக இருக்கின்றாோம். வணிகர்கள் பாதிக்கப்பட்டால், அவருக்கு தகவல் தருவதற்காக எங்களுக்கு தனி செல்போன் எண்ணை வழங்கி உள்ளார். வணிகர்கள் மீது போலீஸார், இடையூர் ஏற்படுத்தாமல், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இதேபோல் வணிகர்கள், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. இவ்வாறு விக்கிரமராஜா கூறியுள்ளார்.
புதிய வளர்சிதை மாற்ற மருந்துகள் சிகிச்சை தேர்வுகள் மற்றும் பொது எதிர்பார்ப்புகளை மறுவடிவமைப்பதால் எடை நிர்வாகத்தை ஆதரிக்கும் சிகிச்சைகளில் ஆர்வம் வேகமாக வளர்ந்துள்ளது. Orforglipron, ஒரு வாய்வழி GLP-1 ஏற்பி அகோனிஸ்ட், ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது, ஏனெனில் இது செமகுளுடைட் மற்றும் டைர்ஸ்படைடு போன்ற ஊசி விருப்பங்களுக்கு மாத்திரை அடிப்படையிலான மாற்றீட்டை வழங்குகிறது. பல தனிநபர்கள் தினசரி பயன்பாட்டிற்கு வாய்வழி மருந்துகளை விரும்புகிறார்கள், குறிப்பாக நீண்டகாலமாக கடைபிடிப்பது அவசியம், மேலும் இது ஒரு பயனுள்ள GLP-1 சிகிச்சையானது ஊசி இல்லாமல் எவ்வாறு செயல்பட முடியும் என்பது பற்றிய பரவலான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. ஆரம்ப கட்ட 3 தரவு எடை குறைப்பு மற்றும் வளர்சிதை மாற்ற மேம்பாடுகளுக்கான ஊக்கமளிக்கும் முடிவுகளை காட்டுகிறது, உடல் பருமன் பராமரிப்புக்கான அணுகக்கூடிய மற்றும் நெகிழ்வான அணுகுமுறைகள் பற்றிய அறிவியல், மருத்துவம் மற்றும் நுகர்வோர் உரையாடல்களின் மையத்தில் orforglipron வைப்பது. அதன் வருகை எதிர்கால சிகிச்சைகள் எவ்வாறு…
இந்த நன்றி தெரிவிக்கும் போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) உள்ள விண்வெளி வீரர்கள், அப்பல்லோ காலத்தில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய வான்கோழி சாலட்டைத் தாண்டி சிறப்பு விடுமுறை உணவை அனுபவிப்பார்கள். வான்கோழியுடன், அவர்கள் மட்டி, சிப்பிகள், நண்டு இறைச்சி, காடை, புகைபிடித்த சால்மன் மற்றும் பிற பக்கங்களிலும் விருந்துகளையும் சாப்பிடுவார்கள்.டைட்டஸ்வில்லில் உள்ள அமெரிக்க விண்வெளி அருங்காட்சியகத்தின் இயக்குனர் மார்க் மார்க்வெட், பூமியில் இருந்து 250 மைல்களுக்கு அப்பால் தனிமையில் வாழும் குழு உறுப்பினர்களுக்கு இதுபோன்ற உணவுகள் ஆறுதலையும், வீட்டின் உணர்வையும் தருவதாகக் கூறினார். “நீங்கள் பாட்டியின் பச்சை-பீன் கேசரோல் மற்றும் சுவையான திணிப்பைப் பிரதிபலிக்க முயற்சிக்கிறீர்கள்,” என்று அவர் கூறினார். புளோரிடா டுடே மேற்கோள் காட்டியபடி, “உணவு அல்லது காஸ்ட்ரோனமி மக்களை திருப்திப்படுத்தும் விதத்தில் இது மனிதநேய உணர்வைக் கொண்டுவருகிறது” என்று மார்க்வெட் கூறினார்.நார்த்ரோப் க்ரம்மன் சிக்னஸ் எக்ஸ்எல் விண்கலத்தை ஏற்றிச் செல்லும் ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் மூலம்…
உயர்-பங்கு போக்கர், சொகுசு ஜெட் விமானங்கள் மற்றும் இடைவிடாத களியாட்டங்கள் டான் பில்செரியனின் உலகத்தை வரையறுக்கின்றன/படம்: X டான் பில்செரியன் தனது சொந்த விதிமுறைகளின்படி வாழ்கிறார், அதே தீவிரத்துடன் சாகசத்தைத் துரத்துகிறார். தனியார் ஜெட் விமானங்கள் முதல் ஆடம்பர வீடுகள் மற்றும் அதிக பங்குகள் கொண்ட போக்கர் அட்டவணைகள் வரை, அவரது உலகம் காட்சி மற்றும் சவாலில் கட்டமைக்கப்பட்டுள்ளது. க்யூரேட்டட் இன்ஸ்டாகிராம் ஸ்னாப்ஷாட்களுக்கு அப்பால், அவர் ஒரு உயர் பங்கு போக்கர் பிளேயர், சமூக ஊடக பிரமுகர், நடிகர் மற்றும் தொழில்முனைவோராக ஒரு ஆளுமையை செதுக்கியுள்ளார், குறிப்பாக அவரது வாழ்க்கை முறை பிராண்டான இக்னைட் மூலம்.டான் பில்செரியன் நிகர மதிப்பு டான் பில்செரியனின் சொத்து மதிப்பு $100 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செல்வத்தின் பெரும்பகுதி அதிக பங்குகள் கொண்ட தனியார் போக்கர் கேம்களில் இருந்து வருகிறது, அங்கு அவர் மில்லியன் கணக்கில் வென்றதாக கூறப்படுகிறது, இதில் அவர் $10.8 மில்லியனைக்…
புதுடெல்லி: கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட போதிலும், பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என சசி தரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடியை பல்வேறு தருணங்களில் புகழ்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், இன்று அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அந்த நிகழ்ச்சியில், ஆக்கபூர்வமான பொறுமையின்மை என்ற தலைப்பில் பிரதமர் மோடி பேசினார். மேலும், காலனித்துவத்துக்குப் பிந்தைய மனநிலையை அவர் வலுவாக குறிப்பிட்டார். இந்தியா இனி வெறும் வளர்ந்து வரும் சந்தை அல்ல, மாறாக உலகிற்கு வளர்ந்து வரும் மாதிரி என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ஜெய்ப்பூர்: பேசுவதை பேச்சாக மொழி பெயர்க்கும் உலகில் முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஸ்பார்ஸ் அகர்வால். வாராணசி பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஐஐடி மாணவர். இவர் பிக்ஸா என்ற ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். மனிதர்கள் பேசுவதை போல் குரலை நேரடியாக மொழிபெயர்ப்பு செய்யும் லூனா என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இவர் உருவாக்கியுள்ளார். இது பேச்சு வடிவிலேயே விரைவாகவும், உணர்வுபூர்வமாகவும் குரல் வடிவிலேயே மொழி பெயர்க்கிறது. இதில் உள்ள தொழில்நுட்ப கட்டமைப்பு பேசும் தொனியை மாற்றவும், பாடவும் அனுமதிக்கிறது. இது மனிதர்களிடம் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
தூத்துக்குடி: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னையை சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய 30 குழந்தைகள் அமைச்சர் பி.கீதாஜீவனுடன் விமானத்தில் பயணித்தனர். ரெயின் டிராப்ஸ் அறக்கட்டளை ‘வானமே எல்லை' எனும் திட்டத்தின் கீழ் அனந்தம் நிறுவனம், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் வேல்ஸ் வித்யாலயா கல்விக் குழுமம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த விமானப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. சென்னையில் இருந்து 30 குழந்தைகள் தங்கள் முதல் விமானப் பயணத்தை நேற்று காலை தொடங்கினர். தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அக்குழந்தைகளுடன் பயணித்து, அவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.
புதுடெல்லி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டதன் காரணமாகவே இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது என்றும், நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்த பிறகும் இந்திய அணி பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும் துருக்கி, ஹாங்காங், ஜெர்மனி, உக்ரைன் நாடுகளை சேர்ந்த சில நிறுவனங்களும் ஈரானின் ஏவுகணை, ட்ரோன் தயாரிப்புக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்து வருகின்றன. அந்த நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. தடை விதிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட தொழிலதிபர்களுடன் உலக நாடுகள் வணிகத்தில் ஈடுபடக்கூடாது. இதை மீறும் நிறுவனங்கள், தனிநபர்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தடை விதிக்கப்பட்டது ஏன்? – அணு குண்டு தயாரிக்க ஈரான் முயற்சி செய்வதாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இதன் காரணமாக கடந்த ஜூன் 13-ம் தேதி ஈரானின் அணு சக்தி தளங்கள், ஏவுகணை உற்பத்தி ஆலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஆதரவாக கடந்த ஜூன் 22-ம் தேதி அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய முக்கிய அணு சக்தி தளங்கள் மீது…
