சென்னை: “ஓரணியில் தமிழ்நாடு என்பது உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரை மட்டுமல்ல; தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையம் ஓரணியில் திரட்டும் முயற்சியாகும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வலியறுத்தியுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளும் திமுக சார்பில் தேர்தலுக்கான பல முன்னெடுப்புகள் முனைப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில், வாக்குச்சாவடி தோறும் 30 சதவீதம் உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை வரும் ஜூலை 1-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். இப்பணிகள் அடுத்த 45 நாட்களுக்கு நடைபெறுகிறது. வீடுவீடாக வாக்குச்சாவடி வாரியாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சென்று, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை ஓரணியில் தமிழ்நாடு திட்டம் தொடர்பாக, மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பார்வையாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம், முதல்வர்…
Author: admin
பாரம்பரியமாக மெல்லும் அல்லது கடாஸில் பயன்படுத்தப்பட்ட வேப்பம் இலைகள் இந்திய ஆரோக்கிய உலகின் கசப்பான போர்வீரர்கள். அவை இரத்தத்தை சுத்தப்படுத்தவும், தோல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகின்றன. சூடான நீரில் ஒரு சில இலைகள் அல்லது பேஸ்டில் நசுக்கப்பட்டவை உங்கள் அலமாரியில் ஒரு டஜன் சிரப்புகளுக்கு மேல் செய்ய முடியும். நாட் அதன் வேர்களைக் கொண்டுள்ளது, பண்டைய ஆயுர்வேத நடைமுறைகளில் உள்ளது மற்றும் அதன் சக்திவாய்ந்த குணப்படுத்துதல் மற்றும் சுத்திகரிப்பு பண்புகளுக்காக இந்திய வீடுகளில் பல நூற்றாண்டுகளாக மதிக்கப்படுகிறது. இது ஒரு அதிசய ஆலை என்று புகழப்பட்டுள்ளது, இது முழுமையான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது, தோல் பிரச்சினைகள் முதல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது வரை. இப்போது, இந்த வயதான தாவரவியல் உலகெங்கிலும் உள்ள சமகால தோல் பராமரிப்பு நடைமுறைகளுக்குள் நுழைகிறது. அதிகமான மக்கள் இயற்கையான மற்றும் பாதுகாப்பான மாற்றுகளுக்கு மாறுவதால், ஆரோக்கியமான சருமத்திற்கான இறுதி பயணமாக வேப்பம்…
இந்திய உளவுத் துறையான ரா அமைப்பின் தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா, சீனா இடையே போர் நடைபெற்றது. இதன்பிறகு 1965-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. இந்த இரு போர்களின்போது கிடைத்த அனுபவங்கள் காரணமாக கடந்த 1968-ம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு தொடங்கப்பட்டது. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமைப்பு இந்தியாவின் உயர் உளவு பிரிவு ஆகும். ரா அமைப்பின் முதல் தலைவராக கே.என்.ராவ் பணியாற்றினார். 1968-ம் ஆண்டு முதல் 1977 வரை அவர் பதவியில் நீடித்தார். இதன்பிறகு பலரும் ரா அமைப்பின் தலைவராக பதவி வகித்துள்ளனர். பெரும்பாலும் ஐபிஎஸ் அதிகாரிகள், முப்படைகளின் மூத்த அதிகாரிகள் ரா தலைவர்களாக பதவியேற்பது வழக்கம். கடந்த 1971-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர், கடந்த 1975-ம் ஆண்டில் இந்தியாவுடன் சிக்கிம் இணைக்கப்பட்டது, காலிஸ்தான் தீவிரவாத பிரச்சினை, பாலகோட்…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, “மக்களை காப்போம்- தமிழகத்தை மீட்போம்” என்ற தொடர் பிரச்சார சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் வரும் ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறார். சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் பழனிசாமி, “இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் வர இருக்கிறேன். அங்கு மக்களை சந்தித்து, திமுக அரசின் அவலங்களை விளக்க இருக்கிறேன்” என அறிவித்திருந்தார். அதன் பின்னர் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் மக்கள் பாதிப்பு, பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் நிலவிய தயக்கம், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி என பல்வேறு பணிகள் இருந்ததால், பிரச்சார பயணத்தை தள்ளிப்போட்டு வந்தார். இதற்கிடையில் பாஜகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. மாநிலங்களவைத் தேர்தலும் முடிந்தது. மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி அளவிலான நிர்வாகிகள் நியமனமும்…
ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் மீட்கப்பட்டு, 19 விமானங்களில் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து அந்த நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ‘ஆபரேஷன் சிந்து’ என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூன் 18-ம் தேதி தொடங்கிய ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ் ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஈரானில் இருந்து 3,597 பேரும் இஸ்ரேலில் இருந்து 818 பேரும் மீட்கப்பட்டனர். இவர்கள் 19 சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 14 பேர் வெளிநாடு இந்தியர்கள். மேலும் 9 பேர் நேபாளத்தையும் 4 பேர் இலங்கையையும் சேர்ந்தவர்கள். இதுதவிர இந்தியர் ஒருவரின் ஈரானிய மனைவியும் அழைத்து வரப்பட்டார். மீட்கப்பட்ட இந்தியர்களில் 1,500-க்கும் மேற்பட்ட பெண்களும் 500…
சென்னை: மாவட்டச் செயலாளர்களை வாக்குச்சாவடி நிலைய முகவர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். இதுகுறித்து, முகநூல் நேரலையில் அவர் கூறியதாவது: தமிழக அரசியலில் விசிகவின் அரசியல் ஆதரவாகவோ எதிராகவோ தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. பேரணி, விருது வழங்கும் விழாவக்காக பணியாற்றி வருகிறோம். வரும் ஜூன் 30-ம் தேதி மேலவளவு முருகேசன் உள்ளிட்டோருக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளில் விசிகவினர் கட்டுப்பாடுடன் செயல்பட்டு சாதி, மதவாதிகள் விமர்சிக்க வாய்ப்பு தந்துவிடாமல் இருக்க வேண்டும். எந்தளவு கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறோமோ அந்தளவு நிதானமாக பயணிக்க முடியும். அரசியலை மக்களிடம் வெகுவாக கொண்டு சேர்க்க முடியும். இதற்கிடையே, வரும் தேர்தலையொட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடி நிலைய முகவர்களை நியமிக்க இருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் பட்டியலை தேர்தல் துறைக்கு ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மாவட்டச் செயலாளர்களாக இருப்பர். மீதமுள்ள…
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவை அடுத்துள்ள மலே மாதேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட கஜனூர் வனப்பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு ஒரு தாய் புலியும் அதன் 4 குட்டிகளும் இறந்து கிடந்தன. அவற்றின் பக்கத்தில் இறந்த பசுவின் சிதைந்த உடலும் கிடந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்த போது, அந்த பசு, கோப்பு கிராமத்தை சேர்ந்த கோனப்பாவுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. புலிகள் மற்றும் பசுவின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, புலிகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சரணாலயத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் கோப்பு கிராமத்தை சேர்ந்த மாது ராஜூவின் பசுவை புலி வேட்டையாடி கொன்றதால் இறந்த பசு உடலில் விஷத்தை கலந்து புலிகள் நடமாட்டம் உள்ள பகுதியில் வைத்துள்ளார். அந்த இறைச்சியை உண்ட புலிகள் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் கோப்பு…
சென்னை: செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு தினசரி வந்து ஆட்டோ ஓட்டி வரும் பெண்ணுக்கு , ஆளுநர் ஆர்.என்.ரவி, புதிய ஆட்டோ வழங்கி பாராட்டினார். செங்கல்பட்டைச் சேர்ந்தவர் அமலா. வாடகை ஆட்டோ ஓட்டுநர். இவர் தினசரி சென்னைக்கு வந்து ஆட்டோ ஓட்டிவிட்டு, இரவு 10 மணிக்கு மேல், மீண்டும் செங்கல்பட்டு திரும்பிவிடுவார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியில் இவர் கவுரவிக்கப்பட்ட போது, தனக்கு சொந்தமாக ஆட்டோ வேண்டும் என்பது குறித்து கோரிக்கை வைத்தார். இதையடுத்து, ஆளுநர் தனது விருப்ப நிதியில்இருந்து ஆட்டோ வழங்கியுள்ளார். இதுகுறித்து, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி, கடின உழைப்பாளியான ஆட்டோ ஓட்டுநரும், முன்னோடி பெண் தொழில் முனைவோருமான அமலாவின் எழுச்சியூட்டும் பயணம் மற்றும் கனவுகளுக்கு ஆதரவையும் ஊக்கத்தையும் தெரிவிக்கும் அடையாளமாக, புதிய ஆட்டோவின் சாவியை, ராஜ்பவனில் வழங்கினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மகளிர் தின…
டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் மும்பையை சேர்ந்த பெண் மருத்துவரிடம் இருந்து ரூ.3 கோடியை மர்ம கும்பல் அபகரித்துள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த 70 வயது பெண் மருத்துவருக்கு கடந்த மே 28-ம் தேதி செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தன்னை அமித் குமார் என்றும் தொலைத் தொடர்பு துறை மூத்த அதிகாரி என்றும் அறிமுகப்படுத்தி கொண்டார். பெண் மருத்துவரின் சிம் கார்டு, ஆதார் எண்ணை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்று இருப்பதாக மர்ம நபர் மிரட்டினார். இதைத் தொடர்ந்து வாட்ஸ் அப் வீடியோ காலில் மற்றொரு மர்ம நபர், பெண் மருத்துவரை தொடர்பு கொண்டார். அந்த மர்ம நபர், தன்னை மும்பை காவல் துறையின் குற்றப்பிரிவு மூத்த ஐபிஎஸ் அதிகாரி சமதன் பவார் என்று அறிமுகம் செய்து கொண்டார். அவர் போலீஸ் உடையில் இருந்ததாலும் மிரட்டும் தொனியில் பேசியதாலும் பெண் மருத்துவர் மிகுந்த அச்சமடைந்தார்.…
ஊரக வளர்ச்சித் துறையில் 4 ஆண்டுகளில் ரூ.19,024 கோடியில் செயல்படுத்தப்படும் பல்வேறு முன்னோடி திட்டங்கள் நாட்டின் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டுவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சுயமாகச் செயல்படவும், மேலிட அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவும் கிராம ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் வரம்பு ரூ.2 லட்சம் என்பதை ரூ.5 லட்சம் ஆகவும் வட்டார ஊராட்சிக்கான அனுமதி வரம்பு ரூ.10 லட்சம் என்பது ரூ.20 லட்சம் ஆகவும் மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் என்பதை ரூ.50 லட்சம் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, நகரங்களை ஒட்டிய 690 ஊராட்சிகளுக்கு தலா ரூ.10 லட்சம், 278 மலைப்புற ஊராட்சிகளுக்கு ரூ.30 கோடியும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட சிறப்பு மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பிற துறைகளுடன் ஊராட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவும் 600 கிராமச் செயலகங்கள் கட்டப்ட்டுள்ளன. மகாத்மா காந்தி…