மதன் பாப்பை இந்த உலகம் காமெடியனாக தான் நினைத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் அவர் ஒரு காமெடியன் அல்ல. தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அவர் ஒரு ரியல் ஹீரோவை போல் வாழ்ந்தவர். எப்போதும் விலை உயர்ந்த ஆடைகளையும், விலை உயர்ந்த காலணிகளையும், விலை உயர்ந்த காஸ்ட்யூம் பொருட்களையும், விலை உயர்ந்த சென்ட் வகைகளையும் உபயோகிக்கக்கூடிய ஒரு வாசனை மனிதர். சென்ட் வகைகளிலேயே 20 வகையான சென்ட்களை அவர் பயன்படுத்துவார். குறிப்பாக, படப்பிடிப்புக்குப் போகும்போது, காரில் பயணிக்கும் போது, விழாக்களில் கலந்து கொள்ளும் போது என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான உடை அலங்காரம், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான சென்ட் ஆகியவற்றை பயன்படுத்துவது அவரது வழக்கம். இப்படி தன்னுடைய இருப்பை எப்போதுமே மற்றவரிலிருந்து மாறுபட்டவராகவும் எந்த விதத்திலும் தன்னை எவரும் குறைத்து மதிப்பிடாத வகையிலும் நடந்து கொள்வார். இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், மிக மிக எளிமையான மனிதர். எல்லோரிடமும் ஒரே மாதிரியாக பழகக்கூடியவர். ஆனால்,…
Author: admin
பெரம்பலூர்: கவின் படுகொலையை தவெக தலைவர் விஜய் கண்டிக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. குறிப்பிட்டார். திருநெல்வேலி கவின் படுகொலையைக் கண்டித்தும், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, திருமாவளவன் எம்.பி. பேசியது: “பட்டியலின மக்களுக்கு எதிரான இதுபோன்ற சாதிய படுகொலைகள் நிகழும்போது பெரிய அரசியல் கட்சிகளும், புதிய கட்சிகளும் மவுனமாக இருக்கின்றன. குறிப்பாக, கவின் படுகொலையை நடிகர் விஜய் கண்டிக்கவில்லை. திமுக அரசை கடுமையாக விமர்சிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு சென்றபோது, கவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. அதிமுக சார்பில் எந்த ஆர்ப்பாட்டமும் நடத்தவில்லை. ஆனால், சமூக அநீதிகளை தொடர்ந்து கண்டித்து வரும் விசிக மீது பிற கட்சிகள் வீண்பழி சுமத்துகின்றன. எம்ஜிஆரை அவமதித்து பேசிவிட்டேன் என கடந்த 2…
ராஜஸ்தான் வண்ணங்களால் நிரப்பப்பட்ட ஒரு துடிப்பான நிலம், அதன் ஒவ்வொரு வரலாற்று நகரங்களும் அதனுடன் தொடர்புடைய வண்ணத்தைக் கொண்டுள்ளன, அதன் பாரம்பரியம், கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரம் பற்றிய கதையைச் சொல்கிறது. இளஞ்சிவப்பு நகரமான ஜெய்ப்பூரின் இளஞ்சிவப்பு முகப்புகள் முதல் ஜோத்பூரின் இண்டிகோ பாதைகள், ப்ளூ சிட்டி, பிகானரின் சூடான மணற்கல் பளபளப்பு, சிவப்பு நகரம், உதய்பூரின் அமைதியான பளிங்கு நேர்த்தியானது, வெள்ளை நகரம் மற்றும் ஜெய்சால்மர், கோல்டன் சிட்டி ஆகியவற்றின் தங்கக் கோட்டையின் சிறப்பானது.ஒவ்வொரு நகரமும் ஏன் தொடர்புடைய வண்ணம் உள்ளது என்பதைப் பெறுவோம்:ஜெய்ப்பூர் – தி பிங்க் சிட்டிஜெய்ப்பூர் ராஜஸ்தானின் தலைநகரம் மற்றும் உலகளவில் இளஞ்சிவப்பு நகரம் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் வரலாற்று சுவர் நகரம் டெரகோட்டா இளஞ்சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ளது. இது 1876 ஆம் ஆண்டில் தொடங்கிய ஒரு பாரம்பரியம், மகாராஜா சவாய் ராம் சிங் வேல்ஸ் இளவரசரை வரவேற்க நகரத்தை இளஞ்சிவப்பு நிறத்தில் வருமாறு உத்தரவிட்டார், ஏனெனில்…
நெல்லை: திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டரையும், அவரது மகனையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பெற்றோரான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சப்-இன்ஸ்பெக்டர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சரவணனை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில், கொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிறையில் இருக்கும் சுர்ஜித் மற்றும் சரவணன்…
உடல் எடையை குறைப்பது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவது ஜிம்மில் கடுமையான உணவுகள் அல்லது முடிவற்ற மணிநேரங்களைக் குறிக்க வேண்டியதில்லை. சுகாதார பயிற்சியாளர் லூயிசானா கரெரோ சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார், ஆறு எளிய, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் அவரது உடலையும் மனநிலையையும் எவ்வாறு மாற்றின, நான்கு மாதங்களில் 12 கிலோவை இழக்க உதவியது. இந்த பழக்கவழக்கங்கள் தினசரி கலோரி எரியலை இயற்கையாக அதிகரிப்பதில் கவனம் செலுத்துகின்றன, அதே நேரத்தில் மன நல்வாழ்வையும் ஆற்றலையும் அதிகரிக்கும். உங்கள் எடை இழப்பு பயணத்தை நீங்கள் ஜம்ப்ஸ்டார்ட் செய்ய விரும்பினாலும் அல்லது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வளர்த்துக் கொள்ள விரும்பினாலும், இந்த நடைமுறை உதவிக்குறிப்புகள் அன்றாட வாழ்க்கையில் பொருந்தக்கூடிய ஒரு நிலையான அணுகுமுறையை வழங்குகின்றன. இதுபோன்ற கவனமுள்ள பழக்கங்களை இணைப்பது உங்கள் வழக்கத்தை பெரிதுபடுத்தாமல் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.தினசரி கலோரி தீக்காயத்தை அதிகரிக்கவும், உங்கள் உடலை மேம்படுத்தவும் 6 ஆரோக்கியமான பழக்கம்உங்கள் தினசரி கலோரி…
மதுரை: அற்ப காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தக் கூடாது என அறிவுறுத்தி, கோவில்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கோவில்பட்டியில் ஆகஸ்ட் 1-ல் வழக்கறிஞர் புருசோத்தமன் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநர் ராமகிருஷ்ணன் இடையே தகராறு நடைபெற்றது. சாலையில் வழிவிடாமல் சென்றது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பு மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆக.5 முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த செயல் வழக்கறிஞர்களின் உரிமை மற்றும் நீதி பரிபாலன முறையை பாதிக்கச் செய்கிறது. எனவே வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு உடனடியாக…
நாற்காலி உதவியுடன் குந்துகைகள், துணிவுமிக்க ஒரு நாற்காலியின் முன் நிற்கவும், உங்கள் கால்களை தோள்பட்டை அகலமாக வைத்திருக்கவும். இப்போது, உட்கார்ந்திருப்பதைப் போல மெதுவாக உங்களை குறைத்து, நாற்காலியை லேசாகத் தொடவும். நாற்காலியில் உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்கவும். பின்னர் மீண்டும் மேலே எழுந்து உங்கள் மார்பைத் தூக்கி எறியுங்கள்.நிற்கும் நெருக்கடிகளுக்கு, உயரமாக நின்று உங்கள் கைகளை உங்கள் தலைக்கு பின்னால் வைத்திருங்கள். இப்போது, உங்கள் வலது முழங்காலை உங்கள் இடது முழங்கையை நோக்கி உயர்த்தி, உங்கள் மையத்தை ஈடுபடுத்துங்கள். தொடக்க நிலைக்குத் திரும்பி, மறுபுறம் இயக்கத்தை மீண்டும் செய்யவும். இந்த இரண்டு பயிற்சிகளும்-நாற்காலி உதவியுடன் குந்துகைகள் மற்றும் நிற்கும் நெருக்கடிகள்-மைய மற்றும் கால் தசைகளில் ஈடுபடுங்கள், மேலும் நிலைத்தன்மையையும் மேம்படுத்துகின்றன. சுருக்கமான 30-வினாடி செட்களுக்கு ஒவ்வொன்றையும் செய்வது அவர்களின் எடை இழப்பு பயணத்தில் ஒருவருக்கு உதவும்.
கிருஷ்ணகிரி/ஓசூர்: அதிமுக ஆட்சி அமைந்ததும், மா விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது 3-ம் கட்ட சுற்றுப்பயணம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கியது. ராயக்கோட்டை அண்ணா சிலை அருகில் திறந்த வாகனத்தில் பேசிய அவர் கூறியது: “மலர் விவசாயிகளுக்காக, ஓசூரில் ரூ.20 கோடி மதிப்பில் சர்வதேச பன்னாட்டு மலர் ஏல மையத்தை, அதிமுக ஆட்சியில் திறந்து வைத்தோம். ஆனால், அந்த ஏல மையத்தை திமுக அரசு மூடி வைத்துள்ளது. நடப்பாண்டில் மா மகசூல் அதிகரித்து கடும் விலை வீழ்ச்சியடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், ‘மா’விற்கான கொள்முதல் விலையை கிலோவிற்கு ரூ.13 நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தினோம். ஆனால், திமுக அரசு…
ஒவ்வொரு நபரும் ஒரே வொர்க்அவுட்டில் ஒரே மகிழ்ச்சியை உணரவில்லை. சிலருக்கு, அதிக தீவிரம் கொண்ட ஸ்பிரிண்ட் களிப்பூட்டுவதாக உணர்கிறது. மற்றவர்களுக்கு, இது ஒரு உடனடி திருப்பம். இந்த வேறுபாடு ஏன் இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் இப்போது ஆராய்ந்தனர், அது மாறிவிடும், ஆளுமைக்கு இதற்கும் நிறைய தொடர்பு உள்ளது.ஒரு சமீபத்திய ஆய்வு பெரிய ஐந்து ஆளுமைப் பண்புகள், புறம்போக்கு, மனசாட்சி, உடன்பாடு, நரம்பியல் மற்றும் திறந்த தன்மை, உடற்பயிற்சி விருப்பத்தேர்வுகள், உடற்பயிற்சி நிலைகள் மற்றும் அர்ப்பணிப்பு முறைகளுக்கு எதிராக வரைபடமாக்கியது. கண்டுபிடிப்புகள் எந்த உடற்பயிற்சிகளையும் மக்கள் ரசிக்கக்கூடும் என்பது மட்டுமல்ல, உடற்பயிற்சியின் யோசனைக்கு அவர்களின் மனம் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.
சென்னை: “தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வருவதால், எனது வாக்குகள் குறைந்துவிடும் என்கின்றனர். ஏன் தெரியுமா? அப்படியாவது கட்சியை கலைத்துவிட்டு, ஏதோ ஒரு கட்சியில் கூட்டணி சேர்ந்துவிடுவார்கள் என்றுதான்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது குறித்து சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளுக்கு அவரவர் விரும்பிய சின்னங்கள் கிடைத்த போது 6 தேர்தலை சந்தித்த என் கட்சியை சின்னத்தை தேர்தல் ஆணையம் பறித்து, அதைக் கொண்டு கர்நாடகாவில் ஒரு கட்சிக்கு கொடுத்தது. நீதிமன்றம், தேர்தல் ஆணையம், வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ, என்ஐஏ போன்றவை எல்லாம் தன்னாட்சி அமைப்புகள் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இவை யாவும் அதிகாரத்தில் இருப்பவர்களின் 5 விரல்களாக மட்டுமே செயல்பட்டு வருகின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் போட்டி. தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில்…