கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயது சட்டக் கல்லூரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான மேங்கோ என்ற மனோஜித் மிஸ்ரா நீண்ட காலமாக மனநோயால் (சைக்கோ) பாதிக்கப்பட்டவர் என அவரது முன்னாள் வகுப்பு தோழர்களும், ஜூனியர்களும் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஸ்ரா நீண்ட காலமாக மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், பாலியல் வன்முறையில் ஈடுபடும் அளவுக்கு மோசமான நடத்தை உடையவர். அதனால்தான், கடந்த 2021-ம் ஆண்டு கல்லூரியின் திரிணமூல் பிரிவில் இருந்து மிஸ்ரா வெளியேற்றப்பட்டார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி உட்பட எந்த பெண்களைப் பார்த்தாலும் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று பலமுறை தொல்லை கொடுத்துள்ளார். மேலும், பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து நண்பர்களிடையே பரப்பும் அளவுக்கு மனநோய் உடையவர் மிஸ்ரா. மேலும், பெண்களை உடல்ரீதியாகவும் அவமானப்படுத்துவார். பாலியல்…
Author: admin
சென்னை: பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று (ஜூன் 30) வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று (ஜூன் 30) மதியம் வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்கள் மட்டுமே மேற்கண்ட தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பர்மிங்ஹாம்: விக்கெட்களை வீழ்த்துவதற்கே நான் முன்னுரிமை அளித்து வருகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தெரிவித்தார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் ஜூலை 2-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரசித் கிருஷ்ணா. பயிற்சியின் இடையே செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில்தான் நான் அறிமுகமானேன். இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளேன். இங்கிலாந்து தொடர் சவாலானதாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு போதிய முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், முடிவு வேறு விதமாகிவிட்டது. முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாகவே பந்துவீசினோம். ஆனால் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர். முதல் இன்னிங்ஸில் சரியான லென்த்தில் என்னால் பந்து வீச இயலவில்லை. ஆனால் 2-வது இன்னிங்ஸின்போது சுதாரித்து பந்துவீசினேன். மேலும் ஆடுகளமும்…
கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள படம், ‘ஓஹோ எந்தன் பேபி’. இதில் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா, கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார். ரொமான்டிக் படமான இதை, ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ஜூலை 11-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா, செல்லா அய்யாவு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, நடிகர் கார்த்தி என பலர் கலந்துகொண்டனர். விஷ்ணு விஷால் பேசும்போது, “ருத்ரா, என்னுடைய சொந்த தம்பி இல்லை. பெரியப்பா மகன். அப்பா – பெரியப்பா இருவரும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். இருந்தாலும் அவர்களுக்கு சினிமா மீது தீராத காதல் உண்டு. இருவரும் பத்தாம் வகுப்பு வரை படித்தார்கள். பிறகு பெரியப்பாவுக்கு படிப்பு வரவில்லை. அதனால் அவர்…
சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிகளில் 3 தளர்வுகளை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்தது. பின்னர், 2023-ம் ஆண்டு ‘கலைஞர் மகளின் உரிமை தொகை திட்டம்’ என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டது. இதை பெறுவதற்கும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், நான்கு சக்கர வாகனம் (கார், ஜீப் போன்றவை) வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் திட்டத்துக்கு தகுதியற்றவர்களாக கருதப்பட்டனர். அதேநேரம், அரசின் நிபந்தனைகளுக்குட்பட்டு தகுதியுள்ள பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து ஜூலை 15-ம் தேதி முதல் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்களில் கடந்த முறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டது. இதற்கிடையே, திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஜூலை 15 முதல்…
நாள்பட்ட சிறுநீரக நோய் (சி.கே.டி) என்பது மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு நிலை. இந்த நிலை நீண்ட கால சேதத்தால் குறிக்கப்பட்டுள்ளது, இது இறுதியில் சிறுநீரகங்களை பலவீனமாக மாற்றுகிறது, மேலும் அவர்களால் இரத்தத்தை வடிகட்ட முடியாது. இது உடலில் கழிவு மற்றும் கூடுதல் திரவத்தை உருவாக்க வழிவகுக்கிறது. சி.கே.டி -க்கு நேரடி சிகிச்சை இல்லை என்றாலும் (அது முற்போக்கானது), சிகிச்சைகள் அறிகுறிகளை நிர்வகிக்கவும் அதன் முன்னேற்றத்தை குறைக்கவும் உதவும், இதில் வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள், டயாலிசிஸ் அல்லது மேம்பட்ட நிகழ்வுகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை அடங்கும். இருப்பினும், வழக்கமான சிகிச்சைகள் தவிர, இப்போது சில நம்பிக்கை உள்ளது. தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் நெப்ராலஜியில் வெளியிடப்பட்ட ஒரு அண்மையில் ஏற்பட்ட மருத்துவ ஆய்வு நம்பிக்கைக்குரிய செய்திகளைக் கொண்டு வந்துள்ளது: சோடியம் பைகார்பனேட்டுடன் தினசரி கூடுதல், பேக்கிங் சோடா என்றும் அழைக்கப்படுகிறது, இது…
திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி மாணவ, மாணவியரின் உடல்நலன், மனநலனை மேம்படுத்த ஜும்பா நடன பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜும்பா என்பது நடனத்தை உள்ளடக்கிய உடற்பயிற்சி ஆகும். கடந்த 2001-ம் ஆண்டில் கொலம்பிய நடன கலைஞர் பீட்டோ பெரெஸ், ஜும்பா நடனத்தை உருவாக்கினார். தற்போது உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நடனம் பிரபலமாக இருக்கிறது. கேரளாவில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிருக்கு ஜும்பா நடன பயிற்சி வழங்கும் திட்டம் நடப்பு கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மாணவ, மாணவியரின் உடல் நலன், மன நலன் மேம்படும். போதை பொருள் பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாவது தடுக்கப்படும் என்று கேரள கல்வித் துறை விளக்கம் அளித்து உள்ளது. ஆனால் பல்வேறு மத அமைப்புகள் ஜும்பா நடன பயிற்சி திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முஸ்லிம் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் நவாஸ் கூறும்போது,…
திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி20 லீக் கிரிக்கெட் தொடரில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய திருப்பூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. சாய் கிஷோர் அதிரடியாக விளையாடி 55 ரன்கள் (34 பந்துகள். 8 பவுண்டரி. ஒரு சிக்ஸர்) குவித்தார். பின்னர் விளையாடிய நெல்லை அணி 19.4 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி கண்டது. திருப்பூர் அணி சார்பில் டி.நடராஜன் 3, மோகன் பிரசாத் 2, சாய்கிஷோர், இசக்கிமுத்து, முகமது அலி, பிரதோஷ் ரஞ்சன் பால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சென்னை: திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்ய அவசியமில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.ராஜேந்திரன், ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திமுக அரசு தொடரவும், இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிக்கவும் கூட்டணி என்ற மதிமுக எடுத்த முடிவை வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைப்பிடிப்போம். அரசியலமைப்பில் மதச்சார்பற்ற, சோசலிச எனும் வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. முருகன் மாநாட்டில் பெரியார், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை சிறுமைப்படுத்தி வெளியான காணொலிக்கு கடும் கண்டனம். திருச்சியில் நடைபெறவுள்ள முன்னாள்…
புதுடெல்லி: கடந்த 2022-ம் ஆண்டில், 186 நாடுகளை உள்ளடக்கிய உலக வங்கியின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தொழில்முனைவில் பாலின இடைவெளி குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்திய பெண்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தொழில்முனைவோராக உள்ளனர் என்றும் இது உலக சராசரியைவிட குறைவு என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இந்திய ஆண்களில் (15-64 வயது) சுமார் 3% பேர் தொழில்முனைவோராக உள்ளனர். இது உலக சராசரியுடன் ஒத்துப் போகிறது என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.