பிரயாக்ராஜ்: உ.பி.யின் பிரயாக்ராஜ் மாவட்டம், பாரா அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ரோகித் (35). இவர் லாலாப்பூர் என்ற கிராமத்தில் தனது மனைவி சுஷ்மா திவேதி (32) உடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில் சுஷ்மா கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் கழுத்தில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வீட்டில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீஸார், வீட்டின் தரையில், ‘‘நான் மனநிலை சரியில்லாதவள், எனது கணவர் அப்பாவி’’ என ரத்தத்தால் எழுதியிருந்ததை பார்த்தனர்.
Author: admin
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் ஜெய்க்கா நிதி நிறுவனத்தின் 85 சதவீத நிதி உதவியும், 15 சதவீதம் மத்திய அரசும் நிதி ஒதுக்கியது. 2019 ஜனவரி 27-ல் பிரதமர், அப்போதைய முதல்வர் பழனிசாமி, எம்.பி தேர்தலை மனதில் வைத்து அடிக்கல் நாட்டினர். 2021-ம் ஆண்டு மே 7-ம் தேதி வரை எதுவுமே செய்யவில்லை. திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான 222 ஏக்கர் நிலத்தை ஆதாரபூர்வமாக வழங்கியது. தொடர்ந்து தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து வலியுறுத்தினார். இதற்கிடையில் 2022-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு 50 மாணவர்கள் சேர்ந்தனர்.தமிழக முதல்வர் மறுத்திருந்தால் எய்ம்ஸ் வராமல் போயிருக்கும். எனவே ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் அந்த மாணவர்கள் படிக்க தமிழக முதல்வர் அனுமதி வழங்கினார். தற்போது வரை 4 ஆண்டுகளில் 200 எய்ம்ஸ் மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், இன்னும் எய்ம்ஸ் கட்டி முடிக்கவில்லை. இன்னும் ஓராண்டு முடிந்தால் எய்ம்ஸ் மாணவர்கள் கல்லூரியை பார்க்காமலே…
கொல்கத்தா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஷுப்மன் கில் விளையாடிக் கொண்டிருந்த போது கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டு பெவிலியன் திரும்பினார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். இதனால் அவர் 2-வது இன்னிங்ஸிலும் விளையாடவில்லை.
மாஸ்கோ: நடப்பு 2025-ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு சுற்றுலா சென்ற இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, 2025 முதல் அரையாண்டில் 40,800 பயணிகள் இந்தியாவிலிருந்து மாஸ்கோவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். காமன்வெல்த் அமைப்பை (சிஐஎஸ்) சாராத நாடுகளின் பயணிகள் மாஸ்கோவுக்கு சுற்றுலா செல்வதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே சடையாண்டி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் நள்ளிரவில் 105 கிடாக்கள் வெட்டி விடிய விடிய அசைவ விருந்து பரிமாறப்பட்டது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தில் சடையாண்டி கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் திருவிழா கொண்டாடப்படுகிறது. நள்ளிரவில் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பது ஐதீகம்.
என்னுடைய மந்திரவாதி நண்பன் ரவி, ஏதோ செய்த சேட்டைக்காக நயினார் ஆசிரியர் அடித்துவிட்டார். நாங்கள் வீட்டுக்கு போன பின் விளையாடுவதற்காக மீண்டும் ஸ்கூல் மைதானத்துக்கு வந்தோம். இவன் அங்கு நின்றிருந்தான்! “என்னடா இங்க நிற்கிற? என்று கேட்டோம். “இல்லடா, நயினார் வாத்யார் என் தலையில அடிச்சிட்டார். அதனால ஹெட்மாஸ்டர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண போறேன், அதுக்குத்தான் நிற்கிறேன். என் தலையில ரத்தம் வருதா பாரு?” என்று கேட்டான். நான் பார்த்த போது ஒரு துளி ரத்தமில்லை! அவனை பயமுறுத்துவதற்காக ‘என்னடா இவ்வளவு ரத்தம்” என்று சொன்னேன். அதை நிஜம் என்று நம்பி, ‘ஹெட் மாஸ்டர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணி, இனி அவர் யாரையும் அடிக்க விடாம பண்றேன்” என்று காத்திருந்தான். “சரி, போ, உள்ள போலாம் போ” என்று சொன்னேன். அவன், “இருடா… கொஞ்சம் அழுதுக்கிறேன்” என்று ரிகர்சல் பார்த்தான். பிறகு கண்ணீரோடு அவர் அறைக்குள் நுழைந்தான். அங்கு அவர் இல்லை. பின் கதவு…
சாதனை படைத்த குறுவை பருவ நெல் உற்பத்தி: தமிழ்நாட்டில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு கரீஃப் (குறுவை) பருவத்தில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி எய்தப்பட்டுள்ளது. 16.11.2025 நிலவரப்படி நெல் கொள்முதல் கடந்த 2024-2025-ஆம் ஆண்டினுடைய 4.81 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து நடப்பாண்டில் 14.11 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது என்றும் இது தமிழ்நாட்டின் வரலாற்றில் குறுவை (கரீஃப்) பருவத்தில் நெல் கொள்முதலில் புதிய சாதனையாகும்.மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 16.11.2025 நிலவரப்படி 1,932 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, 1,86,674 விவசாயிகளிடமிருந்து 14.11 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை ரூ. 3,559 கோடி வழங்கி கொள்முதல் செய்துள்ளது. ஒப்பீட்டளவில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (16.11.2024 வரை) 1,095 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 4.83 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்காக ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான 2 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, ரூ.25,060 கோடி மதிப்பிலான ஏற்றுமதி வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். 2025-26 முதல் 2030-31 வரையிலான காலத்துக்கு சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் போட்டித் தன்மையை அதிகரிக்க இந்த திட்டம் வகை செய்கிறது.
குளிர்காலம் வந்துவிட்டது. குளிர்காலம் வரும்போது காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும் வரும். அப்படியானால் உங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது? சரியான உணவை உட்கொள்வதன் மூலம். ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும். இந்த உணவுகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தேவையான ஆக்ஸிஜனேற்றங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகின்றன. அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன, உங்கள் ஆற்றலை நிலையாக வைத்திருக்கின்றன மற்றும் பொதுவான குளிர்கால நோய்த்தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கின்றன, எனவே அவை ஒவ்வொரு நாளும் உங்கள் தட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது பண்டிகைகள், காய்ச்சல், எல்லாவற்றின் சீசன். வெப்பநிலை குறைந்து விடுமுறை காலம் தொடங்கும் போது, இருட்டில் பதுங்கியிருக்கும் கிருமிகளும் வலுவடைகின்றன. பெரும்பாலான மக்கள் மூக்கடைப்பு, ஜலதோஷம் மற்றும் நோய்வாய்ப்படுவதில் இருந்து ஒரு படி தொலைவில் இருப்பது போன்ற நிலையான உணர்வை அனுபவிக்கலாம். இந்தக் குளிர்காலத்தில் நோய்களைத் தடுப்பது எப்படி? சரியான…
