Author: admin

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் வேட்பாளர் ஆர்யன் மான் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்யன் மான் 28,841 வாக்குகளைப் பெற்றார். அதே நேரத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ-ன் வேட்பாளர் ஜோஸ்லின் நந்திதா சவுத்ரி 12,645 வாக்குகளைப் பெற்றார். தேர்தல் நடத்தப்பட்ட நான்கு பதவிகளில், ஏபிவிபி அமைப்பு தலைவர், செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் ஆகிய மூன்று பதவிகளை வென்றது. துணைத் தலைவர் பதவியை என்எஸ்யுஐ கைப்பற்றியது. ஆர்யன் மான் ஹரியானாவின் பகதூர்கரைச் சேர்ந்தவர், டெல்லி பல்கலைக்கழக நூலக அறிவியல் துறையின் மாணவரான அவர், ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலை (பி.காம்) பட்டம் பெற்றுள்ளார். தேசிய அளவிலான கால்பந்து வீரரான ஆர்யன் மான், ஏபிவிபியின் மாநில நிர்வாக உறுப்பினரும் ஆவார். இந்த ஆண்டு மாணவர் சங்க தேர்தலுக்கான ஆர்யன்…

Read More

மதுரை: ஜிஎஸ்டி அபராத நோட்டீஸை போர்ட்டலில் பதிவேற்றம் செய்வதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் நேரிலும் அனுப்பி வைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. தூத்துக்குடியை சேர்ந்த ஷார்ப் டேங்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நிஷாமேனன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் எங்கள் நிறுவனத்தில் 2022-ல் திடீர் சோதனை நடத்தினர். பின்னர் தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்டப்பிரிவு 74-ன் கீழ் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தோம். இருப்பினும் எங்கள் நிறுவனத்துக்கு கூடுதல் வரி, வட்டி மற்றும் அபராதம் விதித்து மாநில வரி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்து, மேல்முறையீடு மனுவை தகுதி அடிப்படையில் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க நெல்லை வணிக வரி துணை ஆணையருக்கு (ஜிஎஸ்டி- மேல்முறையீடு) உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.…

Read More

போர்டிங் பாஸ்கள் உங்கள் இருக்கைக்கு ஒரு டிக்கெட்டை விட அதிகம்; உங்கள் முழு பயண அனுபவத்தையும் வடிவமைக்கக்கூடிய மறைக்கப்பட்ட விவரங்களால் அவை நிரப்பப்பட்டுள்ளன. நீங்கள் எங்கு அமர்ந்திருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பதில் இருந்து, நீங்கள் அதிக முன்பதிவு செய்யப்பட்ட விமானத்திலிருந்து மோதிக் கொள்ளும் அபாயத்தில் இருக்கிறீர்களா, உங்கள் பாஸில் உள்ள குறியீடுகள் ஆச்சரியமான எடையைக் கொண்டுள்ளன. நீங்கள் ஒரு மென்மையான பயணத்தை அனுபவிக்கிறீர்களா அல்லது எதிர்பாராத இடையூறுகளை எதிர்கொள்கிறீர்களா என்பதை ஒரு சிறிய எண் அல்லது கடிதம் தீர்மானிக்க முடியும். இந்த குறியீடுகளைப் புரிந்துகொள்வது உங்களுக்கு ஒரு விளிம்பைத் தருகிறது, முன்பு ஏறவும், சிறந்த இருக்கையைப் பாதுகாக்கவும், மன அழுத்த தாமதங்களைத் தவிர்க்கவும் உதவுகிறது. உங்கள் போர்டிங் பாஸ் உண்மையில் உங்களுக்குச் சொல்கிறது, நீங்கள் ஏன் கவனம் செலுத்த வேண்டும்.உங்கள் போர்டிங் பாஸில் உள்ள SEQ எண் உண்மையில் என்ன அர்த்தம்கவனிக்க வேண்டிய மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்று SEQ எண், இது…

Read More

புதுடெல்லி: “இந்த நாட்டின் இளைஞர்கள், நாட்டிலுள்ள மாணவர்கள், ஜென் ஸீ தலைமுறையினர் அரசமைப்பை, ஜனநாயகத்தை பாதுகாப்பார்கள். வாக்குத் திருட்டை தடுப்பார்கள். அவர்களுடன் நான் துணை இருப்பேன்.” என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ள நிலையில், ராகுல் காந்தியும் அவர் சார்ந்த காங்கிரஸுன் நேபாளத்தில் நடந்தது போன்ற ஒரு வன்முறைப் போராட்டத்தை தூண்டுவதாக பாஜக விமர்சித்துள்ளது. முன்னதாக நேற்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “ ‘வாக்கு திருட்டு 2.0’ தகவலை தற்போது ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது. இந்த மோசடிகள் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, பிஹார், ஹரியானா, உத்தர பிரதேசத்தில் இதே முறையில் வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ளவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாக்கிறார்” என்று கூறியிருந்தார். தொடர்ந்து…

Read More

புத்தாயிரத் தலைமுறையிலிருந்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ புகழ் அபிஷன் ஜீவிந்த் போன்று இப்போதுதான் ஒன்றிரண்டு இயக்குநர்கள் தலைகாட்டியிருக்கிறார்கள். அதேபோல் பாடலாசிரியர்களின் நுழைவும் தொடங்கிவிட்டதற்கு தேவ் சூர்யா ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஆங்கில வழியில் பயின்றிருந்தாலும் பலர் நல்ல தமிழில் எழுதப் பழகியிருக்கிறார்கள். அப்படியொருவர் தான் தேவ் சூர்யா. சபரிஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி – மெஹ்ரீன் பிர்சாதா நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘இந்திரா’ படத்தில் தேவ் சூர்யா எழுதிய ‘சொல்லாமல் கொள்ளாமல் வெல்வானே.. கண்மூடி வேட்டைக்குச் செல்வானே.. எமன் யாரு..?’ என்கிற பாடலை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள் இணையவாசிகள். அப்பாடல் வரிகளை வைத்து மீம்களும் உலவத் தொடங்கிவிட்டன. ‘இந்திரா’ படத்தின் கதையில், நாயகனே வில்லனா அல்லது வில்லன் என்று கருதப்படுபவன்தான் நாயகனா என்கிற உண்மை புலப்படும் தருணத்தைப் பாடல் இடம்பெறும் சூழ்நிலையாக இயக்குநர் கொடுக்க, அதற்கு தேவ் சூர்யா எழுதிய இப்பாடல் இணையத்தில் 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

Read More

சென்னை: தமிழகத்தில் செப்.20, 21 தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (செப்.20), நாளை மறுதினமும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22 முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிஸ் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில்…

Read More

ராபி பருவம் தொடங்கி உள்ள நிலையில் பயிர்க்கடன் பெறுவதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 144 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க ஆடு வளர்ப்பு, கறவை மாடு, கரி மூட்டத் தொழில், மகளிர் சுய உதவிக்குழு, பயிர்க் கடன் போன்ற பல்வேறு கடன்கள் வட்டியில்லாமல் ஓராண்டுக்கு வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட கால தவணைக்குள் கடனை திரும்ப செலுத்தினால் மாநில அரசே அந்த அசலுக்குரிய வட்டியை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்குகிறது. ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு புரட்டாசி ராபி பருவத்தில் சுமார் ரூ.160 லட்சம் வரை பிணையமின்றியும், அடமானமின்றியும் ஓராண்டுக்கு வட்டியில்லாமல் வழங்குகிறது. இந்த பயிர் கடனை கிராமப் புறங்களில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் பெற்று பயனடைந்து வருகின்றனர். இதனால், விவசாயிகள் வெளி நபர்களிடமும், தனியாரிடமும், தேசிய மயமாக்கப்பட்ட வணிக வங்கிகளிடமும் விவசாயத்துக்காக பெறக்கூடிய கடன் முற்றிலும் குறைந்து வந்தது.…

Read More

பலர் உணர்ந்ததை விட பெண்களிடையே முதுகுவலி மற்றும் பொதுவான உடல் அச om கரியம் அதிகம். தொடர்ச்சியான வலிகள் அன்றாட வாழ்க்கை, வேலை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கலாம், ஆனால் பெரும்பாலும் மன அழுத்தம், சோர்வு அல்லது வயதானதாக நிராகரிக்கப்படுகின்றன. இந்த சிக்கல்களை திறம்பட நிர்வகிக்க சரியான நேரத்தில் கண்டறிதல் அவசியம் என்று AIIMS ராய்ப்பூரின் எலும்பியல் மற்றும் விளையாட்டு காயம் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் துஷ்யந்த் ச ou ஹான் வலியுறுத்துகிறார். சமீபத்திய இன்ஸ்டாகிராம் இடுகையில், தேவையற்ற அல்லது விலையுயர்ந்த முழு உடல் சோதனைகள் இல்லாமல், உடல், முதுகு மற்றும் எலும்பு வலியின் ஆரம்ப காரணங்களை அடையாளம் காண பெண்களுக்கு உதவும் மூன்று அத்தியாவசிய சோதனைகளை அவர் பகிர்ந்து கொண்டார்.பெண்கள் ஏன் எலும்பு, தசை மற்றும் முதுகில் அச om கரியத்தால் பாதிக்கப்படுகிறார்கள்வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து மற்றும் ஹார்மோன் காரணிகளின் கலவையின் காரணமாக பெண்கள் அடிக்கடி தசைக்கூட்டு அச…

Read More

பாட்னா: பிஹார் முதல்​வர் நிதிஷ் குமாரும் மத்​திய அமைச்​சர் அமித் ஷாவும் பாட்​னா​வில் நேற்று சந்​தித்​துப் பேசினர். அப்​போது சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தொடர்​பாக ஆலோ​சனை நடத்தி உள்​ளனர். பிஹார் சட்​டப்​பேர​வைக்​கான தேர்​தல் தேதி ஓரிரு வாரங்​களில் அறிவிக்​கப்பட உள்​ளது. இதையடுத்​து, அங்கு தேர்​தல் பிரச்​சா​ரம், அரசி​யல் கட்​சிகள் இடையி​லான தொகுதி உடன்​பாடு குறித்து பேச்​சு​வார்த்தை சூடு​பிடித்​துள்​ளது. பிஹாரில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் நிதிஷ் குமார் தலை​மையி​லான ஐக்​கிய ஜனதா தளம் இடம்​பெற்​றிருக்​கிறது. இந்​நிலை​யில், நேற்று பாட்னா சென்ற மத்​திய உள் துறை அமைச்​சரும் பாஜக மூத்த தலை​வரு​மான அமித் ஷா ஒரு ஓட்​டலில் தங்கி இருந்​தார். இதையடுத்​து, பிஹார் முதல்​வரும் ஐக்​கிய ஜனதா தள தலை​வரு​மான நிதிஷ் குமார், அமித் ஷாவை ஓட்​டலில் சந்​தித்​துப் பேசி​னார். நிதிஷ் குமார், அமித் ஷாவுக்கு பூங்​கொத்து கொடுக்​கும் புகைப்​படத்தை இரு​வரும் எக்ஸ் சமூக வலை​தளத்​தில் பகிர்ந்​து உள்​ளனர். இந்த சந்​திப்​பின் போது…

Read More

‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் மூலம் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்துக் கொண்டு கவனம் ஈர்த்த அதியன் ஆதிரையின் இரண்டாவது படம். சமூக அக்கறையுள்ள படங்களை லாப நோக்கம் உள்ளிட்ட சமரசங்களுக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து தயாரித்து வரும் பா.ரஞ்சித்தின் அடுத்தப் படம் போன்ற லேபிள்களுடன் வெளியாகியுள்ள ’தண்டகாரண்யம்’ எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். மலைக் கிராமம் ஒன்றில் தமிழக வனத் துறையில் பணிபுரியும் முருகன் (கலையரசன்). இவரது மூத்த சகோதரர் சடையன் (அட்டகத்தி தினேஷ்) பழங்குடி மக்களுக்காக போராடி வருபவர். சில காரணங்களால் வனத் துறையிலிருந்து வெளியேற்றப்படும் முருகன், ஜார்க்கண்ட் மாநிலத்தில் துணை ராணுவப் படையில் சேர்கிறார். இங்கு பயிற்சி பெறுபவர்கள் நாடு முழுவதும் நக்சல் ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் பிறகு அந்தப் பயிற்சி முகாமில் நடக்கும் சம்பவங்களும், அதை பற்றிய உண்மையும் முருகனையும் அவரை சார்ந்தோரையும் எந்த விதத்தில் பாதிக்கிறது? பிறகு என்ன நடக்கிறது…

Read More