கோவை: தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருவதால் போதுமான பணி ஆணைகள் இல்லை. இதனால் பிற மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதாக கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்பிலும் தேசிய அளவில் புகழ் பெற்றுள்ளது. ஒரு லட்சம் பேர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் நகைகளுக்கான பணி ஆணைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Author: admin
கல்லீரல் நோய் பல்வேறு தோல் நிறமி மாற்றங்களுடன் உள்ளது, இது கருமையான திட்டுகள் அல்லது கருமையான தோலை ஏற்படுத்தும். இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நாள்பட்ட வீக்கத்தால் எழுவதாக கருதப்படுகிறது. டெர்ரியின் நகங்கள் (முனையில் குறுகிய இளஞ்சிவப்பு பட்டையுடன் கூடிய வெள்ளை நகங்கள்) அல்லது முஹர்கேயின் கோடுகள் (நகங்கள் முழுவதும் வெள்ளை பட்டைகள்) போன்ற சிறப்பியல்பு குறிப்பிட்ட நக மாற்றங்கள் இருக்கலாம், இவை இரண்டும் பலவீனமான கல்லீரல் செயல்பாடு மற்றும் தொந்தரவு செய்யப்பட்ட புரத வளர்சிதை மாற்றத்தைக் குறிக்கின்றன.டாக்டர் சௌரப் கூறுகிறார்,இந்த அறிகுறிகளில் பல பொதுவான அமைப்பு ரீதியான அறிகுறிகளுடன் நிகழ்கின்றன மற்றும் மருத்துவர்களுக்கு பயனுள்ள சுட்டிகளை நிரூபிக்கின்றன. தோல் மாற்றங்கள் தொடர்ந்து இருந்தால், குறிப்பாக சோர்வு, வயிற்றின் விரிவாக்கம் அல்லது மஞ்சள் காமாலை உள்ளிட்ட பிற அறிகுறிகளுடன் இணைந்தால், ஒரு சுகாதார நிபுணரைப் பார்ப்பது மிகவும் முக்கியம். கல்லீரல் கோளாறுகளில் ஆரம்பகால கண்டறிதல் சிறந்த மேலாண்மை மற்றும் சிக்கல்களைத் தவிர்க்க…
புனே: புனேவைச் சேர்ந்த இரு முதியவர்கள், அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் டிஜிட்டல் கைதாகிய தனித்தனி வழக்குகளில் 1.1 கோடி ரூபாயை இழந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். மும்பை போலீஸ் மற்றும் சிபிஐ அதிகாரிகள் போல் காட்டிக் கொண்ட மோசடிக்காரர்கள், தங்கள் வங்கிக் கணக்குகள் பணமோசடிக்காக தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, சரிபார்ப்பு என்ற போலிக்காரணத்தின் கீழ் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றச் செய்தனர். புனே சைபர் போலீஸ் மற்றும் சதுஷ்ருங்கி காவல் நிலையங்களில் வியாழக்கிழமை தனித்தனி புகார்கள் பதிவு செய்யப்பட்டன.இன்று புனே தலைப்புச் செய்திகள் — நீங்கள் தவறவிடக்கூடாத முக்கியக் கதைகள்.90 லட்சத்தை இழந்த கல்யாணிநகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் (79) சைபர் போலீஸில் அளித்த புகாரில், தனக்குத் தெரியாத செல்போன் எண்ணிலிருந்து TRAI (டெலிகாம் ரெகுலேட்டரி அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) இருந்து வந்ததாகக் கூறி, தனக்கு 24 புகார்கள் வந்ததாகத் தெரிவித்தார். “பாதிக்கப்பட்டவர் பின்னர் மும்பை…
குறிப்பாக டாக்டர்களை மூளைச் சலவை செய்து இந்த சதித் திட்டத்தை தீட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது. எனினும், முன்கூட்டியே சோதனை நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டதால் பெரிய அளவிலான தாக்குதல் முறியடிக்கப்பட்டது.இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி பேசியதாவது:
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் 1,149 காலி இடங்கள் உள்ளன. தகுதி உள்ளவர்கள் நவ.14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2025-26-ம் கல்வி ஆண்டில் சேர அவசர சிகிச்சை, மயக்க மருந்து, அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், எலும்பியல், சுவாச சிகிச்சை, இதயவியல், இசிஜி, மனநலம், மருத்துவப் பதிவேடு ஆகிய பிரிவுகளில் டெக்னீஷியன்கள் உள்ளிட்ட ஓராண்டு மருத்துவச் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை: பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் மதுரை ஏ.சி. அணியினர் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றனர்.சென்னை டாக்டர் சேவியர் பிரிட்டோ குரூப், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கால் பந்துப் போட்டியை நடத்தின. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மதுரை ஏ.சி. அணியும், கோவை பயோனியர் மில்ஸ் அணியும் மோதின.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.மேலும், அமெரிக்க விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான எச்1பி விசா கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு மென்பொறியாளர்கள் சேருவதை தடுக்க மறைமுகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடுத்தகட்டமாக, இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
நிகழாண்டு வைகுந்த ஏகாதசி பெருவிழா டிச.19-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இதையொட்டி, முகூர்த்தக்கால் நடும் வைபவம் கோயல் ஆயிரங்கால் மண்டபம் அருகில் ஐயப்பசி தசமி திதி அவிட்டம் நட்சத்திரம் தனுர் லக்னத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, கோயில் பட்டர்கள் வேதங்கள் ஓத, மேளதாளங்கள் முழங்க, நாதஸ்வரங்கள் ஒலிக்க கோயில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆயிரங்கால் மண்டபத்துக்கு அருகில் நின்றபடி மரியாதை செலுத்தின.பந்தல் காலில் புனிதநீர் ஊற்றி, சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பந்தல்காலை கோயில் பணியாளர்கள் நட்டனர். தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல்கால்கள் நடப்பட்டு திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘வாரணாசி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், ராஜமவுலி. மகேஷ் பாபுவின் கேரக்டரை ஹனுமனை நினைவூட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாக ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கூறியிருந்தார். இதற்கிடையே பிரியங்கா சோப்ரா மந்தாகினி என்ற கதாபாத்திரத்திலும் பிருத்வி ராஜ், கும்பா என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
இதில் சரவணன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், “சம்பவம் நிகழ்ந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். ஊடகங்களில் செய்தி வெளியாகும் வரை அது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும், இந்த வழக்கில் எனக்கு இல்லை.இந்த வழக்கில் ஜாமீன் கோரி தொடர்ந்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜூலை 30-ஆம் தேதியிலிருந்து சுமார் 98 நாட்கள் சிறையில் இருக்கிறேன். அதனை கருத்தில் கொண்டு எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
