கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் ஸ்பின் ஆதரவுப் பிட்சில் ஒரே ஓவர்தான் வீசியிருக்கிறார். பேட்டிங்கில் 3ம் நிலையில் இறங்கி 29 ரன்களை எடுத்து 2ம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக ஹார்மரின் அட்டகாசமான பந்தில் எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிப் பயிற்சியாளரின் தத்துப் பித்து உத்திகளின் பலியாகி விடக்கூடாது என்ற அக்கறையினால் எழும் எச்சரிக்கை உணர்வு அவருக்குத் தேவை. தேவையில்லாமல் 3 இடது கை ஸ்பின்னர்களை அணியில் எடுத்து பவுலிங் ஆல்ரவுண்டர் ஆன வாஷிங்டன் சுந்தரை வெறும் பேட்டராக மட்டுமே கருதி 3ம் நிலையில் இறக்குவதில் என்ன சிக்கல் எனில், கடும் நெருக்கடியில் அவர் இறங்க நேரிடும். அதுவும் இது போன்ற டர்னிங் ட்ராக்கில் அவர் அதீத கவனத்துடன் தான் ஆட முடியுமே தவிர இங்கிலாந்தில் ஆடியது போல் சுதந்திரமாக ஆட முடியாது.
Author: admin
பமாகோ: ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். அவர்கள் வேலை செய்துவந்த தனியார் மின்சார நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இதனை உறுதி செய்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க அங்கு அல்குவைதா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களின் அட்டாகசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலியின் கோர்பி எனும் பகுதியில் இந்தியர்கள் சிலர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை / திருத்தணி: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. அரோகரா கோஷத்துடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தணி சுப்பிரமணியர் கோயிலில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. சென்னை வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி விழா கடந்த 21-ம் தேதி வரசித்தி விநாயகரின் மூஷிக வாகன புறப்பாட்டுடன் தொடங்கியது. அக். 22-ம் தேதி முதல் லட்சார்ச்சனை தொடங்கியது. தொடர்ந்து, தினசரி காலை, மாலையில் இருவேளையும் பூஜைகள், சுவாமி வீதி உலாவும் நடந்தது. விழாவின் பிரதான நாளான நேற்று, உச்சி காலத்துடன் லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. மாலை 5.30 மணிக்கு அம்பாளிடம் வேல் பெற்று, சூரபத்மனை வதம் செய்ய முருகப் பெருமான் புறப்பட்டார்.
இப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார் ஷாரூக்கான். தற்போது இதன் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. முன்னணி இயக்குநர் ஐ.வி சசியின் மகன் அனி ஐ.வி சசி இயக்கி வருகிறார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவுமே வெளியிடப்படவில்லை.இதில் தினேஷ் கதாபாத்திரத்தில் ராஜசேகர், ஸ்வாசிகா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்தில் ராஜசேகரின் மகள் ஷிவாத்மிகா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதில் ஹரிஷ் கல்யாண் கதாபாத்திரத்தில் யார் நடிக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
திருநெல்வேலி: ஜாக்டோ ஜியோ போராடுவது அவர்கள் உரிமை. போராட்டத்தை தூண்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. அவர்களுக்கு என்னவெல்லாம் நல்லது செய்ய வேண்டுமோ அதை எல்லாம் தமிழக அரசு செய்கிறது என தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் வ.உ.சியின் நினைவு தினத்தை ஒட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சட்ட பேரவை தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியலில் இருப்பவர்கள் வஉசியை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். எஸ்ஐஆர் விவாகரத்தில் திமுகவுக்கு அச்சமில்லை.
இந்த உயர்மட்ட மாநாடு தமிழகம் மற்றும் சாக்சனி இடையிலான தொழில் துறை, புதுமை, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் எம்எஸ்எம்இ கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடனும், புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு நடைபெற்றது.ஜெர்மனியைச் சேர்ந்த 16 நிறுவனங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட தொழில்துறை பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். மாநாட்டில் தமிழக அரசு செயலர் அதுல் ஆனந்த் பேசும்போது, “மரபுசாரா எரிசக்தி, காற்றாலை மின்சாரம், உள்ளிட்ட வற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தமிழகத்தில் தொழில் துறைக்கு வானமே எல்லையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய நாள் எப்படி இருக்கிறது என்பதை விட காலையை நாம் தொடங்கும் விதம் தீர்மானிக்கிறது. அந்த முதல் சில மணிநேரங்கள் நமது செல்கள், வளர்சிதை மாற்றம், நோயெதிர்ப்பு வலிமை மற்றும் நீண்ட கால நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கின்றன. தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, எளிய தினசரி செயல்கள் வீக்கத்தைக் குறைக்கலாம், பழுதுபார்க்கும் வழிமுறைகளை மேம்படுத்தலாம் மற்றும் உடலின் பாதுகாப்பு அமைப்புகளை ஆதரிக்கலாம். புற்றுநோய் ஆபத்து ஆண்டுகளில் படிப்படியாக உருவாகிறது, அதாவது தடுப்பு தீவிர மாற்றங்களை விட மீண்டும் மீண்டும் தேர்வுகளை சார்ந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை பழக்கவழக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் அவை இயற்கையான உடல் தாளங்கள் மற்றும் செல்லுலார் நிலைத்தன்மையைப் பாதுகாக்கும் ஆதரவு செயல்முறைகளுடன் ஒத்துப்போகின்றன. எனவே சிந்தனையுடன் கூடிய காலைப் பழக்கம் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம் மற்றும் உயிர்ச்சக்திக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கவும் உதவும்.CA: A Cancer Journal for…
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர் ஒருவர், தான் அமெரிக்க குடிமகன் என்று கூறிக்கொண்டார், கனடாவில் உள்ள எல்லை அதிகாரியுடன் அவர் உரையாடிய வீடியோவை அந்த அதிகாரி கனடாவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினார். அந்த நபர் தன்னிடம் எந்த குற்றப் பதிவும் இல்லை என்றும், அவதூறாக அழுதார், பின்னர் அந்த அதிகாரி தனது மதத்தின் காரணமாக தனக்கு எதிராக ‘பாரபட்சம்’ காட்டுவதாக குற்றம் சாட்டினார். வைரலான வீடியோவில், அந்த அதிகாரி அந்த நபரிடம் வீடியோவை தனது வழக்கறிஞரிடம் மீண்டும் இயக்கும்போது, எல்லை அதிகாரிகள் ஆதாரங்கள் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் செயல்படுகிறார்கள் என்பதை வழக்கறிஞர் புரிந்துகொள்வார் என்று விளக்கினார். இந்தியா, கனடா வர்த்தக பேச்சுக்களை மீண்டும் தொடங்குங்கள், பிரதமர் மோடி மார்க் கார்னியை சந்திக்கும் போது 2030க்குள் $50-பில்லியன் வர்த்தகத்தை இலக்காகக் கொள்ளுங்கள்”எங்கள் கனடிய தரவுத்தளங்களில் உங்கள் பெயரை இயக்கும்போது, உங்களிடம் ஒரு பதிவு இருக்கும். உங்கள் பதிவிலிருந்து ஆதாரங்களை நாங்கள் சரிபார்க்கும்போது,…
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில், இப்போதைய அமைச்சரவையின் கடைசி கூட்டம் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்காக நிதிஷ் குமாருக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் இப்போதைய சட்டப்பேரவையை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, முதல்வர் நிதிஷ் குமார் ஆளுநர் ஆரிப் முகமது கானை நேற்று சந்தித்தார். அப்போது சட்டப்பேரவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தை வழங்கினார். இதன்படி, வரும் 19-ம் தேதி சட்டப்பேரவை முறைப்படி கலைக்கப்படும்.
சென்னை: ‘ஆடை வடிவமைப்பில் ஜொலிக்க படைப்பாற்றலும் புதுமையும் வேண்டும்’ என்று கைத்தறி துறை செயலர் வி.அமுதவல்லி தெரிவித்தார். சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிஃப்ட்) 14-வது பட்டமளிப்பு விழா அந்நிறுவனத்தில் உள்ள திருவள்ளுவர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் கைத்தறி, துணி நூல், கைவினைப் பொருள், ஜவுளி மற்றும் காதி துறையின் செயலர் அமுதவல்லி கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள், விருதுகள் மற்றும் பட்டங்களை வழங்கினார். பேஷன் டெக்னாலஜி இளநிலை படிப்பில் 250 பேர், முதுநிலை படிப்பில் 34 பேர் என மொத்தம் 284 பேர் பட்டம் பெற்றனர்.
