Author: admin

அந்த வகையில் எதிர்வரும் சீசனை முன்னிட்டு ஷர்துல் தாக்குர், ரூதர்போர்ட் உள்ளிட்ட வீரர்களை லக்னோ மற்றும் குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்றான சிஎஸ்கே அணி, சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் ரூ.18 கோடிக்கு ராஜஸ்தான் அணியில் இருந்து வாங்கியுள்ளது. இதற்கு பதிலாக ஜடேஜாவை ரூ.14 கோடிக்கு ராஜஸ்தான் வசம் சிஎஸ்கே வழங்கியுள்ளது. இதன் மூலம் ஜடேஜா தனது முன்னாள் ஐபிஎல் அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 11 ஐபிஎல் சீசன்களில் விளையாடி உள்ள சஞ்சு சாம்சன், 4027 ரன்கள் எடுத்துள்ளார். அந்த அணியின் கேப்டனாகவும் அவர் செயல்பட்டுள்ளார். அவர் சிஎஸ்கே அணிக்குள் வந்துள்ளது தோனிக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அணியில் இருந்து ஜடேஜா வெளியேறி உள்ளது சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சு பிரிவுக்கு சற்று பின்னடைவாக அமைந்துள்ளது. தரமான…

Read More

புதுடெல்லி: ராஜஸ்​தான் மாநிலம் ஆல்​வார் மாவட்​டம் லக்​ஷ்மன்​கர்​கில் உள்ள கபன்​வாடா கிராமத்​தைச் சேர்ந்​தவர் அஜித் சிங் சவுத்​ரி. 22 வயதான இவர் ரஷ்​யா​வின் உபா நகரத்​தில் உள்ள பாஷ்கிர் ஸ்டேட் மெடிக்​கல் யுனிவர்​சிட்​டி​யில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் எம்​பிபிஎஸ் படித்து வரு​கிறார். பல்​கலைக்​கழக விடு​தி​யில் தங்​கி​யிருந்த இவர் கடந்த அக்​டோபர் 19-ம் தேதி காலை 11 மணி அளவில் பால் வாங்​கு​வதற்​காக வெளி​யில் சென்​றார். அதன் பின் விடு​திக்கு திரும்​ப​வில்லை என்று கூறப்​படு​கிறது.

Read More

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவில் நேற்று மாலை கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான நேற்றுநடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளியதும் பூஜைகள் தொடங்கின. காலை 9 மணிக்கு பூர்ணாஹுதி தீபாராதனை, சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பாடாகி சண்முக விலாசத்திலும், பிற்பகல் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திலும் எழுந்தருளினார். அங்கு, சுவாமிக்கு அபிஷேகம், அலங் காரம் நடைபெற்றது.

Read More

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இந்த படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு நேற்று குளோப்டிரோட்டர் என்ற பிரம்மாண்ட நிகழ்வில் வெளியிட்டது. இதில் அந்த டீசரில் கிராபிக்ஸில் வடிவமைக்கப்பட்ட காளை ஒன்றில் நடிகர் மகேஷ் பாபு அமர்ந்து வருவதை போன்று அமைக்கப்பட்டிருந்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் இந்த காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த டீசர் மற்றும் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியானதுமே, பலரும் கமல்ஹாசன் இயக்கி, நடித்து பாதியில் கைவிட்ட ‘மருதநாயகம்’ படம் குறித்து நினைவுகூரத் தொடங்கிவிட்டனர். கமல்ஹாசனின் கனவுத் படமான 'மருதநாயகம்' 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் கடும் நிதிப் பற்றாக்குறை, தயாரிப்புச் சிக்கல்கள் காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.

Read More

சென்னை: முருகப்பா குழு​ம முன்​னாள் தலை​வர் அருணாசலம் வெள்​ளை​யன் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 72. இதுகுறித்து முரு​கப்பா குழு​மம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “முரு​கப்பா குழு​மத்​தின் முன்​னாள் தலை​வர் வெள்​ளை​யன் நாள்​பட்ட உடல்​நலக்குறைவு காரண​மாக சிகிச்சை பெற்​று​வந்​தார். இந்த நிலை​யில் நேற்று அவர் கால​மா​னார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்​ளது.

Read More

கோவை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின் மூலம் வரி குறைப்பு செய்த பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு பாராட்டு விழா கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் இன்று நடந்தது. விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது, “கரோனா காலகட்டத்தில் கூட எந்த வரியையும் உயர்த்த பிரதமர் அனுமதிக்கவில்லை. வியாபாரிகள் குறித்து தனது குடும்ப உறுப்பினர் போல் பேச கூடியவர் பிரதமர். வருமான வரி உச்சவரம்பு குறித்து அதிகாரிகள் உட்பட பலரும் பல்வேறு கருத்துகள் கூறிய சூழலில் அனைவரது கருத்தையும் கேட்டு வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Read More

டாக்டர் வாத்ஸ்யா கூறுகிறார், “கொழுப்பு கல்லீரல் மீள முடியாதது – இது ஒரு கட்டுக்கதை. இந்த மூன்று பானங்கள் மூலம் உங்கள் கொழுப்பு கல்லீரலை மாற்றியமைக்க முடியும். முதலாவது கருப்பு காபி. கல்லீரல் நோய், கல்லீரல் ஃபைப்ரோஸிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கான ஆபத்து வழக்கமான பிளாக் காபி குடிப்பவர்களிடம் குறைவாக இருப்பதாக அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது. காபியின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் நொதிகளைப் பாதுகாக்கின்றன. பால் இல்லாத காபி.”கருப்பு காபி குளோரோஜெனிக் அமிலம் மற்றும் காஃபின் மூலம் கொழுப்பு கல்லீரலை மாற்ற உதவுகிறது, இது சேமித்து வைக்கப்பட்டுள்ள கல்லீரல் கொழுப்பை உடைக்க லிபோபாகியை தூண்டுகிறது. இது NAFLD இல் என்சைம்கள், ஃபைப்ரோஸிஸ் ஆபத்து மற்றும் ஸ்டீடோசிஸ் ஆகியவற்றைக் குறைக்கிறது. வழக்கமாக குடிப்பவர்கள் ஒரு ஆய்வுக்கு 30-50% குறைவான கொழுப்பைக் காண்கிறார்கள். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைக்கின்றன மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன. தினமும் 2-3 கப் சாதாரணமாக குடிக்கவும், சர்க்கரை அல்லது கிரீம்…

Read More

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு டிரக் ஓட்டுநரான சுக்ஜிந்தர் சிங், மேற்கு வர்ஜீனியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த வாகனக் கொலைக்கு ஒரு பயங்கரமான விபத்தை ஏற்படுத்திய பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட சில மாதங்களுக்குப் பிறகு, நாடு கடத்தப்படுவதற்காக ICE காவலில் வைக்கப்பட்டார். அக்டோபரில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சிங்கிற்கு அதிகபட்சமாக ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்திய அறிக்கையின்படி, சிங் இப்போது வட மத்திய பிராந்திய சிறையில் ICE காவலில் உள்ளார்.பென்சில்வேனியாவைச் சேர்ந்த கெவின் லாடைல், மேற்கு வர்ஜீனியாவில் வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்பட்டபோது விபத்து ஜனவரி மாதம் நடந்தது. அவர் காணாமல் போன ஒரு வாரத்திற்குப் பிறகு, அவரது காருடன் விரிவான தேடுதலுக்குப் பிறகு, சீட் ஏரியில் மூழ்கிய நிலையில் லடெய்லின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.கலிபோர்னியா விபத்துக்குப் பிறகு ICE சட்டவிரோத இந்திய டிரக்கர் மீது அறிவிப்பு | ‘அதிக போதைப்பொருள், பிரேக் செய்யவில்லை’சுக்ஜிந்தர் சிங் என்ற…

Read More

புதுடெல்லி: பிஹாரின் 243 தொகு​தி​களில் எவரும் எதிர்​பார்க்​காத வகை​யில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்​டணி 35 மட்​டுமே பெற்​றுள்​ளது. இக்​கூட்​ட​ணி​யின் வாக்​கு​களைப் பிரித்​தது யார் என்ற கேள்வி எழுந்​துள்​ளது. பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் மற்​றும் மாயா​வ​தி​யின் பகுஜன் சமாஜ் (பிஎஸ்​பி) ஆகிய மூன்று கட்​சிகளும் இணைந்து மெகா கூட்​ட​ணியின் பெரும்​பான்​மை​யான வாக்​கு​களை பிரித்​துள்​ளது. பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 238 தொகுதியில் போட்​டி​யிட்​டது. ஒரு தொகு​தி​யில் கூட வெல்ல முடிய​வில்​லை. 98 சதவீத வேட்​பாளர்​கள் வைப்​புத் தொகையை இழந்​துள்​ளனர்.

Read More

வணக்கம், என் பெயர் முத்துமாரி. நான் ஒரு கூலித் தொழிலாளியின் மகள். எங்கள் வீட்டில் ஒரு நாள் வேலை கிடைத்தால் தான் அன்றைய இரவு உணவு உறுதி. அம்மா மாடுகளை மேய்த்தும், சிறுசிறு வேலைகளும் செய்து எங்களை வளர்த்தார். எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு கனவு — வக்கீல் ஆகணும். ஆனால் அந்த கனவுக்குத் திசை காட்ட யாரும் இல்லை. வழிகாட்டுதல் இல்லாமல், பின்புலம் இல்லாமல், எனது வீட்டின் சுவரில் “BA BL – LLB” என்று கிறுக்கி எழுதிக்கொண்டே அந்த கனவை உயிரோடு வைத்திருந்தேன். பத்தாம் வகுப்பு முடிந்ததும், குடும்ப சுமைகள் என்னை படிப்பை விட்டு சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் செல்லத் தள்ளியது. அந்த நாட்களில் நான் தினமும் கடையில் வேலை செய்தபோது மனசுக்குள் ஒரு கேள்வி மட்டும் – “என் கனவு இங்கேயே முடிந்துவிடுமோ?” ஆனால், உள்ளுக்குள் நம்பிக்கை இருந்தது. எனவே மீண்டும் படிக்க முயன்றேன்.

Read More