Author: admin

புதுடெல்லி: ஹரியானாவில் கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் முதல்வராக பூபிந்தர் சிங் ஹூடா இருந்த போது, ஆங்கரேஸ்வர் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் (ஓபிபிஎல்) என்ற நிறுவனம் குருகிராமத்தில் தான் வைத்திருந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கான உரிமத்தை பெற முயற்சித்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தனது செல்வாக்கை பயன்படுத்தி ஓபிபிஎல் நிறுவனத்துக்கு நகர் ஊரமைப்பு இயக்ககத்திலிருந்து (டிடிசிபி) உரிமம் பெற்று தந்தார். இதற்கு பிரதிபலனாக குரு​கி​ராமில் 3.5 ஏக்​கர் நிலத்தை ராபர்ட் வதே​ரா​வுக்கு ஓபிபிஎல் நிறு​வனம் வழங்​கியது. ஆனால் இதை ரூ.7.5 கோடிக்கு வாங்​கிய​தாக ராபர்ட் வதேரா கூறுகிறார். இது பொய் என கூறிய அமலாக்​கத்​துறை, ராபர்ட் வதே​ரா​வின் ஸ்கைலைட் ஹாஸ்​பிட்​டா​லிட்டி நிறு​வனம் (எஸ்​எல்​எச்​பிஎல்) வங்கி கணக்​கில் அப்​போது ரூ.7.5 கோடி பணம் இல்லை எனவும், அவர்​கள் தெரி​வித்த காசோலை எண், வங்​கி​யில் பணமாக்​கப்​பட​வில்லை எனவும் தெரி​வித்​துள்​ளது. இந்த நிலத்தை ராபர்ட் வதே​ரா​வின் ஸ்கைலைட்…

Read More

சென்னை மாநகராட்சி ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி மீண்டும் தொடங்கியது. சென்னை மாநகராட்சியில், ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூய்மைப் பணி மாநகராட்சி வசமே தொடர வேண்டும், தானியாரிடம் வழங்கக் கூடாது என வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் 9-வது நாளாக நேற்றும் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையிலும், நேற்று காலை ஆணையர் தலைமையிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் சார்பில், என்யூஎல்எம் முறையில் பணி வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்கக் கூடாது ஆகிய 3 கோரிக்கையை வலியுறுத்தினர். இதை அரசுத் தரப்பு ஏற்காததால், 9-வது நாளாக போராட்டத்தை தொடர்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இரு மண்டலங்களிலும் நேற்று தூய்மைப் பணி மீண்டும்…

Read More

புதுடெல்லி: உ.பி.​யின் பெரும்​பாலான மாவட்​டங்​களில் குரங்​கு​கள் தொல்லை என்​பது சாதா​ரண​மாக உள்​ளது. பிலிபித்​தின் பில்​சந்தா காவல் நிலை​யத்​தி​லும் குரங்​கு​களின் இது​போன்ற தொல்லை அதி​கரித்​துள்​ளது. இதனை சமாளிக்க பில்​சந்தா போலீ​ஸார் ஒரு புதிய உத்​தியை கடைபிடித்து வரு​கின்​றனர். இவர்​கள் லங்​கூர் எனப்​படும் கருங்​குரங்கை காவல் நிலை​யத்​தில் கட்டி வைத்​துள்​ளனர். லங்​கூர் குரங்கை பார்த்து சிவப்பு முகக் குரங்​கு​கள் அச்​சப்​படும் என்​ப​தால் இவ்​வாறு செய்​துள்​ளனர். இந்​தக் குரங்கு சிலசம​யம் காவல் நிலைய ஆய்​வாளரின் மேசை​யிலும் சொகு​சாக அமர்ந்து பழங்​களை உண்​கிறது. இது தொடர்​பான வீடியோ பதிவு சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது. இதுகுறித்து பில்​சந்தா காவல் நிலைய உதவி ஆய்​வாளர் சித்​தாந்த் சர்மா கூறும்​போது, ‘‘இந்த குரங்​கு​களால் காவலர்​களின் தொப்​பிகள், முக்​கிய கோப்​பு​களை இழந்​துள்​ளோம். சிலசம​யம் நாங்​கள் சீருடைகளை மாற்​றவதற்​காக கழட்டி வைத்​தால் அதை​யும் குரங்​கு​கள் வெளியே எடுத்​துச்​சென்று வீசி விடு​கின்​றன. வேறிவழி​யின்றி குரங்​கு​கள் பார்த்து அச்​சப்​படும் லங்​கூர் குரங்கை பாது​காப்​புக்கு வைத்​துள்​ளோம். இரண்டு…

Read More

தமிழ்நாட்டை அடுத்து மகாராஷ்டிராவில் இந்தித் திணிப்புக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஆர்ப்பரித்துக் கிளம்பியதால் அம்மாநில அரசு மும்மொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்கி இருக்கிறது. 2026 தேர்தலில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும் பிரதான பிரச்சாரத்தை திமுக முன்னெடுக்கும் எனச் சொல்லப்படும் நிலையில், திமுக-வுக்கு நெருக்கமானவராக கருதப்படும் தமிழறிஞரும், தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவருமான கணையாழி ம.இராசேந்திரனிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் இந்தி வளர்ந்திருக்கிறதா இல்லையா? இந்தி எதிர்ப்பு என்​ப​தற்​குப் பதிலாக இந்​தித் திணிப்பு அல்​லது இந்தி ஆதிக்க எதிர்ப்​புப் போராட்​டம் என்று சொல்​லலாம். இந்​தி​யா​வில் உள்ள மற்ற மொழிகளைப் போல இந்​தி​யும் ஒரு மொழி​யாக இருப்​பதை எப்​போதும் யாரும் எதிர்க்​க​வில்​லை. இந்​தி​யோடு அரசி​யல் ஆதிக்​கம் சேரும் போது​தான் எதிர்ப்​புக்கு உள்​ளாகிறது. இந்​தியை வளர்க்​கும் ஒன்​றிய அரசின் அரசி​யல் முன்​னெடுப்​பு​கள் கூடிக்​கொண்டே வந்​தா​லும் கூட இந்தி மொழி​யின் ஆதிக்​கம் தமிழ்​நாட்​டில் குறைந்​து​கொண்​டே​தான் வரு​கிறது.…

Read More

கடந்த ஜூன் மாதம் ஜார்ஜியா வீட்டின் கூரை வழியாக கிழிந்த ஒரு விண்கல் துண்டு பூமியை விட பழையது என்று கண்டறியப்பட்டுள்ளது என்று ஜார்ஜியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.புவியியலாளர் ஸ்காட் ஹாரிஸ் ஃபாக்ஸ் நியூஸ் டிஜிட்டலுக்கு ஜூன் 26 அன்று அட்லாண்டா அருகே வீழ்ந்த தி ராக் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையிலான சிறுகோள் பெல்ட்டிலிருந்து தோன்றியது என்று கூறினார். பகுப்பாய்வு 4.56 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருப்பதைக் காட்டுகிறது – பூமியின் பிறப்புக்கு சற்று முன்னதாக, 4.54 பில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.ஒரு உமிழும் வம்சாவளிஅந்த நாளில் வானம் முழுவதும் ஒரு பிரகாசமான ஃபயர்பால் கோடுகளைப் பார்த்ததாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர். வீட்டை விசாரிக்க ஹாரிஸ் விரைவாக அழைக்கப்பட்டார், அங்கு அவர் விண்கல்லின் வியத்தகு பாதையை கண்டுபிடித்தார்: கூரை வழியாக ஒரு சுத்தமான துளை மற்றும் ஒரு காற்று குழாய்காப்பு மற்றும் உச்சவரம்பு மூலம் ஊடுருவல் தரையில் தாக்கம்,…

Read More

புதுடெல்லி: ​நாட்​டின் நீள​மான சரக்கு ரயிலை மத்​திய ரயில்வே அமைச்​சகம் அறி​முகம் செய்​துள்​ளது. இந்த ரயி​லானது 354 வேகன்​களு​டன் 4.5 கிலோ மீட்​டர் நீளம் கொண்​ட​தாக அமைந்​துள்​ளது. நாட்​டின் மிக நீள​மான சரக்கு ரயில் என்ற பெரு​மையை பெற்​றுள்ள இதற்கு ருத்​ராஸ்த்ரா என்று பெயர் சூட்​டி​யுள்​ளனர். இதுகுறித்து மத்​திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்​தில் கூறிய​தாவது: ருத்​ராஸ்த்ரா ரயில் கடந்த 7-ம் தேதி தனது பயணத்​தைத் தொடங்​கி​யுள்​ளது. 354 வேகன்​களைக் கொண்ட இந்த ரயில் நாட்​டின் மிக நீள​மான சரக்கு ரயி​லாக இருக்​கும். 4.5 கிலோ மீட்​டர் நீளத்தை கொண்​ட​தாக​வும், மிகச்​சிறப்​பாக​வும் இந்த ரயில் உள்​ளது. உத்தர பிரதேசத்​தின் கஞ்ச்​க​வாஜா ரயில் நிலை​யத்​தில் இருந்து இது பயணத்​தைத் தொடங்​கி​யுள்​ளது. இந்த ரயில் 7 இன்​ஜின்​களைக் கொண்டு இயக்​கப்​படு​கிறது. மேலும் இது உலகின் மீக நீள​மான 2-வது சரக்கு ரயி​லாக உள்​ளது. உலகின் மிக நீள​மான சரக்கு ரயில்…

Read More

சிவதாணுபுரம் என்கிற கிராமத்தில் ஆதிக்க சாதியினர் பெரும்பான்மையாகவும் பட்டியலின மக்கள் சிறுபான்மையாகவும் வசிக்கிறார்கள். பொதுத் தொகுதியாக இருக்கும் அதன் ஊராட்சிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்த வகையிலும் முன்னேறவில்லை. ஆனால், சாதிப்பற்று, சாதி வெறியில் முன்னேறியிருக்கும் அந்த ஊர், பட்டியலின வேட்பாளருக்கான தனித் தொகுதியாக மாறுகிறது. கொதித்தெழும் ஆதிக்க சாதியினர், பட்டியலின வேட்பாளரைக் கொலை செய்கிறார்கள். அதன் விளைவாகப் பழையபடி பொதுத் தொகுதியாகி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனித் தொகுதியாகிறது. இம்முறை, ஏதும் செய்ய முடியாமல் ஒரு பொம்மை வேட்பாளரை ஆதிக்க வர்க்கம் நிறுத்த, அவருக்குப் போட்டியாகக் களமிறங்குகிறார், முன்பு கொலை செய்யப்பட்டவரின் பேத்தியான அமுதா. இதை எதிர்பார்க்காத வர்கள், அமுதாவைத் தோற்கடிக்க என்ன செய்கிறார்கள், அதை அமுதா எப்படி எதிர்கொண்டார் என்பது கதை. அமுதா என்கிற சாமானியப் பெண், தன் குடும்பத்தின் பேரிழப்பு உருவாக்கிய வலி, தன்னுடைய மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குதல்கள் ஆகியவற்றிலிருந்து எழுச்சிபெற்று முன்னேறும் பெண் போராளியாகப் படைத்திருக்கிறார்,…

Read More

சென்னை: அரசுத் துறை​கள் மற்​றும் பொதுத்​துறை நிறு​வனங்​களில் அவுட்​சோர்​சிங் முறை​யில் பணி​யாளர்​களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்​துள்​ளது. இதன் காரண​மாக டிஎன்​பிஎஸ்சி மூலம் மேற்​கொள்​ளப்​படும் நேரடி பணிநியமனங்​களின் எண்​ணிக்கை குறை​யும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. தமிழக அரசின் பல்​வேறு துறை​களுக்​குத் தேவைப்​படும் ஊழியர்​களும், அலு​வலர்​களும் தமிழ்​நாடு அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பஇஎஸ்​சி) மூல​மாக​வும், அரசுப் பள்ளி ஆசிரியர்​கள் ஆசிரியர் தேர்வு வாரி​யம் வாயி​லாக​வும், காவல், தீயணைப்​பு, சிறைத் துறைப் பணி​யாளர்​கள் தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூல​மாக​வும் தேர்​வுசெய்​யப்​பட்டு பணி​யில் அமர்த்​தப்​படு​கிறார்​கள். மருத்​து​வர்​கள், செவிலியர்கள் உள்​ளிட்ட மருத்​து​வப் பணி​யாளர்​கள் எம்​ஆர்பி எனப்​படும் மருத்​து​வப் பணி​கள் தேர்வு வாரி​யம் மூல​மாக தேர்​வுசெய்​யப்​படு​கின்​றனர். தமிழக அரசின் பல்​வேறு துறை​களி​லும், அரசுப் பள்​ளி​களி​லும் 8 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட அரசு ஊழியர்​களும், ஆசிரியர்​களும் பணி​யாற்றி வரு​கின்​றனர். அரசுப் பணி​யில் 4 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட காலி பணி​யிடங்​கள் இருப்​ப​தாக​வும், அவற்றை உடனடி​யாக நிரப்ப வேண்​டும் என்​றும் அரசு…

Read More

மூலவர்: திரிவிக்கிரம நாராயணர் அம்பாள்: லோகநாயகி தல வரலாறு: பல யுகங்கள் வாழும்படி சாகா வரம் பெற்றிருந்தார் பிரம்மா. இதனால் அவர் மனதில் கர்வம் உண்டாகி, தனது படைக்கும் தொழிலை அவர் சரிவர செய்யவில்லை. அவரது கர்வத்தை அடக்க எண்ணம் கொண்டார் மகாவிஷ்ணு. இதனிடையே மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து திரிவிக்கிரமனாக இடதுகாலைத் தூக்கி மூவுலகத்தையும் அளந்து காட்டிய கோலத்தைக் காண வேண்டும் என உரோமச முனிவருக்கு விருப்பம் எழுந்தது. சுவாமியை வேண்டி இத்தலத்தில் தவம் இருந்தார். அவருக்கு மகாவிஷ்ணு, திரிவிக்கிரம அவதாரத்தை காட்டியருளினார். பின் அவர் உரோமசரிடம், “என் ஏகாந்த நிலையை தரிசித்த நீங்கள் பெறுவதற்கு அரிய பல பேறுகளைப் பெறுவீர். மேலும், பிரம்மனை விட கூடுதலான ஆயுட்காலமும் பெற்று வாழ்வீர். உமது உடலில் இருக்கும் ஒரு முடி உதிர்ந்தால் பிரம்மாவின் ஆயுட்காலத்தில் ஒரு வருடம் முடியும்” என்று கூறினார். சூட்சுமமாக மகாவிஷ்ணு, தன் ஆயுளைக் குறைத்ததை அறிந்த பிரம்மா…

Read More

சென்னை: தமிழகம் முழு​வதும் உள்ள 17 அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு டீன்​களும், சுகா​தா​ரத் துறை​களுக்கு புதிய இயக்​குநர்​களும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். தமிழக பொது சுகா​தா​ரம், நோய் தடுப்பு மருத்​து​வத் துறை (டிபிஎச்) இயக்​குநர் செல்​வ​வி​நாயகம், மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப் பணி​கள் துறை (டிஎம்​எஸ்) இயக்​குநர் ராஜமூர்த்தி ஆகியோர் கடந்த மாதம் ஓய்வு பெற்​றனர். அதே​போல, குடும்ப நலத்​துறை இயக்​குநர் பதவிக்கு இது​வரை முழு பொறுப்பு அடிப்​படை​யில் யாரும் நியமிக்​கப்​ப​டா​மல் இருந்​தது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை, கோவை மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை உட்பட 11 மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களின் டீன் பணி​யிடங்​கள் காலி​யாக இருந்​தன. இந்​நிலை​யில், அந்த பொறுப்​பு​களுக்கு தகு​தி​யானவர்​கள் பெயர்​கள் பரிந்​துரைக்​கப்​பட்​டு, பரிசீலனைக்கு பிறகு, அதற்​கான நியமன ஆணை​களை சுகா​தா​ரத் துறை செயலர் செந்​தில்​கு​மார் பிறப்​பித்​துள்​ளார். அதன்​படி, பொது சுகா​தா​ரத் துறை கூடு​தல் இயக்​குநர் ஏ.சோமசுந்​தரம், துறை இயக்​குந​ராக பதவி உயர்வு பெற்​றுள்​ளார். மருத்​து​வம் மற்​றும்…

Read More