Author: admin

சென்னை: ​தொழில்​நுட்​பக் கல்வி ஆணை​யர் ஜெ.இன்​னசென்ட் திவ்யா அனைத்து பாலிடெக்​னிக் கல்​லூரி​கள் மற்​றும் சிறப்பு பயில​கங்​களின் முதல்​வர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கையில் கூறி​யிருப்​ப​தாவது: கொள்​குறி வகை (அப்​ஜெக்​டிவ் டைப்) வினாக்​கள் மூலம் மாணவர்​களை பயிற்​று​விப்​பது கற்​றலின் தரத்தை உயர்த்​தும் ஒரு பயனுள்ள முறை​யாகும். இது பாடப்பகு​தியை எளி​தில் புரிந்​து​கொள்​ள​வும், முக்​கிய கருத்துகளை நினை​வில் வைத்​துக்​கொள்​ள​வும் உதவு​கிறது. இத்​தகைய கேள்வி​கள் மாணவர்​களின் சிந்​தனைத் திறன், தீர்​மானம் எடுக்​கும் திறன் மற்​றும் நேரத்தை சரி​யாகப் பயன்​படுத்​தும் திறனை​யும் வளர்க்​கின்​றன.

Read More

டாக்கா: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அங்கிதா பகத் 7-3 என்ற கணக்கில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தென் கொரியாவின் சுஹியோனை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான ரீகர்வ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா 6-2 என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ராகுலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 2-வது இடத்தை பிடித்த ராகுல் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்த தொடரை இந்தியா 6 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்தது.

Read More

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது. இந்த நிலையில், மற்றொரு கலாச்சார அடையாளமாக அபுதாபியில் இந்திய இல்லம் அமைக்கப்பட உள்ளது. கலை மற்றும் கலாச்சாரத்தில் உறவுகளை வலுப்படுத்துதல், மாணவர் பரிமாற்றம் மற்றும் இருதரப்பு வரலாற்றை முன்னிலைப்படுத்துவதற்கான மையமாக இது செயல்படும். மேலும், இது யோகா பயிற்சி மையமாகவும் செயல்பட உள்ளது. மேலும், உலகளவில் பிரபலமான யோகாவை வளைகுடா நாடு ஒரு போட்டி விளையாட்டாகவும் அறிவிக்க உள்ளது.

Read More

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கந்​தசஷ்டி விழா யாக​சாலை பூஜை​யுடன் நேற்று தொடங்​கியது. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் விரதம் தொடங்​கினர். விழாவையொட்டி நேற்று அதி​காலை ஒரு மணிக்கு நடை திறக்​கப்​பட்டு சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. பின்​னர், சுவாமி ஜெயந்​தி​நாதர் வள்​ளி-தெய்​வானை அம்​மனுடன் யாக​சாலை​யில் எழுந்தருளினார்.கோயில் தக்​கார் ரா.அருள்​முரு​கன், இணை ஆணை​யர் க.ராமு ஆகியோரிடம் காப்பு கட்​டிய சோமாஸ் கந்​தர் பட்​டர் தாம்​பூலம் பெற்​று, யாக​சாலை பூஜையை தொடங்​கி​னார். பின்​னர், விக்​னேஸ்வர பூஜை, கும்ப பூஜை, ஹோம பூஜைகள் நடை​பெற்​றன.

Read More

காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் படம் ‘ராபின்ஹுட்’. 1980-களின் கிராமப் புற பின்னணியில், உருவாகியுள்ள இதை கார்த்திக் பழனியப்பன் இயக்கி அறிமுகமாகிறார். மறைந்த ஆர்என்ஆர் மனோகர், சதீஷ், அம்மு அபிராமி, சங்கிலி முருகன், முல்லை மற்றும் பலர் நடித்துள்ளனர். லூமியர்ஸ் நிறுவனம் சார்பில், ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா தயாரித்துள்ளனர். நாத் விஜய் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு இக்பால் அஸ்மி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Read More

சென்னை: போலி ஆவணங்​கள் மூலம் நிலம் அபகரிப்​பு, வங்​கிக் கடன் பெற்று மோசடி, போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி உட்பட பல்​வேறு வகை​யான மோசடிகள் தொடர்​பாக சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் தின​மும் புகார்​கள் அளிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இது தொடர்​பாக மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதில் தொடர்​புடைய மோசடிக்​காரர்​கள் அடுத்​தடுத்து கைது செய்​யப்​படு​கின்​றனர். தொடர் விசா​ரணை​யில் பெரும்​பாலான மோசடி வழக்​கு​களின் பின்​னணி​யில் ஏதாவது ஒரு வங்கி ஊழியர் அல்​லது வங்கி அதி​காரி இருப்​பது போலீ​ஸாருக்கு தெரிய​வந்​தது. முன்பு அவர்​களை போலீ​ஸார் எச்​சரித்து வழக்​குப் பதி​யாமல் அனுப்​பி​விடு​வார்​கள்.

Read More

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 என குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. சர்​வ​தேச நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், அக்​.17-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.97,600 ஆக விலை அதி​கரித்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. கடந்த 28-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்​கம் ரூ.88,600 ஆக இருந்தது. இதன்​பிறகு, தங்​கம் விலை ஏற்ற, இறக்​க​மாக இருக்​கிறது.

Read More

ஏதேனும் யூகங்கள் உள்ளதா? தென்னாப்பிரிக்கா தான் ரெயின்போ நேஷன் என்று பரவலாக அறியப்படுகிறது, இது நிறவெறி முடிவுக்குப் பிறகு நாட்டின் அடையாளத்தை விவரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவால் உருவாக்கப்பட்டது. 1994 இல் தென்னாப்பிரிக்காவின் முதல் ஜனநாயகத் தேர்தலைத் தொடர்ந்து இந்த சொற்றொடர் வெளிப்பட்டது, இது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு முக்கியமான படியைக் குறித்தது. ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையின் உணர்வைப் பிடிக்க டுட்டு வெளிப்பாட்டைப் பயன்படுத்தினார்.ஜனாதிபதி நெல்சன் மண்டேலா பதவியேற்ற முதல் மாதத்தில் இதைப் பற்றி விரிவாகக் கூறியபோது இந்த யோசனை இன்னும் முக்கியத்துவம் பெற்றது. தென்னாப்பிரிக்கர்கள் பிரிட்டோரியாவின் ஜக்கராண்டா மரங்கள் மற்றும் புஷ்வெல்டின் மிமோசா மரங்களைப் போல தங்கள் நிலத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் விவரித்தார், நாட்டை தன்னுடனும் உலகத்துடனும் அமைதியான வானவில் தேசம் என்று அழைத்தார்.ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது, ​​டுட்டு “கடவுளின் வானவில் மக்கள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். ஒரு மதகுருவாக, இந்த உருவகம் நோவாவின் வெள்ளத்தின்…

Read More

சான் அன்டோனியோவில் ஒரு படகு சவாரியின் போது ஒரு சிறு குழந்தையுடன் ஒரு இந்திய குடும்பம் சீரற்ற பெப்பர் ஸ்ப்ரே தாக்குதலுக்கு உள்ளானது. ஒரு பெண் குழந்தையுடன் கூடிய இந்தியக் குடும்பம் சான் அன்டோனியோவின் பைப்புலர் ரிவர் வாக்கில் படகுச் சவாரியின் போது சீரற்ற முறையில் மிளகுத் தெளிப்புத் தாக்குதலுக்கு உள்ளானது. ஒரு பெண் தனது தொலைபேசியின் ஒலியைக் குறைக்கச் சொன்ன பிறகு, பெப்பர் ஸ்ப்ரே கேனை எடுத்து மக்கள் மீது பரப்பினார். பாதிக்கப்பட்டவர்கள் அந்த பெண்ணின் தொலைபேசியின் அதிக ஒலியை எதிர்த்த நபர்கள் அல்ல. அது படகு நடத்துனரும் வேறு சிலரும் தான் ஆனால் அறிக்கைகளின்படி, அவர் கூட்டத்தின் மீது தோராயமாக மிளகுத் தெளிப்பைப் பயன்படுத்தினார். அவளது செயலை கேள்விக்குட்படுத்திய போது தாக்குதல் நடத்தியவர் எப்படி கூட்டத்திற்கு வந்தார் என்பது குறித்த வீடியோ வைரலாக பரவியது. அந்தப் பெண்ணை கீழே இறங்க அனுமதிப்பதற்காக நடத்துநர் படகை நிறுத்தியதாக சான் அன்டோனியோ…

Read More

புதுடெல்லி: ஹைதராபாத்திலிருந்து சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 45 முஸ்லிம்கள் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது இவர்கள் பயணம் செய்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 பெண்கள், 10 சிறுவர்கள், 17 ஆண்கள் உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை வெளிட்டுள்ளார்.

Read More