ஒரு உன்னதமான ஆப்டிகல் மாயையானது, குடைகளுடன் கூடிய கதாபாத்திரங்களுக்கு மத்தியில் மறைந்த முகத்தைக் கண்டறிய பார்வையாளர்களுக்கு சவால் விடுகிறது, அவதானிக்கும் திறன்களை சோதிக்கிறது. இத்தகைய புதிர்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, சிக்கலைத் தீர்க்கும் மற்றும் கவனத்தை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பலர் குடைகளைக் கண்டாலும், மறைக்கப்பட்ட முகத்தைக் கண்டறிவதில் மிகுந்த கவனம் தேவை. மேம்பட்ட அறிவாற்றல் திறன்களுக்கு இதேபோன்ற மூளை டீஸர்களுடன் மேலும் பயிற்சியை ஊக்குவிக்கும் தீர்வு வழங்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இந்த உன்னதமான ஒளியியல் மாயையில் குடைகளை விரைவாகக் கண்டுபிடிக்க முடியும், ஆனால் கூர்மையான கண்கள் மற்றும் விவரங்களில் அதிக கவனம் உள்ளவர்கள் மட்டுமே 11 வினாடிகளில் மறைக்கப்பட்ட முகத்தை கண்டுபிடிக்க முடியும். படத்தில் பாத்திரங்கள் குடைகளுடன் நடப்பதைக் காட்டுகிறது, ஆனால் ஒரு மறைக்கப்பட்ட முகம் புத்திசாலித்தனமாக காட்சிக்குள் எங்காவது வச்சிட்டுள்ளது. வெற்றிபெற, உங்களுக்கு பொறுமை, செறிவு மற்றும் கூர்மையான கண் தேவை. இது போன்ற ஒளியியல் மாயைகள்…
Author: admin
ஜக்ஜித் சிங்கின் புகைப்படத்தை கனடா காவல்துறை வெளியிட்டுள்ளது. ஜக்ஜித் சிங் என்ற 51 வயதான இந்தியர், புதிதாகப் பிறந்த தனது பேரக்குழந்தையைப் பார்ப்பதற்காக கனடாவுக்கு தற்காலிக விசாவில் வந்தவர், பள்ளிக்கு வெளியே இரண்டு டீனேஜ் சிறுமிகளை கிரிமினல் முறையில் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். சிங் கைது செய்யப்பட்டு குறுகிய சிறைத்தண்டனை பெற்றார். இப்போது அவர் நாடுகடத்தப்படுவார் மற்றும் கனடாவிற்கு மீண்டும் நுழைவதற்கு தடை விதிக்கப்படுவார்.டொராண்டோ சன் படி, சிங் ஆறு மாத விசாவில் ஜூலை மாதம் கனடா வந்தடைந்தார். அவர் உயர்நிலைப் பள்ளியின் புகைப்பிடிக்கும் பகுதிக்கு சென்று இளம் பெண்களுடன் நட்பு கொள்ள முயன்றார். சிங் ஆங்கிலம் தெரியாத போதிலும் அவர்களுடன் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், புகைப்படம் எடுக்க தங்களை அணுகியதாகவும் சிறுமிகள் புகார் கூறினர். போட்டோ எடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விடுவார் என்று பெண்கள் நினைத்ததால் இரண்டு பெண்களுடன் ஒரு போட்டோவை சமாளித்தார். ஆனால் அது நடக்கவில்லை.…
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் என்றும் இந்த சதியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது.டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், 10 பேர் உயிரிழந்தனர், 32 பேர் காயமடைந்தனர். காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரான உமர் முகமது நபி என்பவர் காரை ஓட்டிச் சென்று வெடிவிபத்தை நிகழ்த்தினார். இந்த வெடி விபத்து குறித்து முதலில் டெல்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, என்ஐஏ, 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை: ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தில் இதுவரை ரூ.1,000 கோடி மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இந்த ஆண்டு மட்டுமே ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே பள்ளிக் கல்விக்கு தமிழக அரசு பெரும் கவனம் செலுத்தி வருகிறது. ரூ.5 லட்சத்தை முதல் நன்கொடையாக வழங்கி, நான் தொடங்கி வைத்த ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளன. அதன்மூலம் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள் உட்பட பணிகளை அரசுப் பள்ளிகளில் செய்துள்ளோம்.
சென்னை: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது. இந்நிலையியில் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பின்னர் நிரூபர்களிடம் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது: உலகக் கோப்பை வெற்றியை மொத்த நாடும் கொண்டாடுவதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது நாட்டில் ஆடவர், மகளிர் கிரிக்கெட் சமமாக நடத்தப்படுவதாகவே உணர்கிறேன். ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சத்தியத்தை நாங்கள் அடைந்துவிட்டோம். இந்த வெற்றி மகளிர் கிரிக்கெட்டுக்கு ஊக்கமாக இருக்கும். ஏராளமான இளம் வீராங்கனைகள் உந்துதல் பெறுவார்கள்.
புதுடெல்லி: நேற்று (சனிக்கிழமை) மாலை லண்டன் செல்லும் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டான்காஸ்டரிலிருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு பீட்டர்பரோ நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்தது. அந்த ரயில் உடனடியாக ஹண்டிங்டன் நிலையத்தில் நிறுத்தப்பட்டு போலீசார் விரைந்துசென்றனர்.
சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இத்திருவிழாவின் முத்தாய்ப்பாக சூரசம்ஹாரம் அக்.27 அன்றும், திருக்கல்யாண வைபவம் அக்.28-ம் தேதியன்றும் விமரிசையாக நடைபெறவுள்ளது. சென்னை வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி திருவிழா, வரசித்தி விநாயகர் மூஷிக வாகன புறப்பாட்டுடன் அக். 21-ம் தேதி (நேற்று) மாலை கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முதல் நாள் நிகழ்வாக மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை அக். 22-ம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க தொடங்குகிறது.
இதில் மகேஷ் பாபு பேசும்போது, “இந்தப் படம் என்னுடைய கனவு. இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். மிக முக்கியமாக என்னுடைய இயக்குநரை அதிகம் பெருமைப்படுத்துவேன். ‘வாரணாசி’ படம் ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்து பெருமைப்படும்” என்று தெரிவித்தார்.இந்த படத்தில் ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிமுக டீசரில் காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
“வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரை தோற்கடிப்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் கடமையாக இருக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.நேற்று கோவில்பட்டியில் நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ பிரச்சார பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: கடந்த ஆட்சியின் போது இளம் விதவைகள் அதிகம் என கனிமொழி எம்.பி. கூறினார். ஆனால், இன்று அதை பற்றியே பேசுவதில்லை. ஏனென்றால், டாஸ்மாக் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மதுக்கடைகளை குறைப்போம் என ஆட்சிக்கு வந்தவர்கள், ஒரு கடையைக்கூட குறைக்காமல் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர்.
லண்டன்: இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்திலும் தொழில் துறையில் முத்திரை பதித்து வரும் இந்துஜா குழுமத்தின் தலைவராக இருந்த ஸ்ரீசந்த் இந்துஜா கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் காலமானார். இதையடுத்து அவருடைய இளைய சகோதரர் கோபிசந்த் இந்துஜா (85) தலைவரானார். இவரது தலைமையில் இந்துஜா குழுமம் பல்வேறு துறையில் கால் பதித்தது. இங்கிலாந்து மற்றும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இவரும் இவரது சகோதரரும் அடிக்கடி இடம்பெற்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார்.
