சென்னை: சையது முஸ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 26 முதல் டிசம்பர் 18 வரை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான தமிழ்நாடு அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.அணி விவரம்: வருண் சக்ரவர்த்தி (கேப்டன்), நாராயண் ஜெகதீசன், துஷார் ரஹேஜா, அமித் சாத்விக், ஷாருக் கான், ஆந்த்ரே சித்தார்த், பிரதோஷ் ரஞ்ஜன் பால், ஷிவம் சிங், சாய் கிஷோர், எம்.சித்தார்த், நடராஜன், குர்ஜப்னீத் சிங், இசக்கிமுத்து, சோனு யாதவ், சிலம்பரசன், ரித்விக் ஈஸ்வரன்.
Author: admin
வாஷிங்டன்: அமெரிக்க நிதி நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் டாலர் கடன் பெற்று இந்திய வம்சாவளி சிஇஓ மோசடி செய்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனம் பிளாக் ராக். இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான எச்பிஎஸ் நிறுவனத்திடம், பிராட்பேண்ட் டெலிகாம் மற்றும் பிரிட்ஜ்வாய்ஸ் என்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களை நடத்தி வரும் இந்திய வம்சாவளி சிஇஓ பாங்கிம் பிரம்பட் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 500 மில்லியன் டாலருக்கு மேல் கடன் பெற்றுள்ளார்.
சென்னை: ஐப்பசி மாத அமாவாசை நாளில் மக்கள் கேதார கெளரி விரதம் இருந்து நோன்பு எடுப்பது வழக்கம். இந்த நாளில் மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நோன்பு எடுக்கும் வழக்கம் கொண்ட மக்கள், கேதார கெளரி விரத நோன்பை கடைபிடிக்கின்றனர். இந்நாளில், மக்கள் வீடு மற்றும் கோயில்களில் நோன்பு எடுப்பார்கள்.
அஜித் தனது சம்பளத்தை குறைக்காத காரணத்தினால், படத்தின் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்தினைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தினையும் இயக்கவுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பலரும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஆனால், படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதிலேயே சிக்கல் எழுந்துள்ளது.
தமிழகத்தை 4 மண்டலங்களாகப் பிரித்து மண்டலம் வாரியாகச் சென்று, இயக்க பணி, மக்கள் பணி, கூட்டணி என்று செயலாற்றி, வரும் தேர்தலில் வெல்லக்கூடிய சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதிமுக பொதுச்செயலாளரை இன்று நேரடியாக சந்தித்து அரசியல் பயணங்கள், பிரகாசமான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்தேன். எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தமிழகத்தில் முதல் பெரிய கட்சியாக அதிமுக விளங்குகிறது. அதேபோல, மத்தியில் பெரிய கட்சியாக பாஜக உள்ளது. இந்த 2 கட்சிகள் மீதும் தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசோடு இணக்கமான சூழல் அதிமுக-வுக்கு இருக்கும்போது, தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம். சாதி, மதம், மொழி, இனம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு இன்னும் பல கட்சிகள் எங்களோடு கூட்டணி சேருவதற்கான கால நேரம் உருவாகியுள்ளது.
சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தீபாவளிக்கு முன்பு ஒரு பவுன் ரூ.98 ஆயிரத்தை தொட்டது. பின்னர், விலை குறையத் தொடங்கியது.இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, 90,800-க்கு விற்கப்பட்டது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.11,350-க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.168 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,68,000 ஆகவும் இருந்தது.
அவரது நோயறிதலுக்குப் பிறகு, சமந்தா பல மாதங்கள் நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்தார். பல நேர்காணல்களில், “சில நாட்கள் படுக்கையில் இருந்து எழுவது கடினமாக இருந்தது” என்று பகிர்ந்து கொண்டார். செயல்பாட்டு மருத்துவத்தைத் தவிர, அவரது சிகிச்சையில் தனிப்பயனாக்கப்பட்ட பிசியோதெரபியும் அடங்கும். வீக்கம் மற்றும் தசை பலவீனத்தை ஏற்படுத்தும் ஒரு தன்னுடல் தாக்க நிலையைக் கையாளும் போதிலும், அவர் தனது வலிமையை சீராக மீண்டும் உருவாக்கியுள்ளார். ஊட்டச்சத்து பயிற்சியாளர் ரியான் பெர்னாண்டோவுடன் நடந்த உரையாடலில், எடை பயிற்சி தனது வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பதை சமந்தா பகிர்ந்து கொண்டார். போட்காஸ்டில் அவர் வாரத்தில் 5 முதல் 6 நாட்கள் வரை தனது உடற்பயிற்சிகளைப் பகிர்ந்து கொண்டார், மேலும் காலை நேரங்கள் அவருக்கு தனிப்பட்ட விருப்பமானவை, ஏனெனில் அது “அன்றைய மனநிலையை அமைக்கிறது”. சமூக ஊடகங்களில், சமந்தாவின் ஃபிட்னஸ் வழக்கமான ஒரு எளிதான பயணம் என்ற படத்தை விட்டுவிடவில்லை. பார்பெல் குந்துகள் முதல் டெட்லிஃப்ட்…
ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் பிற குற்றங்களில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் டொராண்டோவில் கைது செய்யப்பட்டுள்ளார். 18 மாதங்களாக தலைமறைவாக இருந்த நிக்கோலஸ் சிங், கனடாவின் “மோஸ்ட் வான்டட் லிஸ்டில்” இருந்ததாக கூறப்படுகிறது.”மே 31, 2024 அன்று “சட்டவிரோதமாக பெரிய அளவில்” சென்ற ஃபெடரல் குற்றவாளியான 23 வயதான சிங், ஆகஸ்ட் மாதம் ஒரு OPP மேல்முறையீட்டின் மையமாக இருந்தார், அவர் தனது சட்டப்பூர்வ விடுதலையை மீறியதற்காக கனடா முழுவதும் வாரண்டில் தேடப்பட்டவர் என்று காவல்துறை கூறியது.சனிக்கிழமை வெளியிடப்பட்ட OPP அறிக்கையின்படி, சிங் தற்போது ஐந்து ஆண்டுகள், ஐந்து மாதங்கள் மற்றும் 10 நாள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார், இது டொராண்டோ சன் மேற்கோள் காட்டியது.இரவு 11.20 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) Bathurst மற்றும் Dupont தெருக்களுக்கு அருகே வாகனத்தில் சிங்கைக் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிங் ஆயுதங்களை வைத்திருப்பதைத் தடைசெய்து முன் நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், வெள்ளிக்கிழமை இரவு…
பிஹாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களை சந்திக்க டெல்லியில் இருந்த ஜேடியு செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா நேற்று நிதிஷ் குமாரைச் சந்தித்தார். செய்தியாளர்களிடம் அவர், “சில நாட்களில், புதிய அரசாங்கம் அமைக்கப்படும். சரியான நேரத்தில் நீங்கள் விவரங்களை அறிந்து கொள்வீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அறிக்கையில் நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்.” என்று கூறினார்.2020 தேர்தலில் 50-க்கும் குறைவான எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்ததால் குறைவான அமைச்சர்களை பெற்ற ஐக்கிய ஜனதா தளம், இம்முறை அமைச்சரவையில் அதிக இடங்களை கேட்டுள்ளது. இதற்கிடையில், எல்ஜேபி கட்சி புதிய அரசாங்கத்தில் சேர ஆவலுடன் இருப்பதாக சிராக் பாஸ்வான் கூறினார். அதே நேரத்தில் எல்ஜேபி துணை முதல்வர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சிகளும் அமைச்சரவையில் இடம் கேட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியாக கற்க உதவும் வகையில், கோவையைச் சேர்ந்த மாணவி ரிதன்யா, ‘வைப்ரன்ஸ் ஹப்’ என்ற புதுமையான இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.கோவை மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த சிவராம் என்பவரின் மகள் ரிதன்யா (17). தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கிய வாழ்வை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக ‘வைப்ரன்ஸ் ஹப்’ (www.vibrancehub.org) என்ற இணைய தளம் மற்றும் மொபைல் ஆப் உருவாக்கியுள்ளார். இந்த தளமானது, மாணவர்கள் திட்ட அடிப்படையிலான கற்றல் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியாக கற்க உதவுகிறது.
