புதுடெல்லி: சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் பிறந்த இடமான நான்கானா சாகிப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சுமார் 2,100 பக்தர்கள் பாகிஸ்தான் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருந்தது. இவர்கள் அனைவருக்கும் பாகிஸ்தான் அரசு பயண ஆவணங்களை வழங்கியது. இவர்களில் 1,900 பேர் நேற்று வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் சென்றனர்.
Author: admin
பின்பு ஆளுநர் மாளிகையில் தங்கிய திரவுபதி முர்மு, இன்று காலை 9.35 மணி அளவில் திருவனந்தபுரத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை புறப்பட்டு சென்றார். நிலக்கல்லில் இறங்கிய திரவுபதி முர்மு, அங்கிருந்து கார் மூலம் பம்பை சென்றடைந்தார். பம்பை கணபதி கோயிலில் இரு முடி கட்டிய பின் பம்பையில் இருந்து ஜீப் மூலம் சந்நிதானம் சென்றார்.அங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, திரவுபதி முர்முவும் அவரது மெய்க்காவலர்களும் 18-ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில், கியூபா திரைப்பட விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கிறது.நவ.20 மற்றும் 21ம் தேதிகளில் நடக்கும் இப்பட விழாவில் 4 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. நவ.20-ம் தேதி மாலை 5 மணிக்கு அலெஜாண்ட்ரா கில் இயக்கிய ‘ஏஎம்-பிஎம்’ (AM-PM) படமும், இரவு 7 மணிக்கு பெர்னாண்டோ பெரேஸ் இயக்கிய ‘மார்டி, த ஐ ஆஃப் த கன் ட்ரி’ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
திருச்சி: டெல்லியில் நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ரயிலில் புறப்பட்டுச் சென்றனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தார் நன்கொடையாளர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். இவர்களது ஆண்டு நன்கொடை ரூ.2,708 கோடியாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்காவது முறையாக அதிகம் நன்கொடை கொடுத்தவர்களது பட்டியலில் ஷிவ் நாடாரின் பெயர் இடம்பெற்றுள்ளது.இதையடுத்து, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் ரூ.626 கோடியை தொண்டுப் பணிகளுக்காக செலவிட்டுள்ளது. இது, கடந்தாண்டை விட 54 சதவீதம் அதிகம். பஜாஜ் குடும்பம் ரூ.446 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இது, கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 27 சதவீதம் அதிகமாகும். தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் அவரது குடும்பத்தார் நன்கொடை பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளனர். இவர்கள் ரூ.440 கோடியை சுகாதார மற்றும் சமூகப் பணிகளுக்காக வழங்கியுள்ளனர். இது, கடந்தாண்டை விட 32 சதவீதம் அதிகமாகும்.
அவர் ஆரோக்கியமான உணவை விரும்புகிறார் மற்றும் ஒரு யூடியூப் வீடியோவில், விரிவான பருப்பு மற்றும் கிரீன்ஸ் புத்தர் கிண்ண செய்முறையை எழுதுவதைக் காணலாம். வைப்ரண்ட் லிவிங்கின் யூடியூப் வீடியோவின்படி, இது வெறும் சாலட் மட்டுமல்ல, புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு மற்றும் பிற முக்கிய தாதுக்கள் ஆகியவற்றின் சீரான விகிதங்களைக் கொண்ட முழுமையான உணவாகும். இதை செய்ய உங்களுக்கு 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, சுவைக்கு உப்பு, 1 டீஸ்பூன் கருப்பு மிளகு, 4 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 1 பச்சை மிளகாய், 4 புதினா இலைகள், 2 பிரமி இலைகள், 2 பான் இலைகள், 2 கோஸ் இலைகள் தேவை. 1 கப் கேரட், 1 நுல்கோல், 1 வெள்ளரி, 1 கப் கலந்த பெல் மிளகு, 4-6 சின்ன வெங்காயம், ½ கப் சிவப்பு முட்டைக்கோஸ், 1 தக்காளி, 2 டீஸ்பூன் பூசணி விதைகள்,…
பில்லியனர் மிட்டல் UK ஐ விட துபாயின் Naïa தீவை தேர்வு செய்தார் / படம்: கோப்பு எஃகு அதிபர் லக்ஷ்மி மிட்டல் முழுநேர இங்கிலாந்து வதிவிடத்திலிருந்து விலகி, துபாய் மற்றும் சுவிட்சர்லாந்தில் அதிக நேரம் செலவிடுவார், ஏனெனில் பிரிட்டன் பெரும் பணக்காரர்களுக்கான வரி விதிகளை கடுமையாக்குகிறார். இந்த நடவடிக்கையானது தொழிலாளர்களின் செல்வம் மற்றும் பரம்பரை வரி மாற்றங்களின் தொகுப்பைப் பின்பற்றுகிறது, இது பல உயர் நிகர மதிப்புள்ள நபர்களை தங்கள் வரி வதிவிடத்தை மறுபரிசீலனை செய்ய தூண்டியது. உலக பணக்காரர்கள் ஏன் துபாயை தேர்ந்தெடுத்தார்கள்?இங்கிலாந்தில் இருந்து லக்ஷ்மி மிட்டலின் வெளியேற்றம், அவரது குடும்பம் புகழ்பெற்ற “தாஜ் மிட்டல்” மாளிகையை வைத்திருந்தது, அடிப்படையில் பொருளாதாரத்தால் இயக்கப்படுகிறது. கோடீஸ்வரர் இங்கிலாந்தின் வரவிருக்கும் வரி சீர்திருத்தங்களிலிருந்து விலகிச் செல்கிறார், இதில் முன்மொழியப்பட்ட 20% வெளியேறும் வரி, சாத்தியமான மாளிகை வரி, குடியேற்றம் அல்லாத வரி ஆட்சியை ஒழித்தல் மற்றும் அதிக 40% பரம்பரை வரிகள்…
புதுடெல்லி: அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மேற்கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடங்கியுள்ளது.
சென்னை: தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கொள்குறி வகை (அப்ஜெக்டிவ் டைப்) வினாக்கள் மூலம் மாணவர்களை பயிற்றுவிப்பது கற்றலின் தரத்தை உயர்த்தும் ஒரு பயனுள்ள முறையாகும். இது பாடப்பகுதியை எளிதில் புரிந்துகொள்ளவும், முக்கிய கருத்துகளை நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. இத்தகைய கேள்விகள் மாணவர்களின் சிந்தனைத் திறன், தீர்மானம் எடுக்கும் திறன் மற்றும் நேரத்தை சரியாகப் பயன்படுத்தும் திறனையும் வளர்க்கின்றன.
டாக்கா: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அங்கிதா பகத் 7-3 என்ற கணக்கில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தென் கொரியாவின் சுஹியோனை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான ரீகர்வ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா 6-2 என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ராகுலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 2-வது இடத்தை பிடித்த ராகுல் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்த தொடரை இந்தியா 6 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்தது.
