ஓபிஎஸ் பக்கம் இருந்துவிட்டு அண்மையில் திமுக-வில் இணைந்தவர் ‘நமது அம்மா’ நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகு ராஜ். எழுத்திலும் பேச்சிலும் எதிரணியை எதுகை மோனையுடன் எதவாக தாக்குவதில் வல்லவரான இவரை மாநில செய்தித் தொடர்புக் குழு துணைத் தலைவராக நியமித்திருக்கிறது திமுக. அவரிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். ஆளும் கட்சியாக இருக்கும் திமுக எஸ்ஐஆரைக் கண்டு ஏன் பயப்படுகிறது?
Author: admin
சென்னை: சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ரூ.97,600 ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 28-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.88,600 ஆக இருந்தது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருக்கிறது.இந்நிலையில், சென்னையில்ஆபரணத் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ. 90,560-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.140 உயர்ந்து, ரூ.11,320-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.98,792 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.165ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1.65லட்சமாகவும் இருந்தது.
டிக்னிடாஸின் நிறுவனர் லுட்விக் மினெல்லி, சுயநிர்ணய உரிமைக்காக வாதிட்டு 92 வயதில் தற்கொலை செய்து கொண்டார். மினெல்லி ‘தன்னார்வ உதவியால் இறப்பதன் மூலம் சுயநிர்ணயமாக இறந்தார்’ என்று அவரது அமைப்பு ஒரு வெளியீட்டில் தெரிவித்துள்ளது. அவரது மரணம் இறப்பதற்கான உரிமை பற்றிய விவாதத்தை மீண்டும் தூண்டுகிறது, உதவி தற்கொலை மற்றும் கருணைக்கொலை ஆகியவற்றை உள்ளடக்கியது. டிக்னிடாஸ் நிறுவனர் மற்றும் இறப்பதற்கான உரிமை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே. சுவிஸ் ரைட்-டு டை அமைப்பின் நிறுவனர் டிக்னிடாஸின் நிறுவனர் லுட்விக் மினெல்லி, தனது 93வது பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, நவம்பர் 29, சனிக்கிழமை அன்று உதவி மரணம் மூலம் தனது சொந்த வாழ்க்கையை முடித்துக்கொண்டார். குழுவின் கூற்றுப்படி, மினெல்லி ‘தன்னார்வ உதவியால் இறப்பதன் மூலம் சுயநிர்ணயமாக’ இறந்தார். அவர்கள் தங்கள் நிறுவனருக்கு அஞ்சலி செலுத்தினர் மற்றும் அவர் “தேர்வு சுதந்திரம், சுயநிர்ணய உரிமை மற்றும் மனித உரிமைகளுக்கான…
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தீபக் பரத்கர், ‘கோகைன் வக்கீல்’ என அழைக்கப்படும் கனடாவில் கைது செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளார். கனடாவில் பிரபல தற்காப்பு வழக்கறிஞரான தீபக் பரத்கர் கைது செய்யப்பட்டு, தற்போது அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளார், அவர் போதைப்பொருள் கடத்தல்காரனாக மாறிய கனடாவின் முன்னாள் ஒலிம்பிக் தடகள வீரரான தீபக்கின் வாடிக்கையாளர் ரியான் திருமணத்திற்கு எதிராக சாட்சியமளிக்க இருந்த ஒரு சாட்சியை கொலை செய்ய உதவியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. தீபக் பரத்கர் தனது உயர்மட்ட வாடிக்கையாளர்களுக்காக அறியப்படுகிறார், பெரும்பாலும் போதைப்பொருள் பிரபுக்கள், இது அவரை ‘கோகைன் வழக்கறிஞர்’ என்றும் பிரபலமாக்குகிறது. வாடிக்கையாளர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட புகைப்படங்களை அவர் சமூக ஊடகங்களில் பயன்படுத்திய சுயவிவரப் பெயர் அது. அவர் தனது சமூக ஊடக தற்பெருமைக்காக விமர்சிக்கப்பட்டார், அந்த கைப்பிடி இப்போது இல்லை.’இந்த சாட்சியை கொன்றால் வழக்கு தள்ளுபடி செய்யப்படும்’கொலம்பியாவில் உள்ள ஒரு உணவகத்தில் FBI சாட்சி சுட்டுக்கொல்லப்படுவதற்கு…
இங்கு 1633-ம் ஆண்டு முதலான புத்தகங்களும், 1670-ம் ஆண்டு முதலான பழமையான ஆவணங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் வரலாற்றினை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம் மாறிவரும் காலத்திற்கேற்ப மீளுருவாக்கம் செய்யப்படும் என்றும், ஆண்டுதோறும் 10 முதல் 15 ஆய்வுகள் வரை மேற்கொள்ளப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வரால் அறிவிக்கப்பட்டது.அதன்படி தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம் மீளுருவாக்கம் செய்யப்பட்டும், 20 நபர்களுக்கு ஆராய்ச்சி உதவித் தொகை வழங்கப்பட்டு வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளவும் ஆணைகள் வெளியிடப்பட்டன. தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து தமிழகத்தின் பெருமைமிகு வரலாற்றை வெளிகொண்டு வரும் வகையிலான ஆராய்ச்சியை ஓராண்டுக்கு மாதம் ரூ. 50,000 உதவித்தொகையுடன் மேற்கொள்வதற்கு முதுகலை பட்டதாரிகள் அல்லது தனிநபர் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை: திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளுக்கு நவ.14-ம் தேதி வரை நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும், திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் நேரடி சேர்க்கை நவ.14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா: இந்திய அணி உடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 159 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நடப்பு டெஸ்ட் உலக சாம்பியனான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணி உடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது அந்த அணி. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை அன்று கொல்கத்தாவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணிந்துள்ள நிலையில், முதல்முறையாக இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளனர். சீக்கிய மத குருவான குரு நானக்கின் பிறந்த இடமான நான்கானா சாஹிப் நகரும், அவர் உயிரிழந்த கர்தார்பூர் நகரும் பாகிஸ்தானுக்குள் உள்ளன. அதோடு, சீக்கியர்களுக்கு நெருக்கமான பல்வேறு வழிபாட்டுத் தலங்களும் பாகிஸ்தானில் உள்ளன. இவற்றுக்கு சீக்கியர்கள் சுற்றுலா செல்வது வழக்கம்.குருநானக் தொடர்பான 10 நாள் விழா நான்கானா சாஹிப் நகரில் நடைபெற உள்ளதை முன்னிட்டு 2,100-க்கும் மேற்பட்ட சீக்கிய பக்தர்களுக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் விசா வழங்கி உள்ளது. இதையடுத்து இன்று காலை ஏராளமான பக்தர்கள் வாகா – அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்குச் சென்றனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் பூக்களைத் தூவியும் பாகிஸ்தான் அதிகாரிகள் வரவேற்றனர். நான்கானா சாஹிப் நகரில் குருநானக்கிற்கு கட்டப்பட்டுள்ள சீக்கிய மத வழிபாட்டுத் தளத்தில் இவர்கள் கூட உள்ளனர். அங்கு வழிபாடு மேற்கொள்ளும்…
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் புதன்கிழமை (அக்.22) தொடங்கியது. அக்.27-ம் தேதி மாலை சூரசம்ஹாரமும், அக்.28-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா புதன்கிழமை இன்று (அக்.22) பகல் 12 மணிக்கு உச்சிகாலத்தில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, மூலவர், விநாயகர், சண்முகர், மயில், துவார பாலகருக்கு காப்பு கட்டப்பட்டது. இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா சவுத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா, பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ள படம், ‘முஸ்தபா முஸ்தபா’. மாபோகோஸ் கம்பெனி சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ள இப்படத்தை பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார். எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கே.எஸ்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி பிரவீன் சரவணன் கூறும்போது, “நண்பர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நகைச்சுவை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் இது. ஒரு எளிய பொய் எப்படி குழப்பமாக மாறுகிறது என்பதையும் சாதாரண மக்கள் பீதியடைந்து தங்கள் பிரச்சினைகளை சரி செய்ய போராடும் போது, அவை இன்னும் வேடிக்கையாகவும் குழப்பமாகவும் மாறும் போது ஏற்படும் விளைவுகளையும் இந்தப் படம் விவரிக்கும்” என்றார்.
