Author: admin

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் என்றும் இந்த சதியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது.டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், 10 பேர் உயிரிழந்தனர், 32 பேர் காயமடைந்தனர். காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரான உமர் முகமது நபி என்பவர் காரை ஓட்டிச் சென்று வெடிவிபத்தை நிகழ்த்தினார். இந்த வெடி விபத்து குறித்து முதலில் டெல்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, என்ஐஏ, 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

Read More

சென்னை: ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தில் இதுவரை ரூ.1,000 கோடி மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இந்த ஆண்டு மட்டுமே ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே பள்ளிக் கல்விக்கு தமிழக அரசு பெரும் கவனம் செலுத்தி வருகிறது. ரூ.5 லட்சத்தை முதல் நன்கொடையாக வழங்கி, நான் தொடங்கி வைத்த ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளன. அதன்மூலம் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள் உட்பட பணிகளை அரசுப் பள்ளிகளில் செய்துள்ளோம்.

Read More

சென்னை: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​திருந்​தது. இந்​நிலை​யி​யில் ஹர்​மன்பிரீத் கவுருக்கு சென்னை செம்​மஞ்​சேரி​யில் உள்ள சத்​ய​பாமா பல்​கலைக்​கழகத்​தில் நேற்று பாராட்டு விழா நடத்​தப்​பட்​டது. இந்நிகழ்ச்​சிக்கு பின்​னர் நிரூபர்​களிடம் ஹர்​மன்​பிரீத் கவுர் கூறியதாவது: உலகக் கோப்பை வெற்​றியை மொத்த நாடும் கொண்​டாடு​வ​தால் மிக​வும் மகிழ்ச்​சி​யாக இருக்​கிறது. நமது நாட்​டில் ஆடவர், மகளிர் கிரிக்​கெட் சமமாக நடத்​தப்​படு​வ​தாகவே உணர்​கிறேன். ஐசிசி கோப்​பையை வெல்ல வேண்​டும் என்ற லட்​சத்​தி​யத்தை நாங்​கள் அடைந்​து​விட்​டோம். இந்த வெற்றி மகளிர் கிரிக்​கெட்​டுக்கு ஊக்​க​மாக இருக்​கும். ஏராள​மான இளம் வீராங்​க​னை​கள் உந்​துதல் பெறு​வார்​கள்.

Read More

புதுடெல்லி: நேற்று (சனிக்கிழமை) மாலை லண்டன் செல்லும் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டான்காஸ்டரிலிருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு பீட்டர்பரோ நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்தது. அந்த ரயில் உடனடியாக ஹண்டிங்டன் நிலையத்தில் நிறுத்தப்பட்டு போலீசார் விரைந்துசென்றனர்.

Read More

சென்னை: சென்னை வடபழனி முரு​கன் கோயில் மகா கந்த சஷ்டி லட்​சார்ச்​சனை இன்று காலை 9 மணிக்கு தொடங்​கு​கிறது. இத்​திரு​விழா​வின் முத்​தாய்ப்​பாக சூரசம்​ஹாரம் அக்​.27 அன்​றும், திருக்​கல்​யாண வைபவம் அக்​.28-ம் தேதி​யன்​றும் விமரிசை​யாக நடை​பெறவுள்​ளது. சென்னை வடபழனி முரு​கன் கோயி​லில் மகா கந்த சஷ்டி திரு​விழா, வரசித்தி விநாயகர் மூஷிக வாகன புறப்​பாட்​டுடன் அக். 21-ம் தேதி (நேற்​று) மாலை கோலாகல​மாக தொடங்​கியது. விழா​வின் முதல் நாள் நிகழ்​வாக மகா கந்த சஷ்டி லட்​சார்ச்​சனை அக். 22-ம் தேதி (இன்​று) காலை 9 மணிக்கு வேத மந்​திரங்​கள் முழங்க தொடங்​கு​கிறது.

Read More

இதில் மகேஷ் பாபு பேசும்போது, “இந்தப் படம் என்னுடைய கனவு. இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். மிக முக்கியமாக என்னுடைய இயக்குநரை அதிகம் பெருமைப்படுத்துவேன். ‘வாரணாசி’ படம் ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்து பெருமைப்படும்” என்று தெரிவித்தார்.இந்த படத்தில் ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிமுக டீசரில் காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

Read More

“வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரை தோற்கடிப்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் கடமையாக இருக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.நேற்று கோவில்பட்டியில் நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ பிரச்சார பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: கடந்த ஆட்சியின் போது இளம் விதவைகள் அதிகம் என கனிமொழி எம்.பி. கூறினார். ஆனால், இன்று அதை பற்றியே பேசுவதில்லை. ஏனென்றால், டாஸ்மாக் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மதுக்கடைகளை குறைப்போம் என ஆட்சிக்கு வந்தவர்கள், ஒரு கடையைக்கூட குறைக்காமல் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர்.

Read More

லண்டன்: இந்​தியா மட்​டுமல்​லாது இங்​கிலாந்​தி​லும் தொழில் துறை​யில் முத்​திரை பதித்து வரும் இந்​துஜா குழு​மத்​தின் தலை​வ​ராக இருந்த ஸ்ரீசந்த் இந்​துஜா கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் கால​மா​னார். இதையடுத்து அவருடைய இளைய சகோ​தரர் கோபிசந்த் இந்​துஜா (85) தலை​வ​ரா​னார். இவரது தலை​மை​யில் இந்​துஜா குழு​மம் பல்​வேறு துறை​யில் கால் பதித்​தது. இங்​கிலாந்து மற்​றும் ஆசிய பணக்​காரர்​கள் பட்​டியலில் இவரும் இவரது சகோ​தரரும் அடிக்​கடி இடம்​பெற்​றனர். இந்​நிலை​யில் கடந்த சில வாரங்​களுக்கு முன்பு உடல்​நலக்​குறைவு ஏற்​பட்​டதை அடுத்​து, லண்​டனில் உள்ள மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று கால​மா​னார்.

Read More

ஒற்றை சிறுநீரகத்துடன் பிறந்த குழந்தைகள், ஒருதலைப்பட்ச சிறுநீரக அஜெனிசிஸ் (URA) எனப்படும் ஒரு நிலை, பெரும்பாலும் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை நடத்தலாம். ஒரே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்திருந்தாலும், பெரும்பாலான குழந்தைகள் குழந்தை பருவம் மற்றும் முதிர்வயது வரை சாதாரண சிறுநீரக செயல்பாட்டை அனுபவிக்கிறார்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. மனித உடல் ஒரு சிறுநீரகம் இல்லாத நிலையில் மாற்றியமைக்கும் திறன் கொண்டது, மீதமுள்ள சிறுநீரகம் பொதுவாக பெரிதாக்குகிறது மற்றும் காணாமல் போன உறுப்புக்கு ஈடுசெய்கிறது.கழிவுகளை வடிகட்டுதல், எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துதல் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்குதல் போன்ற அத்தியாவசிய சிறுநீரக செயல்பாடுகள் திறம்பட தொடர்வதை இந்த தழுவல் உறுதி செய்கிறது. யுஆர்ஏ உள்ள குழந்தைகளில் தீவிரமான நீண்ட கால உடல்நலப் பிரச்சினைகள் ஒப்பீட்டளவில் அரிதானவை என்பதை அறிவியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.ஒருதலைப்பட்ச சிறுநீரக ஏஜெனிசிஸ் எவ்வளவு பொதுவானது மற்றும் சிறுநீரகம் எவ்வாறு மாற்றியமைக்கிறதுஒருதலைப்பட்ச சிறுநீரக ஏஜெனிசிஸ் ஒரு அரிய பிறவி நிலையாகக் கருதப்படுகிறது. தேசிய…

Read More

லக்ஷ்மி மிட்டல் அதிக வரி செலுத்தியதற்காக இங்கிலாந்தை விட்டு வெளியேறியதாக நம்பப்படுகிறது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எஃகுத் தொழில் அதிபர் லக்ஷ்மி மிட்டல் இங்கிலாந்தை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் வசிக்கிறார் என்று சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, தொழிலாளர் அரசாங்கத்தின் பரம்பரை வரிதான் பணக்காரர்கள் பெருமளவில் வெளியேறியது என்று குற்றம் சாட்டியுள்ளது. அதிபர் ரேச்சல் ரீவ்ஸ் தனது வரவிருக்கும் பட்ஜெட்டில் மற்றொரு வரி உயர்வை சுமத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏப்ரல் மாதத்தில் டோம் அல்லாத நிலையை நீக்கினார். இந்த அமைப்பு இங்கிலாந்தில் வசிக்கும் செல்வந்தர்கள் நாட்டில் கிடைக்கும் வருமானத்திற்கு மட்டுமே வரி செலுத்த அனுமதித்தது — கடல் வருவாயிலிருந்து அல்ல. மிட்டலின் ஆலோசகர்களில் ஒருவரை மேற்கோள் காட்டி, இங்கிலாந்தில் வசிக்கும் பல செல்வந்தர்கள் உலகில் வேறு இடங்களில் உள்ள தங்கள் சொத்துக்களுக்கு ஏன் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும் என்பதில் ஒரு தீர்வில் இருப்பதாகக்…

Read More