பிஹாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களை சந்திக்க டெல்லியில் இருந்த ஜேடியு செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா நேற்று நிதிஷ் குமாரைச் சந்தித்தார். செய்தியாளர்களிடம் அவர், “சில நாட்களில், புதிய அரசாங்கம் அமைக்கப்படும். சரியான நேரத்தில் நீங்கள் விவரங்களை அறிந்து கொள்வீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அறிக்கையில் நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்.” என்று கூறினார்.2020 தேர்தலில் 50-க்கும் குறைவான எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்ததால் குறைவான அமைச்சர்களை பெற்ற ஐக்கிய ஜனதா தளம், இம்முறை அமைச்சரவையில் அதிக இடங்களை கேட்டுள்ளது. இதற்கிடையில், எல்ஜேபி கட்சி புதிய அரசாங்கத்தில் சேர ஆவலுடன் இருப்பதாக சிராக் பாஸ்வான் கூறினார். அதே நேரத்தில் எல்ஜேபி துணை முதல்வர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சிகளும் அமைச்சரவையில் இடம் கேட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Author: admin
மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியாக கற்க உதவும் வகையில், கோவையைச் சேர்ந்த மாணவி ரிதன்யா, ‘வைப்ரன்ஸ் ஹப்’ என்ற புதுமையான இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.கோவை மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த சிவராம் என்பவரின் மகள் ரிதன்யா (17). தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கிய வாழ்வை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக ‘வைப்ரன்ஸ் ஹப்’ (www.vibrancehub.org) என்ற இணைய தளம் மற்றும் மொபைல் ஆப் உருவாக்கியுள்ளார். இந்த தளமானது, மாணவர்கள் திட்ட அடிப்படையிலான கற்றல் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியாக கற்க உதவுகிறது.
டாக்கா: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி டாக்கா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா, தீப்ஷிகா, பிரித்திகா பிரதீப் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 236 – 234 என்ற புள்ளிகள் கணக்கில் கொரியா அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் அபிஷேக் வர்மா, தீப்ஷிகா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 153 – 151 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
பெய்ஜிங்: சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணம் ஹார்பின் நகரில் உள்ள ஒரு ரெசார்ட்டில் பாரம்பரிய சீன மருத்துவ முறைப்படி ஹாட்பாட் குளியல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 மீட்டர் விட்டமுள்ள ஒரு வட்ட வடிவ தொட்டியில் வெந்நீர் நிரப்பப்பட்டுள்ளது. அது பார்வையாளர்களைக் கவர்கிறது. ஒரு பிரிவு சிவப்பாகவும், மற்றொரு பிரிவு வெள்ளை நிறத்திலும் உள்ளது அந்த தொட்டியில் சிவப்புப் பக்கம் உள்ள தண்ணீரில் மிளகாய், கத்தரிக்காய், முட்டைக்கோஸ் ஆகியவை நிரப்பப்பட்டுள்ளன. வெள்ளை பக்கம் உள்ள பிரிவில் பால், சிவப்பு பேரீச்சம்பழம், பெர்ரி பழங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
தொடர்ந்து வரும் அக்.27-ம் தேதி காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் மூலவரிடம் சண்முகார்ச்சனை, காலை 11 மணி முதல் மதியம் 12 மணிக்குள் உற்சவரிடம் சண்முகார்ச்சனை நடக்கிறது. தொடர்ந்து மதியம் 3 மணிக்கு அன்னையிடம் வேல் வாங்குதலும், சுவாமி சம்ஹாரத்துக்கு எழுந்தருளுதலும், மாலை 4 மணிக்கு அபிஷேகம் மற்றும் சண்முகார்ச்சனை ஆகியவையும், அக்.28ம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா ஆகியவையும் நடக்கிறது.விழாவையொட்டி வரும் அக்.27-ம் தேதி மற்றும் 28-ம் தேதி ஆகிய நாட்களில் மலைக்கோயிலுக்கு இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மூலமாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் படம் ‘வாரணாசி’. இதில் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இதில் ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். அவருடன் இதில் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் பிருத்விராஜும், மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ராவும் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக ‘குளோப் டிரோட்டர்’ என்ற சாகச உலகத்தைப் படக்குழு உருவாக்கியுள்ளது. இதற்கான விழாவை ஹைதராபாத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது.
சென்னை: எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்கள் உதவியுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூரில் இயங்கி வரும் பழமையான தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் 1633-ம் ஆண்டு முதலான புத்தகங்களும், 1670-ம் ஆண்டு முதலான பழமையான ஆவணங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் 1% பெரும் பணக்காரர்களின் செல்வம் கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டுக்குள் 62% அதிகரித்துள்ளதாக தென்னாப்பிரிக்க தலைமையால் நியமிக்கப்பட்ட ஜி20 குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.சர்வதேச சமத்துவமின்மையின் நிலை குறித்து ஆராய ஜி20 அமைப்பு சார்பில் நிபணர் குழு அமைக்கப்பட்டது. 2001-ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தலைமையிலான இந்தக் குழுவில், ஜெயதி கோஷ், வின்னி பியானிமா, இம்ரான் வலோடியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக அளவில் சமத்துவமின்மை என்பது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய அளவுக்கு (emergency levels) அதிகரித்துள்ளது. இது ஜனநாயக நிலைத்தன்மை, பொருளாதார மீள்தன்மை, காலநிலை ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
ஒரு உன்னதமான ஆப்டிகல் மாயையானது, குடைகளுடன் கூடிய கதாபாத்திரங்களுக்கு மத்தியில் மறைந்த முகத்தைக் கண்டறிய பார்வையாளர்களுக்கு சவால் விடுகிறது, அவதானிக்கும் திறன்களை சோதிக்கிறது. இத்தகைய புதிர்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, சிக்கலைத் தீர்க்கும் மற்றும் கவனத்தை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பலர் குடைகளைக் கண்டாலும், மறைக்கப்பட்ட முகத்தைக் கண்டறிவதில் மிகுந்த கவனம் தேவை. மேம்பட்ட அறிவாற்றல் திறன்களுக்கு இதேபோன்ற மூளை டீஸர்களுடன் மேலும் பயிற்சியை ஊக்குவிக்கும் தீர்வு வழங்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இந்த உன்னதமான ஒளியியல் மாயையில் குடைகளை விரைவாகக் கண்டுபிடிக்க முடியும், ஆனால் கூர்மையான கண்கள் மற்றும் விவரங்களில் அதிக கவனம் உள்ளவர்கள் மட்டுமே 11 வினாடிகளில் மறைக்கப்பட்ட முகத்தை கண்டுபிடிக்க முடியும். படத்தில் பாத்திரங்கள் குடைகளுடன் நடப்பதைக் காட்டுகிறது, ஆனால் ஒரு மறைக்கப்பட்ட முகம் புத்திசாலித்தனமாக காட்சிக்குள் எங்காவது வச்சிட்டுள்ளது. வெற்றிபெற, உங்களுக்கு பொறுமை, செறிவு மற்றும் கூர்மையான கண் தேவை. இது போன்ற ஒளியியல் மாயைகள்…
ஜக்ஜித் சிங்கின் புகைப்படத்தை கனடா காவல்துறை வெளியிட்டுள்ளது. ஜக்ஜித் சிங் என்ற 51 வயதான இந்தியர், புதிதாகப் பிறந்த தனது பேரக்குழந்தையைப் பார்ப்பதற்காக கனடாவுக்கு தற்காலிக விசாவில் வந்தவர், பள்ளிக்கு வெளியே இரண்டு டீனேஜ் சிறுமிகளை கிரிமினல் முறையில் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். சிங் கைது செய்யப்பட்டு குறுகிய சிறைத்தண்டனை பெற்றார். இப்போது அவர் நாடுகடத்தப்படுவார் மற்றும் கனடாவிற்கு மீண்டும் நுழைவதற்கு தடை விதிக்கப்படுவார்.டொராண்டோ சன் படி, சிங் ஆறு மாத விசாவில் ஜூலை மாதம் கனடா வந்தடைந்தார். அவர் உயர்நிலைப் பள்ளியின் புகைப்பிடிக்கும் பகுதிக்கு சென்று இளம் பெண்களுடன் நட்பு கொள்ள முயன்றார். சிங் ஆங்கிலம் தெரியாத போதிலும் அவர்களுடன் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், புகைப்படம் எடுக்க தங்களை அணுகியதாகவும் சிறுமிகள் புகார் கூறினர். போட்டோ எடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விடுவார் என்று பெண்கள் நினைத்ததால் இரண்டு பெண்களுடன் ஒரு போட்டோவை சமாளித்தார். ஆனால் அது நடக்கவில்லை.…
