Author: admin

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) நிறு​வனர் லாலு​ மகள் ரோஹிணி ஆச்​சார்யா, குடும்பம், கட்சியில் இருந்து வில​கு​வ​தாக அறி​வித்​துள்​ளார். இதற்கு சகோ​தரன் தேஜஸ்​வி​யின் நெருங்​கிய நண்​பர்​கள் ரமீஸ் நிமத் மற்​றும் சஞ்​சய் யாதவ்​தான் காரணம் என்​றும் குற்​றம்சாட்டி உள்​ளார். ஆர்​ஜேடி.​யில் அந்​தளவுக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்த ரமீஸ், சஞ்​சய் ஆகியோர் யார்? கடந்த 2 ஆண்​டு​களாக தேஜஸ்​வி​யின் அரசி​யல் குழு​வில் ரமீஸ் நிமத், சஞ்​சய் யாதவ் ஆகியோர் முக்​கிய​மானவர்​களாக உள்​ளனர். உ.பி. பல்​ராம்​பூரைச் சேர்ந்​தவர் ரமீஸ். இவரது தந்தை நியாமத்​துல்லா கான். பல்​ராம்​பூர் தொகுதி சமாஜ்​வாதி முன்​னாள் எம்​.பி. ரிஸ்​வான் ஜாகீரின் மரு​மகன் ரமீஸ். ரிஸ்​வான் மூலம் அரசி​யல் அனுபவம் பெற்ற ரமீஸுக்கு தேஜஸ்வி நட்பு கிடைத்​தது. தேஜஸ்வி விளை​யாடி வந்த கிரிக்​கெட் கிளப்​பில் ரமீஸும் இருந்​தார். அதனால் இரு​வருக்​குள் நட்பு உரு​வானது. அதன்​பின் அரசி​யல் களத்தை ஏற்​படுத்தி கொண்​டார் ரமீஸ்.

Read More

அதன்படி, திறன் இயக்கத் தேர்வில் 7 லட்சத்து 46,594 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 2 லட்சத்து 98,998 பேர் (40%) தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரி, திருச்சி, நீலகிரி, பெரம்பலூர், நெல்லை, ஈராடு ஆகிய மாவட்ட மாணவர்கள் 50 முதல் 70 சதவீதம் அளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரம் வேலூர், விருதுநகர், திருவாரூர், தென்காசி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்ட மாணவர்கள் 28 முதல் 33 சதவீதம் அளவுக்கு மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அவர்களுக்கு உரிய வகுப்புக்கு அனுப்பப்பட்டு, தொடர்ச்சியான வகுப்பறை கற்றலுக்கு அனுமதிக்கப்படுவர்.அதேபோல், எஞ்சியுள்ள 4 லட்சத்து 47,596 திறன் இயக்க மாணவர்களுக்கும் தொடர் பயிற்சி அளித்து அடுத்த பிப்ரவரி மாதத்துக்குள் கற்றல் அடைவு எட்டப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கடந்த மாதம் பாகிஸ்​தானில் நடை​பெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்​பிரிக்க அணி 1-1 என டிரா செய்​திருந்​தது. இந்​தத் தொடரில் தென்ஆப்பிரிக்க அணி கைப்​பற்​றிய 39 விக்​கெட்​களில் 35-ஐ கேசவ் மஹா​ராஜ், சைமன் ஹார்​மர், செனுரன் முத்​து​சாமி ஆகியோரை உள்​ளடக்​கிய சுழல் கூட்​டணி வீழ்த்​தி​யிருந்​தது. சொந்த மண்​ணில் பாகிஸ்​தான் சுழற்​பந்து வீச்​சாளர்​களான நோமன் அலி, சஜித் கான், ஆசீப் அப்​ரிடி ஆகியோர் கூட்​டாக 27 விக்​கெட்​களை மட்​டுமே கைப்​பற்​றிய நிலை​யில் தென் ஆப்​பிரிக்க சுழற்​பந்து வீச்​சாளர்​கள் மேம்​பட்ட செயல் திறனை வெளிப்படுத்தியிருந்​தனர். 36 வயதான சைமன் ஹார்​மர் முதல்தர கிரிக்​கெட்​டில் ஆயிரம் விக்​கெட்​களை வீழ்த்​தி​யுள்​ளார். இந்​திய ஆடுகளங்களுக்கு அவர், ஒன்றும் புதி​ய​வர் இல்​லை.கடந்த 2015-ம் ஆண்டு சுற்​றுப்​பயணத்​தில் மொகாலி, நாக்​பூர் டெஸ்​டில் அவர், விளை​யாடி​யிருந்​தார். அப்​போது சேதேஷ்வர் புஜா​ரா, ரோஹித் சர்மா, ரித்​தி​மான் சாஹா ஆகியோரது விக்​கெட்​களை சைமன் ஹார்​மர் வீழ்த்​தி​யிருந்​தார். தற்​போது 10 வருடங்​களுக்கு பிறகு அவர், இந்​திய மண்ணில்…

Read More

கராச்சி: பாகிஸ்​தானின் பலுசிஸ்​தான் மாகாணத்​தில் அந்​நாட்டு ராணுவ தாக்​குதலில் 18 போராளி​கள் உயி​ரிழந்​தனர்.உளவுத் தகவலின் அடிப்​படை​யில் பலுசிஸ்​தானின் குவெட்டா மாவட்​டம், சில்​டன் மலைத்​தொடரிலும், கெச் மாவட்​டத்​தின் புலே​டா​விலும் பாகிஸ்​தான் ராணுவம் புதன்​கிழமை இரவு தேடு​தல் பணி மேற்​கொண்​டது.

Read More

இந்​நிலை​யில், ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்​திர மகா தேசிக​னின் குரு​வான சுவாமி தேசிக​னின் அவதா​ரத் திரு​நாளை​யொட்​டி, திரு​வல்​லிக்​கேணி அஹோபில மடத்​தில் சுவாமி தேசிகன் உற்​சவம் அக்​.2-ம் தேதி தொடங்கி 10 நாட்​கள் நடை​பெற்று வரு​கிறது. அதன்​படி, அக்​.2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை, தினசரி காலை​யில் பல்​லக்கு சேவை​யும், மாலை​யில் கேட​யம், சிம்ம வாக​னம், சூரியபிரபை, சந்​திர பிரபை, ஹம்ச வாக​னம், யானை வாக​னம், யாளி வாக​னம், குதிரை வாக​னத்​தில் வீதி உலா நடந்​தது.விழா​வின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் நேற்று நடை​பெற்​றது. காலை 7 மணிக்கு திருத்​தேரில் சுவாமி தேசிகன் எழுந்​தருளி​னார். திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி பெரு​மாள் கோயி​லில் இருந்து தேர் புறப்​பட்​டது. பக்​தர்​கள் வடம் பிடித்து இழுக்க 4 மாட வீதி​களில் தேர் வலம் வந்​தது. அப்​போது பக்​தர்​கள் சுவாமி தேசிகனை தரிசனம் செய்து வழிபட்​டனர்.

Read More

இந்தோ- சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு புது டெல்லியில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து ஐரோப்பிய திரைப்பட விழாவை சென்னையில் நடத்துகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் ஃபிரான்சைஸ் வளாகத்தில் நவ.17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடக்கும் இப்பட விழாவில் 6 படங்கள் திரையிடப்படுகின்றன.நவ.17-ம் தேதி மாலை 5 மணிக்கு பிரெஞ்சு காமெடி டிராமா திரைப்படமான ‘ஜிம்’ஸ் ஸ்டோரி’யும், அன்று இரவு 7 மணிக்கு பின்லாந்து படமான ‘ஜேவிடா’வும் திரையிடப்படுகின்றன.. ஒரு பெண்ணின் 3 வெவ்வேறு காலகட்டங்களை விவரிக்கும் படம் இது.

Read More

“பிஹார் தேர்தலுக்குப் பிறகு பல பாடங்களை கற்றிருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். காங்கிரஸுடன் இருந்தால் உங்களையும் இழுத்து மூழ்கடித்து விடுவார்கள் எனும் மற்றொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் என அவருக்குச் சொல்லிக் கொள்கிறேன்’’ என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் பேசுகையில், “வாக்குகளை திருடிவிட்டார்கள் என்று சொல்லிவந்தார் ராகுல் காந்தி. ஆனால் பிஹார் மக்கள், எங்கள் ஓட்டு எங்களிடம் தானே இருக்கிறது எனக் கூறி, பொய் சொல்பவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அவருக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள்’’ என்றார்.

Read More

இதுகுறித்து கணக்கன்பட்டி விவசாயி அப்பாசாமி துரை கூறியதாவது: விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் குறித்த நேரத்தில் உரம் மற்றும் மருந்து தெளிக்க முடியாத நிலை உள்ளது. அதனை, ட்ரோன் மூலம் பூர்த்தி செய்ய முடிகிறது. ட்ரோன் மூலம் பயிர்களின் மேல் சரியான அளவு சீராக மருந்து தெளிக்கப்படுவதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது.ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் நாள் முழுவதும் செய்ய வேண்டிய வேலை, ஒரு மணி நேரத்துக்குள் முடிந்து விடுகிறது. ட்ரோன் தொழில்நுட்பத்தால் நேரமும், பணமும் மிச்சமாகிறது. விவசாயிகள் பலரும் ட்ரோனை பயன்படுத்தி மருந்து தெளிக்க தொடங்கி உள்ளனர். அதனால், இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, முன்பதிவு செய்தால் மட்டுமே ட்ரோன் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது, என்றார்.

Read More

பிரான்சின் தலைநகரான பாரிஸ், உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகமான லூவ்ரே. ஆனால் இந்த அருங்காட்சியகம் 2026 முதல் நுழைவுக் கட்டணத்தை உயர்த்த உள்ளது என்பதுதான் செய்தி. ஆனால் புதிய விதி ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பார்வையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது இங்குள்ள பிடிப்பு. இதன் பொருள், ஐரோப்பியர் அல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனுமதியில் அனுமதிக்கப்பட்ட 45% உயர்வை செலுத்த வேண்டும். 14 ஜனவரி 2026 முதல் €22 (INR 2,292) இலிருந்து €32 (INR 3,333) வரையிலான நிலையான EU அல்லாத டிக்கெட். அருங்காட்சியக அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த விலை உயர்வு ஒரு பெரிய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு நிதியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது “லூவ்ரே புதிய மறுமலர்ச்சி” என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு அவசர பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்தல் ஆகும். அக்டோபர் மாதத்தில் கிரீட நகைகளின் வியத்தகு திருட்டுக்குப் பிறகு இதுவும் ஒரு கண் திறக்கும். இது…

Read More

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) கட்​சி​யின் தலை​வர் மதன் ஷா. இவருக்கு பிஹார் தேர்​தலில் போட்​டி​யிடு​வதற்கு வாய்ப்பு வழங்​கப்​பட​வில்​லை. இதன் காரண​மாக அவர் கடந்த மாதம் சட்​டையை கிழித்​துக்​கொண்டு அழுது தனது விரக்​தியை வெளிப்​படுத்​தி​னார். மேலும், ஆர்​ஜேடி கட்சி 25 இடங்​களுக்கு மேல் தேறாது என்ற சாபத்​தை​யும் வழங்​கி​னார். இவர் வயிறு எரிந்து விட்ட சாபத்​தைப் போலவே ஆர்​ஜேடி 25 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​றது.

Read More