மேலும், ஏஐ மற்றும் சிடி பாடங்களை பள்ளிகளில் அறிமுகம் செய்வது தொடர்பாக ஆராய,சென்னை ஐஐடி பேராசிரியர் கார்த்திக் ராமன் தலைமையிலான நிபுணர்கள் குழுவை சிபிஎஸ்இ அமைத்தது. இதுகுறித்து மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலர் சஞ்சய் குமார் நேற்று கூறும்போது, ‘‘நம்மை சுற்றி உள்ள இந்த உலகத்தில் செயற்கை நுண்ணறிவு கல்வியை அடிப்படை திறனாக கருதவேண்டும். இதை முன்னிட்டு ஏஐ தொடர்பான பாடத்தை பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இது தேசிய கல்வி திட்டத்துடன் தொடர்புள்ளதாக மாற்றப்படும். எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த இது வழிவகுக்கும்’’என்றார்.இதன்படி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 3-ம் வகுப்பில் இருந்தே ஏஐ மற்றும் சிடி பாடங்கள் சேர்க்கப்படும். இதன்மூலம் தீவிர சிந்தனை, படைப்பாக்கம், செயற்கை நுண்ணறிவை சரியான நெறிமுறைகளுடன் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஆகியவற்றை இளம் வயதிலேயே கற்க முடியும். இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த…
Author: admin
141 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. டிம் ராபின்சன் 24 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 16 பந்தில் 21 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். டேவன் கான்வே 47 ரன்களும், மார்க் சாப்மேன் 21 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
சான்பிரான்சிஸ்கோ: இதய சிகிச்சை நிபுணர்களின் உலகளாவிய மாநாடு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் டெல்லி பத்ரா மருத்துவமனை டீனும், இதய சிகிச்சை நிபுணருமான டாக்டர் உபேந்திர கவுல், டுக்ஸ்டோ-2 என்ற பெயரில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளை தாக்கல் செய்தார். இந்த பரிசோதனை டாக்டர் கவுல் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவராக பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் பால், திட்ட இயக்குனராக டாக்டர் பிரியதர்ஷினியும் பணியாற்றினர்.இந்த பரிசோதனையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை இதய ஸ்டென்ட் ‘சுப்ராப்ளக்ஸ் க்ரஸ்’ மற்றும் சர்வதேச சந்தையில் கிடைக்கும் அமெரிக்க தயாரிப்பு ‘ஜீயன்ஸ்’ இதய ஸ்டெண்ட்டும் தீவிரமாக ஒப்பிடப்பட்டது. அப்போது டாக்டர் கவுல் கூறியதாவது:
தற்போதைய மேல்சாந்திகளின் பணிக்காலம் முடிவடைந்ததால், புதிய மேல்சாந்திகள் தேர்வு நேற்று நடைபெற்றது. ஐயப்பன் கோயிலுக்கு 14 பேரும், மாளிகைப்புரத்தம்மன் கோயிலுக்கு 13 பேரும் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களது பெயர்களை எழுதி, வெள்ளிக்குடத்தில் போட்டனர். பின்னர், பந்தள அரச குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் இருவர் குடவோலை முறையில் மேல்சாந்திகளை தேர்வு செய்தனர்.ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக பிரசாத் நம்பூதிரியும், மாளிகைப்புரத்தம்மன் கோயில் மேல்சாந்தியாக மனு நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் சூரி தற்போது ஹீரோவாக நடித்து வரும் படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்தப் படம், ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகிறது. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் சுஹாஸ், தமிழில் அறிமுகமாகிறார். நாயகியாக மஹிமா நம்பியார் நடிக்கிறார். சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சென்னை: தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார். பிஹார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் காங்கிரஸின் செயல்பாடு மற்றும் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் தயார் நிலை குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோருடன் நேற்று முன்தினம் டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது.
மும்பை: அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து மூன்று மாதங்களாக ரூ.77,000 கோடி மதிப்பிலான முதலீட்டை இந்திய பங்குச் சந்தையிலிருந்து திரும்ப பெற்ற நிலையில், கடந்த அக்டோபரில் ரூ.14,610 கோடியை அவர்கள் முதலீடு செய்துள்ளனர். பாரின் போர்ட்போலியோ இன்வெஸ்டார் (எப்பிஐ) எனும் அன்னிய முதலீட்டாளர்கள் பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக கணிசமான அளவில் முதலீட்டை திரும்ப பெற்றனர். அதன்படி, ஜூலையில் ரூ.17,700 கோடி, ஆகஸ்டில் ரூ.34,990 கோடி, செப்டம்பரில் ரூ.23,885 கோடி என ரூ.77,000 கோடி மதிப்பிலான தொகையை எப்பிஐ வெளியே எடுத்தனர். இந்த நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடு ஊக்கம்பெற்று வருவாய் அதிகரிப்பு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பு மற்றும் அமெரிக்கா-இந்தியா இடையே வர்த்தக பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை ஆகியவை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதய நோய் இன்று இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல்களில் ஒன்றாகத் தொடர்கிறது, மேலும் புதிய கண்டுபிடிப்புகள் மக்கள்தொகை முழுவதும் ஆபத்து சமமாக விநியோகிக்கப்படாமல் இருக்கலாம் என்று கூறுகின்றன. பெங்களூருவை தளமாகக் கொண்ட சமீபத்திய விசாரணையானது, சில குழுக்களுக்கு தீவிரமான இதய நிலைமைகளை உருவாக்கும் அபாயத்தை அதிக அளவில் ஏற்படுத்தக்கூடிய மரபணு மற்றும் பிராந்திய வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகிறது. தென்னிந்தியா அல்லது வட இந்தியர்கள் ஆபத்தான இதய நோய்களுக்கு அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்களா என்பது பற்றிய முக்கிய விவாதத்தை இந்த ஆய்வு தூண்டியுள்ளது, நீண்டகால அனுமானங்களை சவால் செய்கிறது மற்றும் ஸ்கிரீனிங் மற்றும் தடுப்பு பற்றிய அவசர கேள்விகளை எழுப்புகிறது. பூர்வீகம், புவியியல் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை இதய ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு மற்றும் அதிக உயிர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் நாடு தழுவிய தடுப்பு உத்திகளுக்கு அவசியமாகிறது.இந்தியாவில் இருதய நோய் அபாய காரணிகளில் உள்ள பிராந்திய…
கொல்கத்தா: ‘‘பாஜக.வினருக்கு ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் வழங்குவதை ஆளுநர் ஆனந்த போஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. கல்யாண் பானர்ஜி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி முதல்வராக பொறுப்பு வகிக்கிறார். இவரது கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி. அவ்வப்போது ஏதாவது கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜெஇஇ மெயின் தேர்வுக்கு நவ.27-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.இ, பி.டெக் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வு தாள்-1-ம், பி.ஆர்க், பி.பிளானிங் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வு தாள்-2-ம் தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படுகின்றன. இந்த நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல் என இரு முறை நடத்தப்படும்.
