புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் மதன் ஷா. இவருக்கு பிஹார் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவர் கடந்த மாதம் சட்டையை கிழித்துக்கொண்டு அழுது தனது விரக்தியை வெளிப்படுத்தினார். மேலும், ஆர்ஜேடி கட்சி 25 இடங்களுக்கு மேல் தேறாது என்ற சாபத்தையும் வழங்கினார். இவர் வயிறு எரிந்து விட்ட சாபத்தைப் போலவே ஆர்ஜேடி 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
Author: admin
இந்த நிலையில், பள்ளிகளின் வேண்டுகோளை ஏற்று, அதில் சில திருத்தங்கள் செய்து இறுதி தேர்வுக்கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்.17-ல் தொடங்கி மார்ச் 10-ம் தேதி முடிவடையும். அதேபோல, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.15-ல்தொடங்கி ஏப்.9-ம் தேதி முடிவடையும். தேர்வுகள் காலை அமர்வில் 10.30 மணி முதலும், மதிய அமர்வில் 1.30 மணி முதலும் தொடங்கும். விரிவான தேர்வுக் கால அட்டவணையை www.cbse.gov.in என்ற இணையதளத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு தொடங்குவதற்கு 110 நாட்களுக்கு முன்பாகவே அட்டவணை வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தேசிய கல்விக் கொள்கையின்படி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கு மட்டும் இந்த கல்வி ஆண்டு முதல் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. முதல்கட்ட தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்க உள்ள நிலையில், 2-ம் கட்ட தேர்வுகளை மே 15 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடத்த முடிவு…
குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென், சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசனுடன் மோதினார். இதில் லக்‌ஷயா சென் 21-13, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரணாய் 18-21, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ராஸ்மஸ் கெம்கேவிடம் தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 1945-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி அமெரிக்காவில் முதல் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அந்த நாடு இதுவரை 1,054 அணு ஆயுத சோதனைகளை நடத்தி உள்ளது. கடைசியாக கடந்த 1992-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி அமெரிக்காவின் நெவாடா அணு சக்தி சோதனை நடத்தியதில் பூமிக்கடியில் 2,300 அடி ஆழத்தில் சோதனை நடத்தப்பட்டது.
22-ம் தேதி முதல் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை தொடங்குகிறது. அதன்பின் மாலையில் யாக சாலை பூஜைகள் நடக்கின்றது. தொடர்ந்து, தினசரி காலை, மாலையில் இருவேளையும் பூஜைகள் நடைபெற்று, 27-ம் தேதி உச்சிக்காலத்துடன் பூர்த்தியாகிறது. மேலும், 22-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தினசரி இரவு மங்களகிரி விமானம், சந்திரபிரபை, ஆட்டுக்கிடா வாகனம், நாக வாகனம், மங்களகிரி விமானத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது.விழாவின் பிரதான நாளான 27-ம் தேதி இரவு 8 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்வு நடக்கிறது. முருகப் பெருமான் படை சூழ, யானை, சிங்கம், ஆடு உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை வேலால் வதம் செய்வார். அதனைத் தொடர்ந்து, 28-ம் தேதி இரவு 7 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று, சுவாமி வீதி உலா நடைபெறும். பின்னர், இரவு 8 மணிக்கு மேல் திருக்கல்யாண விருந்து நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் பிறந்த நடிகை சந்திரிகா ரவி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ‘பிளாக்மெயில்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். அடுத்து அவர் சாம் ஆண்டன் இயக்கும் ‘அன்கில்_123’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் அனுராக் காஷ்யப் கதையின் நாயகனாக நடிக்கிறார். இதைத் தொடர்ந்து சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதையைத் தழுவி உருவாகும் ‘சில்க் ஸ்மிதா: குயின் ஆஃப் தி சவுத்’ படத்தில் நடித்துள்ளார்.இவர் அமெரிக்காவில், ‘ஐஹார்ட் ரேடியோ மற்றும் ருகுஸ் அவென்யூ ரேடியோ ஆகிய பண்பலை வானொலியுடன் இணைந்து ‘த சந்திரிகா ரவி ஷோ’ எனும் நிகழ்ச்சியை தொடங்கி நடத்தி வந்தார். இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாவது சீசனை தொடங்கி இருக்கிறார்.
ஆலயக் கட்சியில் சென்னை மண்டலத்தைக் கவனிக்கும் பொறுப்பில் இருக்கும் ‘கிங்’ தலைவருக்கும் ‘சேகர’மான மாண்புமிகுவுக்கும் இடையில் வெடித்த மோதல் உரசிக்கிட்டே போகுதாம். முதன்மையானவரே தலையிட்டு சாந்தப் படுத்தியும் இருவரும் அதிகார அங்குசத்தை இன்னும் கீழே வைக்க வில்லையாம்.சமீபத்தில், தேர்தல் பணிகள் தொடர்பாக தலைநகர் மண்டலக் கூட்டத்தைக் கூட்டினாராம் ‘கிங்’ தலைவர். அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தை, மாவட்டப் பொறுப்பிலும் இருக்கும் ‘சேகர’மானவர் மட்டும், இவரெல்லாம் கூட்டம் போட்டு நான் போறதா என்ற கெத்துடன் புறக்கணித்து விட்டாராம். அப்படியும் விடாமல், ‘கிங்’ தரப்பிலிருந்து போனைப் போட்டு விசாரித் தார்களாம்.
தொடர் விடுமுறை: செப்டம்பர் மாதத்தில் ஒரு கோடியே 1 லட்சத்து 46 ஆயிரத்து 769 பேர் பயணம் செய்திருந்த நிலையில், அக்டோபரில் பயணிகள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி, தீபாவளி என தொடர் விடுமுறைகளால் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அதனால், மெட்ரோவில் பயணிப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது.அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 17-ம் தேதி 4 லட்சத்து 2 ஆயிரத்து 10 பேர் பயணம் செய்துள்ளனர். அந்த மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 47 லட்சத்து 59 ஆயிரத்து 171 பேர், பயண அட்டைகளை பயன்படுத்தி 77 ஆயிரத்து 236 பேர், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச் சீட்டு முறையைப் பயன்படுத்தி 44 லட்சத்து 91 ஆயிரத்து 339 பேர் பயணம் செய்துள்ளனர். இத்தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
உணவின் நேரம் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக வெளிப்பட்டுள்ளது, இது உட்கொள்ளும் ஊட்டச்சத்து தரத்தை பூர்த்தி செய்கிறது. மாலையில் இரவு உணவை சாப்பிடுவது வளர்சிதை மாற்றம், செரிமானம், தூக்கத்தின் தரம் மற்றும் நீண்ட கால நல்வாழ்வு ஆகியவற்றில் அர்த்தமுள்ள விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதிகரித்து வரும் சான்றுகள் தெரிவிக்கின்றன. மனித உடல் ஒரு உள் சர்க்காடியன் தாளத்தின்படி செயல்படுகிறது, ஹார்மோன் வெளியீடு, ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் ஆற்றல் செலவினங்களை 24 மணி நேர சுழற்சியில் கட்டுப்படுத்துகிறது. இந்த தாளத்துடன் உணவு நேரத்தை சீரமைப்பது உகந்த செரிமான செயல்பாட்டை செயல்படுத்துகிறது, ஹார்மோன் சமநிலையை ஆதரிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்ற இடையூறுகளின் அபாயத்தை குறைக்கிறது. உடல் பருமன், வகை 2 நீரிழிவு நோய் மற்றும் தூக்கக் கோளாறுகள் அதிகரித்து வரும் சூழலில், இரவு 8 மணிக்குள் இரவு உணவை முடித்துக்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், ஆற்றல் ஒழுங்குமுறையை மேம்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த உடலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும்…
புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலா மருத்துவமனையில் உமர் நபி மருத்துவராக பணியாற்றி வந்தார். அங்கு சக மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் உமர் நபி தலைமறைவானார். இதன்பிறகு ஹரியானாவின் நூ நகரில் அவர் 10 நாட்கள் பதுங்கி இருந்துள்ளார். அங்கு ஹிதாயத் காலனியில் உள்ள வீட்டில் அவர் தங்கியிருந்து உள்ளார். இந்த வீடு, அல் பலா மருத்துவமனை ஊழியர் சோகிப்பின் உறவினர் வீடு ஆகும். சோகிப் கைது செய்யப்பட்டு உள்ளார். வீட்டின் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். அவரை தீவிரமாக தேடி வருகிறோம்.
