கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 1-1 என டிரா செய்திருந்தது. இந்தத் தொடரில் தென்ஆப்பிரிக்க அணி கைப்பற்றிய 39 விக்கெட்களில் 35-ஐ கேசவ் மஹாராஜ், சைமன் ஹார்மர், செனுரன் முத்துசாமி ஆகியோரை உள்ளடக்கிய சுழல் கூட்டணி வீழ்த்தியிருந்தது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களான நோமன் அலி, சஜித் கான், ஆசீப் அப்ரிடி ஆகியோர் கூட்டாக 27 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் மேம்பட்ட செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தனர். 36 வயதான சைமன் ஹார்மர் முதல்தர கிரிக்கெட்டில் ஆயிரம் விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்திய ஆடுகளங்களுக்கு அவர், ஒன்றும் புதியவர் இல்லை.கடந்த 2015-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் மொகாலி, நாக்பூர் டெஸ்டில் அவர், விளையாடியிருந்தார். அப்போது சேதேஷ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, ரித்திமான் சாஹா ஆகியோரது விக்கெட்களை சைமன் ஹார்மர் வீழ்த்தியிருந்தார். தற்போது 10 வருடங்களுக்கு பிறகு அவர், இந்திய மண்ணில்…
Author: admin
கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அந்நாட்டு ராணுவ தாக்குதலில் 18 போராளிகள் உயிரிழந்தனர்.உளவுத் தகவலின் அடிப்படையில் பலுசிஸ்தானின் குவெட்டா மாவட்டம், சில்டன் மலைத்தொடரிலும், கெச் மாவட்டத்தின் புலேடாவிலும் பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவு தேடுதல் பணி மேற்கொண்டது.
இந்நிலையில், ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்திர மகா தேசிகனின் குருவான சுவாமி தேசிகனின் அவதாரத் திருநாளையொட்டி, திருவல்லிக்கேணி அஹோபில மடத்தில் சுவாமி தேசிகன் உற்சவம் அக்.2-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, அக்.2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை, தினசரி காலையில் பல்லக்கு சேவையும், மாலையில் கேடயம், சிம்ம வாகனம், சூரியபிரபை, சந்திர பிரபை, ஹம்ச வாகனம், யானை வாகனம், யாளி வாகனம், குதிரை வாகனத்தில் வீதி உலா நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு திருத்தேரில் சுவாமி தேசிகன் எழுந்தருளினார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் இருந்து தேர் புறப்பட்டது. பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க 4 மாட வீதிகளில் தேர் வலம் வந்தது. அப்போது பக்தர்கள் சுவாமி தேசிகனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
இந்தோ- சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு புது டெல்லியில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து ஐரோப்பிய திரைப்பட விழாவை சென்னையில் நடத்துகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் ஃபிரான்சைஸ் வளாகத்தில் நவ.17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடக்கும் இப்பட விழாவில் 6 படங்கள் திரையிடப்படுகின்றன.நவ.17-ம் தேதி மாலை 5 மணிக்கு பிரெஞ்சு காமெடி டிராமா திரைப்படமான ‘ஜிம்’ஸ் ஸ்டோரி’யும், அன்று இரவு 7 மணிக்கு பின்லாந்து படமான ‘ஜேவிடா’வும் திரையிடப்படுகின்றன.. ஒரு பெண்ணின் 3 வெவ்வேறு காலகட்டங்களை விவரிக்கும் படம் இது.
“பிஹார் தேர்தலுக்குப் பிறகு பல பாடங்களை கற்றிருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். காங்கிரஸுடன் இருந்தால் உங்களையும் இழுத்து மூழ்கடித்து விடுவார்கள் எனும் மற்றொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் என அவருக்குச் சொல்லிக் கொள்கிறேன்’’ என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் பேசுகையில், “வாக்குகளை திருடிவிட்டார்கள் என்று சொல்லிவந்தார் ராகுல் காந்தி. ஆனால் பிஹார் மக்கள், எங்கள் ஓட்டு எங்களிடம் தானே இருக்கிறது எனக் கூறி, பொய் சொல்பவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அவருக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள்’’ என்றார்.
இதுகுறித்து கணக்கன்பட்டி விவசாயி அப்பாசாமி துரை கூறியதாவது: விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் குறித்த நேரத்தில் உரம் மற்றும் மருந்து தெளிக்க முடியாத நிலை உள்ளது. அதனை, ட்ரோன் மூலம் பூர்த்தி செய்ய முடிகிறது. ட்ரோன் மூலம் பயிர்களின் மேல் சரியான அளவு சீராக மருந்து தெளிக்கப்படுவதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது.ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் நாள் முழுவதும் செய்ய வேண்டிய வேலை, ஒரு மணி நேரத்துக்குள் முடிந்து விடுகிறது. ட்ரோன் தொழில்நுட்பத்தால் நேரமும், பணமும் மிச்சமாகிறது. விவசாயிகள் பலரும் ட்ரோனை பயன்படுத்தி மருந்து தெளிக்க தொடங்கி உள்ளனர். அதனால், இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, முன்பதிவு செய்தால் மட்டுமே ட்ரோன் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது, என்றார்.
பிரான்சின் தலைநகரான பாரிஸ், உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகமான லூவ்ரே. ஆனால் இந்த அருங்காட்சியகம் 2026 முதல் நுழைவுக் கட்டணத்தை உயர்த்த உள்ளது என்பதுதான் செய்தி. ஆனால் புதிய விதி ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பார்வையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது இங்குள்ள பிடிப்பு. இதன் பொருள், ஐரோப்பியர் அல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனுமதியில் அனுமதிக்கப்பட்ட 45% உயர்வை செலுத்த வேண்டும். 14 ஜனவரி 2026 முதல் €22 (INR 2,292) இலிருந்து €32 (INR 3,333) வரையிலான நிலையான EU அல்லாத டிக்கெட். அருங்காட்சியக அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த விலை உயர்வு ஒரு பெரிய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு நிதியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது “லூவ்ரே புதிய மறுமலர்ச்சி” என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு அவசர பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்தல் ஆகும். அக்டோபர் மாதத்தில் கிரீட நகைகளின் வியத்தகு திருட்டுக்குப் பிறகு இதுவும் ஒரு கண் திறக்கும். இது…
புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் மதன் ஷா. இவருக்கு பிஹார் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவர் கடந்த மாதம் சட்டையை கிழித்துக்கொண்டு அழுது தனது விரக்தியை வெளிப்படுத்தினார். மேலும், ஆர்ஜேடி கட்சி 25 இடங்களுக்கு மேல் தேறாது என்ற சாபத்தையும் வழங்கினார். இவர் வயிறு எரிந்து விட்ட சாபத்தைப் போலவே ஆர்ஜேடி 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த நிலையில், பள்ளிகளின் வேண்டுகோளை ஏற்று, அதில் சில திருத்தங்கள் செய்து இறுதி தேர்வுக்கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்.17-ல் தொடங்கி மார்ச் 10-ம் தேதி முடிவடையும். அதேபோல, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.15-ல்தொடங்கி ஏப்.9-ம் தேதி முடிவடையும். தேர்வுகள் காலை அமர்வில் 10.30 மணி முதலும், மதிய அமர்வில் 1.30 மணி முதலும் தொடங்கும். விரிவான தேர்வுக் கால அட்டவணையை www.cbse.gov.in என்ற இணையதளத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு தொடங்குவதற்கு 110 நாட்களுக்கு முன்பாகவே அட்டவணை வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தேசிய கல்விக் கொள்கையின்படி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கு மட்டும் இந்த கல்வி ஆண்டு முதல் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. முதல்கட்ட தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்க உள்ள நிலையில், 2-ம் கட்ட தேர்வுகளை மே 15 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடத்த முடிவு…
குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென், சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசனுடன் மோதினார். இதில் லக்‌ஷயா சென் 21-13, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரணாய் 18-21, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ராஸ்மஸ் கெம்கேவிடம் தோல்வி அடைந்தார்.
