ஆகவே, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், அரசின் உரிய அங்கீகாரத்தை பெற சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வந்துள்ளனர். அவற்றை பள்ளி நிர்வாகம் பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளது.இந்நிலையில், அரசின் உரிய அங்கீகாரம் இன்றி கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆண்டார்மடம் தனியார் பள்ளியை இன்று காலை பள்ளிக் கல்வித் துறையின் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) தேன்மொழி, பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளின் முன்னிலையில், திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் உள்ளிட்டோர் அடங்கிய காவல்துறை பாதுகாப்புடன் அதிரடியாக மூடி ‘சீல்’ வைத்தார்.
Author: admin
தற்போது போடப்படும் ஆஸ்திரேலிய பிட்ச்கள் கணிக்க முடியாததாகி வருகிறது. மேலும், இங்கிலாந்து பவுலர்கள் ஸ்விங் செய்வதற்கு ஏற்ப அமையாது. இங்கு வேகமும் பவுன்ஸும் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் ஆஷஸ் முதல் டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.பெர்த்தில் வரும் 21-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது, ஆப்டஸ் ஸ்டேடியத்தின் பிட்ச் நிச்சயம் பவுலிங்கிற்கு, குறிப்பாக வேகப்பந்து வீச்சுக்கு அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய ரக கூகபரா ‘சீம் அப்’ பந்து வீச்சுக்குச் சாதகமாகவே இருக்கும் என்று ஸ்டீவ் ஸ்மித் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை அமெரிக்காவில் பல வகை விசாக்களில் பணியாற்றும் இந்தியர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைகள் உட்பட வெளிநாட்டினர் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. இந்த விதிமுறைப்படி, வெளிநாட்டு தொழிலாளர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு பணி நீட்டிப்பு அனுமதி கிடைக்காது.இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை துறை இயக்குநர் ஜோசப் எட்லோ கூறுகையில், “வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கும் முன் அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு அங்கீகாரம் காலாவதியாவதற்கு 180 நாட்களுக்கு முன்பே, பணி நீட்டிப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அமெரிக்காவில் பணியாற்றுவதை வெளிநாட்டு தொழிலாளர்கள் ஒரு வாய்ப்பாக கருத வேண்டும். உரிமையாக கருதக் கூடாது” என்றார்.
சென்னை: நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு, வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகளின் பதிப்புகளை வெளிக்கொண்டு வர இக்கால அறிஞர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவுறுத்தியுள்ளார். பாரம்பரிய குருகுல முறையின்கீழ் 16 தேர்வுகளை உள்ளடக்கிய ஆறு ஆண்டு கால பாடத்திட்டமாக, தெனாலி சாஸ்திர பரீட்சை உள்ளது. இந்த சாஸ்திர பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 12 சாஸ்திர அறிஞர்களை, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டி, ஆசி வழங்கினர்.
நான் நடிக்கும் அனைத்து படமும் எனக்கு முதல் படம் போலத்தான் என்று நடிகர் அர்ஜுன் கூறினார். அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘தீயவர் குலை நடுங்க’. தினேஷ் இலட்சுமணன் இயக்கி உள்ள இப்படத்தில் ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, வேல ராம மூர்த்தி, ஓஏகே. சுந்தர் உள்ளிட் டோர் நடித்துள்ளனர்.
திருச்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாய் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து புறத்தேர்வு பேராசிரியரால் முனைவராக அறிவிக்கப்பட்டார். தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி பாரதி தாசன் பல்கலை.க்கு உட்பட்ட தேசியக் கல்லூரி விளையாட்டுத் துறையில் தனது முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிக்கு பதிவு செய்து, அதற்கான முன்மொழிவை 2021 அக்டோபர் மாதம் சமர்ப்பித்தார்.
புதுடெல்லி: பின்டெக் நிறுவனமான பாரத்பே நிறுவனத்தின் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக (சிஎச் ஆர்ஓ) ஹர்ஷிதா கன்னா நேற்று நியமிக்கப்பட்டார். ஹோம் கிரெடிட் இந்தியா, அல்காடெல் லூசென்ட், சிஎஸ்சி, ஹெவிட் ஆகியவற்றில் பணியாற்றிய கன்னா 18 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர்.இதுகுறித்து பாரத்பே தலைமை செயல் அதிகாரி நலின் நெகி கூறுகையில்,“உயர்செயல் திறன் கலாச்சாரத்தை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார்” என்றார். இதே போன்று என்ஐஐடி நிறுவனத்தில் ஷில்பா துபா புதிய சிஎச் ஆர்ஓ-வாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ், வால்மார்ட், ஹிந் துஸ்தான், கோகோ-கோலா, ஜிஎஸ்கே போன்ற நிறுவனங் களில் பணியாற்றியுள்ளார்.
சூரிய உதயத்திற்கு முன் எழுந்திருப்பது அல்லது முழு இருளில் உங்கள் நாளைத் தொடங்குவது, பிஸியான கால அட்டவணையின் பாதிப்பில்லாத பகுதியாகத் தோன்றலாம், ஆனால் அது உங்கள் உடல் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதில் அமைதியாக தலையிடலாம். மனிதர்கள் இயற்கையான காலை ஒளியுடன் விழித்தெழுந்தனர், மேலும் நமது உள் அமைப்புகள் ஒளிக்கும் நேரத்திற்கும் இடையிலான உறவால் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இருட்டாக இருக்கும்போதே நாம் விழிக்கும்போது, நம் மூளை ஒரு குழப்பமான சமிக்ஞையைப் பெறுகிறது மற்றும் ஓய்வில் இருந்து எச்சரிக்கைக்கு மாறுவதற்கான நேரம் இது என்பதை அடையாளம் காண போராடுகிறது. அந்த தவறான சீரமைப்பு காலை நேரத்தை மந்தமானதாக உணர வைக்கும், பகல்நேர சோர்வை அதிகரிக்கும் மற்றும் கவனத்தை பலவீனப்படுத்தும். காலப்போக்கில், நாளின் சரியான நேரத்தில் வெளிச்சம் இல்லாததால், இடையூறு விளைவிக்கும் தூக்க முறைகள், மனநிலை சிரமங்கள் மற்றும் நீண்ட கால ஆரோக்கிய விளைவுகள் ஆகியவை அவ்வப்போது ஏற்படும் மோசமான நிலையை விட மிகவும்…
புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) நிறுவனர் லாலு மகள் ரோஹிணி ஆச்சார்யா, குடும்பம், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு சகோதரன் தேஜஸ்வியின் நெருங்கிய நண்பர்கள் ரமீஸ் நிமத் மற்றும் சஞ்சய் யாதவ்தான் காரணம் என்றும் குற்றம்சாட்டி உள்ளார். ஆர்ஜேடி.யில் அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரமீஸ், சஞ்சய் ஆகியோர் யார்? கடந்த 2 ஆண்டுகளாக தேஜஸ்வியின் அரசியல் குழுவில் ரமீஸ் நிமத், சஞ்சய் யாதவ் ஆகியோர் முக்கியமானவர்களாக உள்ளனர். உ.பி. பல்ராம்பூரைச் சேர்ந்தவர் ரமீஸ். இவரது தந்தை நியாமத்துல்லா கான். பல்ராம்பூர் தொகுதி சமாஜ்வாதி முன்னாள் எம்.பி. ரிஸ்வான் ஜாகீரின் மருமகன் ரமீஸ். ரிஸ்வான் மூலம் அரசியல் அனுபவம் பெற்ற ரமீஸுக்கு தேஜஸ்வி நட்பு கிடைத்தது. தேஜஸ்வி விளையாடி வந்த கிரிக்கெட் கிளப்பில் ரமீஸும் இருந்தார். அதனால் இருவருக்குள் நட்பு உருவானது. அதன்பின் அரசியல் களத்தை ஏற்படுத்தி கொண்டார் ரமீஸ்.
அதன்படி, திறன் இயக்கத் தேர்வில் 7 லட்சத்து 46,594 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 2 லட்சத்து 98,998 பேர் (40%) தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரி, திருச்சி, நீலகிரி, பெரம்பலூர், நெல்லை, ஈராடு ஆகிய மாவட்ட மாணவர்கள் 50 முதல் 70 சதவீதம் அளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரம் வேலூர், விருதுநகர், திருவாரூர், தென்காசி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்ட மாணவர்கள் 28 முதல் 33 சதவீதம் அளவுக்கு மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அவர்களுக்கு உரிய வகுப்புக்கு அனுப்பப்பட்டு, தொடர்ச்சியான வகுப்பறை கற்றலுக்கு அனுமதிக்கப்படுவர்.அதேபோல், எஞ்சியுள்ள 4 லட்சத்து 47,596 திறன் இயக்க மாணவர்களுக்கும் தொடர் பயிற்சி அளித்து அடுத்த பிப்ரவரி மாதத்துக்குள் கற்றல் அடைவு எட்டப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
