Author: admin

ஜியுகு​வான்: பூமி​யில் இருந்து சுமார் 425 கி.மீ. தொலை​வில் சீனா​வின் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யம் (தி​யான்​காங்) செயல்​படு​கிறது. இதுகுறித்து சீன விண்​வெளித் துறை செய்​தித் தொடர்​பாளர் ஜாங் ஜிங்போ கூறிய​தாவது:சீன விண்​வெளி வீரர்​கள் ஜாங் லு, வூ பெய், ஜாங் ஹாங்​ ஜாங் ஆகியோர் வெள்​ளிக்​கிழமை (இன்று) பூமி​யில் இருந்து தியான்​காங் விண்​வெளி நிலை​யத்​துக்கு புறப்​படு​கின்​றனர்.

Read More

தூத்துக்குடி: திருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசியதாவது: ”திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா வரும் அக்.22ம் தேதி தொடங்கி அக்.28ம் தேதி வரை நடைபெறுகிறது. அக்.27ம் தேதி மாலை 4 மணிக்கு சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவர் இப்போது ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சந்துரு இயக்கியுள்ள இப்படம் நவ.28-ல் வெளியாக இருக்கிறது. மேலும், விஜய் தேவரகொண்டாவுடன் ‘தோட்டம்’, மிஷ்கினுடன் ஒரு படம் என நடித்து வருகிறார். இந்நிலையில், யுனிசெஃபின் குழந்தைகள் நலனுக்கான தூதராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தனது சமூக வலை தளப் பக்கத்தில் தெரிவித் துள்ளஅவர், “இந்தியாவில் குழந்தைகளுக்கான யுனிசெஃப் தூதராக இணைவதில் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமாக வளரவும், கற்றுக்கொள்ளவும், கனவு காணவும் தகுதியானது.

Read More

மதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் நவம்பர் 20-ம் தேதி எங்கள் பயணம் அரசியல் கட்சியா,இயக்கமா அல்லது சங்கமா என்பதை அறிவிக்க உள்ளோம். திராவிட இயக்க கருத்தியலில் இருந்து பின் வாங்கக்கூடாது என உறுதியாக இருக்கிறோம். கார்ப்பரேட் அரசியல்வாதியாக துரை வைகோ இருக்கிறார். துரை வைகோ மீது இன்னும் மதிமுக-வில் பலர் எதிர்ப்பு மனநிலையில் உள்ளனர். மாமல்லபுரத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. துரை வைகோவும் அரசியலில் பயிற்சி விமானி போன்று தான். மதிமுக-வில் இருந்து வெளியேறிய பின்னர் என்னுடன் இருந்த தோழர்கள் அனைவரும் திமுக-வில் இணைய வேண்டும் என்றே விரும்பினர். அது திமுக கூட்டணியை பலவீனப்படுத்தி, சங் பரிவார் அமைப்புகளுக்கு சாதகமாக மாறும் என்பதால் அதை செய்யவில்லை.

Read More

இதுதொடர்பாக பைசாபஜார் நடத்திய ஆய்வில் தெரியவந் துள்ளதாவது: கிரெட்டிட் கார்டு மூலம் கடன் வாங்கி இந்த தீபாவளியை பலர் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர். குறிப்பாக, 42 சதவீதம் பேர் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது தங்களது ஷாப்பிங்கிற்காக ரூ.50,000-க் கும் மேல் செலவிட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.இது நுகர்வோரிடையே அதிக பொருட்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தை அடிக்கோடிட்டு காட்டுவதாக உள்ளது. 22% பேர் ரூ. 50,000 முதல் ரூ. 1 லட்சம் வரை செலவிட் டுள்ளனர், அதே நேரத்தில் 20% பேர் இந்த தீபாவளியின் போது ரூ.1 லட்சத்திற்கு மேல் தங்கள் கிரெடிட் கார்டுகளில் செலவிட்டுள்ளனர்.

Read More

எஞ்சியிருக்கும் ரொட்டிகள் பெரும்பாலும் சலிப்பாகவும் விரும்பத்தகாததாகவும் கருதப்படுகின்றன. அந்த எளிய கார்ப் நிறைந்த டிஸ்க்குகளை புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான ஆதாரமாக மாற்றலாம் என்று நாங்கள் சொன்னால் என்ன செய்வது? ஆம், நீங்கள் சரியாகப் படித்தீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது, வேறு சில பொருட்களைச் சேகரித்து, அவற்றைத் தூக்கி, சிறிது நெய் அல்லது எண்ணெயுடன் உங்கள் ரொட்டியைத் துலக்கினால் போதும், உங்கள் பயணத்தின்போது புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ரோல்கள் ருசிக்க தயாராக உள்ளன. படிக்காதவர்களுக்கு, உடலில் உள்ள தசைகள், திசுக்கள் மற்றும் செல்களை உருவாக்க மற்றும் சரிசெய்ய புரதம் அவசியம். ஆரோக்கியமான தோல், முடி மற்றும் நகங்களை பராமரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. புரதம் நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது மற்றும் ஹார்மோன்கள் மற்றும் என்சைம்களை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆய்வுகளின்படி, அதிக புரத உட்கொள்ளல் குறைந்த இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றின் அபாயத்தைக்…

Read More

பிஹார்: லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது புதிய கட்சி 22 தொகுதிகளில் போட்டியிட்டது. மஹுவா சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட்டார். அவர் உட்பட ஜன சக்தி ஜனதா தளத்தின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர்.இதுதொடர்பாக பாட்னாவில் உள்ள தேஜ் பிரதாப் யாதவின் வீட்டில் கட்சி தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரேம் யாதவ் கூறும்போது, “தேர்தல் தோல்வி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். அடுத்த கட்டமாக கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம். பிஹாரில் பதவியேற்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசுக்கு எங்கள் கட்சி தார்மிக அடிப்படையில் ஆதரவு அளிக்கும்’’ என்று தெரிவித்தார்.

Read More

ஆகவே, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், அரசின் உரிய அங்கீகாரத்தை பெற சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வந்துள்ளனர். அவற்றை பள்ளி நிர்வாகம் பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளது.இந்நிலையில், அரசின் உரிய அங்கீகாரம் இன்றி கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆண்டார்மடம் தனியார் பள்ளியை இன்று காலை பள்ளிக் கல்வித் துறையின் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) தேன்மொழி, பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளின் முன்னிலையில், திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் உள்ளிட்டோர் அடங்கிய காவல்துறை பாதுகாப்புடன் அதிரடியாக மூடி ‘சீல்’ வைத்தார்.

Read More

தற்போது போடப்படும் ஆஸ்திரேலிய பிட்ச்கள் கணிக்க முடியாததாகி வருகிறது. மேலும், இங்கிலாந்து பவுலர்கள் ஸ்விங் செய்வதற்கு ஏற்ப அமையாது. இங்கு வேகமும் பவுன்ஸும் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் ஆஷஸ் முதல் டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.பெர்த்தில் வரும் 21-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது, ஆப்டஸ் ஸ்டேடியத்தின் பிட்ச் நிச்சயம் பவுலிங்கிற்கு, குறிப்பாக வேகப்பந்து வீச்சுக்கு அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய ரக கூகபரா ‘சீம் அப்’ பந்து வீச்சுக்குச் சாதகமாகவே இருக்கும் என்று ஸ்டீவ் ஸ்மித் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

Read More

இந்த நடவடிக்கை அமெரிக்​கா​வில் பல வகை விசாக்​களில் பணி​யாற்​றும் இந்​தி​யர்​கள் மற்​றும் அவர்​களின் வாழ்க்​கைத் துணை​கள் உட்பட வெளி​நாட்​டினர் பலருக்கு பாதிப்பை ஏற்​படுத்​தும் என தெரி​கிறது. இந்த விதி​முறைப்​படி, வெளி​நாட்டு தொழிலா​ளர்​கள், தங்​களின் வேலை​வாய்ப்பு அங்​கீ​கார ஆவணங்​களை புதுப்​பிக்க வேண்​டும். இல்​லை​யென்​றால் அவர்​களுக்கு பணி நீட்​டிப்பு அனு​மதி கிடைக்​காது.இதுகுறித்து அமெரிக்க குடி​யுரிமை துறை இயக்​குநர் ஜோசப் எட்லோ கூறுகை​யில், “வெளி​நாட்டு தொழிலா​ளர்​களுக்கு பணி நீட்​டிப்பு வழங்​கும் முன் அவர்​களின் ஆவணங்​கள் சரி​பார்க்​கப்​படு​வதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படு​கிறது. வேலை​வாய்ப்பு அங்​கீ​காரம் காலா​வ​தி​யா​வதற்கு 180 நாட்​களுக்கு முன்​பே, பணி நீட்​டிப்பு அனு​ம​திக்கு விண்​ணப்​பிக்க வேண்​டும். அமெரிக்​கா​வில் பணி​யாற்​று​வதை வெளி​நாட்டு தொழிலா​ளர்​கள் ஒரு வாய்ப்​பாக கருத வேண்​டும். உரிமை​யாக கருதக் கூடாது” என்​றார்.

Read More