சென்னை: ஆடவருக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வந்தது.இதன் இறுதிப் போட்டியில் நேற்று தமிழ்நாடு – தெலங்கானா அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ்நாடு அணி சார்பில் 13-வது நிமிடத்தில் சவுவிக் ஹால்டரும், 45+1-வது நிமிடத்தில் அபிட்நேகோவும் கோல் அடித்து அசத்தினர்.
Author: admin
ஆசிய – பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இடையே, டொனால்டு ட்ரம்ப்பும் ஜி ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், பேச்சுவார்த்தை மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது எனக் குறிப்பிட்டார். மேலும் அவர், ஃபெண்டானில் (வலிகளைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருந்து) உற்பத்தியைத் குறைக்க ஜி ஜின்பிங் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.
கிச்சா சுதீப், கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற ‘மேக்ஸ்’ படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கி இருந்தார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹோர்னாட், ஆடுகளம் நரேன், சுனில் உட்பட பலர் நடித்திருந்தனர். கன்னடம், தமிழ், தெலுங்கில் உருவான இப்படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் அடுத்தப் படத்தை அறிவித்தார் சுதீப்.
இந்த தடையை நீக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.எம்.பக்க்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு: அப்போது யுஜிசி சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இதுதொடர் பான மசோதாக்களுக்கு கெடு விதித்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க வேண்டும்’’ என்றார். அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி. வில்சன், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், ‘‘இந்த வழக்குக்கும், மசோதாக்களுக்கு கெடு விதித்த விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இதுகுறித்து 2025, நவம்பர் 19-க்குள் வங்கிகளிட மிருந்து அதன் திட்டங்கள் மற்றும் கருத்துகளை ரிசர்வ் வங்கி வரவேற்கிறது, வெளிநாடுகளில் இருந்து நடைபெறும் பணப்பரிமாற்றங் களின் செயல்திறனை வேக மாகவும், வெளிப்படையாக வும், அதிகம் அணுகக்கூடிய தாகவும் மாற்ற வேண்டும்.பணப் பரிமாற்றங்களின் வேகத்தை பாதிக்கும் பல காரணிகள் உள்ளன. அதில் பயனா ளியின் வங்கியில் பணம் பெறப்பட்டதிலிருந்து பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும் வரை எடுத்துக்கொள்ளும் நேரம் முக்கியமாகும். இந்நிலையில், பயனாளி வங்கியில் செயல் முறைகளை ஒழுங்குபடுத்துவது, பணம் செலுத்தும் தகவல் மற்றும் பயனாளியின் கணக்கில் வரவுவைப்பதை சரியான நேரத்தில் தெரிவிப்பதை உறுதி செய்வது ஆகியவை சிறந்த தீர்வாக அமையும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பெண்களைப் பொறுத்தவரை, புரதம் என்பது தசைகளை உருவாக்குவது அல்ல, இது நீண்ட கால ஆரோக்கியத்தின் மூலக்கல்லாகும். போதுமான உணவுப் புரதம் தசை பராமரிப்பு, எலும்பு வலிமை மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, குறிப்பாக பெண்கள் வயதாகும்போது, பெரிமெனோபாஸ் அல்லது பிந்தைய மாதவிடாய் நிற்கும் போது. வயதான பெண்களுக்கு, நிலையான பரிந்துரையை விட அதிகமாக உட்கொள்வது சிறந்த தசை நிறை, வலுவான எலும்புகள், குறைந்த கொழுப்பு-ஒல்லியான விகிதம் மற்றும் மேம்பட்ட உடல் செயல்பாடு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. உயர்தர உணவுப் புரதத்திற்கு முன்னுரிமை அளிப்பது வயதானது, செயலற்ற தன்மை அல்லது ஹார்மோன் மாற்றங்களுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்க உதவும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. படம்: கேன்வா பெண்களுக்கு உண்மையில் எவ்வளவு புரதம் தேவைவயது வந்தோருக்கான பரிந்துரைக்கப்பட்ட உணவுக் கொடுப்பனவு ஒரு நாளைக்கு ஒரு கிலோ உடல் எடையில் 0.8 கிராம் ஆகும், ஆனால் இது குறைபாட்டைத் தடுப்பதற்கான குறைந்தபட்சம்,…
உயிர்வாழ்வது சாத்தியமற்றதாகத் தோன்றும் இடங்களில் கூட, வாழ்க்கை அடிக்கடி மாற்றியமைக்க ஆச்சரியமான வழிகளைக் காண்கிறது. செர்னோபிலின் அழிக்கப்பட்ட அணு உலையின் கைவிடப்பட்ட இடிபாடுகளுக்குள், விஞ்ஞானிகள் ஒரு விசித்திரமான கருப்பு பூஞ்சையைக் கண்டுபிடித்தனர், அது தீவிர கதிர்வீச்சைத் தக்கவைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், அதை நோக்கி வளர்ந்து அதை ஆற்றலுக்காகப் பயன்படுத்தக்கூடும். நாசாவின் விண்வெளி உயிரியல் குழுக்களுடன் பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இந்த கதிர்வீச்சை உண்ணும் பூஞ்சை ஒரு நாள் செவ்வாய் பயணத்தில் விண்வெளி வீரர்களைப் பாதுகாக்க உதவும் என்று பரிந்துரைத்துள்ளனர்.செர்னோபில் பூஞ்சை மற்றும் கதிர்வீச்சுடன் அதன் அசாதாரண உறவு1997 ஆம் ஆண்டில், உக்ரேனிய மைகாலஜிஸ்ட் நெல்லி ஜ்தானோவா சேதமடைந்த செர்னோபில் அணுஉலைக்குள் நுழைந்து எதிர்பாராத ஒன்றைக் கண்டார். கருப்பு அச்சு கூரைகள், சுவர்கள் மற்றும் பாதுகாப்பு உலோக குழாய்களுக்குள் கூட பரவியது. அவரது ஆய்வுகள் 37 பூஞ்சை இனங்களை ஆவணப்படுத்தியுள்ளன, அவற்றில் பல…
இந்நிலையில், அந்த வெடிபொருட்களுக்கு பைகள் தைப்பதற்காக நவ்காமில் உள்ள டெய்லர் முகமது ஷபி பரே (57) என்பவரை வெள்ளிக்கிழமை காலை போலீஸார் அழைத்து சென்றனர். இந்நிலையில், சாப்பிடுவதற்காக டெய்லர் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மகள் ”வெளியில் கடும் குளிராக உள்ளது அப்பா. நீங்கள் வேலைக்கு போக வேண்டாம்” என்று கெஞ்சி அடம்பிடித்துள்ளார்.அதற்கு டெய்லர் பரே ”சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன்” என்று கூறி மகளை சமாதானப்படுத்திவிட்டு சென்றுள்ளார். ஆனால், விதியின் விளையாட்டு உயிரில்லாத அவர் உடல் மட்டும்தான் மறுநாள் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது, அப்பாவை பார்த்து மகள் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
தொடர்ந்து 2-வது நாளான நேற்று நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பெற்றோர்கள் முன் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதை மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்களும் ஆய்வு செய்தனர். ஒட்டுமொத்தமாக ஆர்டிஇ ஒதுக்கீட்டில் 70,449 குழந்தைகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திர மோகன் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: ”தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான ஆர்டிஇ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் வெளிப்படையான முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 7,717 பள்ளிகளில் ஆர்டிஇ ஒதுக்கீட்டில் சேர 82,016 குழந்தைகள் விருப்பம் தெரிவித்தன. அதில் விதிமுறைகளின்படி எல்கேஜி வகுப்பில் சேர 70,350 குழந்தைகளுக்கும், ஒன்றாம் வகுப்பில் சேர 99 பேருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து இந்தியாவுக்காக ஆட வேண்டுமெனில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடி தங்களை மேட்ச் ஃபிட் ஆக வைத்துக் கொள்ள வேண்டுமென்று பிசிசிஐ புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. சிட்னியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆடிய அற்புத இன்னிங்ஸ்கள் இன்னும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்று விட்டன. இதனையடுத்து இனி ரோஹித், கோலியைப் பற்றி கம்பீர் அண்ட் கோ வாயைத்திறக்காது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த புதிய கெடுபிடியை அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
