சொத்துவரி முறைகேடு வழக்கில் மதுரை திமுக மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் அதிரடியாக கைதுசெய்யப் பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் அதிமுக-வினருக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுவதால் அடுத்தகட்ட விசாரணை அதுகுறித்தும் நகர்வதாகச் சொல்கிறார்கள். மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவர்கள், அதிகாரிகள் துணையோடு பல கோடி ரூபாய் அளவுக்கு சொத்துவரி முறைகேடு நடந்திருப்பதாக சர்ச்சை வெடித்ததால் மண்டலத் தலைவர்கள் அனைவரிடமும் அவசரகதியில் ராஜினாமா கடிதங்களை எழுதி வாங்கியது திமுக தலைமை. தொடர்ந்து, இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை மேயரின் கணவர் பொன்.வசந்த் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதிமுக முக்கிய பிரமுகர்களின் வணிகக் கட்டிடங்களுக்கு திமுக-வினர் தாராளமாக வரிக்குறைப்பு செய்து கொடுத்திருப்பதாகவும் செய்திகள் வருவதால் அதுகுறித்தும் இப்போது விசாரணை நீள்கிறது. தனது வார்டு பெண்களுக்கானதாக ஒதுக்கப்பட்டதால் அங்கே தனக்குப் பதிலாக தனது மனைவியை நிறுத்தி ஜெயிக்க வைத்த…
Author: admin
ஜன்மாஷ்தமி நாளை, ஆகஸ்ட் 16, 2025. அதனுடன் சின்னமான கோபி உடை, ராதாவால் ஈர்க்கப்பட்ட மிக அழகான, துடிப்பான உடையில் ஆடை அணிவதற்கான சரியான சாக்கு வருகிறது. வெறும் ஆடைகளை விட, இது பாரம்பரியம், நேர்த்தியுடன் மற்றும் பக்தியின் கொண்டாட்டமாகும். இந்த ஜன்மாஷ்டமியை ஒரு கோபி ஆடை எப்படி அணிவது? | கடன்: இன்ஸ்டாகிராம்/சிண்டமனிடியானாநீங்கள் ஒரு கோயில் நிகழ்வில் கலந்துகொள்கிறீர்களா, நடன நிகழ்ச்சியில் சேருகிறீர்களோ, அல்லது வீட்டில் பண்டிகை ஆவிக்குள் ஊறவைத்தாலும், ஒரு கோபி ஆடையை குறைபாடற்ற முறையில் எவ்வாறு உலர்த்துவது மற்றும் பாணி செய்வது என்பதை அறிந்து உங்கள் தோற்றத்தை அழகாக இருந்து தெய்வீகத்திற்கு கொண்டு செல்லலாம். இந்த ஜன்மாஷ்டமியை ஒரு கோபி ஆடை எப்படி அணிவது? | கடன்: இன்ஸ்டாகிராம்/சிண்டமனிடியானாஉங்கள் சொந்தமாக ஒரு சரியான கோபி ஆடை அணிவது எப்படி?பாயும் பாவாடையுடன் தொடங்கவும் அல்லது இலகுரக சேலை ஒரு பாவாடைக்குள் மீண்டும் அமைக்கவும். ஜார்ஜெட், சிஃப்பான் அல்லது பருத்தி…
புதுடெல்லி: கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதி வாக்காளர் பட்டியல் தரவுகளை அவர் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் வாக்காளர் பட்டியலை பாஜக ஆய்வு செய்து திரட்டிய தரவுகளை அக்கட்சி எம்.பி. அனுராக் தாக்கூர் நேற்று டெல்லியில் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: ராகுல் காந்தியின் ரேபரேலி, பிரியங்கா காந்தியின் வயநாடு, அகிலேஷ் யாதவின் கனோஜ், டிம்பிள் யாதவின் மெயின்புரி, அபிஷேக் பானர்ஜியின் டயமன்ட் ஹார்பர் ஆகிய மக்களவை தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியிலும் வாக்காளர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது. பாஜக நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. போலி வாக்காளர்கள், போலி முகவரிகள், போலி குடும்பத்தினர், போலியான வயது, பெருமளவில் வாக்காளர் சேர்க்கை ஆகிய 5 விதங்களில் இந்த முறைகேடு நடந்துள்ளது. வாக்குத் திருட்டு மூலம் இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள்…
சென்னை: 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை இன்று ஏற்றினார். பின்னர் தனது சுதந்திர தின சிறப்புரையில் அவர் பேசியது குறித்து விரிவாக பார்ப்போம். “தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!” என சொல்லி தனது உரையை முதல்வர் தொடங்கினார். “இன்று நாம் தலைநிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி பாட பாடுபட்ட விடுதலை வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், மாண்பமை நீதி அரசர்களே, சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், காவல் துறை தலைவர் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், விடுதலைப் பெருவிழாவைக் கொண்டாடும் பேரன்புக்குரிய தமிழ்நாட்டு மக்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது…
உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை அளவிட நீங்கள் (எப்போதும்) ஒரு ஆக்கிரமிப்பு பரிசோதனையைச் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் வேறுவிதமாக ஆரோக்கியமாக இருந்தால், மூளையில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சில எளிய வீட்டு சோதனைகளும் உங்களுக்குக் கூறலாம். எப்படி என்று யோசிக்கிறீர்களா? பார்ப்போம் …ரேம் சோதனைவிரைவான மாற்று இயக்கம் (RAM) சோதனை என்பது ஒரு அடிப்படை நரம்பியல் பரிசோதனையாகும், இது மென்மையான ஒருங்கிணைந்த இயக்கங்களை உருவாக்க தேவையான மூளை-தசை ஒருங்கிணைப்பை மதிப்பீடு செய்கிறது. சோதனை சிறுமூளையை குறிவைக்கிறது, இது தசை ஒருங்கிணைப்புடன் சமநிலைக்கான கட்டுப்பாட்டு மையமாக செயல்படுகிறது, மேலும் துல்லியமான இயக்கம் செயல்படுத்தல். ரேம் சோதனையின் போது, நீங்கள் விரைவான கை புரட்டுதல் இயக்கங்கள் அல்லது விரல் தட்டுதல் வடிவங்களைச் செய்ய வேண்டும். மென்மையான மற்றும் விரைவான சோதனை செயல்திறனுடன் சிரமம் என்பது மூளை அல்லது நரம்பு மண்டலத்தில் உள்ள சிக்கல்களைக் குறிக்கலாம், இது சிறுமூளை செயலிழப்பின் விளைவாகும், இது பெரும்பாலும் காயங்கள்,…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது துணிச்சலுடன் போரிட்ட, எல்லை பாதுகாப்பு படையின் 16 அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு வீர தீர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு துணிச்சலுடன் செயல் ஆற்றிய வீரர்களுக்கு வீர தீர விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. கடந்த மே 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பாகிஸ்தானின் பல பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டனர். இவற்றை எல்லை பாதுகாப்ப படையினர் மற்றும் இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், எல்லைப் பாதுகாப்பு படையைச் (பிஎஸ்எப்) சேர்ந்த ஒரு துணை கமாண்டன்ட், 2 உதவி கமான்டன்ட், ஒரு ஆய்வாளர்…
பெரம்பலூர்: “தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை விசிக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சென்னையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மீது பதிவு செய்த வழக்கை திரும்பப் பெற வேண்டும். தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு வழங்குவதாக அறிவித்துள்ள திட்டங்களை நான் வரவேற்கிறேன். இந்த பணி நிரந்தர கோரிக்கை திமுக ஆட்சியில் மட்டுமில்லை. அதிமுக ஆட்சியில் இருந்து தொடர்ந்து வருகிறது. ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் 11 மண்டலங்களின் தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டன. இன்னும் 4 மண்டலங்கள் உள்ளன. அதில் 2 மண்டலங்களை தனியார் மயமாக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை அரசு திரும்ப பெறவேண்டும். திருநெல்வேலியில் நடந்த பட்டமளிப்பு விழாவின்போது மாணவி ஒருவர்…
ஒரு சமீபத்திய ஆய்வு உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்களுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவின் குறிப்பிடத்தக்க நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது. ஒருவரின் உணவில் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகளை இணைப்பது இரத்த அழுத்தத்தை திறம்பட குறைக்கும், சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இருதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்பதை ஆராய்ச்சி நிரூபிக்கிறது. சோடியம் பைகார்பனேட்டைப் போலல்லாமல், பழங்கள் மற்றும் காய்கறிகள் இந்த நன்மைகளை அடைகின்றன, அதே நேரத்தில் மருந்துகளின் தேவையை குறைக்கும். உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், உலகளவில் சுமார் 1.28 பில்லியன் பெரியவர்களை (30-79 வயது) பாதிக்கிறது. இவற்றில், இந்த நிலை உள்ளது என்பதை சுமார் 46% பேர் அறிந்திருக்கவில்லை. உயர் இரத்த அழுத்தம் ஒரு அமைதியான கொலையாளி மற்றும் இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற நாட்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும். சில காரணிகள் உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கின்றன; இருப்பினும்,…
புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலியான பாரிமேட்சின் ரூ.110 கோடி வங்கி நிதியை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை இயக்குநரகம் நேற்று கூறியுள்ளதாவது: சைப்ரஸ் நாட்டை தளமாகக் கொண்ட பாரிமேட்ச் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளத்தின் இந்திய செயல்பாடுகளுக்கு எதிராக சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரிமேட்ச் தொடர்புடைய மோசடி வங்கி கணக்குகளில் முதலீட்டாளர்கள் டெபாசிட் செய்திருந்த ரூ.110 கோடி முடக்கப்பட்டுள்ளது. மேலும், 1,200 கிரெடிட் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாரிமேட்ச் சூதாட்ட செயலியில் முதலீட்டாளர்கள் டெபாசிட் செய்த தொகை நாடு முழுவதும் வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி போலி வங்கிக் கணக்குகள் மூலம் வெளிநாடுகளுக்கு திருப்பிவிடப்பட்டு பல ஆயிரம் கோடி மோசடி நடைபெற்றுள்ளது. இவ்வாறு அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. பாரிமேட்ச் செயலியானது விளையாட்டு போட்டிகளின் ஸ்பான்சர்ஷிப் மூலமாக இந்தியாவில் பிரபலமானது. அதிக வருமானம் ஈட்டித் தருவதாக கூறி முதலீட்டாளர்களை ஏமாற்றி ஒரு வருடத்தில் மட்டும் ரூ.3,000 கோடிக்கும் மேல்…
சென்னை: நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதிகண்ட சோழன் சிலை அருகில் நடந்த இந்த நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், தமிழக அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பின்னர், உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி, தலைமை நீதிபதி கவுரவித்தார். தொடர்ந்து, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. முன்னதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்…