சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு சட்டக் கல்லூரிஇணை பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு, நவம்பர் 19 முதல் 24 வரை நடத்தப்பட உள்ளது. தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.தேர்வர்கள் தங்களின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Author: admin
மும்பை: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (14ம் தேதி) தொடங்குகிறது. இந்நிலையில் எஸ்ஏ 20 கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தத் தொடரின் கமிஷனரும், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனுமான கிரேம் ஸ்மித் பங்கேற்றார். அப்போது அவர், கூறியதாவது: துணைக் கண்ட ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு முன்னரே வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விக்கெட்களை இழக்க யாரும் விரும்ப மாட்டார்கள். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி சுழற்பந்து வீச்சை கையாள்வதற்கான உத்திகளை வகுக்கும் முயற்சியில் ஈடுபடும் என்று நான் நம்புகிறேன்.
அப்போது லாட்டரி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் இந்தியாவை சேர்ந்தவன். கடந்த 18 மாதங்களாக அபுதாபியில் பணியாற்றி வருகிறேன். அவ்வப்போது லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவேன். அண்மையில் யுஏஇ லாட்டரியின் 12 டிக்கெட்டுகளை வாங்கினேன். இதில் கடைசி டிக்கெட்டை எனது அம்மாவின் பிறந்த நாளை அடிப்படையாக வைத்து வாங்கினேன். அதற்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது.விலை உயர்ந்த காரை வாங்க திட்டமிட்டு உள்ளேன். எனது முதல் பரிசு கிடைத்ததை 7 நட்சத்திர ஓட்டலில் மிகப்பெரிய விழாவாக கொண்டாட உள்ளேன். இந்தியாவில் உள்ள என் தாய், தந்தையை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்து வருவேன். போதிய பணம் இருப்பதால் நாங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்பமாக வாழ்வோம். எனது தாய், தந்தைக்கு சில கனவுகள் உள்ளன.
தனுஷ் நடித்துள்ள இந்தி படமான ‘தேரே இஷ்க் மெய்ன்’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தேரே இஸ்க் மே’. இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழில் உருவாகியுள்ள இந்தப் படம் நவ. 28-ல் ரிலீசாகிறது. இந்நிலையில் இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை: வங்கக் கடலில் நவ. 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், தமிழகத்தில் இன்றுமுதல் 23-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது இன்று மேற்கு அல்லது வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.
கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை பெரும்பாலான நாட்களில் உயர்ந்து வந்தது. அக்.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. ஓரிரு நாட்களில் பவுன் ரூ.1 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென விலை குறைந்து, ரூ.96,000-க்கு விற்கப்பட்டது. இதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இதற்கிடையில், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதை குறைத்ததால், தங்கம் விலை இறங்கியது.
சத்குரு எப்போதும் ஆரோக்கியமாக சாப்பிடுவது மற்றும் எளிமையான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ்வது பற்றி பேசுகிறார். இவை அனைத்தும் மெதுவான மற்றும் ஆரோக்கியமான காலை வழக்கத்துடன் தொடங்குகிறது, அங்கு நீங்கள் ஒரு நல்ல இரவு தூக்கத்திற்குப் பிறகு உடலுக்குள் என்ன வைக்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். ஒருவர் சாப்பிடக்கூடிய பல காலை பானங்கள் இருந்தாலும், சுக்கு காபி என்றும் அழைக்கப்படும் இஞ்சி கொத்தமல்லி காபியை காலையில் முயற்சிக்குமாறு அவர் பரிந்துரைக்கிறார். சுக்கு காபி என்பது தென்னிந்திய பாரம்பரிய மூலிகை பானமாகும், இது காபி பீன்ஸிலிருந்து அல்ல, ஆனால் உலர்ந்த இஞ்சியிலிருந்து (சுக்கு) தயாரிக்கப்படுகிறது. இது தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் பிரபலமான காஃபின் இல்லாத காஃபின், இது வெப்பமயமாதல், குணப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. உலர்ந்த இஞ்சியை தண்ணீர், மிளகு, கொத்தமல்லி விதைகள், பனை வெல்லம் அல்லது வெல்லம், சில சமயங்களில் துளசி அல்லது ஏலக்காய் சேர்த்து வேகவைத்து,…
ஒவ்வொரு சில மாதங்களுக்கும், இந்தியர்கள் துணைக் கண்ட வம்சாவளியைக் கொண்ட உலகளாவிய உயரடுக்கின் புதிய உறுப்பினரைக் கண்டுபிடித்து உடனடியாக அதிகாரப்பூர்வமற்ற தேசியப் பட்டியலில் சேர்க்கிறார்கள். ஷிவோன் ஜிலிஸ், எலோன் மஸ்க் உடன் நான்கு குழந்தைகளைக் கொண்ட AI நிர்வாகி, சமீபத்திய நுழைவு. மஸ்க் அவளை “அரை-இந்தியன்” என்று விவரித்தார், இது அவள் யார், அவள் உண்மையில் எப்படி இந்தியர் என்பது பற்றிய ஆர்வத்தின் அலையைத் தூண்டுவதற்கு போதுமானதாக இருந்தது.பதில் எளிய மற்றும் வியக்கத்தக்க அடுக்கு.அவளுடைய பஞ்சாபி பாரம்பரியம்ஷிவோன் ஜிலிஸ் ஒன்டாரியோவின் மார்க்கமில் ஒரு பஞ்சாபி இந்திய தாய் மற்றும் ஒரு வெள்ளை கனடிய தந்தைக்கு பிறந்தார். வம்சாவளியின்படி, அவள் உண்மையில் பாதி இந்தியர். அவரது தாயார், சாரதா, ஒரு பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர், மேலும் அந்த பரம்பரையே கஸ்தூரி குறிப்பிடும் இந்திய இணைப்புக்கு அடிப்படையாக உள்ளது.ஆனால் வம்சாவளி தானாக அடையாளமாக மாறாது. ஜிலிஸ் ஒருமுறை அவர் “அழகான வெள்ளை நிறமாக மாறினார்”…
குவாஹாட்டி: அயோத்தி ராம ஜென்ம பூமி இயக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த 1989-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி பிஹாரின் பாகல்பூர் பகுதியில் விஎச்பி சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியாக சென்றவர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக கடந்த 1989-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி பாகல்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து, முஸ்லிம் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் அங்குள்ள காலிபிளவர் தோட்டத்தில் புதைக்கப்பட்டன. இதன் காரணமாக இது, “காலி பிளவர் புதைப்பு வழக்கு" என்று அழைக்கப் படுகிறது.
வணக்கம், என் பெயர் சசிதரன். நான் காஞ்சிபுரத்தில் வசிக்கிறேன். ‘நான் முதல்வன்’ திட்டத்தை பற்றி எனக்கு என் நண்பர் மூலமாகத் தெரிய வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித் தேர்வுகள் – குறிப்பாக SSC, RRB மற்றும் Banking தேர்வுகளுக்காக இலவச உண்டு உறைவிடப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் தங்குமிடம், உணவு, பயிற்சி என அனைத்தும் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வாய்ப்புக்காக நான் விண்ணப்பித்தேன். அதன் அடிப்படையில் நடத்திய நுழைவுத் தேர்வில் முதல் 1000 பேரில் நான் தேர்வு செய்யப்பட்டு, சென்னை ‘நான் முதல்வன்’ மையத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு SSC CHSL Mains தேர்வு இருந்தது. அங்கு இருந்த நிபுணர் மென்டர்களின் வழிகாட்டுதலாலும், நண்பர்களுடன் சேர்ந்து படித்த சூழலாலும் எனக்கு மிகச் சிறந்த பயிற்சி கிடைத்தது. பலரும் கிராமப்புறங்கள், பின்தங்கிய பகுதிகளில் இருந்து வந்து ஒரே குடும்பமாகக் கற்றுக் கொண்டோம். பயிற்சி வகுப்புகள், வழிகாட்டுதல்…
