மதுரை: தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையை வைத்து திமுக கூட்டணியை உடைக்க நினைப்பது அற்பமான அரசியல் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி இன்று மதுரையில் தெரிவித்துள்ளார். மதுரை அண்ணாநகரில் இன்று விசிக நிர்வாகி இல்ல விழாவில் தொல்.திருமாவளவன் எம்.பி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக விசிக தொடக்கத்திலிருந்து குரல் கொடுத்து வருகிறோம். மத்திய, மாநில அரசு துறைகளில் தனியார் மயம் தீவிரமடைந்து வருகிறது. அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் அப்புறப்படுத்தியதாக காவல் துறையும் அமைச்சரும் தெரிவித்தனர். தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். அதனை தனியார் மயமாக்கக் கூடாது என தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்தினோம். கைது செய்ததை கண்டித்ததோடு, அவர்கள் மீதான வழக்கையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினோம். இதை வைத்து அரசியல் செய்வது அர்த்தமற்ற அணுகுமுறை. தூய்மைப் பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை…
Author: admin
ஆம், அது சரி. புரதம் தசைகள் மற்றும் திசு பழுதுபார்ப்பை உருவாக்க உதவுவது மட்டுமல்லாமல், மூளை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. புரதத்தின் பற்றாக்குறை மனநிலை அல்லது சிக்கல் சிந்தனையின் மாற்றங்களுக்கும் வழிவகுக்கும். புரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனவை, அவை செரோடோனின், டோபமைன் மற்றும் நோர்பைன்ப்ரைன் போன்ற நரம்பியக்கடத்திகளின் கட்டுமானத் தொகுதிகள் ஆகும். இந்த நரம்பியக்கடத்திகள் மனநிலை, உந்துதல், கவனம் மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மைக்கு காரணமாகின்றன. ஆனால் புரத அளவுகள் குறையும் போது, அது இருண்ட தன்மை, எரிச்சல், பதட்டம் மற்றும் மன அழுத்த பதில்களுக்கு வழிவகுக்கும்.
சென்னை: நடிகை கஸ்தூரி இன்று சென்னை தியாகராய நகரில் அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நடிகை கஸ்தூரியும், நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், நமிஸ் சவுத் குயின் இந்தியா (Namis South Queen India) நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்துவும் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா முன்னிலையில், இணைந்தனர். சமூக செயல்பாட்டாளரான கஸ்தூரி மற்றும் நமீதா மாரிமுத்து இன்று முதல் அதிகாரபூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் பாஜகவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்
புதுடெல்லி: ஆளும் பாஜக ஆட்சியில் நீடிக்க எந்த அளவிற்கான நேர்மையற்ற செயலை செய்யவும் தயாராக உள்ளது. தேர்தல்களில் பெரிய அளவிலான முறைகேடுகள் தற்போது வெளிச்சத்துக்கு வருகின்றன என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்தார். 79-வது சுதந்திர தினமான இன்று புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான இந்திரா பவனில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேசியக் கொடியை ஏற்றினார். இதனை தொடந்து பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்தில் நீடிக்க எந்த அளவுக்கான நேர்மையற்ற செயலை செய்யவும் தயாராக உள்ளது. பிஹார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் எதிர்க்கட்சி வாக்குகள் வெளிப்படையாகக் குறைக்கப்படுகிறது. பிஹாரில் 65 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு பாஜகவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனவே இதனால் யார் பயனடைகிறார்கள் என்பது தெரிகிறது. இது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான போராட்டம் அல்ல, இந்தியாவின் ஜனநாயகத்தைக்…
50 ஆண்டு கால திரையுலக பயணத்துக்கு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். இதற்கு அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ரஜினிகாந்த், “அனைவருக்கும் 79-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள். எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும், கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ…
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் சுதந்திர தினமான இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். கடந்த 2 மாதங்களில் 64 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆறு மாதம், ஒரு ஆண்டு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று 24 மீனவர்கள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர். இந்நிலையில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்ற தர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நடத்தி வருகின்றனர். புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர். மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திர தினமான இன்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடம் வலசை தெருவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த…
சென்னை: இந்திய சந்தையில் போக்கோ எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வரும் போக்கோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் பிரிவில் போனை வாங்க விரும்பும் பயனர்களை கருத்தில் கொண்டு இந்த போனை போக்கோ அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் உள்ளது. போக்கோ எம்7 பிளஸ் போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? 6.9 இன்ச் எல்சிடி டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் ஸ்னாப்டிராகன்…
ஸ்பை யுனிவர்ஸ் படங்களில் மிக குறைந்த அளவிலேயே ‘வார் 2’ திரைப்படம் வசூல் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிம்ஸ் தொடர்ச்சியாக பல்வேறு ஸ்பை யுனிவர்ஸ் படங்களை தயாரித்து வருகிறது. இதில் ‘டைகர்’, ‘பதான்’, ‘வார்’ உள்ளிட்ட பல படங்கள் அடங்கும். இதில் ஷாரூக்கான், சல்மான்கான், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக வெளியான படம் ‘வார் 2’. இது பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. ‘வார் 2’ படத்தின் ட்ரெய்லர், போஸ்டர்கள் எதுவுமே மக்களிடையே பெரிதாக ஈர்க்கவில்லை. இதனால் அனைத்து மாநிலங்களிலும் குறைந்த அளவிலேயே வசூல் செய்திருக்கிறது. குறிப்பாக ஸ்பை யுனிவர்ஸ் படங்களின் முதல் நாள் வசூலில் மிக குறைந்த வசூல் செய்த படம் என்ற பெயரை ‘வார் 2’ எடுத்துள்ளது. இப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார் ஜூனியர் என்.டி.ஆர். ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருப்பதால் தெலுங்கில் மிகப்பெரிய அளவுக்கு வசூல்…
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (ஆக.16) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்ட் 17 முதல் 21ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும்…
கிஷ்த்வார்: ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திலிருந்து மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று மேகவெடிப்பின் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் சோசிட்டி மலை கிராமத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஆக உள்ளது. இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படுவதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளில் என்டிஆர்எப், எஸ்டிஆர்எப், காவல்துறை, ராணுவம் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இந்த சோக சம்பவம் நடந்தபோது மச்சைல் மாதா கோயில் யாத்திரையின் கடைசி கட்டத்துக்காக சோசிட்டியில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான யாத்ரீகர்களில் ஒன்பது வயது சிறுமி தேவன்ஷியும் ஒருவர். மேகவெடிப்பால் திடீர் வெள்ளம் ஏற்பட்டபோது ஒரு மேகி-பாயிண்ட் கடையில் சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கி புதைந்திருந்த அவர், சில மணி நேரங்களுக்குப் பிறகு…