Author: admin

இப்படத்துக்காக படக்குழுவினர் அனைவரும் இணைந்து பேட்டியொன்று அளித்துள்ளனர். அதில் ‘வடசென்னை’ படத்தின் சந்திரா கதாபாத்திரம் குறித்து பேசியிருக்கிறார் ஆண்ட்ரியா. அப்பேட்டியில், “’வடசென்னை’ படத்தின் சந்திரா கதாபாத்திரத்திற்குப் பிறகு எனக்கு எந்தவொரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.ஆனால் நிறைய பாராட்டுகள் கிடைத்தது, வேலை கிடைக்கவில்லை. இங்கு துரதிர்ஷ்டவசமாக நிறைய நடிகர்கள் தங்களது படங்களில் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை விரும்புவதில்லை. இதை நான் தமிழ் சினிமாவில் கவனிப்பது மட்டுமன்றி, என் திரையுலக வாழ்விலும் கவனிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா.

Read More

முன்னதாக, செய்தியாளர்களிடம் வைகோ கூறியது: “மது,போதைப்பொருட்களால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். கல்லூரிகளில் சாதி சங்கங்களால் மாணவர்கள் இடையே மோதல் போக்கு உள்ளது. இவற்றை பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், முதல்வர்கள் தடுக்க வேண்டும். பெற்றோரும் பிள்ளைகளை கண்டிக்க வேண்டும். கல்லூரிகளில் நட்பு, சமூக உணர்வு வளரவேண்டும். மது, போதையை ஒழிக்க அரசு, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலங்களை விற்காதீர்கள்… 25 ஆண்டுக்கு பிறகு உணவு பஞ்சம் தாக்கும் அபாயம் உள்ளது.மது, போதை ஒழிப்பு, சாதி சங்கங்களுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறேன். ஏற்கெனவே பொது பிரச்னைகளுக்காக 7 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் செய்துள்ளேன். தற்போதைய பயணத்தில் அண்ணா, கருணாநிதி அடித்தளமிட்ட திராவிட இயக்கம் பாதுகாக்கவேண்டும். இதற்காக திமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவேன்.

Read More

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் நேற்று (அக்.28) ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் இறங்கிய நிலையில் அந்த இன்ப அதிர்ச்சி இன்று நீடிக்கவில்லை. இன்று (அக்.29) பவுனுக்கு ரூ.1080 அதிகரித்து மீண்டும் ஒரு பவுன் ரூ.90 ஆயிரத்தை நெருங்கியது.கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை பெரும்பாலான நாட்களில் உயர்ந்து வந்தது. அக்.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. ஓரிரு நாட்களில் பவுன் ரூ.1 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென விலை குறைந்து, ரூ.96,000-க்கு விற்கப்பட்டது. இதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இதற்கிடையில், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதை குறைத்ததால், தங்கம் விலை இறங்கியது.

Read More

நீண்ட ஆயுளில் மரபணுக்கள் பங்கு வகிக்கின்றன என்றாலும், உண்மை என்னவென்றால், ஒருவர் எவ்வளவு காலம் வாழ்கிறார் என்பதும் உடற்பயிற்சி நிலைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, உங்கள் உடலைக் கவனித்துக்கொள்வது மட்டுமல்ல, உங்கள் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதும் சமமாக முக்கியமானது, நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல், உள்ளே இருந்து வலுவாகவும் இருக்கிறீர்கள். டாக்டர் வாஸ், எம்.டி மற்றும் நீண்ட ஆயுள் நிபுணர், இந்த 5 பயோமார்க்ஸர்களை வெளிப்படுத்துகிறார், ஒருவர் எவ்வளவு காலம் வாழ்கிறார், எப்படி…ApoB: கொலஸ்ட்ரால் கேரியர் ஆபத்துApoB தமனிகளை அடைக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் துகள்களை அளவிடுகிறது. உயர் நிலைகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் முரண்பாடுகளை அதிகரிக்கின்றன, ஆயுட்காலம் குறைக்கின்றன. ஒவ்வொரு நிலையான உயர்வும் 13% அதிக இதய இறப்பு அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கப்பல் சேதத்தை கணிக்க எல்டிஎல் கொலஸ்ட்ராலை துடிக்கிறது. பெரிய ஆய்வுகளில், ApoB மொத்த இறப்புடன் U-வடிவத்தை உருவாக்குகிறது – மிகக் குறைந்த அல்லது…

Read More

பாட்னா: பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) அரசு பதவி​யேற்​கிறது. நிதிஷ் குமார் 10-வது முறை​யாக மீண்​டும் முதல்​வ​ராக பதவி​யேற்​பார் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களை கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றிருக்​கிறது. ஆர்​ஜேடி, காங்​கிரஸ் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​துள்​ளன. இதையடுத்து பிஹாரில் புதிய அரசு அமைப்​பது தொடர்​பாக பாஜக மற்​றும் ஐக்​கிய ஜனதா தள தலை​வர்​கள் தீவிர ஆலோ​சனை நடத்தி வரு​கின்​றனர். பிஹார் முதல்​வரும் ஐக்​கிய ஜனதா தள தலை​வரு​மான நிதிஷ் குமார் பாட்​னா​வில் நேற்று கட்​சி​யின் மூத்த தலை​வர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தினார்.

Read More

முதுநிலை டிகிரியுடன் ஸ்லெட், நெட் தகுதி தேர்வு தேர்ச்சி அல்லது பிஎச்டி தகுதியும், கல்வியியல் கல்லூரி ஏதாவது முதுநிலை டிகிரியுடன் எம்எட் ஸ்லெட், நெட் அல்லது பிஎச்டி முடித்து இருக்க வேண்டும். இத்தகுதியுள்ளவர்கள் நவம்பர் 19ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் கல்வியியல் கல்லூரிக்கு தகுதியான ஆசிரியர்கள் ஆன்லைனில் விண்ணப்ப விவரங்களை பதிவேற்ற முடியாமல் குளறுபடி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான (எம்ஏ, எம்எஸ்சி, எம்.காம்) காலத்தில் முதுநிலையில் என்ன மேஜர் (எம்ஏ தமிழ், ஆங்கிலம் மற்றும் எம்எஸ்சி கணிதம், இயற்பியல்) என்ற உட்பிரிவு இன்றி எம்எட் என்று இருக்கிறது.

Read More

புதுடெல்லி: சீனாவின் ஷாங்காய் நகரில் சீன ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனையான அனஹத் சிங், உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள எகிப்தின் சனா இப்ராகிமுடன் மோதினார். இதில் அனஹத் சிங் 11- 5, 6- 11, 4- 11, 7- 11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் போன்டி ஓபன் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டியின் கால் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனையான ராதிகா சுதந்திர சீலன், தாய்லாந்தின் அனந்தன பிரசேர்த்ரதனகுல்லுடன் மோதினார். இதில் ராதிகா 11- 7, 11- 3, 11- 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

Read More

இதனைத் தொடர்ந்து ஜப்பான் சென்ற ட்ரம்ப், அந்நாட்டின் புதிய பிரதமர் சனே தகைச்சியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்பதை ஜப்பான் ஆதரிப்பதாக சனே தகைச்சி கூறியதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜப்பான் தனியாக அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.ட்ரம்ப் உடனான சந்திப்பின்போது பேசிய தகைச்சி, “தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதி செய்வதில் அதிபர் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். மேலும், மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் ஒரு வரலாற்றுச் சாதனையாகும்” என தெரிவித்துள்ளார்.

Read More

மகிழ் திருமேனி இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படத்தினை கடைசியாக இயக்கியிருந்தார் மகிழ் திருமேனி. அப்படம் போதிய வரவேற்பினைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான பணிகளை கவனித்து வந்தார். தற்போது அதனை மிராக்கிள் மூவிஸ் என்ற மும்பை நிறுவனம் தயாரிக்க முன்வந்திருப்பதாக தெரிகிறது.

Read More

மதுரை: சென்னை உயர் நீதிமன்ற ஆளுகைக்குள் இருந்து வரும் சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் ஆளுகைக்குள் மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேட்டுக்கொண்டுள்ளார். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பார் அசோசியேஷனுக்கு (எம்எம்பிஏ) இன்று வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணிபுரிந்தபோது தமிழ் கற்றேன். தமிழ் இலக்கியம் உட்பட பல்வேறு புத்தகங்களை படித்தேன். அப்போது சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றிருந்த தனக்கு அநீதி இழைத்த மதுரை மாநகரை கண்ணகி எரித்த சம்பவம் என்னை பாதித்தது. இது தொடர்பான பல்வேறு கருத்துகளை எனது தீர்ப்புகளில் தெரிவித்துள்ளேன்.

Read More