Author: admin

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இந்​தத் தொடரில் முதல் 3 சுற்​றுகள் நிறைவடைந்த நிலை​யில் ஒரு​நாள் ஓய்​வுக்கு பின்​னர் நேற்று 4-வது சுற்​றின் முதல் ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. இதில் இந்​தி​யா​வின் ஆர்​.பிரக்​ஞானந்​தா, ஃபிடே​வின் கீழ் பொது வீர​ராக பங்​கேற்​றுள்ள டேனியல் துபோவுடன் பலப்​பரீட்சை நடத்​தி​னார். இதில் 14-வது நகர்​வின் போது ராணி முன்​னால் இருந்த சிப்​பாயை பிரக்​ஞானந்தா கவனக்​குறை​வாக நகர்த்​தி​னார். இந்த நகர்வு டேனியல் துபோவுக்கு வெற்​றியை தேடிக்​கொடுக்​கும் நிலைக்கு கொண்டு செல்​லக்​கூடிய​தாக இருந்​தது.

Read More

வாஷிங்டன்: அமெரிக்க அரசு முடக்கம் ஏற்பட்டு 3 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், இது நீடித்தால் அமெரிக்காவில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கிவரும் சலுகையான ஃபுட் ஸ்டாம்ப்ஸ் (Food Stamps) என்று சுருக்கமாக அழைக்கப்படும் துணை ஊட்டச்சத்து உதவித் திட்டம் (Supplemental Nutrition Assistance Program) முடங்கும் சூழல் ஏற்படும். நவம்பரில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நிதியில்லை என்று வேளாண் துறை தெரிவித்துள்ள நிலையில், இதை நம்பியுள்ள 4.2 கோடி அமெரிக்கர்கள் இந்த உதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த அபாயத்தைப் பற்றி பெரிதாகக் கண்டுகொள்ளாத அமெரிக்க அரசு, இப்படியொரு நிலை உருவானால் அதற்கு அமெரிக்க எதிர்க்கட்சிதான் காரணம் என்ற வகையில் ஜனநாயகக் கட்சி மீது பழியைத் தூக்கிப் போட்டுள்ளது. அமெரிக்க வேளாண் துறை செயலர் ப்ரூக் ரோலின்ஸ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “ஜனநாயகக் கட்சியினர் அந்நியர்களுக்கு ஆதாயமாக இருக்கும் ஹெல்த் கேர் திட்டத்துக்காக…

Read More

துல்கர் சல்மானின் கதைத் தேர்வுகள் எப்போதுமே நம்பிக்கை அளிப்பவை. அவ்வப்போது சில சறுக்கல் இருந்தாலும் அடுத்த படத்திலேயே அதை சரிசெய்யும் விதமான வெரைட்டியான கதைகளை தொடர்ந்து கொடுத்து வருபவர். இதற்கு முன்பு அவரது நேரடி தமிழ்ப் படமான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ அவருக்கு தமிழில் ஒரு தனி இடத்தை பெற்றுத் தந்தது. அதன்பிறகு அவர் மறுபடியும் நடித்திருக்கும் நேரடி தமிழ்ப் படம்தான் ‘காந்தா’. படத்தின் தொடக்கத்தில் ஒரு கொலை நடக்கிறது. கட் செய்தால் மாடர்ன் ஸ்டுடியோஸ் உரிமையாளர் மார்ட்டின் (ரவீந்திர விஜய்), அய்யா என்று அனைவராலும் மதிக்கப்படும் இயக்குநரிடம் (சமுத்திரக்கனி) ஏற்கெனவே படப்பிடிப்பு நடந்து பின்னர் கைவிடப்பட்ட தன் படத்தை மீண்டும் எடுக்கலாம் என்று கூறுகிறார். அந்த காலகட்டத்தில் நடிப்புச் சக்கரவர்த்தி என்று புகழப்படும் உச்ச நட்சத்திரமான டி.கே.மகாதேவனுக்கும் (துல்கர் சல்மான்) அய்யாவுக்கும் இடையே நடந்த ஈகோ மோதலே அப்படம் ட்ராப் ஆன காரணம். மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Read More

அதன் பிறகு, நீர் வரத்தை பொறுத்து, பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டும், அதிகரிக்கப்பட்டும் வந்தது. இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் பூண்டி ஏரிக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து விநாடிக்கு 790 கன அடியாகவும், ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 2,500 கன அடியாகவும் இருந்தது.இதனால், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 2,398 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்ட உயரம், 32.57 அடியாகவும் இருந்தது. இச்சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கன மழை எச்சரிக்கை காரணமாக இன்று காலை 8 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்தனர் நீர் வள ஆதாரத் துறை அதிகாரிகள்.

Read More

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. அதாவது, பவுனுக்கு ரூ.3,000 குறைந்து, ரூ.88,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாதம் தொடக்கத் தில் இருந்தே தங்கத்தின் விலை பெரும்பாலான நாட்களில் உயர்ந்து வந்தது. அக்.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. ஓரிரு நாட்களில் பவுன் ரூ.1 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென விலை குறைந்து, ரூ.96,000-க்கு விற்கப்பட்டது. இதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இதற்கிடையில், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதை குறைத்ததால், தங்கம் விலை இறங்கியது.

Read More

உலகளவில் உடல் பருமன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மேலும் ஆக்கிரமிப்பு மருந்து தலையீட்டின் குறைபாடுகள் இல்லாமல் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை ஆதரிக்கும் இயற்கை சேர்மங்களில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இவற்றில், பெர்பெரின் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. பெர்பெரிஸ், கோல்டன்சீல் மற்றும் மர மஞ்சள் போன்ற தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பெர்பெரின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் மட்டுமே, நவீன வளர்சிதை மாற்ற ஆராய்ச்சியில் அதன் பங்கு வெளிவரத் தொடங்கியது, எடை, குளுக்கோஸ் சமநிலை, கொழுப்பு ஒழுங்குமுறை மற்றும் குடல் ஆரோக்கியத்தை மிகவும் மல்டிஃபங்க்ஸ்னல் முறையில் பாதிக்கும் திறன் கொண்ட கலவையை வெளிப்படுத்துகிறது. அதன் பெருகிவரும் பிரபலம் மிகைப்படுத்தலில் இருந்து மட்டும் அல்ல மாறாக இயந்திர ஆழம் மற்றும் குவிக்கும் மருத்துவ ஆதாரங்களின் கலவையிலிருந்து உருவாகிறது. உணவு மற்றும் உடல் செயல்பாடு ஆகியவற்றுடன் நிரப்பு உத்திகளைத் தேடும் நபர்களுக்கு, பெர்பெரின் ஒரு நம்பிக்கைக்குரிய,…

Read More

மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட தலா ரூ.10,000, உலக வங்கியிலிருந்து வேறு ஏதோ ஒரு திட்டத்திற்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து எடுத்து தவறாக பயன்படுத்தப்பட்டது. தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலாகும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள 1.25 கோடி பெண்களுக்கு விநியோகிக்கப்பட்டது.நான் சொன்னது போல், இது எங்கள் தகவல். அது தவறாக இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அது உண்மையாக இருந்தால், இது எவ்வளவு தூரம் நெறிமுறை சார்ந்தது என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கம் நிதியை பயன்படுத்திய பின்னர், தேர்தலுக்குப் பிறகு வேறு வகையில் விளக்கம் அளிக்க முடியும்.

Read More

கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான கருவி மட்டுமல்ல. சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறை. உண்மையான கல்வி வாழ்வாதாரத்தை மட்டுமன்றி, வாழ்க்கைக்கான நோக்கத் தையும் கற்பிக்கிறது. தரமான கல்வி மூலம் சமூகத்தின் திசையை ஆரோக்கியமான பாதையில் மாற்றி அமைக்கும் திறனை ஒருவர் பெறுகிறார். ஆராய்ச்சிக் கல்வி: அண்மைக் காலமாக இந்தியாவில் கூட்ட நெரிசலால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துவருகின்றன. சமூகவியல், பொருளியல், பொறியியல், மருத்துவம், இதழியல் துறை போன்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து ஆராய்ந்து, இதுபோன்ற விபத்து களைத் தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி கல்வி நிறுவனங்கள் திட்டங்களை வகுக்கலாம்.

Read More

புதுடெல்லி: எதிர்வரும் 2026 பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர்தான் தான் பங்கேற்று விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடர் என கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். “நிச்சயம் 2026 உலகக் கோப்பை தொடர் எனது கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கும். அடுத்த ஆண்டு நான் 41 வயதை எட்டுவேன். எனவே அதுதான் அதற்கான சிறந்த தருணம் என கருதுகிறேன்.

Read More

மாஸ்கோ: அணு சக்​தி​யால் இயங்​கும் புரேவெஸ்ட்​னிக் என்ற ஏவு​கணையை ரஷ்யா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ளது. இதை எந்த வகை வான் பாது​காப்பு ஏவு​கணை​களாலும் நடு​வானில் தடுத்து அழிக்க முடி​யாது என கூறப்​படு​கிறது. ரஷ்யா ‘9எம்​730 புரேவெஸ்ட்​னிக்’ என்ற அணு சக்தி ஏக்தி ஏவு​கணையை கடந்த 2018-ம் ஆண்டு அறி​முகம் செய்​தது. சக்​தி​வாய்ந்த ஏவு​கணை தயாரிப்பு திட்​டத்​தில் ஈடுட​வேண்​டாம் என்ற ஒப்​பந்​தத்​தில் இருந்து அமெரிக்கா கடந்த 2001-ம் ஆண்டு வெளி​யேறியது. இதையடுத்து நேட்டோ படைகள் விரிவுபடுத்​தப்​பட்​டன. அமெரிக்​கா​வின் வான் பாது​காப்பு ஏவு​கணை திட்​டங்​களும் விரிவுபடுத்​தப்​பட்​டன.

Read More