சென்னை: கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத்திட்டம், மலைப் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்பது உட்பட 9 அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது: நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றும் அரசே திமுக அரசு. சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஒலி-ஒளி காட்சிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காந்தி மண்டபம், அருங்காட்சியகம், பெருந்தலைவர் காமராஜர் மண்டபம், பெரியவர் பக்தவத்சலம் மண்டபம் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.3.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்காக ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தை வரும் 19-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளேன். 14 ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, 11.19 சதவீதமாக அதிகரித்து, பெரிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த ஆண்டு…
Author: admin
சென்னை: மீண்டும் நாம் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டதால் நானும் ஓய்வெடுக்க போவதில்லை.; உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதி பிரச்சனைகளை களையவும், மக்கள் குறைகளை தீர்க்கவும் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின், ‘தாயுமானவர் திட்டம்’ ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறோம். நலத்திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் நமது செல்வாக்கு அதிகரித்துள்ளது. நாள்தோறும் கட்சி நிர்வாகிகள் மக்களை சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். தற்போது பாஜக அரசு தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் என்னென்ன அட்டூழியங்களை பிஹாரில் மேற்கொண்டு வருகிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு கடந்த ஆண்டுகளில்…
சென்னை: கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது, துணைவேந்தர் நியமன விவகாரம் ஆகியவற்றில் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் அவர் இன்று மாலை அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து கருத்து தெரிவித்து, செயல்பட்டு வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஆகஸ்ட் 18, 19-ம் தேதிகளில் நடைபெறும் அழகப்பா மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பங்கேற்கப் போவதில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மேலும், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அவர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல், தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு குடியரசுத்…
ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பரம்சுந்தரி’. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியானது. தேவாலயம் ஒன்றில் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான காதல் காட்சியுடன் அந்த ட்ரெய்லர் தொடங்கியது. இந்த காட்சிக்கு கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வாட்ச்டாக் அறக்கட்டளை என்ற பெயர் கொண்ட அந்த அமைப்பு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், மத்திய தணிக்கை வாரியம், மும்பை காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் அந்த காட்சியை படத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும் அதில், “தேவாலயம் என்பது கிறிஸ்தவர்களுக்கு ஒரு புனிதமான வழிபாட்டுத் தலமாகும். அதை ஆபாசமான உள்ளடக்கத்திற்கான ஒரு மேடையாக சித்தரிக்கக்கூடாது. இந்த சித்தரிப்பு மத வழிபாட்டுத் தலத்தின் ஆன்மீக புனிதத்தை அவமதிப்பது மட்டுமல்லாமல், கத்தோலிக்க சமூகத்தின் உணர்வுகளையும் ஆழமாக புண்படுத்துகிறது” என்று கூறப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட காட்சியை பொதுத் தளங்களில் இருந்து நீக்கவில்லை…
சேலம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் நேரு கலையரங்கில் தொடங்கியது. 4 நாள் நடைபெறும் மாநாட்டின் முதல் நாளில் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதை, திருப்பூரில் இருந்து வந்த தியாகச்சுடர் பெறுதல், தியாகிகளுக்கு நினைவஞ்சலி ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி ஏற்றி, மரியாதை செலுத்தினார். பின்னர், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். மாநாடு தொடங்கியதும் மறைந்த தலைவர், முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி தீர்மானம் வாசிக்கப்பட்டது. அரசியல் விளக்கவுரை கூட்டத்தை மாநிலச் செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்தார். கட்சியின் தேசிய செயலாளர்கள் அமர்ஜித் கவுர், நாராயணன், ஆனி ராஜா, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: “திமுக தலைமையிலான இந்த கூட்டணி வலுவான கூட்டணி.…
சென்னை: மாநில கல்விக் கொள்கையின் படி முறையான கால அட்டவணை அமைத்து, பாடத்திட்டங்களை மேம்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தினார். பள்ளிக்கல்வித் துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமை வகித்தார். துறை செயலர் சந்திரமோகன், இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் மற்றும் துறை சார்ந்த இயக்குநர்கள் பலர் கலந்து கொண்டனர். சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை தொடர்பாக வெளியான அறிவிப்புகளின் நிலை, செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், துறையின் எதிர்கால இலக்குகள் உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டன. அதை தொடர்ந்து, ‘தற்போது வெளியிடப்பட்டுள்ள மாநில கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை அமல்படுத்துவதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். பாடத் திட்டங்களை மேம்படுத்த கால அட்டவணை தயாரித்து பணியாற்ற வேண்டும்’ என்பன உட்பட பல அறிவுறுத்தல்களை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்.…
புதிய நகரத்தை ஆராய்வதா? ஒரு புதிய நகரத்தில் சுற்றுலாப் பயணிகளாக இருப்பதால், முடிந்தவரை ஆராய்வதில் நாங்கள் அடிக்கடி மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் பயணம் மோசமான திருப்பத்தை ஏற்படுத்தும். மோசடி செய்பவர்களுக்கு எங்களை ஏதேனும் ஒரு வழியில் அல்லது வேறு வழியில் மோசடி செய்ய வெவ்வேறு வழிகள் உள்ளன, மேலும் அவர்கள் பயன்படுத்தும் தந்திரங்களை நீங்கள் நம்ப மாட்டீர்கள். அவர்களின் தந்திரங்கள் மிகவும் மறைக்கப்பட்டுள்ளன, ஒருவர் அவர்களை ஒருபோதும் யூகிக்க முடியாது, ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், உலகெங்கிலும் என்ன மோசடிகள் நடக்கிறது என்பதை கொஞ்சம் தயாராக இருப்பதன் மூலமும், அவர்களைத் தவிர்க்கலாம். பயணத்தில் இருக்கும்போது ஒருவர் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து மோசடிகளையும் பட்டியலிடுவதன் மூலம் உங்கள் பயணங்களை பாதுகாப்பாகவும் மன அழுத்தமாகவும் மாற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
புதுடெல்லி: ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ரஜினிகாந்த், “உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் நீண்ட காலமாக மிகவும் மதிக்கும் ஒரு தலைவரிடமிருந்து அவற்றைப் பெறுவது மிகப்பெரிய மரியாதை. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. ஜெய் ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரையுலக…
சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு, தற்கொலைகள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று வெளியிட்ட சுதந்திர தின உரையில் ஆளுநர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்குப் பார்வையும், துடிப்பு மிக்க தலைமையின்கீழ் நம்நாடு அனைத்துத் துறைகளிலும் இதுவரை இல்லாத புதிய சாதனை களைப் படைத்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தான் உடனான போர் நடவடிக்கைகளின் வெற்றி காலத்துக்கும் நினைவுகூரப்படும். வளர்ச்சி அடைந்த பாரதம்- 2047 என்ற நமது தேசிய பயணத்தை வழிநடத்தக்கூடிய பங்கும், பொறுப்புணர்வும் தமிழகத்துக்கு உள்ளது. எனவே, தமிழக வளர்ச் சியை மேம்படுத்துவதற்கான பங்களிப்பை அளிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். இதற்கு மத்திய அரசும் நிதி பகிர்வு உட்பட பல்வேறு வழிகளில் உதவியாக உள்ளது. தமிழ் மொழி மற்றும் அதன்…
சென்னை: சுதந்திர தினத்தயொட்டி, தமிழக காவல் துறையைச் சேர்ந்த 24 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அளவில் தனிச் சிறப்புடன் பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு இருமுறை குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கம் தமிழக காவல் துறையைச் சேர்ந்த 3 காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பாலநாக தேவி, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையர் கார்த்திகேயன், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி சு.லட்சுமி ஆகியோருக்கு இந்த பதக்கம் வழங்கப்படுகிறது. மேலும், குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க பணிக்கான பதக்கங்கள் 21 பேருக்கு வழங்கப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு: சென்னை மாநில மனித உரிமைகள் ஆணைய (புலனாய்வுப் பிரிவு) காவல் கண்காணிப்பாளர் ஆ.ஜெயலட்சுமி, சென்னை பெருநகர…