புதுடெல்லி: பிஹார் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஆளும் என்டிஏ கூட்டணி 202 இடங்களை பெற்றுள்ளது. அதேசமயம் ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணி 35 ஆக சுருங்கி விட்டது. ஆர்ஜேடி 25 இடங்களை மட்டுமே பெற்றது. இதில் முக்கிய ஆதரவாளர்களான யாதவ் மற்றும் முஸ்லிம்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் முக்கிய நடவடிக்கையான எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) முதல் மாநிலமாக பிஹாரில் அமலானது.
Author: admin
தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் உட்பட நாடுமுழுவதும் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் முடித்த மருத்துவர்கள், நீட் தேர்வை கடந்த ஆக.3-ம் தேதி எழுதினர். தேர்வு முடிவுகள் ஆக.19-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், எம்டி எம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. அதன்படி, என்ற இணையதளத்தில் நவ.5-ம் தேதி நண்பகல் 12 மணி வரை பதிவு செய்ய வேண்டும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணி வரை கட்டணம் செலுத்தலாம். அக்.28-ம் தேதி முதல் நவ.5-ம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களைத் தேர்வு செய்யலாம். நவ.6, 7-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 8-ம்தேதி அதன் விவரம் வெளியிடப்படும். மேலும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும். 16-ம் தேதி முதல்18-ம் தேதிக்குள் மாணவர்களின்…
புதுடெல்லி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள டெல்லி – ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் டெல்லி 211 ரன்களும், ஜம்மு & காஷ்மீர் அணி 310 ரன்களும் சேர்த்தன. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய டெல்லி அணி 69.1 ஓவர்களில் 277 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 179 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜம்மு & காஷ்மீர் அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 15 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது.
“நிச்சயம் எனது பேர பிள்ளைகள் வெள்ளை மாளிகையில் பெண் அதிபர் ஒருவர் பதவியில் இருப்பதை தங்கள் வாழ்நாளில் பார்ப்பார்கள் என நம்புகிறேன். அது நானாக கூட இருக்கலாம். அடுத்த அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அரசியலில் எனக்கு எதிர்காலம் உள்ளதாக நம்புகிறேன்.நான் கருத்து கணிப்புகளை கருத்தில் கொள்வது இல்லை. அப்படி இருந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட்டு இருக்க மாட்டேன், இங்கு அமர்ந்து பேசி இருக்கவும் மாட்டேன். தன் மீதான விமர்சனங்களை அதிபர் ட்ரம்ப்பால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை” என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் 30 வருடங்களாகப் படங்களைத் தயாரித்து வருவதுடன், ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் படங்கள் வெளிவரவும் உதவிவரும் பட நிறுவனம் மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.செயின் ராஜ் ஜெயினின் மிஸ்ரி எண்டர்பிரைசஸ். செயின் ராஜின் மகனான ரஜினி கிஷன் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ள மூன்றாவது படம் ‘ரஜினி கேங்’. ‘கனா காணும் காலங்கள்’ இணையத் தொடர் மூலம் புகழ்பெற்ற ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலகலப்பான ஹாரர் நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இதில் ரஜினி கிஷன் ஜோடியாக தீவிகா வருகிறார். மேலும் முனீஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன் உள்பட முன்னணி நகைச்சுவை நடிகர்களின் பட்டாளம் நடித்துள்ளது.
மதுரை: திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சர்வ சாதாரணமாகிவிட்டது என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்தவர் தேவா விஜய். இவர் மீது இளம் பெண் ஒருவர் வள்ளியூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். புகாரில் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக கூறி 9 ஆண்டுகளாக பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் இளம் பெண் கூறியிருந்தார். இப்புகாரின் பேரில் தேவா விஜய் மீது வள்ளியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தார்.
சென்னை: அமேசான் நிறுவனம் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக தொழில்நுட்பத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆட்குறைப்புகளை சந்தித்து வரும் நிலையில், முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 30 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில், புதிய அரசு அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வகையில் நவம்பர் 19 அல்லது 20 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2025 பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது, அதைத் தொடர்ந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களை வென்றது. லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19 இடங்களையும், எச்ஏஎம் 5 இடங்களையும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களையும் வென்றன. எதிக்கட்சிகளின் மகா கூட்டணி 35 இடங்களை மட்டுமே வென்றது. ஓவைசி கட்சி 5 இடங்களிலும், பிஎஸ்பி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.
சென்னை: சென்னை ஐஐடி பேராசிரியர்கள் 3 பேர் தேசிய அறிவியல் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி பாராட்டு தெரிவித்தார். அறிவியல், தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றுவோருக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய அறிவியல் விருது (ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார்) வழங்கி கவுரவித்து வருகிறது.இந்த விருது, விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்நாகர், விஞ்ஞான் டீம் என 4 பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்கள் தலப்பில் பிரதீப், மோகனசங்கர் சிவப்பிரகாசம், ஸ்வேதா பிரேம் அகர்வால் ஆகிய 3 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா: தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பின் ஓர் அங்கமாக உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணியானது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-2 என சமனில் முடித்திருந்தது. தொடர்ந்து சொந்த மண்ணில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றிருந்தது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணியானது பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என சமனில் முடித்திருந்தது.
