Author: admin

ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’. மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.இதில், நடிகர் ரஜினி கிஷன் பேசியதாவது: “இது எனது மூன்றாவது படம். ஏற்கனவே இரண்டு படம் செய்துவிட்டேன். மக்கள் மனதில் பெரிய ஹீரோவாக இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் என் கனவு. அதற்காகத் தான் கதை கேட்டேன். ரமேஷ் பாரதி மூன்று கதை சொன்னார், அவரே இந்தக்கதை செய்யுங்கள், காமெடி மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். முதலில் நாமே தயாரித்தும், நடிக்கவும் வேண்டுமா? என யோசித்தேன், பிறகு நாமே தயாரித்து விடலாம் என முடிவு செய்து படத்தை ஆரம்பித்து விட்டோம்.

Read More

சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், நவ.21-ம் தேதிக்கு அறிவிக்கிறது.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ-வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 பேர் கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி, 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

Read More

சென்னை: தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்றம், இறக்கம் காணும். அந்தவகையில் சென்னையில் இன்று (அக்.27), 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,450-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு பவுன் ரூ.91,600-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

Read More

புதுடெல்லி: பிஹாரில் முஸ்​லிம்​கள் சுமார் 20 சதவி​கிதம் பேர் உள்​ளனர். அதன்​படி 45 எம்​எல்​ஏக்​கள் இருக்க வேண்​டும். ஆனால், இந்த முறை 11 முஸ்​லிம்​கள் மட்​டுமே வெற்றி பெற்​றுள்​ளனர். சீமாஞ்​சல் பகு​தி​யில் முஸ்​லிம் வாக்​காளர்​கள் அதி​கம். இங்கு அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி 5 தொகு​தி​களை மீண்​டும் பெற்​றுள்​ளது. மேலும், இதர பல பகு​தி​களில் எதிர்க்​கட்​சிகளின் மெகா கூட்​ட​ணிக்​கான முஸ்​லிம் வாக்​கு​களை​யும் ஒவைசி கட்சி பிரித்​துள்​ளது. ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யில் 2020 தேர்​தலில் வெற்றி பெற்ற 5 எம்​எல்​ஏ.க்​களில் 4 பேர் ஆர்​ஜேடி​யில் இணைந்​தனர். அவர்​கள் இந்த தேர்​தலில் அதே தொகு​தி​களில் போட்​டி​யிட்​டனர். எனினும், வேறு புதிய முஸ்​லிம் வேட்​பாளர்​களுக்கு ஏஐஎம்​ஐஎம் வாய்ப்​பளித்து வெற்றி பெற வைத்​துள்​ளது.

Read More

சென்னை: பள்​ளிக் கல்வி இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்கை விவரம்: அரசு உயர்​நிலை, மேல்​நிலைப் பள்​ளி​களில் பணிபுரி​யும் உடற்​கல்வி ஆசிரியர்​களுக்கு பதவி உயர்வு மூல​மாக, உடற்​கல்வி இயக்​குநர் நிலை-2 நியமனம் வழங்​கப்​பட்டு வரு​கிறது. அதன்​படி, 2025 ஜனவரி 1-ம் தேதி நில​வரப்​படி, உடற்​கல்வி ஆசிரியர் பணி​யில் இருந்து உடற்​கல்வி இயக்​குநர் நிலை-2 ஆக பதவி உயர்வு பெற, தகு​தி​யானவர்​களின் பெயர்ப் பட்​டியலை தயார்​ செய்து அனுப்ப வேண்​டும்.

Read More

இதுதொடர்​பாக தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் சுமித் நாகல் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “சீ​னா​வின் செங்டு நகரில் நடை​பெறவுள்ள ஆஸ்​திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்​றுப் போட்​டி​யில் பங்​கேற்க இருந்​தேன். ஆனால், எனது விசா விண்​ணப்​பம் எவ்​வித காரண​மும் இன்றி நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, இந்​தி​யா​விலுள்ள சீன தூதரக அதி​காரி​கள் எனக்கு உடனடி​யாக உதவ முன்​வர​வேண்​டும்” என தெரி​வித்​துள்​ளார்.சுமித் நாகலின் கோரிக்​கைக்கு உடனடி​யாக சீன தூதரகத்​திட​மிருந்து எந்​த​வித பதி​லும் கிடைக்​க​வில்​லை. டென்​னிஸ் தரவரிசை​யில் ஆடவர் ஒற்​றையரில் சுமித் நாகல் 275-வது இடத்​தில் உள்​ளார். முதல் 100 இடங்​களுக்​குள் இல்​லாத​தால் சுமித் நாகல், கிராண்ட்​ஸ்​லாம் போன்ற போட்​டிகளில் நேரடி​யாக பங்​கேற்க முடி​யாது. வைல்ட் கார்டு அல்​லது தகு​திச் சுற்​றுகளின் வாயி​லாகவே போட்​டிக்​குள் நுழைய முடி​யும்.

Read More

சர்​வா​தி​காரி​களு​டன் இணைந்து பணி​யாற்​று​வதை அமெரிக்கா விரும்​பு​கிறது. பொது​வாக சர்​வா​தி​காரி​கள் மக்​களின் கருத்​துகள், ஊடகங்​களின் செய்​தி​கள் குறித்து துளி​யும் கவலைப்​படு​வது கிடை​யாது. அந்த வகை​யில் பாகிஸ்​தான் முன்​னாள் அதிபர் முஷாரபுடன் அமெரிக்கா நெருங்கி பணி​யாற்​றியது.பொருளா​தார வளர்ச்​சி, தீவிர​வாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பாகிஸ்​தானுக்கு கோடிக்​கணக்​கான ரூபாயை வாரி​ இறைத்​தோம். இந்த பெரும் தொகை மூலம் முஷாரபை விலைக்கு வாங்​கினோம். அவர் ஆட்​சி​யில் இருந்​த​போது ஒரு வாரத்​தில் பலமுறை சிஐஏ அதி​காரி​கள் சந்​தித்​துப் பேசுவது வழக்​கம். அமெரிக்கா என்ன சொன்​னாலும் அதை முஷாரப் அப்​படியே செயல்​படுத்​து​வார்.

Read More

திருக்குறளின் மேன்மையைப் பிற நாட்டவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன், இன்றைய இளம் தலைமுறை தமிழர்களும் அறிந்துகொள்ளும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விரிவான உள்ளடக்கத்தை எதிர்பார்க்கலாம். குறிப்பாக, சென்னையின் ஆட்சியராக இருந்த ஆங்கிலேயர் எல்லிஸ் பிரபு அச்சடித்த வள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயம், வீரமாமுனிவர் லத்தீனில் திருக்குறளை மொழிபெயர்த்த கையெழுத்துப் படிகள், குறள்கள் பொறிக்கப்பட்ட பழமையான ஓலைச் சுவடிகள், உலகெங்கிலும் நிறுவப்பட்டுள்ள வள்ளுவர் சிலைகள், தேர்ந்தெடுத்த திருக்குறள்களை விளக்கும் கிராஃபிக்ஸ் விவரணைக் காட்சிகள், குறும்பட வடிவில் காமத்துப்பால் காட்சிகள் ஆகியன இடம்பெற்றுள்ளன.ராகுல், ராஜீவ் ஆனந்த், ஹன்சிகா, சுபா ஆகியோர் இந்த ஆவணப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்கள். தயாரிப்பில் உறுதுணையாளராக டாக்டர் இ.ஜே.சுந்தர் பணியாற்றியுள்ளார். தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார் படத்தை இயக்கியுள்ளார். வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம், ஆவணப்பட வெளியீட்டு விழாவை நடத்துகிறது.

Read More

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தேர்தல் ஆணையம் வழங்கிய வடிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் எதுவும் எங்களுக்குப் புரியவில்லை. பலதரப்பட்ட விவரங்கள் தெரியவில்லை. தேர்தல் ஆணையம் வழங்கிய இந்த படிவத்தினை திரும்ப பெற வேண்டும். கிராம மக்கள் அனைவரும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். இப்படிவத்தை பூர்த்தி செய்ய வேலைக்குச் செல்லாமல் ஒரு நாள் செலவிட வேண்டியுள்ளது. இதனால் வருமானம் பாதிக்கப்படுகிறது. மேலும், 23 ஆண்டுகளுக்கு முன்பு வாக்களித்த விவரம் கேட்டக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்களை கிராம மக்கள் பலர் எடுக்க முடியவில்லை. பல நேரம் சர்வர் பிரச்சினை ஏற்படுகிறது.எனவே, ஏழை, எளிய மக்கள் வாக்களிக்கும் உரிமையை பறிக்காமல், எளிதாக வாக்களிக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். தகுதியுள்ள எந்த வாக்காளரும் விடுபடக் கூடாது. இதில், தேர்தல் ஆணையம் முழு கவனம் செலுத்த வேண்டும். எனவே, தற்போது வழங்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ள குழப்பங்களுக்களை நீக்கி எளிய வகையில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

Read More

அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும், பவுனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு பவுன் ரூ.90.400-க்கும் விற்பனையாகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1600 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.165-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,65,000-க்கும் விற்பனையாகிறது.

Read More