கெய்ரோ: உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது.இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 466.9 புள்ளிகள் குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவின் யுஹுன் லியு 467.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், பிரான்ஸின் ரோமெய்ன் ஆஃப்ரெர் 454.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
Author: admin
புதுடெல்லி: ஆப்கனிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அவர் பெண் வேடமணிந்து தப்பியதாக முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார். 9/11 தாக்குதல்: கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல் கயிதா அமைப்பின் 19 பயங்கரவாதிகள், 4 வர்த்தக விமானங்களைக் கடத்தினர். அதில், இரண்டு விமானங்கள் மூலம் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரம் (ட்வின் டவர்) என வர்ணிக்கப்பட்ட இரண்டு மிக உயரமான கட்டிடங்களைத் தாக்கி அழித்தனர். மூன்றாவது விமானத்தின் மூலம் அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள பாதுகாப்புத் துறை தலைமை அலுவலகமான பெண்டகன் மீது தாக்குதல் நடத்தினர். மற்றொரு விமானம் பென்சில்வேனியாவில் விளை நிலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் விஜய் தேவரகொண்டா பேசியதாவது: “கீத கோவிந்தம்’ படத்திலிருந்து ராஷ்மிகாவை நான் பார்த்து வருகிறேன், அவர் உண்மையிலேயே ஒரு பூமா தேவி தான் (‘த கேர்ள்ஃபிரண்ட்’ படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திர பெயர்). அன்றிலிருந்து இன்றுவரை, தன் கரியரின் உச்சத்தில் இருக்கும்போது இதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க அவர் முடிவு செய்ததை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.அவர் விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்திருக்கிறார். அவர் இடத்தில் நான் இருந்தால், நான் உடனடியாக எதிர்வினையாற்றி இருப்பேன். ஆனால் ராஷ்மிகா ஒவ்வொரு நாளும் கருணையுடன் நடந்து கொள்கிறார். மக்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை. ஒரு நாள், உலகம் அவரை உண்மையிலேயே யார் என்று பார்க்கும். அவர் ஒரு அற்புதமான பெண். நான் ‘த கேர்ள்ஃபிரண்ட்’ படத்தைப் பார்த்து, மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். என் கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை.
சென்னை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரிய மனுவுக்கு நவ.24-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், டிஜிபிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டிசம்பர் 3-ம் தேதி நடைபெற இருக்கும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு லட்சக் கணக்கான பக்தர்கள் திரள்வர் என்பதால், நெரிசல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை: தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை எட்டும் வகையில், அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உரு வாக்கிடவும், தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தகவல் தொழில்நுட்பச் சூழலை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இத்திட்டத்துக்கு மதுரை மாட்டுத்தாவணியில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைக் குறைத்து, நார்ச்சத்து, கொட்டைகள் மற்றும் மீன்களைச் சேர்ப்பது HbA1c அளவுகளில் 0.3 முதல் 1.0% வரை குறையலாம் என்று மருத்துவர் சுதிர் கூறுகிறார். குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் மற்றும் மத்திய தரைக்கடல் உணவு இரண்டும் வலுவான மருத்துவ ஆதாரங்களைக் கொண்டுள்ளன. இந்த உணவு அணுகுமுறைகள் முக்கிய அம்சங்களைப் பகிர்ந்து கொள்கின்றன: கட்டுப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் உட்கொள்ளல், அதிக நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் குறைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்.”அதிக எடை அல்லது பருமனான T2DM உள்ள நோயாளிகளில் குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் குறைந்த கார்போஹைட்ரேட் உணவின் விளைவுகள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக எடை/பருமனான T2DM நோயாளிகளில், குறைந்த கார்ப் உணவுகள் HbA1cயை கணிசமாக மேம்படுத்தியுள்ளன: சராசரியாக 0.36% மற்றும் கட்டுப்பாடு வித்தியாசம்.
இந்நிலையில் ஹரியானாவின் தவுஜ், நூஹ் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் டெல்லி போலீஸார் மற்றும் மத்திய அமைப்புகளின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு ஒருங்கிணைந்த சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் உமர் நபிக்கு தெரிந்த 2 மருத்துவர்கள் உள்ளிட்ட 3 பேரை டெல்லி போலீஸார் தங்கள் பிடியில் கொண்டு வந்தனர்.இதுகுறித்து அதிகார வட்டாரங்கள் கூறியதாவது: ஹ் பகுதியில் அல் பலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த முகம்மது, முஸ்தாகிம் என்ற மருத்துவர்களை என்ஐஏ உதவியுடன் டெல்லி போலீஸார் தங்கள் பிடியில் கொண்டு வந்தனர். இவர்கள் உமர் நபியின் நெருங்கிய நண்பர்கள். மேலும் தீவிரவாத சதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் முஜாம்மில் உடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
சென்னை: பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டில் (2025-26) பிப்ரவரி பருவச் சேர்க்கைக்கான இணையவழி, தொலைத்தூரப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதையடுத்து யுஜிசி ஒழுங்குமுறை விதிமுறைகளின் அடிப்படையில் முழுமையான கட்டமைப்பு வசதிகளை கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள் தொலைத்தூர, இணைய வழியிலான படிப்புகளை கற்றுதர அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.
சைல்ஹெட்: வங்கதேசம் – அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பால் ஸ்டிர்லிங் 60, கேட் கார்மைக்கேல் 59, கர்திஷ் கேம்பர் 44, லார்கன் டக்கர் 41, ஜோர்டான் நெய்ல் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
வாஷிங்கடன்: அமெரிக்க அதிபரி அதிகாரபூர்வ வசிப்பிடம்தான் வெள்ளை மாளிகை. இது வெறும் வசிப்பிடம் மட்டுமல்ல. அமெரிக்காவுக்கு மட்டுமல்லாது உலகையே ஆட்டிப்படைக்கும் பல்வேறு அரசியல், பொருளாதார முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட / எடுக்கப்படும் ஓவல் அலுவலகத்தையும் உள்ளடக்கியது இந்த மாளிகை. இந்த வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடித்துவிட்டு, அதில் ஒரு பால் ரூம் (ballroom – விருந்தரங்கம்) கட்ட வேண்டும் என்பது அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஆசை. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும் கூட அதைக் கட்டி முடித்தே தீருவேன் என்று பணிகளை ஆரம்பித்துவிட்டார் ட்ரம்ப். இதற்கான செலவு 300 மில்லியன் யுஎஸ் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2600 கோடிக்கு மேல்). ட்ரம்ப்புக்கு ஏன் இப்படியொரு ஆசை, எதற்காக இத்தனை பெரிய செலவு, இந்த பால் ரூமின் பயன்தான் என்னவென்று சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.
