புதுடெல்லி: முதலீடு தொடர்பான முடிவில் வெளியாட்களின் தலையீடு இருப்பதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ கட்டுரை வெளியிட்டிருப்பது அடிப்படை ஆதாரமற்றது என எல்ஐசி மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த மே மாதத்தில் எல்ஐசி நிறுவனம் அதானி குழும நிறுவனத்தில் சுமார் ரூ.34 ஆயிரம் கோடி முதலீடு செய்தது.
Author: admin
புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் 4 மருத்துவர்களின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் முசாபர் அகமது, ஆதில் அகமது ராதர், முஜம்மில் ஷகீல், ஷாஹீன் சயீது ஆகியோருக்கு ஐஎம்ஆர், தேசிய மருத்துவப் பதிவாளர் (என்எம்ஆர்) ஆகியோர் வழங்கிய அங்கீகாரத்தை எம்எம்சி உடனடியாக ரத்து செய்து நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.இந்த மருத்துவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் மருத்துவராகப் பணியாற்ற முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-26-ம் கல்வியாண்டில் ஓராண்டு பாடப்பிரிவுகளான அனஸ்தீஷியா டெக்னீஷியன், அறுவை சிகிச்சைப் பிரிவு டெக்னீஷியன், ஆர்தோபெடிக் டெக்னீஷியன் போன்ற சான்றிதழ் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த பாடப்பிரிவுகளுக்கு மாவட்ட அளவிலான சேர்க்கை வாயிலாகவும், முன் விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கை முறையிலும் நடைபெறும் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.
துரின்: இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது முதல் ஆட்டத்தில, தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 7-5, 6-1என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆப்கானிஸ்தான் நீர்வளம், எரிசக்தி துறை செய்தித் தொடர்பாளர் மதியுல்லா அபித் கூறியதாவது: குனார் நதியில் புதிய அணையை கட்ட திட்டமிட்டு உள்ளோம். இதற்கான களஆய்வு நடத்தப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய அணையின் மூலம் ஆப்கானிஸ்தானில் 1,50,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் 45 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும். இந்த அணையால் நாட்டின் உணவு தானிய உற்பத்தி, மின் உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும்.குனார் நதி தொடர்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையே எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. எனவே எவ்வித பிரச்சினையும் இன்றி நதியில் பிரம்மாண்ட அணையை கட்டுவோம். பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்படும். இவ்வாறு மதியுல்லா அபித் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஜே.கே சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சூப்பர் சுப்பராயன், அஜய் கோஷ், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இதற்கு ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்துள்ளார். முழுக்க காமெடி த்ரில்லர் பாணியில் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறார்கள். இப்படம் வரும் நவ. 28 திரையரங்குகளில் வெளியாகிறது.
மதுரை: ‘‘இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரை மக்களுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை, ’’ என்று அதிமுக அமைப்புச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைப்பு செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், ஒன்றிய செயலாளர் கோட்டைகாளை, பகுதி கழக செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர் .அவனியாபுரம் பகுதி செயலாளர் முருகேசன் வரவேற்றார்.
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அச்சு ஊடகங்களுக்கான விளம்பரக் கட்டணங்களை 27% உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “பாரம்பரிய ஊடகங்களில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இத்துறையில் பணிபுரிவோரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அச்சு, தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறைகளில் பல சீர்திருத்தங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.
புதுடெல்லி: பிஹார் தேர்தல் தோல்வியை அடுத்து, வரும் 2030-ம் ஆண்டுக்குள் மாநிலங்களவையில் ஒரு எம்.பி. கூட இல்லாத கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் மாறப் போகிறது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் என்டிஏ (ஐஜத – பாஜக) கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மெகா கூட்டணி (ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ்) படுதோல்வி அடைந்தது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
அதன் தொடர்ச்சியாகதான், திராவிட மாடல் அரசும், ஏழை எளிய மாணவ மாணவியரும், உலக தரத்தில் கல்வி பெற வேண்டும் என்று முதல்வரின் காலை உணவு திட்டம், கல்லூரி படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் – படித்து முடித்ததும் உடனடியாக வேலைவாய்ப்புப் பெறுவதற்காக நான் முதல்வன் திட்டம் – அறிவியல் ஆய்வுகளை ஊக்குவிப்பதற்கு முதல்வரின் ஆய்வு திட்ட நிதி உதவி , வசதி வாய்ப்பு இல்லாத வீட்டு குழந்தைகளும் உலகின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என்று மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் என்று பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.உலகம் எந்த வேகத்தில் மாற்றம் அடைகிறதோ, அந்த வேகத்திற்கு நாமும் ஈடுகொடுத்து ஓட வேண்டும். கொஞ்சம் அசந்தாலும், அவுட்-டேட் ஆகிவிடும் என்று சொல்லிவிடுவார்கள். அதேபோல், லீடர்ஷிப் என்றால், ஒருவர் வகிக்கக்கூடிய பதவியோ, அவர்கள் சம்பளமோ கிடையாது!…
