கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர்.சி. இயக்குவதாக இருந்த நிலையில், அதிலிருந்து விலகுவதாக தற்போது இயக்குநர் சுந்தர்.சி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலக ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.இது குறித்து சுந்தர்.சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், கனத்த இதயத்துடன் ‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகிக் கொள்வது என்ற கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன். ரஜினிகாந்த் நடிக்க, கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகவிருந்த இந்தப் படத்தில் இணைவது எனக்கு உண்மையிலேயே ஒரு கனவு, நனவாகும் வாய்ப்பாக இருந்தது.
Author: admin
இதனை கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் இன்று தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன், உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு காவிரி உரிமை மீட்புக்கு ழுவின் பொருளாளர் மணிமொழியன் தலைமை வகித்தார். இதில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜெகதீசன், காவிரி உரிமை மீட்புக்குழுவின் நிர்வாகிகள் வைகறை, ராசேந்திரன், துரை.ரமேஷ், முனியாண்டி, சாமி.கரிகாலன், செந்தில் வேலன், விடுதலை சுடர், ராமசாமி, தீந்தமிழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்தப் போராட்டத்தில், “மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அமைச்சர் துரைமுருகன், “உச்ச நீதிமன்றம் மேகேதாட்டு அணை கட்ட அனுமதித்த விட்டதாகக் கூறுவது தவறு, மத்திய நீர்வளத் துறையிலும், காவிரி மேலாண்மை ஆணையத்திலும் தனது வலுவான வாதங்களைத் தமிழக அரசு முன் வைக்கும்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதுடெல்லி: இந்திய பொருளாதாரம் இந்த நிதியாண்டில் 6.6 சதவீதம் வளர்ச்சி அடையும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு அமெரிக்கா வரிகளை உயர்த்தியது. சில நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தது. இதனால் உலகளவில் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் சூழலில், உலக பொருளாதார முன்னோட்டம் குறித்த அறிக்கையை, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: 2025-26-ம் நிதியாண்டில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து இருக்கும். இதன் பொருளாதாரம் 6.6 என்ற வீதத்தில் வளர்ந்து வருகிறது. முதல் காலாண்டில் பொருளாதாரத்தில் சிறப்பான செயல்பாடு காரணமாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரிவிதிப்பின் பாதிப்புகளை ஈடுசெய்துள்ளது.
இருதயநோய் நிபுணர் டாக்டர். ஜாக் வொல்ப்சன், 25 ஆண்டுகளுக்கும் மேலான சுறுசுறுப்பான பயிற்சியுடன், உங்கள் புருவங்களை உயர்த்தும் ஒரு கேள்வி: நேற்றிரவு நீங்கள் விஷத்தில் தூங்கினீர்களா? இது அதிர்ச்சியாக இருந்தாலும், அவரது செய்தி ஆரோக்கியம் பற்றிய மிக முக்கியமான ஒரு கருத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது, அதை நம்மில் பலர் அடையாளம் காணத் தவறிவிட்டீர்கள் – நீங்கள் குளிக்கும் நேரம் மற்றும் அது சுற்றுச்சூழல் நச்சுகளுக்கு உங்கள் வெளிப்பாட்டை எவ்வாறு பாதிக்கிறது. நம் அன்றாட வாழ்வில் இரசாயனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சில எளிய பழக்கவழக்கங்கள் நீண்டகால நல்வாழ்வை நோக்கி நீண்ட தூரம் செல்கின்றன.நாம் தினமும் சுவாசிக்கும் மறைந்திருக்கும் இரசாயனங்கள் நாள் முழுவதும், நம் தோல், உடலின் மிகப்பெரிய உறுப்பு, ஆயிரக்கணக்கான இரசாயனங்கள் வெளிப்படும்: பேக்கேஜிங் பிளாஸ்டிக் மற்றும் phthalates; தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களில் பொதுவான parabens; PFAS, இல்லையெனில்-“என்றென்றும் இரசாயனங்கள்”; பூச்சிக்கொல்லிகள் உணவு அல்லது சுற்றுப்புறத்தில் நீடித்து வருகின்றன; மற்றும் அச்சு…
பாட்னா: தேர்தல் தோல்வியால் வருத்தம் இல்லை என்றும் அரசியலில் ஏற்ற இறக்கம் தவிர்க்க முடியாதவை என்றும் ஆர்ஜேடி எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2020 தேர்தலில் 75 இடங்களில் வென்ற ஆர்ஜேடிக்கு இந்த தேர்தலில் 25 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
அந்த அறிக்கையில், தமிழக அரசின் சட்டத் திருத்தம் கல்வியை எந்த அளவுக்கு வணிகமயமாக்கும்? சமூகநீதியை எந்த அளவுக்கு அழிக்கும்? ஏழைகளிடமிருந்து உயர்கல்வி வாய்ப்புகளை எவ்வாறு தட்டிப் பறிக்கும்? என்பது குறித்தெல்லாம் அதில் விரிவாக விளக்கியிருந்தேன். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அக்டோபர் 17ஆம் தேதி விவாதமின்றி, குரல் வாக்கெடுப்பின் மூலம் அவசரமாக திமுக அரசு அதனை நிறைவேற்றியது.திமுக அரசின் இந்த சமூக அநீதிக்கு எதிராக முதன்முதலில் பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பிய குரல், தமிழகத்தின் கல்வியாளர்கள், பேராசிரியர் அமைப்புகள், சமூகநீதியாளர்கள் மற்றும் சில கட்சியினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தி, அரசுக்கு எதிரான கொந்தளிப்பாக மாறியது.
சென்னை: ஈஸ்டர்ன் ஸ்லாம் சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் குவஹாட்டியில் நடைபெற்று வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை வடபழநி எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-யில் பி.டெக் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவியான ஷமீனா ரியாஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அஞ்சலி செம்வாலை 11–9, 13–11, 9–11, 11–4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
ஒட்டாவா: கனடா அஞ்சல் துறை கடந்த 2017 முதல் தீபாவளி கருப்பொருள் கொண்ட அஞ்சல் தலையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான புதிய தபால் தலையை வெளியிட்டுள்ளது.இதனை இந்திய வம்சாவளியை சேர்ந்த ரித்து கனால் வடிவமைத்தார். இதில் ரங்கோலி படம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘தீபாவளி’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: “நம் வரலாற்றை பாதுகாக்க வேண்டும். நமக்கு பழமையான வரலாறு உண்டு. வெளிநாட்டவர் தங்களது சரித்திரத்தை பாதுகாக்கின்றனர். நாம் சரித்திரத்தை பாதுகாக்கவில்லை” என்று திரைப்பட இயக்குநர் சங்கம் மற்றும் பெப்சி தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். புதுச்சேரி அரசு கலைப் பண்பாட்டுத் துறை மற்றும் புதுச்சேரி மாநிலக் கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் நாடக தந்தை தவத்திரு சங்கர்தாஸ் சுவாமிகள் 103-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும் பெப்சி தலைவரான இயக்குநர் ஆர்,கே.செல்வமணி பேசியது: “தெருக்கூத்தும், நாடகமும் திரைப்படங்களுக்கு முன்னோடி வடிவம். இதில் உள்ளோர் திரைத்துறையினருக்கு ரத்த உறவு.
சென்னை: நவ.22 ஆம் தேதி வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
